இயக்குனர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா. இவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஹிட்லிஸ்ட். இயக்குனராக பல வெற்றிகளை சூடிய இயக்குனரின் மகன் தன் முதல் படத்தில் முத்திரை பதித்திருக்கிறார்
நவரச நடிப்பு, கோபம், பாசம், ஏக்கம், தவிப்பு, என எல்லாம் நன்றாக வருகிறது முதல் படம் போல் இல்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார்
சமுதாயத்துக்கு தேவையான ஒரு கருத்தை படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் பாராட்டலாம்
மனிதம் குறைந்து போன நிலையில் இது போன்ற படைப்புகள் நிச்சயம் தேவைதான்….
படத்தின் கதை:
சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்று கருதுபவரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் கொள்கைகளை கடைபிடித்து வாழும் மென்பொறியாளர் நாயகன் விஜய். இவரது அம்மா சித்தாரா, தங்கை என அமைதியாக வாழும் ஒரு குடும்பம்.
இவர் எப்படி காசி மேட்டில் இருக்கும் காளி என்ற பயங்கரமான ரவுடியை அடித்துக் கொலை செய்தார்?
மிகவும் நல்லவர் என்ற பெயருடன் வாழும் நாயகனின் அம்மாவையும், தங்கையும் திடீரென முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் கடத்துகிறான்? கடத்திய மர்மநபர் சிறு உயிரைக் கூட கொல்லக்கூடாது என்ற கொள்கையுடன் வாழும் நாயகன் விஜய்யை மிரட்டி இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான்.
அந்த முகமூடி அணிந்த மர்மநபர் யார்? அந்த மர்மநபர் எதற்கு சைவ உணவை மட்டுமே உண்டு, சிறு எறும்பைக் கூட கொல்லக்கூடாது என்று வாழும் கொள்கை கொண்ட நாயகனை கொலை செய்யச் சொல்கிறான்? அந்த முகமூடி அணிந்த மர்மநபரிடம் இருந்து எப்படி நாயகன் தனது தங்கை, அம்மாவை காப்பாற்றுகிறார்? நாயகனுக்கும், முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையே நடக்கும் அந்த யுத்தத்தில் நாயகனை மீட்டு, குற்றவாளியை எப்படி கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி சரத்குமார்? இதற்கெல்லாம் காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்கிறது ஹிட் லிஸ்ட்.
படம் ஆரம்பத்திலிருந்து இடைவேளை வரை செம பரபரப்பு, விறுவிறுப்பு ,றெக்கை கட்டி பறக்கிறது அடுத்து என்ன அடுத்து என்ன என்று காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு
இடைவேளைக்கு பிறகு சமுதாயத்திற்கு நன்மை தரக்கூடிய நல்ல மெசேஜ் ஒன்று சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள்
# நமக்கு ஏதாவது ஒன்று வந்து விட்டால் துடிக்கிறோம் அதே மற்றவருக்கு வந்தால் நமக்கு என்ன?
என்ற மனப்பாங்கு சமுதாயத்தில் தற்போது அதிகமாக பரவி வருகிறது அதற்கு நெத்தி பொட்டில் அடித்த மாதிரி ஒரு மெசேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குனர்
யாருக்கு எந்த துன்பம் வந்தாலும் அதை தட்டி கேட்க வேண்டும் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே இந்த படத்தின் கதை கரு.
#படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா அப்பாவித்தனமான, பயந்த சுபாவமான, அம்மா தங்கையை காப்பாற்ற போராடும் ஒரு மகனாக நடிப்பில் விக்ரமனின் மகன் என்பதை நிரூபித்துள்ளார்.
