தண்டுபாளையம். திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/ 5

நடிகர்கள்
சோனியா அகர்வால்
வனிதா விஜயகுமார்
டைகர் வெங்கட்
பிர்லா போஸ்
சூப்பர் குட் சுப்ரமணி
சுமா ரங்கநாத்
பூஜாகாந்தி
முமைத்கான்
இவர்கள் நடிப்பில்

ஒளிப்பதிவு – பி.இளங்கோவன்
மிரட்டலாக இருக்கிறது

இசை – ஜித்தின் கே.ரோஷன்
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்

நடனம் – பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு – வெங்கட்

கதை
திரைக்கதை
வசனம்
பாடல்
தயாரிப்பு-
டைகர் வெங்கட்
சமுக விழிப்புணர்வு படமாக தந்துள்ளார்
வாழ்த்துக்கள்

இயக்கம்-
கே.டி நாயக்-டைகர் வெங்கட்
. இருவரும் இணைந்து நன்றாக இயக்கி இருக்கிறார்கள்

படத்தின் ஆரம்பத்தில் சோனியாஅகர்வால், வனிதா விஜயகுமார், இருவரும் ஏசிபி வீட்டுக்குள் நுழைகிறார்கள் அங்கு நாய் சத்தம் போடு கிறது. அந்த நாயை கத்தியால் கொலை செய்கிறார்கள் அவர்கள் வீட்டுக்கு காவலாக இருக்கும் போலீஸ்காரரையும் கொலை செய்கிறார்கள் அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியை மிரட்டி அவர் குழந்தையை கொன்று விடுவேன் என்று சொல்லி வேலைக்காரியை சத்தம் போடாமல் இருக்க சொல்லி ஏ சி பி மனைவி செய்து வைத்த காலை டிபனில் விசம் வைக்கிறார்கள் பிறகு சோனியா அகர்வால் நினைத்துப் பார்க்கிறார் தன் உறவுகளை சொந்தங்களை இந்த ஏசிபி எப்படி என்கவுண்டர் செய்தார் என்பதை …..

அப்போது பழைய கதை விரிகிறது பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடிக்கும் கொள்ளைக் கும்பலின் தலைவி இலட்சுமி (பூஜா காந்தி ) யை சுற்றி கதை நடக்கிறது. தனியாக இருக்கும் பெண்கள் உள்ள வீட்டுக்கு இலட்சுமி தண்ணீர் கேட்டு செல்லுவாள். அவள் உள்ளே செல்லும்போது, கிருஷ்ணா ( மகரந்த் தேஷ்பாண்டே ) மற்றும் ஹனுமா ( ரவி காலே ), திம்மா (ஜெய்தேவ்), முனியா (கரிசுப்பு) போன்ற பிறர் தலைமையிலான முழு கும்பலும் வீட்டிற்குள் நுழைந்து பெண்களைக் கொள்வார்கள்

குருதி வெளியேறும் போது தொண்டையில் இருந்து வெளிவரும் சத்தத்தை விரும்பி கிருஷ்ணா தொண்டையை அறுப்பதில் சிலிர்ப்பு அடைவது. பின்னர் அவர்கள் வீட்டை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்செல்கின்றனர். அவர்கள் அனைவரும் மோசமான உடையணிந்து, முரட்டுத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள் காவல் ஆய்வாளர் சலபதி ( பு. ரவிசங்கர் ) அவர்களை கைது செய்யும் சவாலை ஏற்றுக்கொள்கிறார். திம்மா திருடப்பட்ட கோவில் நகைகளை எடுத்துச் செல்கிறான். அவன் நகைக்கடைக்காரரால் காட்டி கொடுக்க பட்டு. அதே நேரத்தில் காவல் ஆய்வாளர் சலபதியிடம் சிக்கிக்கொள்கிறான். இதன்பிறகு அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது அவர்களை வெளியே கொண்டு வரும் பொறுப்பை இன்னொரு தண்டுபாளையம் கேங் சுமார் ரங்க நாத் குரூப் ஏற்கிறது

இவர்கள் வீடு புகுந்து ஒவ்வொரு பெண்ணையும் கொலை செய்யும் காட்சிகள் கொடூரமாக இருக்கிறது அந்த பெண்ணை கற்பழிப்பது பயங்கரமாக இருக்கிறது
.

