ரசவாதி – விமர்சனம்

லவ் & சோசியல் மெஸேஜ். ரேட்டிங் 4/5

தனது முந்தைய இரு படங்களாலும் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமை இயக்குனர் சாந்தகுமாருக்கு உண்டு. இரண்டு படங்களின் வெற்றியால் மூன்றாவது படமான ரசவாதி மீதும் அதீத எதிர்பார்ப்பு . அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்திருக்கிறார்
என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு அற்புதமாக இயக்கி இருக்கிறார் கொடைக்கானல் பச்சை நிறத்தில், காணப்படும் மலை அரசி மயங்க வைக்கிறது

DNA Mechanic Company சார்பில் சாந்தகுமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

கதைக்களம் என்ன வாங்க பார்க்கலாம்…
அர்ஜூன் தாஸ், ஒரு சித்த மருத்துவராக வருகிறார். அங்கிருக்கும் மக்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். அங்குள்ள இயற்கையை பேணிக் காப்பதும், பூச்சிகள் முதல் விலங்குகள் வரையிலான உயிர்களுக்கு இரக்கம் காட்டுவது என மென்மையான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார்.பேயைகட்டுபடுத்துவது யானை போகும் வழியில் பீர் பாட்டில் உடைக்க கூடாது அன்டைய மாநில கழிவு களை நம் நாட்டில் கொட்ட கூடாது என்று சமுதாய அக்கறை கொண்ட ஹீரோ வாக வலம் வரும் அர்ஜுன் தாஸ் நடிப்பு சிறப்பாக இருக்கிறது

அங்கு இருக்கும் ஒரு தனியார் ரெஸ்டாரண்டில் மேனஜர் பணிக்காக வந்து சேர்கிறார் நாயகி தன்யா. இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த சந்திப்பில் தங்களது மனதை கொடுத்து காதலுக்குள் செல்கின்றனர்.
இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த பஸ் சந்திப்பு அருமை ஒரு டாட் இருவரையும் இணைக்கிறது இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் காதல் காட்சிகள் சிறப்பு

இன்ஸ்பெக்டராக வரும் சுஜித் சங்கர். சிறு வயதில் தனது தாய், தந்தையரின் சண்டையை நேரில் பார்த்து வளர்ந்த சுஜித், ஒரு விதமான இறுக்கமான மன நிலையிலேயே இருந்து வருகிறார்.அதன்பிறகு சைக்கோ மன நிலை யில் இருக்கிறார் அதன் பிறகு ஒரு இன்ஸ்பெக்டரும் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய அவர் எப்படி தப்பிப்பார் என்று எதிர்பார்ப்பில்

, அர்ஜூன் தாஸ் மற்றும் தன்யா இருவரும் காதல் புரிவதை பார்த்து பார்த்து தனக்குள் கோபத்தை வளர்த்துக் கொண்டே இருக்கிறார் சுஜித்.
சந்தோஷமாக இருப்பது அவருக்கு பிடிக்காது
அர்ஜூன் தாஸை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று எண்ணுகிறார் சுஜித். அவரை பழி வாங்குவதற்கான காரணம் என்னவென்று இரண்டாம் பாதியில் காட்டப்படுகிறது.இடைவேளைக்கு முன் கதைக்குள் காட்சி போகாதது கொஞ்சம் ஏமாற்றம்

அர்ஜூன் தாஸுக்கும் சுஜித்திற்கும் இடையே இருக்கும் பகை தான் என்ன.? இருவரும் எப்போது சந்தித்தார் கள் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள்

நாயகன் அர்ஜூன் தாஸ். இயற்கை நேசிப்பவராக வந்து பல இடங்களில் அவர் பேசும் வசனங்கள் திரையரங்குகளில் கைதட்டல் சத்தத்தை கேட்க முடிகிறது. கண்களாலும், குரலாலும் மிரள வைக்கும் நடிப்பை ஆங்காங்கே கொட்டிக் கொண்டே சென்றிருக்கிறார் அர்ஜூன் தாஸ். இந்த கதைக்கு இவர் தான் என்று சொல்லும் அளவிற்கான நடிப்பை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார

படத்தின் மற்றொரு கதாநாயகியாக தோன்றி, தனது முதல் படத்திலேயே முத்திரை நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ். பரதநாட்டியம் நடனத்தில் ஆரம்பித்து, அர்ஜூன் தாஸுடனான காதல், திருமணத்திற்கு பின்னுடனான நடிப்பு என பல கோணங்களில் அசர வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா.நல்ல முகபாவம் அனுதாபம் ஏற்படுகிறது அவர் மேல் அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி .

