ஆராதனா, குகனுக்கு தம்பி பாப்பா பொறந்தாச்சு. : நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நேற்று இரவு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சந்தோஷ அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மெரினா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன் சினிமாவில் ஏகப்பட்ட எதிர்நீச்சல்களை போட்டு வருத்தப்படாத வாலிபராக தன்னை காட்டிக் கொண்டு மாவீரனாக உயர்ந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவே மாறியுள்ளார்.
அவர் நடித்து வரும் அமரன் திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளது இப்படம் 100 கோடி கிளப்பில் சேரும்