#காவல்துறையினருக்கும், அந்த முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் தவிப்பை மிக அழகாக வௌிப்படுத்தியுள்ளார். சண்டை காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து இருக்கிறார் எமோஷனில் அழவேண்டிய காட்சிகளில் அருமையாக அழுது நடித்திருக்கிறார் கோவப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டும் பதுங்க வேண்டிய இடத்தில் பூனை போலவும் கைகட்டி நிற்க வேண்டிய இடத்தில் பணிவாகவும் சிறப்பான நடிப்பை முதல் படத்திலேயே வெளிப்படுத்தி இருக்கிறார் சபாஷ் விஜய்
முதல் படம், மிகப்பெரிய இயக்குனரின் மகன் என்பதால் காதல், டூயட், என கதைக்கு தேவையில்லாத விஷயங்கள் படத்தில் இடம்பெறாதது மிகப்பெரிய பலம். முதல் படத்திலேயே சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொன்னதற்காக பாராட்டலாம்.
குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு வரும் மிகப்பெரிய ரவுடியாக உலா வரும் காளிக்கும்( கே.ஜி.எஃப். வில்லன் கருடா ராம்), நாயகனுக்கும் இடையில் நடக்கும் சண்டைக்காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலம். அந்த காட்சியில் வில்லனை வீழ்த்துவதற்காக அவருக்கு உத்தரவு போடும் மாஸ்க் மேன் வீடியோ காலில் வர, வில்லனும் அதை ஏற்று அடியாட்களை வெளியே போக சொல்லிவிட்டு ஒத்தைக்குஒத்தை மோதும் அந்த துணிகரமான காட்சியிலேயே
சபாஷ் வாங்குகிறார்
முதல் பாதியில் சரத்குமாருக்கு எந்தவொரு ஆக்ஷன் காட்சிகளும் பெரியளவில் இல்லாத நிலையில், இரண்டாம் பாதியில் தொடக்கத்திலே சரத்குமாருக்கு சண்டைக் காட்சிகள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது
. அவர் வரும் இடத்தில் எல்லாம் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக பார்வையாலே மிரட்டி விட்டு போகிறார் நாயகனை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் முட்டு சந்துக்குள் போய் நிற்பதை போல் எந்த ஒரு உதவியும் செய்ய முடியாமல் அவர் கையை கட்டிக் கொண்டு பிசைந்து கொண்டிருப்பது அவர் மேல் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது
இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைசாகவே இருந்தது. ஸ்ரும்தி குறைந்த நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பையும், முக்கியமான கதாபாத்திரமாகவும் வருகிறார
நாயகனின் அம்மாவாக சித்தாரா அன்பாகவும் பாசமாகவும் மாஸ்க் மேலிடம் மாட்டிக் கொண்டு விழிபி துங்கும் தாயாகவும் நன்றாக நடித்திருக்கிறார் அடுத்து அயலி படத்தில் நடித்த அபி நட்சத்திரா நாயகனின் தங்கையாக வந்து மாஸ்க் மேன் கையில் மாட்டிக் கொண்டு கதறும் காட்சிகள் இதயத்தை தொடுகிறது வெற்றிக்கு சொந்தக்காரரான இயக்குனர்
கே.எஸ்.ரவிகுமார் ஆர் கே செல்லுலாயிட் மூலம் தயாரித்துள்ள இப்படத்தை. சூர்யகதிர், கே. கார்த்திகேயன் இணைந்து இயக்கி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் சார்
மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, பாலசரவணன் உட்பட பலர் நடித்திருகின்றனர். சி.சத்யா இசை அமைத்துள்ளார் ராம்சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார்
