வேதா (2024) திரை விமர்சனம்

(ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல்) ரேட்டிங் 4/5

ஜான் ஆபிரகாம் மற்றும் ஷர்வரி வாக் நடித்த ‘வேதா’ ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது இப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க…..

இப்படத்தை நிகில் அத்வானி இயக்கியுள்ளார்
மற்றும் ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளனர்.

வேதா’வில் அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா, ரிச்சர்ட் பக்தி க்ளீன், க்ஷிதிஜ் சௌஹான், அபிஷேக் தேஸ்வால், மகாதேவ் சிங் லகாவத், கபில் நிர்மல் மற்றும் கிரேசேஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘வேதா’ சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளம்பெண் வேதாவின் கதை. அவளது அதிர்ச்சிகரமான வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அவள் நம்பக்கூடிய ஒரே மனிதன் ( ஜான் ஆபிரகாம்) உதவியுடன் அவள் தனது துன்பங்களை அபரிமிதமான துணிச்சலின் மூலம் எவ்வாறு சமாளித்தாள் – அவளுடைய இரட்சகரின் உதவியுடன் அநீதிக்கு எதிராகப் போராட வேதாவுக்கு உதவியது, யார்?என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம்

பல வருட இடைவெளிக்கு பிறகு தோல்வியடைந்த திரைப்படங்களுக்குப் பிறகு, ஜான் ஆபிரகாம் முழு பலத்துடன் திரும்பி வந்து உள்ளார்

இப்படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் அபிஷேக் பானர்ஜியின் தீவிரமான நடிப்பு , நமக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருகிறது

‘ இன்றும் நிலவும் ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமையின் பிரச்சினையை தீவிரமாகக் காட்டி படத்தின் கதைக்களத்தில் உச்சத்தை கொடுத்துள்ளனர்

வாக் பாத்திரம் வீரம் மற்றும் தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான அசைக்க முடியாத சக்தியாக பெண்ணியத்தின் உண்மையான உருவகமாக வெளிப்படுகிறது.

ஜிதேந்தர் பிரதாப் சிங் 150 கிராமங்களுக்கு தலைவனாக இருப்பவர் உயர்ந்த ஜாதிக்காரர்கள் கடவுளால் அனுமதிக்கப்பட்டவர்கள் என்ற சித்தாந்தத்தை உடையவர்
ஒரு பௌர்ணமி நாள் அன்று பெண்ணின் காலுக்கு அடியில் அமர்ந்து அந்த பெண் ததாஸ்து என்று ஆசீர்வாதம் வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று நம்பக்கூடியவர்
தலிப் பெண்கள் தலித் ஆண்கள் நன்றாக படிக்கலாம் அவர்கள் விருப்பப்பட்ட வேலையை வாங்கிக் கொள்ளலாம் ஆனால் உயர்ந்த ஜாதிக்காரன் உடன் பழகவோ காதலிக்கவோ அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாற நினைப்பது தவறு அப்படி நினைத்தால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்ற சித்தாந்தத்தை அரியானாவில் உள்ள கிராமத்தில் விதைத்து ராஜாங்கம் நடத்தி வருகிறார்
அந்த ராஜாங்கத்தை உடைத்து தகர்த்தெறிய ஒருவன் வருவான் என்று நம்புகிறாள் வேதா அந்த ஒருவன்

யார்? எப்படி இந்த கொடுங்கோல் சர்வாதிகார வில்லனை வீழ்த்தி தர்மத்தை நிலை நாட்டும் அந்த நபர்

ஜான் ஆப்பிரகாம் ராணுவத்தில் எதிரிகளை அழித்து நாட்டுக்காக சேவை செய்தவர் தீவிரவாதிகளால் தனது மனைவியான தமன்னா பாட்டியாவை பலி கொடுத்தவர்
ஒரு தீவிரவாதியை கொலை செய்ய போகும்போது சுப்ரியர் கமெண்ட் கொடுத்த உத்தரவை மீறுவதால் இவரை ராணுவத்தை விட்டு விலக்கி வைக்கிறார்கள் இப்பொழுது ஜிதேந்தர் பிரதாப் சிங்க் இருக்கும் ஊருக்கு வருகிறார் அங்கு தான் கதைக்களம் ஆரம்பமாகிறது

