ரகு தாத்தா (2024) திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/ 5 (ஃபேமிலி & எண்டர்டெயின்மெண்ட் மூவி)

கீர்த்தி சுரேஷ் (கயல்விழி பாண்டியன் ) வள்ளுவன் பேட்டையிலுள்ள மதராஸ் வங்கியின் ஊழியர். இந்தித் திணிப்புக்கு எதிரான போராளியாக இருப்பவர், க.பாண்டியன் எனும் ஆண் அடையாளத்தில் புரட்சிகர கதைகள் எழுதும் எழுத்தாளரும்கூட.
இவருக்கு துணையாக போராட்டத்தில் கலந்து கொள்ளும் இவரது தாத்தா எம்எஸ் பாஸ்கர்

அதே ஊரில் மின்சாரத் துறையில் பணிபுரியும் தமிழ்ச்செல்வன் (ரவீந்திர விஜய்), கயல்விழியின் புத்தகங்களைக் கடன் வாங்கிப் படிப்பதோடு, அவரின் எழுத்துக்கும், சிந்தனைக்கும் ரசிகன் என்பதாகத் தன்னை முன்னிறுத்துகிறார்.
இருவரும் மனம் ஒத்து ஒரே சிந்தனையில் நடமாடுகிறார்கள்

இந்தச் சூழலில் கயல்விழியின் தாத்தாவுக்குப் புற்றுநோய் என்பது தெரியவர, கயல்விழி உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறார்.
பல மாப்பிள்ளைகள் வந்து போவதால் கீர்த்தி சுரேஷ் யாரையும் பிடிக்கவில்லை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்

அதனால் தன் கருத்தோடு ஓரளவு ஒத்துப்போகும் தமிழ்செல்வனைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.
அந்த முடிவில் என்ன பிரச்சனை ஏற்படுகிறது இருவருக்கும் என்ன நெருடல்கள்
அதன் பின் கீர்த்தி சுரேஷ் அந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று துடிக்கிறார் அது ஏன் ?அவர் எடுக்கும் முடிவு என்ன?

அந்த முடிவு சரியானதா, அதில்வரும் சிக்கல்கள் என்னென்ன, அதை கயல்விழி எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே ‘ரகு தாத்தா’ படத்தின் கதை.

இது ஒரு பெண்ணியம் பேசும் படம் பெண்மையின் கதை, மூடநம்பிக்கைகளை ஒழித்துக் கட்டிய பெரியாரின் பேத்தியாக கீர்த்தி சுரேஷ், நடித்திருக்கிறார் அற்புதமான நடிப்பு நடிகையர் திலகம் படத்திற்குப் பின் கீர்த்தி சுரேஷுக்கு பெயர் சொல்லும் படமாக இது இருக்கும். படம் முழுவதும் தன் நடிப்பால் கவர்கிறார். அதீத நடிப்பை வழங்கி காட்சிகளைக் கெடுக்காமல் என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். ஹிந்தித் திணிப்புக்கு எதிராக அவர் பேசும் வசனமும் கிளைமேக்ஸ் காட்சியில் சுயமரியாதை சிந்தனைகளைப் பதிவு செய்யும் இடங்களிலும் கைதட்டல்கள் கிடைக்கின்றன. தனக்கிருக்கும் மார்கெட்டை சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்
ஒரு போராளியான பெண் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக வழங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்

தாத்தாவின் நிலை கண்டு வருந்தும் போது வருங்கால கணவன் தவறான செயல் கண்டு வருந்தும் போதும் நடிப்பு பளிச்சிடுகிறது
அடுத்து படத்தில் எம் எஸ் பாஸ்கர் நடிப்பு பாராட்டக் கூடியதாக இருக்கிறது வயதான காலத்தில் புற்று நோய் வந்து விட்டது என்று மூன்று கண்டிஷன் போடுகிறார் அதில் ஒன்று தன் பேத்தியின் திருமணம் அதற்காக அவர் கண் கலங்க நடிக்கும் போது மனதில் இடம் பிடிக்கிறார்
நாயகனாக வந்து வில்லனாக மனதில் இடம் பிடிக்கும் ரவீந்திர விஜய் திரு திரு விழியால்
காதலை சொல்லத் தயங்கி காதலில் ஜெயித்த பிறகு வருங்கால மனைவியை பற்றி டைரியில் எழுதி வைத்து வசமாக மாட்டிக் கொள்ளும் அந்த காட்சிகளாகட்டும் அம்மாவையே அடிக்கும் காட்சிகளாகட்டும், கிளைமாக்ஸ் காட்சியில் தப்பித்து வந்து கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தவிக்கும் தவிப்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் சித்தூர் வரை ஏன் செல்கிறார் என்று பின் தொடர்ந்து அவர் இந்தி எக்ஸாம் எழுத போகிறார் என்று துப்பறிவது போன்ற வேடத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார்
: 1970 களில் தமிழ்நாட்டில் உள்ள கிராமமாக வள்ளுவம்பேட்டை என்கிற ஒரு கிராமத்தை காட்டி இருக்கிறார் கள் இந்த கிராமத்தின்
பசுமை மற்றும் லொகேஷன் அருமையாக இருக்கிறது

பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுவது,
[இந்தி தெரியாது போயா” என்று அடித்துப்பேசுவது, ஆணாதிக்கத்துக்கு எதிராக வெடுக்கென வெளுத்து வாங்குவது என கீர்த்தி சுரேஷ். ஆங்காங்கே அவர் செய்யும் குறும்புத்தனமான பாவனைகள் ரசிக்க வைக்கின்றன.: முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் இயக்குநர் சுமன் குமார். பெண்கள் முன்னேற்றம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என பல்வேறு புரட்சிகர சிந்தனை விதை தூவி இருக்கிறார்
கதாபாத்திரம் தேர்வு ரகு தாத்தாவின் பெரிய பலம். . முதல்பாதியில்கலகலப்பு
இரண்டாம் பாகத்தில் செம விறுவிறுப்பு
கிளைமாக்ஸ் பதினைந்து நிமிடம் சூப்பர்

மொத்தத்தில் இந்த ரகு தாத்தா அனைவரையும் கவரும். பெண்கள் என்றால் அடங்கித்தான் போக வேண்டும் என்ற ஆணாதிக்கத்தை உடைத்து எறியும் படம் .பாரதி கண்ட புதுமைப்பெண் கயல்விழி. ஒரு பெரிய தப்பை சரி செய்ய சிறிய தவறு செய்தால் தப்பே இல்லை என்று பேசும் அந்த கதாபாத்திரம் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது பெண்களை மிகவும் கவர்ந்திருக்கிறது தமிழ் சினிமாவில் பெண்களுக்கான சினிமா இந்த படம் வெற்றி கரமாக வந்திருக்கிறது அனைவரும் காண வேண்டிய படம்| . ரகு தாத்தாபங்கு பெற்ற கலைஞர்கள்

ஹோம்பாலே பிலிம்ஸ் | Homabale Films | Vijay Kiragandur | விஜய் கிரகந்தூர்

Keerthy Suresh – Kayalvizhi Pandian
கீர்த்தி சுரேஷ் – கயல்விழி பாண்டியன்

M.S Bhaskar – Raghothaman
எம்.எஸ்.பாஸ்கர் – ரகோத்தமன்

Devadarshini – Alamelu
தேவதர்ஷினி – அலமேலு

Ravindra Vijay – Tamil Selvan
ரவீந்திர விஜய் – தமிழ் செல்வன்

Anandsami – Ranganathan
ஆனந்தசாமி – ரங்கநாதன் என நடித்து இருக்கிறார்கள் சிறப்பாக இருக்கிறது

Crew

தயாரிப்பு: விஜய் கிரகந்தூர்
எழுதி இயக்கியவர்: சுமன் குமார்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் சுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன்
நிர்வாக தயாரிப்பாளர்: ரியா கொங்கரா
இணை இயக்குனர் – துர்கேஷ் பிரதாப் சிங்
ஒளிப்பதிவு இயக்குனர்: யாமினி யக்ஞமூர்த்தி
படத்தொகுப்பு : டி.எஸ். சுரேஷ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராம்சரந்தேஜ் லபானி
விளம்பர எடிட்டர்: ஸ்னீக் பீக்
ஆடியோகிராஃபர்கள்: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, எஸ். சிவகுமார் (ஏஎம் ஸ்டுடியோஸ்)
ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா
கீர்த்தியின் ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி
வசனம்: மனோஜ் குமார் கலைவாணன்
போஸ்ட் புரொடக்ஷன் சூப்பர்வைசர்: ஓ.கே. விஜய்
விளம்பர வடிவமைப்பாளர்: ஜெயன்
ஸ்டில் போட்டோகிராபர் – விஷ்ணு எஸ் ராஜன்

Heroin: Keerthy Suresh
Produced by: Vijay Kiragandur
Written & Directed by: Suman Kumar
Creative Producer: Vijay Subramaniam
Music Director: Sean Roldan
Executive Producer: Rhea Kongara
Associate Director & Post Head: Durgesh Pratap Singh
Director of Photography: Yamini Yagnamurthy
Editor: T.S. Suresh
Production Designer: Ramcharantej Labani
Promo Editor: Sneak Peek
Audiographers: Anand Krishnamoorthi, S. Sivakumar (AM Studios)
Costume Designer: Poornima
Keerthy’s Costume Designer: Shruthi Manjari
Dialogues: Manoj Kumar Kalaivanan
Post Production Supervisor: O.K. Vijay
Publicity Designer: Jayan
Still Photographer – Vishnu S Rajan
Digital Media Partner: Silly Monks என இந்த வெற்றி படத்துக்கு உழைத்த டெக்னீசியன் அனைவரும் வாழ்த்துக்கள் படத்தை சிறப்பாக மக்களிடையே சேர்த்த மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்