லட்சுமியாக பூஜா காந்தி
அரியாக ரகு முகர்ஜி
ரகுவின் மனைவி சுசீலாவாக பிரியங்கா கோத்தாரி
காவல் ஆய்வாளர் சலபதியாக பு. ரவிசங்கர்
கிருஷ்ணாவாக மகரந்த் தேஷ்பாண்டே
ஆகியோர் அந்த பழைய கதாபாத்திரத்தில் வருகிறார்கள் அவர்களை காவல் ஆய்வாளர் ரவிசங்கர் பிடித்து விசாரிப்பதாக கதை தொடர்கிறது……..

அதற்குப் பிறகு புதிதாக மீண்டும் ஒரு தண்டு பாளையம் கேங் சுமா ரங்கநாத் தலைமையில் உள்ளே நுழைகிறது அதைப் பிடிப்பதற்காக டைகர் வெங்கட் acp எண்ட்ரி ஆகிறார்
அதன் பிறகு தான் படத்தில் விறுவிறுப்பு வேகம் அடுத்த நொடி என என்று பரபரப்பு ணதொற்றிக் கொள்கிறது

தண்டுபாளையம் கேங் ஒரு கேங் உள்ளிருக்க இன்னொரு கேங் கொலை செய்து கொண்டிருக்கிறது மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்ளிருக்கும் கும்பலை புதிய கொலை செய்யும் முறை கண்டு அவர்களுக்கு மரண தண்டனை
ரத்தாகிறது
ஆனால் ஏ சி பி டைகர் வெங்கட்
சுமா ரங்கநாத் கும்பலை பிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்தாமல் என்கவுண்டர் செய்து கொலை செய்கிறார் இதனால் அவர்கள் வாரிசாக வரும் சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார் ஏசிபி குடும்பத்தை பழி வாங்குகிறார்கள்

: சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார் இருவரும் வில்லிகளாக வந்து பார்வையாலே மிரட்டுகிறார்கள் சுருட்டு பிடிக்கும் லாவகம் பேசாமலே
ஏ சி பி மனைவியை மிரட்டும் பாணி. என்று இந்த படத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்கள் நடிப்பில் மிரட்டுகிறார்கள்

சுமாரங்கநாத் கும்பல் இரண்டாவது தலைமுறையாக வந்து கொள்ளையடித்து கொலை செய்யும் போதும் அவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது மற்றும் பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, நன்றாக நடித்திருக்கிறார்கள் ரசிக்க வைக்கிறது ஒளிப்பதிவில் இளங்கோவன் மிரட்டி இருக்கிறார். ஜித்தன் கே ரோஷன் இசையில் செம மிரட்டல். நடனம் பாபா பாஸ்கர் குத்துப்பாட்டுக்கு நன்றாக நடனம் வடிவமைத்திருக்கிறார் கதை திரைக்கதை வசனம் பாடல் தயாரிப்பு டைகர் வெங்கட் வெல்டன்

இப்படத்தை கேடி நாயக் ,டைகர் வெங்கட் இருவரும் இயக்கி இருக்கிறார்கள் விறுவிறுப்பு குறையாத ரசிக்க வைக்கும் ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார்கள்

கல்கி சுருதி பத்திரிகை யாளராக வந்து பலம் சேர்த்திருக்கிறார் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்கம் , ஒளிப்பதிவு என, படத்திற்கு எல்லாம் பலம் சேர்த்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக டைகர் வெங்கட் அவர்களை பாராட்டலாம் பழைய படத்தையும் இந்த காலத்துக்கு தகுந்தவாறு போல் உருமாற்றிக் கொடுத்ததற்காக பாராட்டலாம் மக்கள் தொடர்பாளர் வெங்கட் அவர்கள் இந்த படத்தை எந்த அளவுக்கு பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டுமோ அந்த அளவுக்கு சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். மொத்தத்தில் இந்த தண்டுபாளையம் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஊட்டும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி எடுத்திருக்கிறார்கள் டைகர் வெங்கட் ஏ சி பி யாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்