விஜய் கனிஷ்காவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம் என்றாலும், வழக்கம் போல் நல்ல விசயங்களை பேசும், நல்ல மனம் கொண்ட வேடத்தில் நடித்திருக்கிறார். பிரசவத்தால் துடிக்கும் பெண்ணுக்கு தன்னுடைய உயிரை காப்பாற்றும் ஆக்ஸிஜனை தந்துவிட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் இப்படிப்பட்ட புனிதர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதற்கு இவருடைய கதாபாத்திரம் ஒரு எடுத்துக்காட்டு
மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், வழக்கம் போல் தனது ஸ்டைலிஷான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பணத்துக்காக மனித உயிர்களை துச்சமாக நினைக்கும் கொடூர மனிதர்களில் இவரும் ஒரு நபர் என்று அவருக்கு சரியான பாடம் கற்பிக்கும் மாஸ்க் மேன் எடுக்கும் திட்டம் பலே என்று சொல்ல தோன்றுகிறது இந்த கதாபாத்திரம் மனிதர்களின் முகமூடியை கிழிக்கும் கதாபாத்திரம்
ஸ்மிருதி வெங்கட் சம்மந்தப்பட்டிருக்கும் பிரச்சனை மக்கள் எதிர்கொண்டவை என்பதால், அவரது காட்சிகள் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருப்பதோடு, அவரது நடிப்பு கண்கலங்க வைக்கிறது. படத்தில் மனிதநேயமிக்க டாக்டர் ஆக வந்து உயிர்களை காப்பாற்ற போராடுவதும் அவர் உயிருக்கு போராடும் போது மற்றவர்கள் யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது மனித இனத்தின் சாபக்கேடு ஒரு உயிருக்கு பிரச்சினை எனும் போது அதற்காக துடிப்பவனே மாமனிதன் என்ற தத்துவத்திற்கு ஏற்ப இந்த கதாபாத்திரம் வடிவமைப்பு செய்ய ப்பட்டுள்ளது
படம் முழுக்க இது போன்ற கதாபாத்திரம் பார்த்துக் கொண்டே இருக்க மாட்டோமா என்று நினைக்க வைக்கிறது இவரது நடிப்பு வெல்டன் ஸ்ரும்தி
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சித்தாரா, புது வசந்தத்தில் பார்த்த அந்த வசந்தமான முகம் கொஞ்ச நேரத்தில் பயத்தில் அலறும் போது பார்ப்பதற்கு பரிதாபம் தங்கையாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, துணிச்சல் மிக்க பெண்ணாக ஆரம்பக் கட்சிகளில் வந்து அலறல் நட்சத்திரமாக நம்மை ஐயபடுத்துகிறார் ஐஸ்வர்யா தத்தா, ஆரம்பத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளார் நாயகனுக்கு உதவியாக இன்னும் சில காட்சிகள் வைத்திருக்கலாமே அனுபமா குமார், ஹோம் மினிஸ்டர் ஆக வந்து ஹோமிலியாக மனதில் நிற்கிறார் ராமச்சந்திரன் ஆகியோர் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பண்பட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி குறைவான காட்சிகள் வந்தாலும், அதில் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுகிறார்கள். இரவில் எலி பிடிக்கும் ரெடின் அதை தப்பிக்க விட்டு மனைவியிடம் திருதிரு என விழிப்பதும் பின்னர் நாயகனை கண்டு பயப்படுவது என ரசிக்க வைத்திருக்கிறார் இன்னும் கொஞ்சம் வந்திருந்து நாயகனுக்கு உதவியாக இருந்திருக்கலாம்
ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண். மாஸ்க் மேனை காட்டும் போது அச்சம் திகில் வில்லன் காளியை காட்டும் போது ஒரு வித பயம் நாயகனை காட்டும் போது பரிதாபம் என சென்னையை வேறொரு கோணத்தில் படமாக்கி கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் சி.சத்யா பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