நாட்டுக்காக போராடிய ஒரு நாயகனும் 150 கிராமங்களை தன் வசம் வைத்திருக்கும் வில்லன் இவர்கள் இருவரும் மோதுவதற்கு எந்த சக்தி இவர்களை உந்தி தள்ளியது வில்லனும் நாயனும் மோத வேண்டிய அவசியம் என்ன? அவருடைய பாதை வேறு இவருடைய பாதை வேறு நடுவில் வந்து நின்ற அந்த பிம்பம்தான் வேதா

வேதா ஒரு தலித் சமுதாயத்தை சேர்ந்த பெண் அவருடைய அண்ணன் உயர்ந்த ஜாதி பெண்ணை காதலிக்கிறான் அதற்கு துணை போகிறார் வேதா

வேதாவின் அக்கா இது தவறு உயர் ஜாதி பெண்ணை அண்ணன் காதலிப்பது நம் குடும்பத்திற்கு ஆகாது என்று எச்சரித்தும் அண்ணன் கேட்காமல் உயர்ந்த ஜாதி பெண்ணை காதலிக்கிறான் அதே சமயம் வேதா ஜிதேந்தர் பிரதாப் சிங் நடத்தும் கல்லூரியில் பாக்ஸராக விரும்புகிறாள் அங்கு ஜித்தாந்தர் தம்பி ராஜாங்கம் தான் கொடிகட்டி பறக்கிறது தலித் பெண்கள் எல்லாம் பாத்ரூம் கழுவ தான் சரி நீ எல்லாம் பாக் ஸ்விங் கற்று கொள்ள கூடாது என்று வெளியே அனுப்புகிறார்

ராணுவத்தை விட்டு வெளியே வந்த ஜான் ஆபிரகாம் அந்த கல்லூரியில் பாக்ஸராக பயிற்சியாளராக சேர்கிறார் தலித் பெண்ணான வேதாவுக்கு தரும் தொல்லைகளை துன்பங்களை கண்டு மனம் கொதிக்கிறார் அதே சமயம் வேதாவின் அண்ணன் கல்லூரியில் உயர்ந்த ஜாதிப் பெண்ணை ஒரு ஹோலி பண்டிகையின் போது காதலித்ததற்காக உயர் ஜாதி பெண்ணையும் வேதாவின் அண்ணனையும் கொலை செய்கிறார்
ஜித்தேந்தர்

இதை கண்டு கொதித்து துவண்டு எழுந்த
ஜான் ஆபிரகாம் வேதாவின் பக்கம் நியாயம் இருப்பதைக் கண்டு அந்த தலித் பெண்ண்ணுக்காக வெகுண்டெழுந்து நிற்கிறார்

வில்லனுடன் ,ஜான் ஆபிரகாம் எப்படி மோதி ஜெயித்தார் என்பதுதான் படத்தின் கதை

அபிஷேக் பானர்ஜி அமைதியான முறையில் வந்து சரியான வில்லத்தனத்தை அரங்கேற்றுகிறார் ஜாதி திமிரை தங்கள் ஜாதியை தவிர மற்ற எல்லோரும் தங்கள் அடிமை என்பதை பறைசாற்றுகிறார் நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்கிறார் தலித் பெண்களை கிள்ளுக்கீரைகளை போல் கிள்ளிவிட நினைக்கிறார் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது

வேதாவாக நடித்திருக்கும் சர்வாரி வாக் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் கல்லூரியில் பாக்ஸிங் கற்றுக்கொள்ள ஜாதி தடையாக இருக்கிறது என்று பம்மும் போதும் தன் அண்ணன் உயர் ஜாதிக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்யும்போது கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடையும் போதும் அதே சமயம் தன் அக்கா வில்லன்கள் கையில் சிக்கி பலிகடா ஆகிவிடக்கூடாது என்று பதறும் போதும் இதெல்லாம் நடந்த பிறகு வில்லனை அழிப்பதற்காக ஜான் ஆபிரகாம் உதவியை நாடும் பொழுது

கிளைமாக்ஸ் காட்சியில் எதிரிகளை வீழ்த்தும் போதும் உயர்ந்து நிற்கிறார் சர்வாரிக் நடிப்பு சூப்பராக இருக்கிறது

ஜான் ஆபிரகாம் படத்தை தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார் ஆரம்பத்தில் வரும் காட்சிகள் படத்தை இமயமலை அளவுக்கு கொண்டு செல்கிறது தீவிரவாதிகளின் கூடாரத்துக்குள் புகுந்து டாக்டராக அவர்கள் தாக்குதலை முறியடித்து சுப்ரீயர் சொல்லும் பேச்சு கூட கேட்காமல் கழுத்தை அறுத்து கொலை செய்யும் அந்த காட்சி எல்லாம் சூப்பராக இருக்கிறது அதன்பிறகு அரியானா வந்த பிறகு அமைதியாக வில்லன் கல்லூரியில் எதையும் கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் கதாபாத்திரம் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் அந்த ஊருக்கு வந்த பிறகு கட்டுப்பட்டு தான் போக வேண்டும் என்பதைப் போல கண்ணியமாக நடித்திருக்கிறார்

