ஸ்டார் 2024) – தமிழ் – சினிமா விமர்சனம்

( ரொமாண்டிக் டிராமா ) ரேட்டிங் 4/5

நாயகன் கவின் நல்ல நல்ல கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த படம் நிச்சயம் வித்தியாசமான காதல் மோட்டிவேஷன் படமாக அமைந்தது என்று சொல்லலாம் முப்பது வருடமாக ஹீரோ ஆக வேண்டும் என்று கனவு கானும் நாயகன் ,அதற்கு துணை நிற்கும் அவனது அப்பா, நடிப்பு பயிற்சி எடுத்தவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்று மும்பை செல்லும் கலை ஆனால் அங்கு சென்று நடிப்பு பயிற்சி பட்டறை யில் ரிஜக்ட் ஆகி பணத்தை தொலைத்து, அப்பாவுக்கு போன் செய்ய நீ ஜெயிக்க முடியல என்றால் அங்கே யே இருந்து விடு என்று கத்த மும்பை யின் தெருவோரத்தில் படுத்து கிடக்கிறான் உணவு இல்லை, ஆனாலும் நடிப்பு பயிற்சி ஆசான் இடம் தொடர் முயற்சி செய்யும் அந்த காட்சியில், நெருக்கமாக நம் மனதுக்கு பிடித்த ஹீரோ ஆகி விடுகிறார் கவின் .

நாயகன் அவருக்கு ஒரு அக்கா, ஃபோட்டோகிராஃபர் ஆன தந்தை ,மகன் நன்றாக படித்து வேலை க்கு போக வேண்டும் என்று கனவு கானும் அம்மா, கல்லூரியில் மலர்நத காதல் ,மனம் விட்டு பேச ஒரு நண்பன், காதலுக்கு எதிர்ப்பு காட்ட காதலியின் அண்ணன் ,முகமே காட்டாத நாயகன் பாட்டி சிட்டம்மா , அன்பு காட்ட மாறன், பிரிந்து போகும் காதலி, கவின் தன்னம்பிக்கை கண்டு மீண்டும் காதலிக்கும் சுரபி, இவர் கள் அனைவரும் நன்றாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள் எல்லோரும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது மனதில் இடம் பிடித்து விட்டார்கள் .

மகன் அடிக்கடி தன் அப்பாவிடம் தன் நம்பிக்கை யைப்பற்றிக்கேட்கும்போதெல்லாம் அப்பா தட்டி கொடுத்து நம்பிக்கை ஊட்டும் காட்சிகள் சூப்பர்

நாயகி சுரபி கவினை சந்திக்கும் இடம் கவிதை அப்போது இருவரும் சேர்ந்து தங்கள் கடந்த கால கதை பற்றி பேசுறார்கள் . சுரபி யின் அப்பா வை பற்றி கவின் தெரிந்து கொள்ள மனம் மாறுகிறார் .

சின்ன வயதில் இருந்தே கனவு கானும் நாயகன் நடிகராக போகிறார் ஷீட்டில் கலந்து கொள்ள போகிறார என கதை போகும் போது அங்கு விதியின் விளையாட்டில் அழகான முகம் சிதைவு ஏற்பட, அடுத்து என்ன நடக்கும் என்று திக் திக். … சூப்பரான இடைவேளை

ஆனால் ஒரு கட்டத்தில் நாயகி , நாயகன் , இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி நாயகி நாயகனை த்திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் வேறு ஒரு பொருளாதார சிக்கல்

நாயகன் ஆக கவின் இரு வேறு தோற்றங்களில் வருகிறார். கல்லூரியில் காட்சியில் வரும் போது குறும்புத்தனம் , சுட்டித்தனம் , சுறு சுறுப்பு என கலக்குபவர் . விபத்துக்கு பின்னர் வரும்போது ஹேர் ஸ்டைல் , உடல் மொழி எல்லாவற்றையும் மாற்றி முதிர்ச்சியான நடிப்பை வழங்கி இருக்கிறார். பல இடங்களில் பெண்களைக்கவரும் விதத்தில் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது

நாயகி ஆக இருவர், கொள்ளை கொள்ளும் அழகு . மீரா அவரது நாசிக்கு ஏற்ற மாடல் அது இல்லை , மாடர்ன் டிரஸ் , சேலை என எல்லா உடைகளிலும் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறை இல்லை சுரபி

