நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ள இந்த படத்துக்கு டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
, ‘ஏன்டி என்ன’ என்ற பாடல் . மைக்கேல் ராஜா எழுதியுள்ள இந்த பாடலை ஸ்டீபன் செக்கரியா மற்றும் மால்வி சுந்தரேசன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் படத்தின் ஹை லைட்
Pogumidam Vegu Thooramillai”
starring Vimal, Karunas, Deepa Shankar and others. Directed by Micheal K Raja. Music Composed by N.R. Raghunanthan
சென்னையில் இருந்து, இறந்த ஒரு பெரிய மனிதர் ஒருவரின் உடலை எடுத்துக்கொண்டு திருநெல்வேலிக்கு செல்கிறார் ஆம்புலன்ஸ் டிரைவர் விமல். இறந்து போனவர் அங்குள்ள பெரிய மனிதர்.அவருக்கு இசக்கி மற்றும் சங்கர பாண்டியன், என்ற இரண்டு மகன்கள் மற்றும் ஊர் சுற்றிலும் உறவுகள் அந்த பெரிய மனிதர் தான் வைத்து இருந்த 600ஏக்கரில் 500 ஏக்கர் ஊர் மக்களுக்கு தானமாக எழுதி கொடுத்தவர் இதில் சங்கர பாண்டியன் வேடத்தில் நடிக்கும் நரேன் இது என் அப்பா நான் தான் முதலில் அவருக்கு கொள்ளி வைப்பேன் என்கிறார் அடுத்து சின்ன வீட்டு மகனாக வரும் பவன் குமார் வாழும்போது உரிமை இல்லை இறந்த பிறகு என் அப்பாவுக்கு நான்தான் கொள்ளி வைப்பேன் என்று அவரும் மல்லுக்கு நிற்க்கிறார்
இவர்கள் வீட்டுக்கு எதிலே இருக்கும் வேலா ராமமூர்த்தி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவரது மகளுக்கு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது இப்படி பெரிய காரியம் நடந்து கொண்டிருந்தால்
நல்ல காரியம்
எப்படி நடக்கும்
எப்படி திருமணம் செய்வது என்று அவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.
மற்றும்
அந்த பெரிய மனிதரை ஆம்புலன்ஸ் ஏற்றி கொண்டு வரும் விமலுக்கு இவர் மனைவி பிரசவ வேதனையாள் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி வருகிறார்
எப்படியாவது தன் மனைவியின் நிறைவான பிரசவம் ஏற்பட வேண்டும் என்று ஏக்கத்தோடு ஆம்புலன்ஸ் வண்டியை ஓட்டிவருகிறார் அப்போது லிஃப்ட் கேட்டு அந்தவண்டியில் ஏறுகிறார் கருணாஸ். இரண்டு பேருமே முரண்பட்ட கதாபாத்திரங்கள். மன அழுத்தத்தில் இருக்கும்ஹீரோவுக்கும் எப்போதும் தொணதொணவென்று பேசிக்கொண்டிருக்கிற கருணாஸுக்கும் பிரச்சினை. இருவருக்கும் வழியில் வேறு பிரச்சினையும் வருகிறது. அது என்ன பிரச்சனை என்றால் காதலர்கள் நடு இரவில் வீட்டை விட்டு ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரும் வழியில் லிப்ட் கேட்கிறார்கள் மனிதாபமான அடிப்படையில் உங்களும் கருணாசும் லிப்ட் கொடுக்க பெண்ணின் உறவுகள் அந்த ஆம்புலன்ஸை மரித்து தாக்க தொடங்குகிறார்கள் இந்த காதலனையும் காதலியையும் விமலும் கருணாசும் காப்பாற்றியதால் அதனால் பிரச்சனை ஒருபுறம் அதைத் தாண்டி அவர்கள் அந்த உடலை எப்படி கொண்டு சேர்க்கிறார்கள் என்பதுதான், படம். மனிதம் பற்றி வலியுறுத்தும் படமாக இருக்கிறது
