தி அக்காலி திரை விமர்சனம் ( 2024)

(அமானுஷ்யம் & திரில்லர் திரைப்படம்) ரேட்டிங் 3-5/ 5

Casting : Nasser, Jai kumar, Thalaivasal Vijay, Swayam sidha, Vinoth Kishan, Vinodhini, Arjai, Sekar, Yamini, Dharani, Bharath

Directed By : Mohammed Asif Hameed

Music By : Mohammed Asif Hameed

Produced By : P Ukeshwaran

சாத்தான்களின் இருப்பிடம் சாத்தான்களின் தலைவன் இந்த உலகத்தில் ஈகோ பிடித்த மனிதர்களை அழித்து மனிதர்களை சமப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அமானுஷ்ய சக்திகள் கும்பலுக்கு தலைவனாக விளங்குபவர் தான் வித்தியாசமான திரைப்படம் வித்தியாசமான திரைக்கதை வித்தியாசமான படப்பிடிப்பு அதை சொன்ன விதம் கேமராவில் புதுமையான கலர் கரெக்ஷன் என காட்டிய விதம் அமானுஷ்யங்களின் ஆர்ப்பரிப்பு அனிதா, ஜானிஸ் ,யாஸ்மின், கௌதம், ஈஷா, என்ற இந்த ஐந்து கதாபாத்திரங்களோடு காவல்துறை அதிகாரியாக ஜெயக்குமார் அவருடன் டேவிட் இன்னொரு போலீஸ் அதிகாரி லாரன்ஸ் மற்றும் நாசர் இரண்டு வித கெட்டப்புகளில் இரண்டு வேடங்களில் புதுமையாக வந்துள்ள படம் தான் தி அக்காலி

காவல் துறை அதிகாரி அம்ஜத் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி அந்த மயானத்தில் போலீஸ் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பல அதிர்ச்சிகமரான உண்மைகள் தெரிய வருகிறது. அதைப் பற்றி புலனாய்வு செய்ய ஒருவர் வருகிறார் அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயக்குமார் பதில் சொல்வதாக படம் ஆரம்பிக்கிறது அதன் பின் அவர் விவரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு திகில்

i: சாத்தானை வழிபடும் குழுவினர், அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார். அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, அந்த குழுவின் பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயமானது மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை பற்றி தெரிய வருகிறது.
1950 ஆவது வருடத்தில் நடந்த ஒரு கருப்பு சம்பவத்தை கண்டுபிடிக்கிறார் அங்கு தான் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்துகிறது கதை

உயர் அதிகாரி தடுத்தும், இந்த விசயங்களில் தீவிரம் காட்டும் ஜெய்குமார், இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போது அவரைச் சுற்றி பல மர்ம விசயங்கள் நடைபெறுகிறது.
அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார் அந்த சைத்தான்களின் தலைவர் அதை எல்லாம் தாண்டி ஜெயக்குமார் எப்படி ஜெயித்தார் அமானுஷ்ய சக்திகளை எப்படி விரட்டி அடித்தார் பிளாக் மேஜிக் செய்யும் அந்த கும்பல் யார் அனிதாவை ஆட்டிப் பிடிக்கும் அந்த அமானுஷ்ய சக்தி அது என்பதே அதன் எல்லைக்கே சென்று விரிவாக ஆராய்ச்சி செய்கிறார்

இறுதியில் அனைத்து மர்ம முடிச்சுகளையும் அவர் எப்படி அவிழ்கிறார் என்பதை சொல்வதோடு, மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், கமா போட்டு தொடர்வது தான் ‘தி அக்காலி’ படத்தின் கதை.
ஒரு அமானுஷ்ய படத்தை எப்படி கொடுக்க வேண்டுமோ எப்படி திகில் ஏற்படுத்த வேண்டுமோ எப்படி பரபரப்பாக திரைக்கதை அமைக்க வேண்டுமோ எல்லாம் கச்சிதமாக ஏற்படுத்தி ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஒரு ஹாலிவுட் படத்தை பார்ப்பது போல் பிரம்மை நமக்கு அடுத்து என்ன நடக்கும் அடுத்து யார் சாகப் போகிறார்கள் அடுத்து யார் அமானுஷ்ய பிடியில் சிக்க போகிறார்கள். சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் அந்த பாய்க்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு அந்த பாய்க்கும் போலீஸ் அதிகாரியான லாரன்ஸ்சுக்கும் என்ன தொடர்பு இப்படி பல முடிச்சுகள் காணாமல் போன ஜான்சி
யாஸ்மின் துப்பாக்கியை ஏன் எடுக்கிறார் இப்படி பல முயற்சிகளுக்கு பதில் சொல்கிறது இந்த படம்

சாத்தான்களை வழிபடுபவர்களின் நரபலி சம்பவங்களை மையமாக வைத்துக்கொண்டு விறுவிறுப்பான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் அதை வித்தியாசமான முறையிலும் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படி ஒரு அமானுஷ்ய சம்பவங்களை எடுத்து வைக்கும் படம் வந்ததில்லை என்றே சொல்லலாம்

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நடித்திருக்கும் நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, வித்தியாசமான தோற்றம் மற்றும் உடல் அசைவுகள் மூலம் புதிதாக தெரிகிறார்கள். அனிதாவாக வரும் அவரின் நடிப்பு பேய் பிடித்தவர் போலவே படம் முழுக்க கத்திக் கொண்டே இருக்கிறார் அதிகப்படியான உழைப்பு அவருக்கு அவர் திரும்பி பார்க்கும் போது நமக்கு பயத்தை ஏற்படுத்துகிறது அந்த கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை எதனால் இப்படி என்று யூகிக்க முடியாத அளவுக்கு கொண்டு சென்றிருப்பது சிறப்பு
தாரனியின் நடிப்பு
படத்திற்கு பலம்