அம்மா ஆக கீதா கைலாசம் பிரமாதமாக நடித்திருக்கிறார். . இந்த மாதிரி அப்பா வேணும் என எல்லோரையும் ஏங்க வைக்கும் லால், நடிப்பும் அருமை

நாயகியின் அப்பாவாக ராஜா ராணி பாண்டியன், கச்சிதமான நடிப்பு நாயகியின் பாட்டியாக வருப. ஓக்கே ரகம்

பிரவீன் அந்தோனியின் எடிட்டிங்கில் ஷார்ப்

யுவன் சங்கர் ராஜா தான் இசை . பாடலகளனைத்தும் இனிமை , பின்னணி இசை குட்
, நாயகனின் கேரக்டர் ஒரு புரொஃபசனல் ஸ்டார் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு ஓவர் டைம் ஒர்க், நன்றாக செய்திருக்கிறார்

இயக்குனர் இளன் வசனம் எழுதி இருக்கிறார்கள் வசனங்கள் வானவில் போல் மிளிர்கின்றன

சபாஷ் டைரக்டர்

1 காட்சிகள் ஒவ்வொன்றும் ரிச் ஆக தெரிய ஃபோட்டோகிராஃபி முக்கிய பங்கு வகிக்கிறது

2 நாயகன் , நாயகி , அப்பா மூவரின் கேரக்டர் டிசைன் , நடிப்பு அனைத்தும் அருமை

3 மும்பை ஃபோர்ஷன் அருமையான பதிவு

4 நாயகியின் அண்ணன் கிரவுண்ட் டில் ரவுண்ட் கட்ட அதை நாயகன் டீல் செய்யும் விதம் பலே

5 நாயகன் , நாயகி இருவருக்குமான பாண்டிங், சுரபி பெண்ணின் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்

6 ரசித்த வசனங்கள்& காட்சிகள்
இயக்குனர் வெற்றிமாறன் கவின் ஆடிஷன் வீடியோ பார்த்து விட்டு கவினை வரச்சொல் என்று சொல்லும் போது அவரின் உதவி இயக்குனராக இருப்பவர் கவிஞனுக்கு முகத்தில் தழும்பு என்று சொல்லும் போது வெற்றி மாறன் தழும்பாவது …..வரச்சொல்லு என்று சொல்லும் போது பலத்த கைதட்டல்
தன்னம்பிக்கை ஊட்டும் காட்சிகள்

7 மனைவி யான சுரபி யை கவின் பிரிந்து விட்டு தன் அப்பா லால் இடம் பேசும் போது அது வரை தன் மகன் நன்றாக வருவார் என்று சொன்னவர் நீ தோத்துட்டே இனி உன்னால் ஜெயிக்க முடியாது நீ எப்போது கண்ணாடி முன் நிற்க பயப்பட்டாயோ அப்பவே நீ தோத்திட்டே என்று சொல்லும் போது கவின் அப்பா சட்டையை பிடிக்கும் அந்த காட்சி அற்புதமான காட்சி

8 மீரா திருமண விழா வில் பங்கேற்க செல்லும் கவின் சுரபி, இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு கண்டு மீரா தாங்க்ஸ் என்று சொல்லும் காட்சி

9 பாட்டியின் தோடு கடுக்கன் சுரபிக்கு ஜிமிக்கி கம்மல் ஆக மாறும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது

10 முதலில் இருந்தே கவினை ஹீரோ என்று மாறன் அழைக்க இனி கவின் ஹீரோ ஆக முடியாது என்று கலை என்று கவின் பெயர் சொல்லி அழைப்பது கவின் மாறனிடம் நீங்கள் மட்டும் என்னை ஹீரோ என்று அழைப்பதை நிறுத்த கூடாது என்று கவின் பொங்கி அழும் காட்சி

11 பாட்டி இறந்த பிறகு கவினுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது அதை கவின் குடும்பம் அழுவது சிரிப்பது என அந்த காட்சியில் தியேட்டரில் கரகோஷம் அபோது யுவன் ஷங்கர் ராஜா வின் பறை இசை பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது

ஃபைனல் கமெண்ட் – தரமான ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரி. பார்க்கலாம் . பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் தற்போது ஸ்டார் படம் மூலம் வெற்றி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்

கவின் ஹார்ட்டிரிக் வெற்றி அடித்துள்ளார். ஸ்டார் பிரகாசமாக வெளிச்சம் தருகிறது