“பி டி சார்”திரை விமர்சனம் 2024

ரேட்டிங் 3-5/5

சோஷியல் மெஸேஜ் ஃபேமிலி டிராமா & என்டர்டெயின்மென்ட் 2011ல்”கிளப் லே மப்பு லே” ஹிப்ஹாப் தமிழா அவரின் முதல் ஆல்பமாக வெளிவந்தது ஹிப் ஹாப் தமிழன் , இது இந்தியாவின் முதல் தமிழ் ஹிப் ஹாப் ஆல்பம் ஆகும். இது பொதுமக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் ராசியான இசை அமைப்பாளர் என்ற பெயரில் இசை அமைத்து
வந்தார் பி டி சார் அவருக்கு 25வது படமாக வெளிவந்து உள்ளது இவர் நடித்த மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் நடித்து இசை அமைத்துள்ளார்
பி டி சார் படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை
சொல்லும் படம்
பிடி சார்
ஹிப் ஹாப் ஆதி, மற்றும் அனிகா,
இளவரசு, மற்றும் தேவதர்ஷினி, மற்றும் காஷ்மிரா பர்தேசி, கதாநாயகியாக நடித்துள்ளார்.ஹிப் ஹாப் தமிழா ஆதி க்கு துணை யாக கதை களத்தில் பலம் சேர்க்கிறார். மேலும், அனிகா சுரேந்திரன், நந்தினி என்ற கதாபாத்திரத்தில் படத்தின் மையக் கருத்து உள்ள மெசேஜ் உள்ள பாத்திரம் சிறப்பாக நடித்திருக்கிறார் பிரபு, வழக்கறிஞராக நடித்திருக்கிறார் முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், கல்லூரியில் பேராசிரியராக வருகிறார் கள் இளவரசு,அனிகா சுரேந்திரன் தந்தை யாக உணர்ச்சி மிகுந்த வேடத்தில் நடித்துள்ளார் ஆர்.தியாகராஜன்
வில்லனாக ஜீ பீ என்ற கதாபாத்திரத்தில்
அமைதியாக நடித்து இருக்கிறார்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியரின் வாழ்வியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

, ‘நக்கல் புடிச்சவன்’ என்ற பாடல் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ள இந்த பாடலை ஹிப்ஹாப் தமிழா, ரிஹானா பாடியுள்ளனர். இந்த பாடல் ரசிக்க வைக்கிறது

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

பள்ளியில் பி டி மாஸ்டராக இருக்கும் ஆதி எல்லோரிடமும் கலகலப்பாக பேசி பழகுகிறார் அதே பள்ளியில் டீச்சர் ஆக இருக்கும் கஷ்மீர் பரதேஷை விரும்புகிறார்

இளவரசு மகளாக வருபவர் அனிகா சுரேந்தர் இவர் கல்ச்சர் விழாவுக்கு கவர்ச்சியாக ஆடை அணிந்து சென்றதால் அங்கு நான்கு இளைஞர்கள் இவரை டார்ச்சர் செய்கிறார்கள் இதனால் இவரது வீட்டில் ஏன் அப்படி உடை அணிந்து சென்றாய் என்று அம்மா வினோதினியும், அப்பா இளவரசனும், திட்டுகிறார்கள் இதனால் அவர் படிக்கும் கல்லூரியிலும் அவரை டிஸ்மிஸ் செய்ய சொல்லுகிறது நிர்வாகம் ஏனென்றால் அந்த வீடியோ வெளியே வந்து கல்லூரிக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது
என்று காரணம் சொல்லுகிறார்கள்

இப்பொழுது வீட்டிலும் டார்ச்சர் கல்லூரியிலும் டார்ச்சர் இதனால் கல்லூரியின் கரஸ்பாண்ட் தியாகராஜனிடம் முறையிட செல்கிறார் தியாகராஜனோ உனக்கு படிப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என் ஆசைக்கு இணங்கு என்று கெட்டநோக்கத்தில் இரவு 10 மணிக்கு அவரது கெஸ்ட் ஹவுஸிற்கு வரச் சொல்கிறார் இதனால் மனம் உடைந்த அனிகா சுரேந்திரன் தற்கொலை செய்ய போகிறார் இதை தடுத்து நிறுத்தும் ஆதி உன் பிரச்சனையை நான் தீர்த்து வைக்கிறேன் என்று அவருக்கு ஆறுதல் கூறுகிறார்

இப்பொழுது நாயகியுடன் ஆதிக்கு நிச்சயம் நடக்கவிருக்கிறது அந்த சமயத்தில் அனிகா இறந்துவிட்டார் என்று கருங்கல்பாளையம் தில் இருக்கும் ஒரு பாலத்துக்கு இடையே அனிகா பிணமாக கிடப்பதாக செய்தி வருகிறது

இதற்கு முன்பதாக ஆதியின் அம்மா தேவதர்ஷினி ஆதியின் ஜாதகத்தை பார்த்து அவருக்கு நிறைய இழப்புகள் ஏற்படும் ஜாதகத்தில் பிரச்சனை ஏற்படும் அதனால் அவர் எந்த வம்புக்கும் போகக்கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார் இப்பொழுது அனிதா இறந்ததற்கு நியாயம் கேட்டு தியாகராஜனை அவருடைய அலுவலகத்திற்கு சென்று அடித்து விட்டு வந்து விடுகிறார் ஆதி அதன் பிறகு என்ன நடந்தது.


