வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யாசமான களம்
குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஈடாக வசந்த் ரவி அசத்தியுள்ளார்
புதிய கால தொழில்நுட்பத்துடன் ஏஐ டெக்னாலஜியை சரியாக உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்தின் விஷூவல் காட்சிகள் படம் பார்ப்பவர்களையும் நிச்சயமாக கவரும் சூப்பர் ஹ்யூமன்’ எலிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளனர்
மில்லியன் ஸ்டுடியோவின் எம்.எஸ்.மஞ்சூர், எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் எம்.எஸ்.அஜீஷ் ஆகியோர் ‘வெப்பன்’ படத்தை மிகுந்த பொருட்செலவில் உருவாக்கியுள்ளனர்.வாழ்த்துக்கள்.
சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வெப்பன்’ படத்தில் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, , மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை இயக்குநர் சுபேந்தர் பி.எல். மற்றும் ஆக்ஷன் சுதேஷ் கையாண்டுள்ளார்.
அனைவரின் பங்களிப்பு படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது
டெக்னிக்கல் குழு அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்கள் ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட் படத்தை ஞாபகப்படுத்துகிறது
தமிழ் சினிமாவில் சூப்பர் மேன் படங்களான முகமூடி, வீரன், மலையாளத்தில் வெளிவந்த மின்னல் முரளி போன்ற படங்களை விட இந்த படம் தொழில்நுட்பத்தில் மிகவும் பேசப்படும் படமாக அமைந்தது இன்னும் ஒரு 25 வருடங்கள் கழித்து பார்த்தாலும் அந்த வருடத்திற்கு இந்த படம் ஏற்ற படமாக இருக்கும் தமிழ் சினிமாவில் புதிய முயற்சி முத்திரை பதிக்கும் முயற்சி. நான் லீனியர் முறையில் கதை சொல்லப்பட்டிருப்பது அவ்வளவு ரசிக்க வைக்கிறது சத்யராஜ் யார்? ராஜிவ் மேனன் இருவருக்கும்
என்ன பிரச்சனை என்பதை குழப்பம் இல்லாமல் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்
: வசந்த் ரவி எமோஷன்ஸ், அதிரடி ஆக்ஷன் காட்சியில் அசத்தியிருக்கிறார் படம் தொடங்கியதிலிருந்து இறுதி வரை தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து, நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டு உள்ளார்
சண்டை காட்சியில் சத்யராஜ் உடன் மோதும் காட்சி செம ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார்
ஆக்ஷன் நாயகனுக்கு உரிய செம பிட்ட னஸ் ஹாலிவுட் நாயகனா க விரைவில் வலம் வரும் தோற்றம்
வெல்டன் சார் தொடர்ந்து நல்ல நடிப்பை வழங்கி வருகிறீர்கள
தான்யா ஹோப் உடன் அதிக காதல் காட்சிகள் இல்லை
இருவரின் ஜோடி அருமை
ராஜீவ் மேனன் வில்லத்தனம் படு சூப்பராக ஸ்டைலிஷ் ஆக ரசிக்கும்படி செய்திருக்கிறார் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்து கொலை செய்யும் அமைதியான வில்லனாக ….இனி
நிறைய படங்களில் அவரை காணலாம்
: இத் திரைப்படம் வெறும் ஆக்ஷன் த்ரில்லர் கதையாக மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் பெண்களையும் கவரும் உணர்ச்சிபூர்வமான கதைக்களம் கொண்டதாக வடிவமைப்பு செய்ய ப்பட்டுள்ளது சத்யராஜுக்கு ஒரு மனைவி ஒரு குடும்பம் அந்த குடும்பத்தை அழிக்க வரும் ஹிட்லரின் படை என செம ……
நடிகை தன்யா ஹோப் . குறுகிய காலத்தில், பலதரப்பட்ட கேரக்டர்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவர் இப்படத்தில் ராஜூ மேனன் மகளாக வசந்த ரவியின் காதலியாக வந்து கவனம் பெறுகிறார் அழகான நடிப்பு அழகான தேர்வு
சத்யராஜ் நடித்த படங்களில் இந்த படம் நிச்சயம் வித்தியாசமான பட ம் சத்யராஜ் முதன்முறையாக, சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” அவரின் டயலாக் டெலிவரி உடல் மொழி பேசும் வசனம் வசந்த் ரவியிடம் காட்டும் பாசம் தவறு செய்ய போகாதே என்று எச்சரிக்கும் பாணி தான்யா கோப்பை காப்பாற்றி முறிந்த கையை சரி செய்வது என்று வில்லனுடன் மோதாமல் தனித்து காட்டுக்குள் வசித்து விலங்குகளிடம் பாசத்தைக் காட்டி மனிதர்களுக்கு நேரும் பேராபத்தை எச்சரித்து வாழும் ஒரு சூப்பர் மேனாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் சத்யராஜுக்கு இந்த படம் பேசும் படமாக இருக்கும்.
