கருடன் (2024) தமிழ் – சினிமா விமர்சனம்

 ( பிரண்ட்ஸ் & ஆக்சன் டிராமா) ரேட்டிங் 3-5 / 5

ஆதி என்கிற சசிகுமார், கருணா என்கிற உன்னி முகுந்தன், இருவரும் சிறுவயது தொட்டு நண்பர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு அப்பத்தாவாக வடிவுக்கரசி ,கருணாவின் விசுவாசம் மிக்க கருடனாக சொக்கன் என்கிற சூரி ,இந்த மூன்று கதாபாத்திரங்களையும் வைத்து அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார், வெற்றிமாறன் எழுதிய படத்திற்கு உயிர் கொடுத்திருப்பது இதில் நடித்த நடிகர்கள் ,நடிகைகள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்கள் அனைவரும் ஒத்துழைப்போடு படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது வெற்றி படமாக..

முதல் காட்சியிலேயே பத்திர பதிவு துறை அமைச்சராக இயக்குனர் ஆர். வி உதயகுமார், அறிமுகமாகி கோம்பை என்கிற தேனி மாவட்டத்தில் இருக்கும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் கேட்பாரற்று கிடப்பதை கண்டு அந்த கோயில் சொத்துக்களை தன் வசமாக்க வேண்டும் என்று அதிகாரிகளை உசுப்பி விட்டு ஐ ஜி இடம் பேசி அங்கு சமுத்திரக்கனியை அந்த இடத்திற்கு தயார் செய்ய சொல்லும் பொழுதே படத்தில் விறுவிறுப்பு பரபரப்பு குறைவிருக்காது என்று எண்ணத் தோன்றுகிறது அதேபோல காட்சிகளும் ரெக்கை கட்டி பறக்கிறது

இது நண்பர்கள் படம் என்று நினைத்து வந்தவர்கள் கூட படத்தோடு ஒன்றி விடும் அளவுக்கு திரைக்கதை செம ஃபாஸ்ட்.. .

இன்னொரு முக்கியத்தகவல் சூரி கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள்

சூரி வெள்ளந்தி யாக மூச்சு விடாமல் டயலாக் பேசும்போது கைதட்டல் தியேட்டரை நிரப்பி விடுகிறது.

சூரியின் நட்புக்காக இந்தப் படத்தில் சசிகுமார் நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் உன்னி முகுந்தனிடம் நண்பன் என்று பாசத்தை கொட்டுவது சூரியிடம் அன்பை பொழிவது மனைவியிடம் பாசம் காட்டுவது வடிவுக்கரசியிடம் அன்பை கொட்டுவது என சசிகுமார் ஒர் சிறந்த நடிகர் என்பதையும் நிருபித்திருக்கிறார்.

கோயில் சொத்தை திருட மைம் கோபி, ஆர் வி உதயகுமார், சமுத்திரக்கனி, எனஎல்லா கேரக்டர்களும் ஓடிக்கொண்டே இருப்ப்து நல்ல ஸ்பீடுக்கான லீட்,

பத்திரம் அபகரிக்க திட்டம் தீட்டி நண்பனையே கொலை செய்ய துடிக்கும் உண்ணி முகுந்தன் நடிப்பு மிக அருமை.

6 கேரக்டர்களும் ஒரே புள்ளியில் சந்திக்கும் வரை சாதாரணமாக போகும் படம் .அதற்குப்பிறகு படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது. சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஆர் . வி. உதயகுமார், மற்றும் மைம் கோபி

பாடல் வைக்க பல இடங்களூம் , வாய்ப்பு இருந்தது ஆனால் பின்னனி இசை க்கு உயிர் கொடுத்து மிரட்டி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா
முதல் பாதியில் மண், பெண், பொன் என நகர்கிறது. அதிலும் இடைவேளை காட்சி புல்லரிக்க வைத்துள்ளது. அதற்கேற்றார் போல் திரை கதையும் பாராட்ட வைத்திருக்கிறது.
. அது மட்டும் இன்றி விறுவிறுப்பும் திரில்லரும் கலந்து உருவாகி இருக்கும் இந்த கதை சூரிக்கு நிச்சயம் ஸ்பெஷலாக இருக்கும்
இந்த கூட்டணி இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் பட வரிசையில் இணைந்து விடும்
வெற்றிமாறனின் கதையிலிருந்து RS துரை செந்தில்குமார் எழுதி இயக்கிய2024 வெற்றி ப்படம். . இதை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மற்றும் கே. குமாரின் லார்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சூரி , எம். சசிகுமார் , உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரேவதி சர்மா, ஷிவதா , சமுத்திரக்கனி , ராஜேந்திரன் மற்றும் மைம் கோபி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்

