லாந்தர்” (இரவின் அடையாளம்)மூவி விமர்சனம் (2024)

சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ரேட்டிங் 3-5/ 5

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரான பத்ரி தனது எம் சினிமா பேனரில் இந்தப் படத்தை தயாரிக்க, சாஜி சலீம் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த ‘லாந்தர்’ பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லராக புதிய கோணத்தில் இப்படம் உருவாக்கபட்டுள்ளது.

இயக்குநர் சாஜிசலீமின் இரண்டாவது படம் ‘லாந்தர்’ என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராம்குமாரிடம் ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்
பணி புரிந்து உள்ளார்

கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக படத்தைமுடித்துள்ளனர், “இது வரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் த்ரில்லராக லாந்தர் உருவாகிஉள்ளது. புதுமையான கதைக்களத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும ஏற்ற திரை க்கதை

‘இப்படத்தின் ஒளிப்பதிவை ஞானசௌந்தர். செய்து உள்ளார். இரவு நேரப்படபிடிப்பு திகில் வண்ணம் நன்றாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் காருக்குள் நடக்கும் காட்சிகளில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் ஒரு அச்சத்தைஊட்டும் ஒளிப்பதிவு சபாஷ் வாங்குகிறார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த பிரவீன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். பின்னணி இசை அமைத்துள்ளார் மிரட்டலாக இருக்கிறது ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் பின்னணிசையில் சந்தோஷ் நாராயணனின் உதவியாளர் என்பதை நிரூபித்திருக்கிறார்

ஜெரோம் ஆலன் படத்தொகுப்பு பணிகளை செய்திருக்கிறார் கச்சிதமான படத்தொகுப்பு இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பு ஒரு படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு தான் முக்கியம் என்பதால் இப்படத்தின் படத் தொகுப்பாளர் கவனம் பெறுகிறார்

சண்டைக் காட்சிகளை விக்கி கொரியோகிராஃப் செய்துள்ளார். சைக்கோ வரும் காட்சிகளில் மிரட்டலாக இருக்கிறது இரவு பணி காவலர்கள் சைக்கோவிடம் அடிபட்டு உதைபட்டு அலறி துடிக்கும் காட்சிகளும் சரி மற்றும் ஒரு கதாபாத்திரம் சைக்கோவாக ஒரு கையால் அனைவரையும் தூக்கி வீசும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்…
…

: கோவையில் கள்ளச்சாராயம் விற்கும் கும்பலை கைது செய்கிறார்ஏசிபி அரவிந்த்,(விதார்த் )

இவரது மனைவி (ஸ்வேதா) ஜானுவாக நடித்திருக்கிறார் இவருக்கு ஒரு புது வியாதி அவருக்கு அதிர்ச்சியாக ஏதாவது சம்பவம் நடந்தால் மயங்கி விழுந்து விடுவார் பிறகு அரை மணி நேரம் கழித்து தான் எழுவார் இவரது பயத்தை போக்க வேண்டும் என்று தனியாக வீடு வாங்கி குடித்தனம் இருக்கிறார்வித்தார்த்

இப்பொழுது விதாரத்துக்கு ஒரு போன் கால் வருகிறது நகரில் சைக்கோ கொலைகாரன் எல்லோரையும் அடித்து துவம்சம் செய்கிறான் என்று அங்கு விரைகிறார் விதார்த்

இன்னொரு ஜோடி நகுல்- மஞ்சு(ஷபானா -விபின்)
இவர்கள் பழனியில் இருந்து கோவை குடி வந்தார்கள் நகுலுக்கு
இரவு டூட்டி ஐடி கம்பெனிக்கு போகிறார்

நகுலைமஞ்சு வழி அனுப்பி வைத்துவிட்டு ஒரு டாக்டர் ரிப்போர்ட் இருப்பதை பார்க்கிறார் அதை எடுத்துப் பார்க்கும்போது அதிர்ச்சி அடைகிறார்

அது ஒரு சஸ்பென்ஸ் ஃபோர் ஷன் உடனே

ஆட்டோ வில் மைத்ரேயன் என்ற டாக்டரை பார்க்க புறப்படுகிறார் எதையோ மறந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வரும் நகுல் மனைவி எங்கே போகிறார் என்று பின் தொடர்கிறார்

அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது
சிங்கா நல்லூரில் இருந்து மீண்டும் விதார்த் க்கு போன்
வருகிறது.
அதுவும் ஒரு சஸ்பென்ஸ் ஆன ஃபோர் ஷன் இப்படி சஸ்பென்சுக்கு மேல் சஸ்பென்ஸ் ஆக அதை போய்க்கொண்டிருக்க விதார்த்மனைவி
இடி சத்தம் கேட்டு மயங்கி விழுகிறார் இதனால் விதார்த் போன் செய்து ஜானுவால் அட்டென்ட் செய்ய முடியாது நிலைமை

கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் கும்பல் சிறையில் இருந்து தப்பிக்கிறது இதுவும் விதாத்துக்கு ஒரு தலைவலியாக அமைகிறது

இதற்கிடையில் சைக்கோ கொலைகாரன் அட்டூழியம் அதிகரிக்கிறது அதை ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பார்க்கிறார் இந்த சைக்கோ களத்தில் ஒரு அடையாள அட்டை அதை வைத்து யார் அந்த கொலைகாரன் என்று துப்பறிகிறார்

இப்போது அந்த கொலைகாரனை பற்றி விவரத்தை கண்டுபிடித்தாரா

தன் மனைவியின் தனியாக இருக்கும் அந்த சூழலில் அவர் சென்று காப்பாற்றினாரா

கள்ளச்சாராயம் இருக்கும் தப்பித்த கும்பலை மீண்டும் கைது செய்தாரா

சைக்கோ கொலைகாரின் அடையாள அட்டையை வைத்து கொலைகாரங்களை நெருங்கினார்
இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இரண்டாம் பகுதி

சைக்கோ கொலைகாரன் யார்? என்று ரெக்கை கட்டி பறக்கிறது
லாந்தர்
இடைவேளை வரை ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை அந்த அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குனர் கொடுக்கும் விளக்கம் நன்றாக இருக்கிறது
லாஜிக் மீறல்கள் இல்லாமல்…

விதார்த்துக்கு போலீஸ் வேடம் கச்சிதமாக இருக்கிறது சைக்கோ கொலைகாரனை தேடி படம் முழுக்க அலையும் இவர் கண்களில் மிரட்சி, மனைவியுடன் கொஞ்சும் போது பாசம் ,மனைவியை காணாமல் தவிக்கும் போது பரிதவிப்பு ,
என கலந்து கட்டி நன்றாக நடித்திருக்கிறார்

அடுத்து சுவேதா விதார்த்தின் புது மனைவியாக வந்து பயம் ஏற்படும் போது மயங்கிவிழும் கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார் அழகு பொம்மையாக வருகிறார்

லாந்தரில் அசத்தலான விசயம் என்றால் அது விதார்த்தின் நடிப்பு
நடிகர்கள் தேர்வு செம கச்சிதம்

மஞ்சு என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சஹானாவும் மிரட்டி இருக்கிறார்
கிளைமேக்ஸ் காட்சியில் கார் துரத்தல் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தன.

நகரத்தின் டாப் ஆங்கிள் காட்சிகள், காரில் செல்லும் காட்சிகள் திரில்லர் வகை

சஹானாவின் அப்பாவாக வரும் பசுபதி நன்றாக நடித்திருக்கிறார் தன் மகள் நன்றாக வர வேண்டும் என்று மெனக்கெடுவதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்

நகுலாக நடித்திருக்கும் விபின் காதலிக்காக எல்லா முயற்சியும் செய்து கடைசியில் தன் உயிரே விடும் அளவுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் சிறப்பான நடிப்பு

இயக்குனர் ஷாஜி சலீம் ஒரு வெற்றி படத்தை விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

சில மைனஸ் பாயிண்டுகள் இருப்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்

தன் மகள் எட்டு வயதில் இருந்து ஒரு மன நோயாளியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை 19 வயது வரை கண்டு கொள்ளாமல் ஒரு தாய் இருப்பாரா? என்ற சந்தேகம் எழுகிறது

: அதே சமயம் ரோட்டிலே சுற்றிக்கொண்டு இரவில் தனியாக வருபவர்களை அடித்து நொறுக்கும் அந்த சைக்கோ கொலைகாரன் என்ன ஆனான்? அவனை சுற்றியே கதை பின்னப்பட்டு இருந்தால்
இன்னமும் இந்த லாந்தர் பிரகாசமாக இருந்திருக்கும்

மொத்தத்தில் சில மைனஸ் இருந்தாலும் படம் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படம் நிச்சயமாக ரசிகர்களை கவரும்
வண்ணம் எடுக்கப்பட்டிருக்கிறது இரவு நேர காட்சிகள் திகிலான காட்சிகள் குடும்ப பின்னணியில் பாசமான காட்சிகள் பட்டுக்கோட்டையில் நடக்கும் அந்த எபிசோடு எல்லாமே அசத்தலாக இருக்கிறது மொத்தத்தில் லாந்தர் ஒரு நல்ல படம் பார்த்து திருப்தி