படத்தில் கதை களம் என்ன வாங்க பார்க்கலாம்
: சாதாரண மனிதனுக்கு உள்ள சக்திகளைத் தாண்டி, சூப்பர் ஹியூமன்கள் எனப்படும் மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என அழுத்தமாக நம்பும் வசந்த் ரவி, தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராகவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் வலம் வருகிறார். இன்னொரு புறம் பளாக் சொசைட்டி என்ற பெயரில் ரகசியக் குழு ஒன்றையும், பயோடெக் நிறுவனத்தின் மூலம் மனிதர்களை பலிகடாவாக்கும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் வில்லன் ராஜீவ் மேனன்.
தேனியில் நிகழும் அதிசய நிகழ்வு ஒன்றைத் தொடர்ந்து, தன் சேனலுக்காக கண்டெண்ட் தேடி அங்கு வசந்த் ரவி பயணிக்க, மற்றொரு புறம் அடுத்தடுத்து உயிரிழக்கும் தங்கள் ப்ளாக் சொசைட்டி நபர்களுக்கு ஆபத்தாக ஒரு சூப்பர் ஹியூமன் தான் இருக்கிறார் என்பதைக் கண்டறிந்து ராஜீவ் மேனன் ஆட்களும் பயணிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க, இருவரும் தேடிச் சென்ற சூப்பர் ஹியூமன் நபரைக் கண்டறிந்தார்களா, வசந்த் ரவிக்கும் இந்தக் குழுவுக்கும் என்ன சம்பந்தம், தேனியில் காட்டுக்குள் அமைதியாக வாழ்க்கை நடத்தி வரும்
சத்யராஜ் என்ன ஆனார் என்று சொல்லும் கதை
அதிரடியான கதையம்சம் கொண்ட இப்படத்தில் அபூர்வ சக்தி கொண்ட ஒரு மனிதனாக சத்யராஜ் நடித்துள்ளார். உலகில் உள்ள எந்த ஒரு ஆயுதத்தாலும் அழிக்க முடியாத ஒரு மனிதனை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவனை அழிக்கும் முயற்சிகள் என்ன ஆனது என்பது தான் படத்தை கதைக்களம
மொத்தத்தில் இந்த வெப்பன் திரைப்படம்
ஹாலிவுட் தரத்திற்கு இணையாக புதிய ஏஐ என்னும் தொழில்நுட்ப டெக்னாலஜி மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறது இளைய தலைமுறை யினர்க்கு இந்த படம் ஏற்ற படமாக வந்திருக்கிறது நிச்சயம் ரசிக்கலாம் வெப்பன் உங்களை ஹாலிவுட் திரைப்பட உலகிற்கு அழைத்து செல்லும் வயநாடு படப்பிடிப்பு அந்த லொகேஷன் அதில் ஜிப்ரனின் ஒரு பாடல் ரசிக்க வைக்கிறது கேமரா கோணம் முற்றிலும் வித்தியாசமாக புதுமையாக படம் ஆக்கப்பட்டிருக்கிறது
வாழ்த்துக்கள் பணிபுரிந்த அனைவருக்கும்