இயக்கம் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஒரு வெற்றி படத்துக்கு தேவையான கதையை எழுதி தந்து இருக்கிறார்
.
“நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்ற வசனத்துடன் தொடங்குகிறது படம். சசிகுமார், உன்னி முகுந்தன் நல்ல நண்பர்கள். உன்னி முகுந்தனிடம் விசுவாசியாக இருக்கிறார் சூரி.

விசுவாசத்தின் முழு உருவமாக இருக்கும் சூரி, தன்னை வளர்த்த குடும்பத்துக்காக ‘சம்பவம்’ ஒன்றை செய்ய அதனால் பிரச்சினை எழகிறது. ஆக்‌ஷனும், கதறலும், மிரட்டலுமாக முழு படத்தையும் கவனம் பெறுகிறார் சூரி. அவரின் வெறித்தனமான நடனம் ஒன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமை கிறது. அந்த சாமி ஆட்டம் இடைவேளையின் போது சிலிர்க்க வைக்கிறது

பின்னணியில் இசைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை தனித்து தெரிகிறது. இவையெல்லாம் கோர்த்து உருவாக்க பட்டுள்ளது கிளைமாக்ஸ் காட்சியில் கோரத்தாண்டவம் ஆடி உள்ளார் தனக்கு சோறு போட்டு வளர்த்த விசுவாசமிக்க எஜமானனை எப்படி அடிப்பது என்று சூரி தயங்கி நிற்க, உன்னி முகுந்தன் வெளுத்து வாங்க ,அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு சூரி தயங்க தயங்கி நிற்கிறார் அதன் பிறகு தனது காதலில் விண்ணரசி எரிமூட்டத்தில் புகைந்து போக போகிறாள் என்று தெரிந்த பிறகு அவளை தேடி ஓடும்போது வரும் எதிர் அலைகளை துவசம் செய்கிறார் அங்கு வரும் சசிக்குமாரின் மகனை உன்னி முகுந்தன் மிச்சம் வைக்க கூடாது என்று கொலை செய்ய போகும்போது சிலித்து எழுந்து உன்னி முகுந்தனை உண்டு இல்லை என்று செய்யும் காட்சி தியேட்டரில் பெரிய கரகோஷம் இத்தனைக்கும் சூரி தனக்கு என்ன வருமோ அதை மட்டும் சிறப்பாக செய்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது கதாநாயகன் என்ற பில்டப் இல்லை சண்டைக் காட்சியில் 10 பேரை அடித்து ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ஆனால் வருகின்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இந்த தீர்க்கமான பார்வை இந்த தீர்க்கமான பேச்சு உறுதியான நடவடிக்கை சசிகுமார் குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் அந்த விசுவாசம் அவர் மீது மிகப்பெரிய பலம் சூரிக்கு வாழ்த்துக்கள் இயக்குனர் வெற்றிமாறன் இந்த கதை வெற்றி பெறும் என்று அவர் தீர்க்கமாக நம்பியது வீண் போகவில்லை இயக்குனர் துரை செந்தில்குமார் வெற்றிப்பட இயக்குனர் வரிசையில் சேர்கிறார் யுவன் சங்கர் ராஜா பின்னணியில் வெளுத்து வாங்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் காட்சிகளை கண்ணுக்கு விருந்து ஆக்கி இருக்கிறார் படத்தொகுப்பாளர் கச்சிதமாக படத்தை நறுக்கி இருக்கிறார் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் ஆர் வி உதயகுமார் நன்றாக நடித்தி ருக்கிறார் புதுமுகநாயகி சூரிக்கு சரியான ஜோடியாக அமைந்திருக்கிறார் மொத்தத்தில் இந்த கருடன் வெற்றிக்கு சொந்தக்காரன் விசுவாசம் மிக்க வேலைக்காரன் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல உலகம் உள்ள எல்லா ரசிகர்களையும் இந்த கருடன் நிச்சயம் ரசிக்க வைப்பான். வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு இந்த படத்தில் நல்ல பக்குவபட்ட நடிப்பு. மொத்தத்தில் இந்த கருடன் வெற்றிக்கு சொந்தக்காரன்