குற்றப்பின்னணி திரை விமர்சனம் (2024)

சோசியல் மெஸேஜ் & ரிவெஞ்ச் ஸ்டோரி. ரேட்டிங் 3-5 /5

Casting : ‘Ratchasan’ Saravanan, Deepawali, Dhatchayini, Siva, Hanifa, Babu, Nehru, Lal, Akamal, Sharvika

Directed By : NP Ismail

Music By : Jith

Produced By : Friends Pictures – Ayesha Akamal
: ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சரவணன். அப்படத்தை தொடர்ந்து உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ‘ராட்சசன்’ சரவணன் ’குற்றப்பின்னணி’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.நல்வ இயல்பான நடிப்பு வாழ்த்துக்கள்

‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ள இப்படத்தை ஆயிஷா அகமல் தயாரித்துள்ளார். சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜித் இசையமைத்துள்ளார். என்.பி.இஸ்மாயில் பாடல்கள் எழுதியுள்ளார். நாகராஜ்.டிபடத்தொகுப்பு செய்துள்ளார். ஆக்‌ஷன் நூர் சண்டைக்காட்சிகளை வடிவகைக்க, ரா.ராமமூர்த்தி வசனம் எழுதியுள்ளார்.: படத்தில் கதாநாயகன் ராட்சசன் சரவணன் பழனியில் வசித்து வருகிறார். இவர் காலையில் நேரத்திலேயே எழுந்து வீடு வீடாக பால் வியாபாரம் செய்கிறார். இதனுடன் இவர் தண்ணீர் கேன் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் ஹீரோ வாழ்க்கையில் புயல் வீசியது. இவர் வழக்கம் போல் பால் கொடுக்கும் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அங்கு இருக்கும் பெண்ணை யாரோ கொலை செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை போலீசார் விசாரிக்கிறது. இன்னொரு பக்கம் ஒரு வீட்டிற்குள் இருக்கும் தம்பதியை சரவணன் கொலை செய்கிறார். ஆனால், இந்த இரண்டு கொலைகளுமே ஒரே பாணியில் தான் இருக்கிறது. கொலையாளி யார்? சரவணன் ஏன் கொலை செய்தார்? போலீஸ் இது எல்லாம் கண்டுபிடித்தார்களா? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

ராட்சசன் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்த சரவணன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பால் வியாபாரம், தண்ணீர் கேன் என்று ஏழ்மையில் இருக்கும் ஒரு அப்பாவி நபர் போல் நடித்திருக்கிறார். திடீரென்று இவர் கொடூரமான கொலையாளியாக மாறும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். இவரை அடுத்து படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
படம் நடக்கும் இடம் லொகேஷன் சூப்பர் அந்த அதிகாலை நேரத்தில் நாயகன் சைக்கிள் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்று அர்த்தம் அவர் இயல்பாக சென்று அந்த அதிகாலை நேரத்தில் கொலை செய்துவிட்டு இயல்பாக திரும்புகிறார் இது அந்த கதாபாத்திரத்தின் மீது ஏதோ ஒரு அனுதாபத்தை ஏற்படுத்துகிறது
படத்தின் கதை கள்ளக்காதல் சம்பந்தமானது தான் இன்று சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனையை தான் கையில் எடுத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர்

படத்தினுடைய ஒளிப்பதிவும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை ஓகே. சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் கொண்டு சென்று இருக்கிறார்.
கதைக்களம் நன்றாக இருக்கிறது அதை கொண்டு சென்ற இடத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது மொத்ததில் இந்த குற்றப் பின்னணி ஆராய வேண்டியது அலச வேண்டியது சமுதாயம் என்று நிமிர்ந்து பார்க்க வேண்டியது ஒவ்வொரு மனைவியும் குழந்தைகளைப் பெற்ற பின் அடுத்தவனோடு ஓடிப் போனால் தாலி கட்டிய கணவன் என்ன செய்வான் அதேபோல ஒவ்வொரு கணவனும் மனைவிக்கு இரண்டு குழந்தையை கொடுத்துவிட்டு அவள் அழகை புரிந்து உடன் அடுத்து அவரோடு வாழ தொடங்கினால் அந்த மனைவியின் மீது என்ன ஆகும் எனவே குடும்பம் என்பது பாசவழியில் பின்னியது ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தவும் ஒருவர் இன்ப துக்கத்தில் பங்கு கொள்ளவும் ஒருவர் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் போது ஆறுதல் கூறவும் ஒருவர் மன உளைச்சல் இருக்கும் போது அவருக்கு அன்பு செலுத்தவும் அதற்காகவே இறைவன் மனிதர்களை படைக்கப்பட்டிருக்கிறான் எனவே தவறுகள் இருந்தால் அமர்ந்து பேசலாம் குற்றம் குறை இருந்தால் அதை நீக்கிக் கொள்ளலாம் அன்போடு வாழ்வதே வாழ்க்கை அறத்தோடு வாழ்வதே வாழ்க்கை அதைத்தான் இந்த குற்ற பின்னணி சொல்கிறது படத்தில் நடித்த ராட்சசன் சரவணன் அடுத்த கட்டத்திற்கு முன்நோக்கி செல்கிறார் அவர் நடிப்பு இயல்பாகவும் எதார்த்தமாகவும் மிகைப்படுத்தப்படாமலும் இருக்கிறது தண்ணீர் கேன் சுமப்பதும் பால் ஊற்றுவதும் மற்றவர்கள் உதாசீனப்படுத்தினாலும் அதை தாங்கிக் கொண்டு சிரிப்பது கொலை செய்யும் போது இருக்கும் கொடூரம் என்ன நவரசங்களை காட்டி இருக்கிறார் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு ஹீரோவாக இனிமேல் பேசப்படுவார்

நிறை:
கதைக்களம் அருமை

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ்

மொத்தத்தில் இந்த குற்றப் பின்னணி ரசிக்க வைக்க கூடிய சுவையான பின்னணி அனைவரும் பார்க்க வேண்டிய படம் மிஸ் பண்ணிடாதீங்க வருத்தப்படுவீங்க