இங்க நான் தான் கிங்கு 2024 திரை விமர்சனம்

ஃபேமிலி & காமெடி மூவி ரேட்டிங் 3-5/ 5

GOPURAM FILMS G.N. ANBUCHEZHIAN PRESENTS

PRODUCED BY SUSHMITA ANBUCHEZHIAN *“”*தயாரிப்பில்
வெற்றி படமாக வெளிவந்துள்ளது இப்படம் ,
படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருக்கிறது

படம் செம காமெடியாக இருக்கிறது.. இந்த படம் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். சந்தானத்திற்கு காமெடி மீண்டும் கை கொடுத்திருக்கிறது.குடும்ப திரைப்படமான இப்படத்தினை தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் மற்றும் அன்புச்செழியன் தனது ‘கோபுரம் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் கள் வாழ்த்துக்கள் வெற்றி படம் தந்ததற்கு…

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார் அருமையான கண்களுக்கு விருந்து தந்துள்ளார்

எம் தியாகராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.கச்சிதமான படத்தொகுப்பு

: இமானின் இசையில் மாயோனே பாடல் ரசிக்க வைப்பதோடு, மாலு மாலு பாடல் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பாணியை கையாண்டிருக்கிறார். சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன் கூட்டணி அல்டிமேட் காம்போவாக அமைந்துள்ளது. காமெடி, டான்ஸில் மாஸ் காட்டியிருக்கிறார் சந்தானம். ஹீரோயின் பிரயாலயாவுக்கு இளமையான முகம் அழகான நடிப்பு அசத்தியிருக்கிறார்.

சந்தானம் இப்போது அவர் நடிக்கும் படங்களில் தன்னுடைய போர்ஷனை குறைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு நடிக்க இடம் கொடுத்து வருவது சிறப்பு அப்படி இந்த படத்தில் தம்பி ராமையாவும் விவேக் ப்ரசன்னாவும் முனீஸ் காந்தும் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்

படத்தின் கதை என்ன வாங்க பார்க் லாம் !

: மும்பையில் தீவிர வாதிகள் குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கிறார்கள் அந்த தீவிரவாதிகள் அடுத்த குறி சென்னை. சென்னையில் ஊடுருவும் அவர்களை பிடிக்க போலீஸ் தீவிரமாகிறது அப்பொழுதுதான் சந்தானம் காட்டப்படுகிறார். மேட்ரிமோனியில் வேலை பார்க்கும் சந்தானம், தனக்கு இருக்கும் ரூ.25 லட்சம் கடனை அடைக்க முன்வரும் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கிறார். அவருக்கு ஒருவழியாக ஜமீன் குடும்பத்தில் இருக்கும் ஹீரோயினுடன் திருமணம் நடக்கிறது. ஆனால் இதில் மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்படுகிறது. இதற்கிடையில் தனக்கு கடன் கொடுத்த மேனேஜருடன் ஏற்படும் பிரச்சினையில், சந்தானம் குடும்பத்தால் அவர் கொல்லப்படுகிறார். ஒருவழியாக இந்த கொலையை மறைத்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் அதே மேனேஜர். விவேக் பிரசன்னா. சந்தானம் வீட்டில் உயிருடன் இருக்கிறார். அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? .. சந்தானத்தின் கடன் பிர்ச்சினை எப்படி தீர்ந்தது? என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்

ரத்தினபுரி ஜமீன்தார் குடும்பம் பிராடு என்று தெரிந்ததும் கதையில் சுவாரசியம் களை கட்டஆரம்பிக்கிறது நல்ல திருப்புமுனையாக அந்த காட்சிகள் அமைகிறது

திருமணம் முடிந்த ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொண்டு போக சந்தானம் திரு திரு வென விழிக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது

அவர் சிரிக்காமலே குடும்பத்தில் நடக்கும் லூட்டியை எரிச்சலுடன் பார்க்கும் விதத்திலும் அலுவலகத்தில் மனைவி சாப்பாடு கொடுத்து விட்டார் என்று டிபன் பாக்ஸை திறந்து பார்க்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கமெண்ட் அடிக்க கடைசியில் காலிடிப்பன் பாக்ஸ் காட்ட குபீர் சிரிப்பு

தம்பி ராமையா நடிப்பு லூசுதன மான ஜமீன்தாராக அருமையாக நடித்திருக்கிறார்

விவேக் பிரசன்னா பிணமாக வந்து மகளிர் மட்டும் நாகேஷை நினைவு படுத்துகிறார்

இயக்குனர் சந்தானத்துக்கு என்ன தேவையோ அதைக் கச்சிதமாக எழுதி இருக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும் காமெடி தான் முக்கியம் என்பதை உணர்ந்து கதை எழுதி இருக்கிறார் தம்பி ராமையா ஜெய்ஹிந்த் என்று சொல்ல உடனே சந்தானம் உன் சம்பந்திபடத்தை ஏன் சொல்கிறாய் என்று சொல்லும் பொழுது குபீர் சிரிப்பு
இப்படி படம் முழுவதும் ஒவ்வொரு டைமிங் காமெடி வசனத்திலும் தியேட்டரில் விழுந்து விழுந்து
சிரிக்கிறார்கள் ரசிகர்கள்

சந்தானம், பிரயாலயா,
ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது பாடல் காட்சிகளும் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள்

மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா
எல்லோரும் காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கிறார்கள்

: இப்படத்தின் பங்கு பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ….

DIRECTOR – ANAND NARAYAN
CAMERAMAN – OM NARAYAN
MUSIC DIRECTOR – D.IMMAN
EDITOR – M.THIYAGARAJAN
WRITER – EZHICHUR ARAVINDAN
ART DIRECTOR – SAKTHEE VENKATRAJ.M
CHOREOGRAPHER – BABA BHASKAR, KALYAN
FIGHT MASTER – MIRACHLE MICHAEL
LYRIC WRITER – VIGNESH SHIVAN, MUTHAMIL
PRODUCTION EXECUTIVE – M.SENTHIL KUMAR
PRODUCTION CONTROLLER – M.PACHIAPPAN
COSTUME DESIGNER – R.K. NAVADEVI RAJKUMAR
COSTUMER – R. MURUGANANTHAM
SOUND MIX – T.UDAYAKUMAR, KNACK STUDIO, SHADE 69 STUDIOS
MAKEUP MAN – A. GOTHANDAPANI
STILLS – S. MURUGADASS
COLOURIST – PRASATH SOMASEKAR
PRO – NIKIL MURUKAN
DESIGNS – N.T. PRATHOOL
CREATIVE EXECUTIVE – JAAYAVELMURUGUN
PRODUCTION HEAD – ANIL KUMAR .M.K
PRODUCER – G.N ANBUCHEZHIAN
PRODUCED BY – SUSHMITA ANBUCHEZHIAN

ஒரு வெற்றி படத்துக்கு என்ன தேவையோ அத்தனையும் இந்த படத்தில் அம்சமாய் பொருந்தி யிருக்கிறது
நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ,பாடல் எழுதிய கவிஞர்கள், இசையமைத்த இமான்,
கேமரா மேன், ஒவ்வொருவரின் தொழில்நுட்பமும் பாராட்டத்தக்கது
2024 மீண்டும் வெற்றிப்படம் கொடுத்திருக்கிறார் காமெடியில் நான் தான் கிங்கு என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார்
சந்தானம்