எலெக்ஷன்” திரை விமர்சனம்”

(அரசியல் ஃபேமிலி & ரிவெஞ்ச் மூவி.) ரேட்டிங் 3-7/5

அரசியல் மக்களுக்கானது அரசியல் சமூக நீதி க்கானது என்ற முழக்கத்துடன்
எலெக்ஷன்

ரீல் குட் மூவி தயாரிப்பில்
சேத்துமான்’ இயக்குநர் தமிழ், இயக்கியுள்ள படம், ‘எலக்சன்’. இதில் ‘உறியடி’ விஜய்குமார், பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதியுள்ளார்.
வசனங்கள்ஒவ்வொன்றும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது
மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பின்னணி இசை மிரட்டல் இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது .

இப்படம் “உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாக்கி யுள்ளது
களம் தேர்தலாக இருந்தாலும், அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகக் கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, குடும்ப கதையாக தயாராகி இருக்கிறது.

,நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்லசிவம் என்ற அரசியல் கட்சி தொண்டரைத் தான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். அந்த கதாபாத்திரம் போல் இன்று தமிழகத்தில் அரசியல் கட்சியில் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எந்த சுகபோகத்தையும் அறியாதவர்கள் போஸ்டர் ஒட்டுவார்கள்
கொடி பிடிப்பார்கள் கோஷம் போடுவார்கள் சிறைக்குப் போவார்கள் ஆனால் பதவிக்கு போவதெல்லாம் மேல் மட்ட தலைவர்கள் தான் ஜார்ஜ் மரியான் போல எத்தனை பேர் ஏமாளிகள் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த “எலக்சன்”
இதுபோன்ற கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். இதை முன் வைத்து படத்தின் கதை நகர்கின்றது. மொத்தம் நான்கு தேர்தல்கள் படத்திற்குள் வருகின்றது.

தேர்தலில் அரசியல் என்றாலே என்னவென்று தெரியாத கதாநாயகன் எப்படி உள்ளே வருகின்றான், அதனால் அவன் எதிர்கொள்ளும் விளைவுகள் என்னென்ன, கதாநாயகனின் அப்பாவே கதாநாயகனுக்காக பிரச்சாரம் செய்யாமல் போனதற்கான காரணம் என்ன? என்பதை இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார். நாயகன் தேர்தலில் நின்றதால் அவன் இழந்த இழப்புகள் என்ன என்பதையும் பட்டியல் போடுகிறது.

காட்சிகள் நமது கிராமத்தில் நாம் பார்த்தவை போல் மிக நெருக்கமாக இருக்கிறது ஏன் சாதாரண மக்கள் அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள் என்ற பயத்தை இந்த படம் காட்டுகிறது

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் நல்லூர், மற்றும் ஜாபர்கான்பேட்டை, புதூர், போன்ற கிராமங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஆரம்பித்து காதலில் ஆரம்பித்து உள்ளாட்சி தேர்தலில் சூடு பிடிக்கும்
இந்த படம் முழுக்க முழுக்க தேர்தலை மையம் வைத்த எடுக்கப்பட்டுள்ளது
விறுவிறுப்பாக இருக்கிறது . படத்தின் திரைக்கதையில், காட்சி அமைப்பில் பார்க்கும் அனைவரது மனதிலும் இடம் பிடிக்கும் . ஒரு உள்ளாட்சித் தேர்தல் நண்பர்கள் பகையாளிகளாக மாறியதும், பகையாளிகள் கூட்டாளிகளாக மாறிய பல கதைகள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ளது. இந்தப் படத்தில் அது இருக்கிறது பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் மக்களுக்கு நலச் செய்ய வேண்டும் எனக் சேவியர் போன்ற அரசியல்வாதி கௌரவத்துக்காக தலைவர் போஸ்டர்காக இயங்கும் மூர்த்தி சொந்த பகைக்காக ராசுவை பழிவாங்கும் சுதாகர் இப்படி ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு முகமூடி இருக்கிறது என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது

உள்ளாட்சி தேர்தல் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கும் பகையுணர்வு, தான் சார்ந்த கட்சியை தூக்கி எறிந்துவிட்டு தனித்து நின்று தனது செல்வாக்கினை நிரூபிக்கும் அரசியல்வாதிகள், சாகும்வரை கட்சிக்கு விஸ்வாசமாக இருப்பேன் என்ற உணர்வோடு இருக்கும் உண்மையான தொண்டன், மக்கள் கொடுத்த பதவி அதிகாரத்தினால் தொடர்ந்து தலைவராகி, அந்த மதமதப்பில் இருக்கும் மோசமான அரசியல்வாதி, கொள்கை அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ளும் சீர்திருத்த அரசியல்வாதி, அரசியல் என்றாலே எதுவென்று தெரியாத நபர்கள், ஓட்டுகளைப் பிரிக்க அரசியல்வாதிகளால் களமிறக்கப்படும் சாமானியர்கள் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களின் வழியே இயக்குநர் உள்ளாட்சித் தேர்தலை காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர்

ஹீரோவாக வரும் விஜயகுமார் அவர் நடிப்பு டயலாக் டெலிவரி அவர் பேசும் வசனம் அருமையாக இருக்கிறது
அரசியல் எனக்கு புரியாது என்று அவர் மாமன் கணியிடம், பேசும்போது மூர்த்தியிடம், பேசும்போது சுதாகரிடம், பேசும்போது கவனம் பெறுகிறார்.

படத்தில் விஜயகுமாருக்கும் அவர் மனைவி பிரீத்திக்கும் நடக்கும் காதல் காட்சி ரசிக்க வைக்கிறது
ஜார்ஜ் மரியான் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்

வேலூர் மாவட்டத்திற்குரிய பேச்சு மொழியில் கதாப்பாத்திரங்கள் அனைவரும் உரையாடுவது கதைக் களத்திற்கு கச்சிதமாக பொருந்தியதுடன், படம் பார்ப்பவர்கள் மனதிலும் பதிகின்றது.
ஒரு கிராமத்தில் நடக்கும் அரசியலை அழகான குடும்ப வாழ்வியலை பாசத்தை துரோகத்தை நட்பை நேரடியாக பார்த்தது போல் இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் தமிழ், எழுத்தாளர் அழகிய பெரியவன், படத்தின் நாயகன் விஜயகுமார் என மூன்று பேரும் இணைந்து எழுதிய வசனங்கள்தான்.

படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் பாவல் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். அவரின் நடிப்பு மிகவும் இயற்கையாகவும் இயல்பாகவும் எதார்த்தமாக இருந்தது

அதேபோல் குரூரமான வில்லன் கதாபாத்திரத்தை முடிந்தளவு தனது நடிப்பின் மூலம் நிலைநாட்டியுள்ளார் திலீபன். அரசியல் சகுனியாக அவர் தங்கைக்காக, அவர் அப்பாவுக்காக, அவர் எடுக்கும் முடிவு தவறான முடிவு என்பது கிளைமாக்ஸ் காட்சியில் கொடூரமாக காட்டப்பட்டுள்ளது
ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்பட்ட இழப்பை மற்றவர்கள் மூலம் எடுக்க ஆரம்பித்தால் அவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை அப்பட்டமாக சொல்லியுள்ளது இந்த படம்.

கதாநாயகன் விஜய குமார், நாயகி ப்ரீத்தி அர்ஷனி நடிப்பு அருமையாக இருக்கிறது ஒரு டீச்சராக வந்து கண்ணியமான முறையில் கணவனுக்கு தோள் கொடுக்கும் கிராமத்து பெண் கதாபாத்திரம் மாமனார் மது குடிப்பது அவர் என்ன பேசுகிறார் என்பதை கதவு சந்தில் ஒட்டு கேட்பதாகட்டும் ,அந்த ஊர் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதாகட்டும், எல்லா வகையிலும் பிரித்தி அருமையாக நடித்திருக்கிறார்.

