69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
ஒரு கொலை குற்றவாளி கதாபாத்திரம் கொலையை கலையாகப் பார்க்கிறது. இதன் பின்னணியில் நடக்கும் கதை
ஒளிப்பதிவாள கள் நந்தா & பிரவின் படம் முழுக்க இரவு நேரத்தில் படமாக்கி இருக்கிறார்கள் இருட்டு திகில் திடுக்.. திடுக்..
நந்தா . பிரவீண் இருவரும் இருள் சார்ந்த கதை என்பதால் நிறைய மெனக்கெட்டு உள்ளார்கள்
இருவருக்கும் வாழ்த்துக்கள்
இத்திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை நமக்கு தருகிறது. புதிய முயற்சியை உணர்த்துகிறது
வித்தியாசமான தமிழ் சினிமாவில் நாம் இருக்கிறோம் என்று உணர்த்தும் வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் சார்!
பெண் கதைக் களத்தில் சாய் பிரியங்கா
தமிழில் ‘கேங் ஆஃப் மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். ‘
இவரது நடிப்பு ‘பயமறியா பிரம்மை யில் செம மிரட்டலாக ஆக இருக்கிறது காரில் வரும் அந்த நால்வரையும் அடித்து துவம்சம் செய்யும் போது ஆக்ரோஷம்
படம் முழுக்க ஜெகதீஷ், கபிலன் இந்த இருவரை சுற்றியே கதை நகருகிறது சிறைக்குள்ளே இருக்கும் கொலைகாரன் வெளியே அவனைப் பற்றி புத்தகம் எழுதிய எழுத்தாளர் இவர்களின் உரையாடல் மூலமே படம் நகர்கிறது தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட காட்சிகள் அபூர்வமாகவே இருக்கும்
மாறன் கதாபாத்திரத்தில் ஒருவர் ஜெகதீஷை எப்படி ஆட்டி படைக்கிறார் அதில் ஜான் விஜய் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்
குரு சோமசுந்தரம் போலீசை அடித்து நொறுக்கும் காட்சி விசில் சத்தம் கேட்கிறது ஹரிஸ் ஊத்தமன் ஜட்டியோடு தன் மனைவியிடம் வந்து நான் உத்தமன் எந்த தவறும் செய்யவில்லை என்று வாதாடும் போது அவரது மனைவி திவ்யா பாரதி அவரை விட்டுப் பிரிகிறார் அந்த காட்சியும் ரசிக்க வைக்கிறது
கதிர் என்ற கதாபாத்திரத்தில் விசுவாந்த்
குரு சோமசுந்தரத்தின் துப்பாக்கியால் உயிர் இழக்கிறார் இவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் குரு சோமசுந்தரம் சிங்கிள் டேக்கில் நடித்துள்ள அந்த காட்சி யும்படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்
இப் படத்தில் புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ளார். அமைதியான பேச்சு ஆழமான நடிப்பு என அசத்தலாக நடித்திருக்கிறார்
25 வருடத்தில் 96 கொலைகள் அதுவும் கலையாக நினைத்து செய்தது தன் தரப்பில் நியாயம் என்று வாதாடுகிறார்
அவர் கதாபாத்திரமும் அவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது.
படத்திற்கான இசையை கே என் கிற ..கிருஷ்ண குமார் வழங்கியுள்ளார். இசை அமைதியாக ஆழமாக வயலின் இசைகளின் இசையோடு ஒரு திகிலை ஏற்படுத்துகிறது வழக்கமான இசையாக இல்லாமல் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்த ருக்கிறது இசை.
ஜான் விஜய், வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது ஹரிஷ் உத்தமன்,சாய் பிரியங்கா ரூத், இவர்கள் நடிப்பில் எதார்த்தமான நடிப்பு திவ்யா கணேஷ், இவர் வரும் காட்சிகள் குறைவு என்றால் நியாயத்தின் பக்கம் இருக்கிறார் தன் கணவன் குற்றவாளியோ என்று சந்தேகப்படும் இவர் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைப்பு இருக்கிறது
: இப்படத்தின் முக்கியமான இன்னொரு கதாபாத்திரம் வினோத் சாகர் கபிலன் என்ற எழுத்தாளராக வந்து ஜெகதீசன் கொலைகள் செய்தது நியாயமா என்று கேட்கிறார் இவர் ஒன்று சொல்ல அவர் ஒன்று சொல்ல எதிர்மறையாகவே போய்க்கொண்டிருக்கிறது உரையாடல் வினோத் சாகர் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்
இயக்குனர் ராகுல் கபாலி கபாலி திரைப்படம் பார்த்து கபாலி என்று பெயர் வைத்துக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும் படத்தை வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் தமிழ் சினிமாவில் வழக்கமான மசாலா படங்கள் போல் இல்லாமல் ஹாலிவுட் படங்கள் போல் எடுத்துக்கொண்ட கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விதமாக அணுகி அவர்கள் செய்த செயலை பாத்திரப்படைப்பாக சொல்லி யிருக்கிறார் மொத்தத்தில் இந்த பயமறியா பிரமை ஒரு வித்தியாசமான அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமாவை எடுத்துப் போகும் புதுமையான சினிமா
படமாக வந்துள்ளது புதுமையை விரும்புவர்கள் இதை நிச்சயம் கொண்டாடுவார்கள்
அவள் அப்படித்தான் என்ற திரைப்படம் இத்தனை வருடங்களாக சிறப்பு பெற்று பேசப்பட்டு வருகிறது அதேபோல இந்த படமும் பல வருடங்கள் ஆனாலும் நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும் படத்தில் கொலைகள் இருக்கிறது கலைகள் எனும் ஆர்ட் இருக்கிறது கவர்ச்சியான காட்சிகளோ முகம் சுளிக்கும் இரட்டை அர்த்த ஆபாச பேச்சுகளோ பெண்களை கொச்சைப்படுத்தும் மோசமான காட்சிகளோ இல்லை படம் முழுக்க ஒரே நேர்கோட்டில் பயணிப்பது படத்தொகுப்பாளரின் சரியான தொகுப்பு குறைவான நேரம் என்பதால் படம் ஸ்பீடாக போகிறது
: ஆர்ட் டைரக்டர் மற்றும் ஒப்பனையாளர், உடைய அலங்கார நிபுணர், படத்தில் கலர் கரெக்ஷன் செய்த தொழில்நுட்பக் கலைஞர்கள், டி ஐ செய்தவர்கள் எல்லோருடைய பங்கும் வெற்றிகரமாக வந்திருக்கிறது
ஹரிஷ் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது அவர்தான் இளமைக்கால ஜெகதீஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் மொத்தத்தில் இந்த பயம் அறியா பிரம்மை இன்னும் கொஞ்சம் வேகமாக எடுத்திருந்தால் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் படம் மெதுவாக போகிறது என்கிற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை
இது போன்ற சில குறைகள் இருந்தாலும் வித்தியாசமான புதுமையான தமிழ் சினிமாவில் வரவேற்கலாம் தயாரித்த இயக்கி இருக்கும் ராகுல் கபாலி அவர்களுக்கு தமிழ் சினிமாவை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற படைப்பை கொடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்