பேய் பிடித்தது போல் ஆக்ரோஷமாக இருக்கும் தாரணி, பிளாக் மேஜிக்கால் ஈர்க்கப்பட்ட யாமினி, சாத்தான் குழுவால் பாதிக்கப்பட்ட அர்ஜய், கருப்பு உலகத்தைச் சேர்ந்த வினோத் கிஷன், நாசர் ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒவ்வொரு காட்சியிலும் ஒரு திருப்பம் ஜெயக்குமார் விசாரிக்கப் போகும் இடத்தில் எல்லாம் ஒரு துர்மரணம்

ஒளிப்பதிவாளர் கிரி முர்பி, இதுவரை தமிழ்ப் படங்களில் இடம்பெறாத லொக்கேஷன்களை தேடி பிடித்து காட்சிப்படுத்தியிருப்பதும், பயன்படுத்தப்பட்ட வண்ணங்களும் வழக்கமான படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
அமானுஷ்ய காட்சிகளில் கேமரா எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு அற்புதமாக உழைத்து இருக்கிறது சென்னையை ஹாலிவுட் ரேஞ்சில் காட்டியிருப்பதில் கேமரா பங்கு கடின உழைப்பு உழைத்திருக்கிறது

கலை இயக்குநர் தோட்டா தரணியின் பணி படம் முழுவதும் தெரிகிறது. பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் என்றாலும், அதனுடன் தோட்டா தரணியின் கலை இயக்கம் கச்சிதமாக பின்னி பிணைந்திருக்கிறது.
அவரின் அரங்க அமைப்புகள் கிளைமாக்ஸ் காட்சியில் பாழடைந்த சர்ச்சுக்குள் சாத்தானின் கோரத்தாண்டவம் அரங்க அமைப்புகளும் படமாக்கப்பட்ட விதவும் சூப்பர்

VFX காட்சிகள் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும்பாலான காட்சிகளை பிரமாண்டமாக நகர்த்த பெரிதும் பயன்பட்டிருக்கிறது.
நாயகன் ஜெயக்குமார் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு லொகேஷன் போகும்போது எழுத்துக்களால் அந்த பில்டிங் மேல் போடுவது புதுமை வித்தியாசம் ரசிக்க வைக்கிறது

படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன், வித்தியாசமான கதைக்களத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளார் .
அந்த இடைவேளை சண்டை காட்சிகள் மிக அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது

எழுதி இயக்கியிருக்கும் முகமது ஆசிப் ஹமீத் நரபலி என்ற கதைக்களத்தை வித்தியாசமான பாணியில் சொல்ல முயற்சித்திருப்பது
பாராட்டுக்குரியது அரைத்த மாவை அரைக்காமல் பேய் படம் என்றால் சுந்தர் சி ராகவா லாரன்ஸ் பாணியில் காமெடி படமாக இல்லாமல் ரசிகர்களை பயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் படமாக எடுக்கப்பட்டிருப்பதற்கு அவருக்கு வாழ்த்துக்கள்

படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்பு, அதன் பிறகு இடம்பெறும் காட்சி ரசிக்க வைக்கிறது . குறிப்பாக படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது

இதுதான் கதை என்று ஜெயக்குமார் தெளிவாக ஒவ்வொரு காட்சியையும் தனக்கு எதிராக இருப்பவரிடம் விவரிக்கும் போது குழப்பம் இல்லாமல் திரைக்கதை பயணத்திருக்கிறது

16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கை தற்போது விசாரிக்கும் பாணியில் திரைக்கதை அமைத்த விதம், ஆகியவை சற்று ஆறுதலடைய செய்து படத்தை பார்க்க வைக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘தி அக்காலி’ வித்தியாசமான
முயற்சி,
வித்தியாசமான திரைக்கதை ,
வித்தியாசமான பார்வை ,
புதிய கேமரா கோலம்
ஆர்டரின் அருமையான கை வண்ணம் .
இசையமைப்பாளரின் செம மிரட்டலான இசை ,
நடித்திருப்பவர்கள் கதைக்கேற்ப உணர்ந்து நடித்திருக்கிறார்கள்

செலவைப் பற்றி கவலைப்படாமல்
ஒரு நல்ல தரமான படைப்பு கொடுக்க வேண்டும் என்று எந்த சமரசமும் இல்லாமல் கொடுத்திருக்கிறது பட குழு

புரியாத ஹாலிவுட் படங்களை பார்த்து ஆகா ஓகோ என கொண்டாடும் சில பேர் இந்த படத்தை பார்த்து கதை புரியவில்லை என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று சொல்வார்கள் அவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை, அமைத்து கடின உழைப்பை கொட்டி ,
படமாக்கி ரசிகர்களுக்கு கொடுத்தால் நிச்சயம் கொண்டாடுவார்கள் அந்த வகையில் இந்த திஅக்காலி உங்களை ரசிக்க வைக்கும் திகில் அடைய வைக்கும் உங்களை பயமுறுத்தும் சிந்திக்க வைக்கும் ஈகோவை தூர எரியச் சொல்லும்

எனவே மனிதம் போற்றுவோம் நல்ல மனிதர்களை வாழ்த்துவோம் நல்ல படைப்புகளை பாராட்டுவோம்
தி அக்காலி போன்ற நல்ல படத்தை வரவேற்போம் தமிழ் சினிமா ரசிகர்களின் தரத்தை உயர்த்துவோம் 2024 மிகப்பெரிய கிரைம் திரில்லர் அமானுஷ்ய படமாக வந்திருக்கும் வெற்றிப் பட வரிசையில் வந்து உள்ளது இப் படம்