வில்லனாக தோன்றி மிரட்டியிருக்கிறார் சுஜித் சங்கர். அவரது பார்வையும் உடல் மொழியும் படம் பார்ப்பவர்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கிறது கதாபத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் சுஜித்.அவர் அப்பா கொடுமை செய்து மனைவியை சாகடிக்கிறார் இவரும் அதேபோல இருப்பது கொஞ்சம் ஓவர்

மற்றபடி, கதையில் நடித்த ரிஷிகாந்த், ரம்யா, ஜி எம் சுந்தர் என அனைவரும் கதைக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

இயற்கை வளம், மண், மரம், கொடி, அரசியல், காதல் என பல இடங்களில் தனக்கான முத்திரை இயக்கத்தை கொடுத்து பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார் இயக்குனர் சாந்தகுமார்.உளவியல்சார்ந்த கதையை தேர்வு செய்து விறுவிறுப்பான திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வாழ்த்துக்கள்

அர்ஜூன் தாஸ் மற்றும் ரேஷ்மாவின் காதல் இசையாக கோர்த்து காதலை நகர்த்தியிருந்தது பார்ப்பதற்கு ரசனையாக இருந்தது. அந்த கொடைக்கானல் லோகேஷன் அழகியல் விஷ்வல்

மனநோயை தீர்க்கும் மருந்தாக பூண்டு,
மலையின் அருமை,
மரத்தோடு பேசுவது,
பாதரசத்தைத் தொட்டு பேசும் வசனங்கள்,
நான்கு வகையான குடிகாரன்கள்,
வீட்டிலிருந்து ஈ ஒன்றை ஜன்னலை திறந்து வெளியே விடுவது,
தன்யாவின் பயத்தை போக்குவது கஞ்சா அடிக்கும் தான்யா

என படத்தில் கைதட்ட வைக்கும் காட்சிகள் பல இருக்கின்றன. தனது முந்தைய இரண்டு படங்களை போலவே இப்படத்திலும் முத்திரை பதித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

தமனின் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பக்கபலமாக வந்து நிற்கிறது.
சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் படத்தில் ஒலிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேஷன் படமாக்கப்பட்ட விதம் மேக்கிங் காட்சிகள் ஒளிப்பதிவு வெல்டன். வி.ஜே. சாபு ஜோசப் எடிட்டிங் பணிகளை கவனித்து இருக்கிறார் படம் சார்ப்பாகவிறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அந்த பரதநாட்டிய பாடலில் யார் இந்த நடனக் கலைஞர் யார் இந்த நடனம் மாஸ்டர் என்று கேட்கத் தோன்றுகிறது நாயகிகள் இருவரும் துள்ளலாக பரதநாட்டியம் ஆட இசையை தமன் கவனிக்க வைக்கிறார் நடன பயிற்சி சூப்பர் இயக்குநர் சாந்தகுமாரின் முந்தைய இரண்டு படங்களுமே தனித்துவமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. அதுபோல, ‘ரசவாதி’ திரைப்படமும் வந்திருக்கிறது கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது பார்ப்பதற்கு பசுமையாக பசுமையாக இருக்கிறது. சைக்கியாரிஸ்ட் டாக வரும் ரம்யா சுஜீத்திடம் மாட்டி கொண்டு விழிக்கும் காட்சி ரமேஷை கொல்ல சுரேஷ் என்று ரம்யா கள்ளக்காதல் விவகாரம் தியேட்டரில் கரகோஷம் படத்தில் ஆடை வடிவமைப்பாளர், நன்றாக பணி புரிந்துள்ளார்…, படத்தில் கலர் கரேக்ஷன் ,மற்றும் DI, supe. சமுதாய அக்கறை கொண்ட படம் நிச்சயம் காணவேண்டிய படம் வெட்டு குத்து ஆபாசம் நிறைந்த இன்றைய தமிழ் சினிமாவில் நல்ல கதை களம், நல்ல ஒளிப்பதிவு, நல்ல நடிப்பு, என ஒன்று சேர்ந்து வெற்றி படமாக வந்திருக்கிறது ரசவாதி