அனிகாவை கொன்றது யார்? ஆதியின் ஜாதகம் பளித்ததா? அனிகா அப்பா இளவரசுக்கு நியாயம் கிடைத்ததா இதையெல்லாம் கொங்கு மண்டலத்தின் பாஷையில் ஈரோட்டில் நடக்கும் கதை களத்தில் இந்த படத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார் இயக்குனர்

: கதை புதிது என்று சொல்ல முடியாது பல படங்களில் பார்த்த கதை தான் இருந்தாலும் படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது இப்படி ஒரு டிவிஸ்ட் வைப்பார் என்று படம் பார்ப்பவர்கள் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார் கள் அப்படி ஒரு டுவிஸ்ட்

ஆதி காதல் காட்சிகளும் அனிகாவுக்கு ஒரு அநியாயம் நடப்பதை கண்டு பொங்கி எழும்போதும் தேவதர்ஷினி அடங்கி போ என்று சொல்லும் பொழுது பெண்களுக்கு ஹராஸ் ஏற்பட்டால் அவர்கள் வெளியே தைரியமாக சொல்ல வேண்டும் தட்டி கேட்க தயங்க கூடாது என்று இடைவேளைக்கு பிறகு துணிச்சலாக களம் இறங்குகிறார் அவர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது அவர் இசை பின்னணி இசை பலமாக இருக்கிறது இந்த படம் 25வது படம் பின்னணியில் மிரட்டி இருக்கிறார் ஒரு பாடலும் பாடி இருக்கிறார் பாடலும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது குழந்தைகளுக்கு பிடித்த நடனம் காதல் காட்சியில் என்று ஹிப்ஹாப் தமிழா படம் முழுவதும் ஜொலிக்கிறார்

பிரபு, வழக்கறிஞராக வந்து நியாயத்துக்கு துணை நிற்கிறார் தியாகராஜன், நச்சு பாம்பாக நல்ல பாம்பாக ஒரு பெரிய பதவியில் இருந்து கொண்டு படிக்கும் பள்ளி மாணவியை அடைய நினைக்கும் ஒரு பித்தலாட்டக் கல்லூரியின் எம்டி யாக நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் தேவதர்ஷினி ஆதியின் அம்மாவாக பயந்து பயந்து தன் மகன் வம்பு தும்புக்கு போக கூடாது எதுவும் நடந்து விடக்கூடாது என்று அஞ்சி நடுங்கும் கதாபாத்திரம் ஆதியின் அப்பாவாக பட்டிமன்ற ராஜா, நடித்திருக்கிறார் இவர் காமெடி அப்பா

கேமரா கோணம் நன்றாக இருக்கிறது கொங்கு மண்டலத்தில் பெருமை பேசும் ஈரோட்டை இவ்வளவு அழகாக எந்த படமும் காட்டியதில்லை படத்தொகுப்பு
கச்சிதமாக இருக்கிறது காஸ்ட்யூமர் தன் பணியை நன்றாக செய்திருக்கிறார் அரங்க அமைப்பு நன்றாக இருக்கிறது டி ஐ, கலர் கரெக்ஷன், நன்றாக இருக்கிறது
படத்தில் பங்கு பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து உள்ளார்கள்

இன்று நாட்டில் பெண்களுக்கு எல்லா இடத்திலும் தொல்லைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது பரவாயில்லை என்று அனுசரித்துப் போக போக கயவர்கள் கூட்டம் பெண்களை சில்மிஷம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் எனவே துணிந்து தட்டிக் கேட்க வேண்டும் பெண்கள் பயப்படக்கூடாது என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறது இந்த படம் பெண்களுக்கு தைரியத்தை சொல்கிறது இந்த படம் மொத்தத்தில் இந்த பி டி சார் எல்லோருக்கும் பிடிக்கும் வெற்றி வாகை சூடும்

இந்தப் படத்தில் மேஜிக் வால் என்று ஒரு சுவரை காட்டுக அது இதுவரை தமிழ் சினிமாவில் வராத கதைக்களம் பள்ளியில் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களுக்குள் இருக்கும் ஆசைகள் எண்ணங்களை அந்த சுவற்றை எழுதினால் நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை அவருடைய மன அழுத்தம் குறையும் என்ற ஒரு புதிய அறிமுகத்தை இந்த படத்தை சொல்லி இருக்கிறார்கள் இனி எல்லா பள்ளிகளும் எல்லா கல்லூரிகளிலும் இந்த மேஜிக் இருக்கலாம் என்று நம்புகிறோம் படம் முதல் பாதியில் காமெடியும் கலகலப்பு காதலும் குடும்ப பின்னணியு மாக செல்கிறது

ஹிப்ஹாப் தமிழா, தியாகராஜன், இருவரும் மோதலுக்கு பிறகு படம் பரபரப்பாக அடுத்து என்ன? நடக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள்

காமெடியாக வரும் ஜட்ஜ் பாக்யராஜ் சார் அவர்கள் கதையின் திருப்பு முனையாக உதவுகிறார்

மதுவந்தி சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆக வந்து கோர்ட்டு காட்சிகளில் வாதம் புரிவது கம்பீரம்

போலீஸ் ஸ்டேஷனில் ஏழைகளுக்கு நியாம் கிடைக்காது பணக்காரர்களுக்கு தான் நியாயம் கிடைக்கும் என்று இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள் அது உண்மை

கிராமங்களில் இன்னுமும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஜாதகங்களை தூக்கிக்கொண்டு ஜோசியக்காரர்கள் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருப்பது உண்மை அதை மெயின் கதையாக வைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் பாராட்டுக்குரியவர் சமூக சிந்தனையோடு ஒரு நல்ல படப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் இருபத்தைந்தாவது படத்திற்கு இசையமைத்திருக்கும்ஆதிக்கு வாழ்த்துக்கள் இந்த படத்தை தயாரித்திருக்கும் வேல்ஸ் பிலிம்ஸ்க்கு வாழ்த்துக்கள்