ஜார்ஜ் மரியான் கதாபாத்திரம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் உண்மைத் தொண்டனை நினைவுக்கு கொண்டு வரும். கோவிந்த் வசந்தாவின் இசை ஓ.கே
மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மோடில் படம் பார்க்கும் நம்மையும் அழைத்துச் செல்கின்றார். பொதுத்தேர்தலைவிடவும் உள்ளாட்சித் தேர்தலில்தான் மக்கள் மத்தியில் இயல்பாகவே அரசியல் காழ்ப்புணர்ச்சி, குரூரம் உள்ளிட்டவை அதிகமாக இருக்கும். அதனை ஓரளவுக்கு நெருங்கியுள்ளது

விஜய் குமார். கடந்த 2016-ல் ‘உறியடி’, 2019-ல் ‘உறியடி 2’ படத்துக்குப் பின் நடிகர் விஜய்குமார் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இடைவெளிக்குப் பின் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது
‘ஃபைட் க்ளப்’
. சிறந்த ப் படம் சிறந்த மேக்கிங்கால் பாராட்டப்பட்டது இந்நிலையில் விஜய்குமார் நடிப்பில்
எலெக்ஷன் மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்திருக்கிறார்

-சேத்துமான்’ படத்தில் உணவு அரசியலைப் பேசிய இயக்குநர் தமிழ் இந்தப் படத்தில் நேரடியாக வாக்கு வங்கி அரசியல் பேசியுள்ளார் தைரியமாக

கவனம் பெறும் வசனங்கள் …

-கட்சிக்காரனுக்கு அடையாளமே கரவேஷ்டியும் துண்டும் தான்” என்ற ஜார்ஜ் மரியானின் வசனம் கவனிக்க வைக்கிறார் .

“மக்கள், தலைவன் மகன் சப்போர்ட் பண்றாங்களா, தொண்டன் மகன சப்போர்ட் பண்றாங்களா பாப்போம்” என்ற வசனம்
மூலம் இளம் தலைமுறைகளின் அரசியல் மோதலை படம் பேசுகிறது. சண்டை, கரைவேஷ்டி, வாக்குப்பதிவு, பிரச்சாரம் என காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கின்றன. மொத்தத்தில் இந்த எலக்சன் ஒரு தேர்தலை நாம் கண் முன் கொண்டு வந்திருக்கிறது நான்கு தேர்தல் இந்த படத்தில் வருகிறது அதனால் விறுவிறுப்புக்கு பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை என்ன படத்தில் வேட்பாளர்கள் கடைக்கு சென்று டீ போட்டு கொடுப்பார்கள் புரோட்டா சுட்டுக் கொடுப்பார்கள் பெண்களுக்கு சேலைகளை துவைத்து கொடுப்பார்கள் மற்றும் எல்லா வேலையும் செய்து வேட்பாளர்கள் கவர்வார்கள் அதை இந்த படத்தில் காட்டவில்லை
பணம்! பணம்! பணம்!
அதுதான் பிரதானம்
இந்த தேர்தலில்

தயாரிப்பாளருக்கும், விஜயகுமாருக்கும், இயக்குனர் தமிழுக்கும், இந்த படம் ஒரு வெற்றி படமாகவே வந்திருக்கிறது வசனம் எழுதிய அழகிய பெரியவன், அருமையாக எழுதி இருக்கிறார் மொத்தத்தில் இந்த தேர்தல் வெற்றி வாகை சூடி இருக்கிறது திலீபனின் அப்பாவாக வரும் தயாளன் நடிப்பு நன்றாக இருக்கிறது மொத்தத்தில் இந்த எலக்சன் மக்கள் மனதில் இடம் பிடிக்கும்