வல்லவன் வகுத்ததடா( 2024)- / தமிழ் – சினிமா விமர்சனம் ( சைபர் க்ரைம் மூவி )

ரேட்டிங் 3/5-5

பொதுவாக நாயகிகள் வெற்றி பெறுவதாக அமைக்கப்படும் திரைக்கதைகளில் அவர்களது அழகை வைத்தோ , உடல் வலிமையை வைத்தோ ஜெயிப்பதாகத்தான் காட்டுவார்கள். ஆனால் மூளையை உபயோகித்து சாமார்த்தியமாக ஜெயிப்பதாகக்காட்டும் திரைக்கதைகள் மிகக்குறைவு . இந்தப்படத்தில் நாயகி அப்படி இல்லை என்று சொன்னாலும் வில்லி அறிவை பிரமாதமாக உபயோகிப்பதாக காட்டி இருப்பது ஆச்சரியம் தான் . கவனிக்க வைக்கும் தரமான படம் பணத்துக்காக அவர் ஒவ்வொருவரையும் காதலித்து ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் அதற்கு கிளைமாக்ஸ் காட்சியில் சரியான பதிலடி.

நாயகி ஒரு டிராவல்ஸ் ஓனரிடம் கார் ஓட்டுபவர் அப்பா நல்லவராக இருந்து எல்லாம் இழந்த வர் நாயகியின் தங்கைஓடிப்போய் . திருமணம் செய்தவர். இதனால் அம்மாவின் மரணம்
இப்போது ஓடிப்போன தங்கைக்கு சீமந்தம் செய்ய காதலன் அழைத்து வருகிறான். அப்பா செக்ரியூட்டி வேலை செய்கிறார் கையில் போதிய பணம் இல்லை கடன் வாங்க அலைகிறார்
கடன் வாங்க போன இடத்தில் ஒரு விபத்தில் சிக்குகிறார் இப்பொழுது அப்பாவை காப்பாற்ற வேண்டும் தங்கைக்கு சீமந்தம் நடத்த வேண்டும் தனக்கு ஒரு நல்ல வேலை வேண்டும் இது நாயகியின் பிரச்சனை வில்லன்கள் சக்கரவர்த்தி , சிரஞ்சீவி இரண்டுபேரும் திருட்.டு வேலை செய்பவர்கள் இவர்கள் திருட்டு என எல்லா பொறுக்கித்தனங்களையும் செய்பவர்கள் .
வில்லன்களுக்கும் நாயகிக்கும் அறிமுகமே இல்லை.

இவர்களை ஆட்டி வைக்கும் இன்ஸ்பெக்டர் இந்த இன்ஸ்பெக்டர் கொடுக்கும் ஐடியா இந்த இரண்டு பேரையும் என்ன செய்கிறது இது ஒரு தனி கதை!

இன்னொரு பக்கம் ஊரை ஏமாற்றும் தந்திரம் மிக்க வில்லி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, வாழ்ந்த வர் எனவே பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லும் சரியான வில்லங்க தனமான வில்லி கதாபாத்திரம் நன்றாக நடித்திருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக – அருள். சிறந்த குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்.

வீணாப்போன வில்லனாக வரும் கந்து வட்டிக்கு உடல் உறுப்பு களை எழுதி வாங்கும் லேட்டஸ்ட் வில்லன் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்

அடுத்து கதையின் முக்கிய தூணாக இருக்கும் இன்ஸ்பெக்டர் இவர் எல்லா கதாபாத்திரத்தோடும் பொருந்தி போகிறார் கேனத்தனமாக சிரித்துக் கொண்டு ஸ்டேஷனில் உண்டியல் வைத்துக்கொண்டு கோயிலுக்கு போகிறேன் உன்னால் முடிந்தது 2000 ஐந்தாயிரம் உண்டியலில் போடு என்று கூலாக பேசி லஞ்சம் வாங்கும் வித்தியாசமான கதாபாத்திரம்

இந்த ஆறு கதாபாத்திரங்களும் எப்படி ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை மேற்கொள்கிறார்கள் இறுதியில் நடந்தது என்ன?

தர்மம் வென்றதா? அநியாயம் வென்றதா? இதுதான் மீதி கதை!

104. நிமிடங்கள் ஓடும்படி ஷார்ப் ஆக கட் செய்து இருக்கிறார் எடிட்டர்

பின்னணி இசை படத்துக்குத்தேவையான வேகத்தைத்தருகிறது

ராகுல் ரிஜி ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்கியுள்ளார் ‘. இந்த படத்தில். தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலசந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, ரெஜின் ரோஸ், விக்ரமாதித்யா உட்பட பலர் நடித்துள்ளனர்.அனைவர்நடிப்பும் அருமை

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார்

இந்த படத்தின் சிறப்பு. என்ன என்றால்!இறைவன் திட்டப்படி தகுதியுள்ளவைத் தப்பிப்பிழைக்கும், நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பதுதான் இந்தப் படம் சொல்லும் விஷயம். 6 விதமான மனிதர்கள். அனைவருக்கும் ஒவ்வொரு விஷயத்துக்காக பணத்தேவை இருக்கிறது. அந்தப் பணம் 6 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை. ஹைபர் லிங்க் கதையை கொண்ட படம். பணம் எப்படி ஒவ்வொரு கை மாறுகிறது என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குனர்
படத்தில் கிளைமாக்ஸ், காட்சியில் தர்மம் வெல்லும் என்று முடித்து இருப்பது சிறப்பு
பணம் தான் உலகின் மனித வாழ்வை தீர்மானிக்கிறது. பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை பரபர திருப்பங்களுடன் சொல்லும் படம் இது! ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் கர்மா வேலை செய்யும் நல்லது கெட்டது எல்லாம் அவர்களின் விதி படி தான்
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டார் இதுதான் படம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கவிருக்கிறதோ, அதுவும் நன்றாக நடக்கவிருக்கிறது,
நீ என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு! என்ற பகவத் கீதை தத்துவத்தின்படி ஒவ்வொரு சேஃப்டராக கதை சொல்லும் பாணி ரசிக்க வைக்கிறது
சதுரங்க வேட்டை படம் போல் இந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சி இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர்.
நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்திருக்கிறார்கள்வல்லவன் வகுத்ததடா! வெற்றி பட்டியலில் சேரும் இயக்குனருக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது இன்று எல்லோருக்குமே பணம் தேவைப்படுகிறது அந்த பணத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கி தயாரித்து படத்தை இயக்கி இன்றைய வெற்றிகரமான இயக்குனர் என்று பெயரை எடுத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

படத்தில், வித்யாசம்
புதுமையான முயற்சி
எல்லாம் வல்லவன் வகுத்ததடா!