முகமூடி மனிதர் யார்?, அவர் எதற்காக விஜய் கனிஷ்காவை கொலை செய்யச் சொல்கிறார்? என்ற இரண்டு கேள்விகள் தான் முழு படத்தையும் எதிர்பார்ப்புடன் பயணிக்க வைப்பதோடு, அந்த இரண்டு கேள்விகளுக்கான சஸ்பென்ஸை இறுதி வரை ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி இயக்குநர்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல திரைக்கதை அதை எப்படி மக்களுக்கு ரசிக்கும்படி கொடுக்க வேண்டுமோ அதை பிசிறு தட்டாமல் கொடுத்து இருக்கிறார்கள் முதல் படம் என்பது போலவே தெரியாமல் அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் வரிசையில் இந்த இருவரும் சேருவார்கள் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் பட்டியலில் வந்த உதவியாளர்கள் என்பதை காலர் தூக்கி விட்டு செல்லலாம் இனி நல்ல நல்ல படைப்புகளை இவர்கள் மூலம் தமிழ் சினிமா கொண்டாடவிருக்கும்
முதல் படம் தானே நாயகனுக்கு ஒரு காதலி நான்கு பாட்டு மூன்று ஃபைட் கூடவே ஒரு யோகி பாபு அம்மா தங்கை தங்கைக்கோர் பிரச்சினை என்று கதையை கொண்டு செல்லாமல் ஒரு சமுதாய பிரச்சனை அழுத்தமான உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை அதில் விளையாடும் மருத்துவர்கள் அவர்களுக்கு கமிஷன் கேட்டு உயிர் களை பழிவாங்கும் கொடூரமான வில்லன்கள் என்று சமூகத்துக்கு தேவையான பொறுப்பான படைப்பை கொடுத்த இந்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், முதல் படத்திலேயே முத்திரை பதித்த நாயகனுக்கு, இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாளருக்கும், படத்தொகுப்பாளர்களுக்கு, கலர் கரெக்ஷன் செய்த பட குழுவுக்கு ஒப்பணையாளருக்கு, மாஸ்க் மேன் இருக்கும் அரங்கத்தை வடிவமைத்த ஆர்ட் டைரக்டருக்கும், அவ்வளவு பெரிய வில்லனுடன் சின்ன கதாநாயகன் மோதும் போது அதில் எப்படி நம்பகத்தன்மை ஏற்படுத்த வேண்டும் என்று கவனமாக சண்டைக் காட்சிகளை அமைத்த ஸ்டண்ட் இயக்குனருக்கும், நாயகனுக்கு ஒப்பனை செய்த ஒப்பனையாளருக்கும், அவ்வப்போது வந்து கிச்சு கிச்சு மூட்டிய முனீஸ் காந்த் க்கும் வாழ்த்துக்கள்.
வில்லன் ராமச்சந்திரன் உடனான விஜய் கனிஷ்காவின் மோதல், கெளதம் வாசுதேவ் மேனன் கதாபாத்திரத்தின் எண்ட்ரி ஆகியவை படத்தை ரசிக்க வைப்பதோடு, நடப்பவை குறித்து முகமூடி மனிதர் கொடுக்கும் விளக்கம் சமூகத்திற்கும், மக்களுக்கும் நெருக்கமாக இருப்பதால் ரசிகர்களால் கதையுடன் ஒன்றி பயணிக்க முடிகிறது
வெற்றி பட இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள்
உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி 1990ம் ஆண்டு புரியாத புதிர் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார்.
சேரன் பாண்டியன் படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்டவர் அடுத்தடுத்து புத்தம் புதுப்பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், சக்திவேல், நாட்டாமை , படையப்பா,என 3 ஆண்டுகளில் பல படங்கள் இயக்கினார்.
ஆனால் கேஎஸ் ரவிக்குமார் என்றாலே நமக்கு முதலில் முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்கள் தான் முதலில் நியாபகம் வரும்.
பிறந்தநாளை கொண்டாடும் வெற்றிப்படங்களின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் பல்லாண்டு வாழ்க என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது
. ஹிட்லிஸ்ட் போன்ற தரமான படைப்புகளை தயாரிக்க வேண்டும் கூகுள் குட்டப்பா போன்ற அருமையான படத்தைக் கொடுத்த ஆர் கே செல்வலாயிட்
சமூக பொறுப்புள்ள ஹிட் லிஸ்ட் படத்தை கொடுத்திருக்கிறது இந்த படம் நிச்சயம் ஹிட் லிஸ்டில் சேரும் இப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மனிதம் காப்போம்
