தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 52வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு டிரெயின் எனப் பெயரிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரின் 50-வது படமான மகாராஜா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, பாலிவுட் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தன் சம்பளத்தை ரூ.20 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
பாலிவுட்டில் ரூ.30 கோடிக்கும் மேல் சம்பளம் பெறும் விஜய் சேதுபதி, 96 படத்திற்குப் பின் தமிழில் வணிக ரீதியான வெற்றியைக் கொடுக்காததால் ரூ.10 கோடி வரையே சம்பளம் வாங்கி வந்தார்.