வேதாவின் அண்ணன் கொலை செய்யப்பட்ட பிறகு கொதித்து எழுந்து எதிரிகளை துவம்சம் செய்கிறார் வில்லன் வீட்டுக்கே வேதாவை அழைத்துச் சென்று இரண்டே வழி தான் இருக்கிறது
ஒன்று போர் அல்லது பொத்திகிட்டு இரு என்று உதார் விடும் இடம் செம தில்லாக இருக்கிறது

எதிரிகளை வீழ்த்தும் போதும்
சண்டை காட்சிகள் ஆனால் பறக்கிறது ஜான் ஆபிரகாம் கதாபாத்திரம் இந்த படத்தில் பெரிய சக்தியாக மனிதம் வெளிப்பாடாக அற்புதமாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள் ஜான் ஆபிரகாம்

: படத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒவ்வொரு காட்சியிலும் இசை பேசுகிறது காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது பின்னணி இசை அவ்வளவு அருமையாக இருக்கிறது ஒவ்வொரு காட்சியும் நன்றாக உணர்ந்து இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்

படத்தின் ஒளிப்பதிவாளர் ஹரியானாவில் உள்ள கோயில்களையும் அந்த இருளையும் தலித் பெண்களுக்கு நடக்கும்
ஆபத்தையும் அற்புதமாக படமாக்கி இருக்கிறார் சண்டை காட்சிகளில் அனல் பறக்க படத்தை உருவாக்கி இருக்கிறார்

ஸ்டண்ட் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள் அற்புதமாக அனல் தெறிக்கும் பயிற்சிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது

இயக்குனர் நிகில் அத்வானி ஒரு திறமையான இயக்குனர் என்பதை அருமையாக நிரூபித்திருக்கிறார் ஒரு படத்திற்கு என்ன தேவையோ எதைக் கொடுத்தால் மக்கள் ரசிப்பார்களோ அதை கச்சிதமாக எழுதி இயக்கி படமாக்கி இருக்கிறார்
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் விறுவிறுப்பாக பரபரப்பாக மனிதநேயத்தோடு படமாக்கப்பட்டு இருக்கிறது

வேதாவின் வழக்கை நடத்த ஒரு பெண் நீதிபதி முன்வருவதும் அதன் பின் என்ன நடக்கும் என்று ஆர்வத்தையும் விட்டுச் சென்றிருக்கிறார் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு லீடு கொடுத்து இருக்கிறார்

ஆதிஷ் வித்யார்த்தி அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் வில்லத்தனத்தின் உச்சம் தலித் பெண்களை துவமங செய்ய சொல்லி அவர் கொடுக்கும் ஆர்டர் படம் பார்ப்பவர்களை அவர் மீது வெறுப்பை கொட்டும் படி நடித்திருக்கிறார்

மொத்தத்தில் இந்த வேதா இந்தியாவின் இன்றைய தலித் பெண்களின் பாதுகாப்பை பற்றி பேசுகிறது
இங்கு உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது தலித் ஆணோ பெண்ணோ உயர்ந்த ஜாதி பெண்களை காதலித்தால் அவர்களை
கொல்ல
ச் சொல்லி அதிகாரம் தந்தது யார் என ஜான் ஆபிரகாம் பேசும் வசனம் சிறப்பாக இருக்கிறது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகள் உயர்ந்த ஜாதிக்காரர்கள் இடம் கேட்பது என்ன? நாங்களும் சுதந்திரமாக வாழ வேண்டும் எங்களுக்கு உண்டான வாழ்க்கையை நாங்கள் வாழ விடுங்கள்
என்றுதான் அதைக் கூட கொடுக்காமல் அவர்கள் சுதந்திரம் பறிக்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட புரட்சிகள் ஏற்படும் என்பதை இயக்குனர் அருமையாக எடுத்து வைத்திருக்கிறார் இந்த படம் நிச்சய ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் வெற்றி பட்டியலில் வேதா
i John Abraham, Sharvari, Abhishek Banerjee, Tamannaah Bhatia |

ஆகியோ நடிப்பு சிறப்பாக இருக்கிறது இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்