. டார்க் காமெடி, எமோஷனல் விஷயங்களும் இருக்கும்போது விமல் இதில் அதிகம் பேச வில்லை அவருடைய எக்ஸ்பிரஷன்கள் சிறப்பாக இருக்கிறது கருணாஸ் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் ஆக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் . படத்தில் கூத்து கலைஞராக வரும் கருணாஸ் மனிதநேயம் உள்ள கதாபாத்திரமாக வருகிறார் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று அவர் நினைப்பதும் ஆனால் நினைத்த நேரத்தில் அந்த பெரிய மனிதர் உடலை திருநெல்வேலி கொண்டுவர சேர்க்க வேண்டும் என்று விமல் விரும்புவதும் இருவருக்கும் முரணாக இருக்கிறது இடைவேளை சமயத்தில் வரும் அந்த காதலன் காதலியை காப்பாற்றியதும் அவர்களுக்கு இறக்கை முளைப்பது சுவாரசியமான பகுதி அடுத்து கருணாஸ் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று அங்குள்ள நண்பர்களிடம் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும் பொழுது வேனில் இருக்கும் பிணம் காணாமல் போகிறது அதுவும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது
இப்படி சாலையோர கதைக்கு பல கிளைக் கதைகளை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்
விமல்
குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல் படம் முழுக்க பேச்சு குறைவு என்றாலும் செயல் அதிகமாக இருக்கிறது மனைவிக்கு ஆஸ்பத்திரியில் பணம் கட்ட முடியவில்லை என்ற தவிப்பது
குறித்த நேரத்தில் அந்த பெரிய மனிதர் உடலை திருநெல்வேலி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கடமை கண்ணாக, இருப்பது நடுவழியில் காதலர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு கோதாவில் இறங்கி சண்டையிட்டு அவரை காப்பாற்றுவது, பிணம் காணாமல் போக கவலையில் மனம் வருந்துவது, தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இரண்டும் உயிரோடு இல்லை இப்போது மூன்றாவது பிரசவத்திற்காக மனைவியை சேர்த்திருக்கிறேன் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று வருந்துவது, என விமல் இந்த படத்தில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்
கருணாஸ்
அடுத்த கருணாஸ் இவருடைய கதாபாத்திரம் கூத்துக் கலைஞராக வருகிறார் ரூ. 300 ரூபாய் வைத்துக் கொண்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல வேண்டிய போது அவரை இந்த ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி கொண்டு போக பல பிரச்சினைகளுக்கு பல தீர்வுகளுக்கும் கருணாஸ் தான் முக்கிய காரணதியாக இருக்கிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் அவர் செய்யும் தியாகம் மனதை டச் செய்து விடுகிறது
அடுத்து சங்கரபாண்டியாக நடித்திருக்கும் நரேன் இவருக்கு அதிக வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த சில மணி துளிகளை சிறப்பாக செய்திருக்கிறார்
இசக்கி யாக நடித்திருக்கும் பவன் குமார் கடைசி வரை தந்தைக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்று ஏக்கத்தோடு நடித்திருக்கிறார் இவருக்கு தங்கையாநடித்
திருக்கும் தீபா சங்கர் மிகவும் நன்றாக நடித்தி ருக்கிறார்
: நாயகியாக நடித்திருக்கும் மெரி தாய்மை ஸ்தானத்தில் விமல் தண்ணை விட்டு பிரிந்து போகிறாரே என்று ஏக்கத்தில் நடிப்பை நன்றாக வழங்கி இருக்கிறார் ஆரம்பக் கட்சியில் விமல் வீட்டுக்கு வந்து நான் இங்கே வேலை செய்கிறேன் என்று சொல்லும் இடம் ரசனை
இசை ஏ ஆர் ரகுநாதன் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக வந்திருக்கிறது
படத்தின் ஒளிப்பதிவு ரோடு சார்ந்த கதையாக இருப்பதால் முழுக்க ஐவேஸில் ஒளிப்பதிவு செய்துள்ளார் கள் டாப் ஆங்கிலிருந்து அந்த ரோடுகளை காட்டும் போது மிகவும் ரசிக வைக்கிறது பசுமையான ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது
படத்தொகுப்பாளர் தியாகராஜன் கச்சிதமாக படத்தை எடிட் செய்திருக்கிறார் படம் விருவிருப்பாக போவதற்கு படத்தொகுப்பாளர் காரண
ஆர்ட் டைரக்டர் சுரேந்திரன் ,ஸ்டண்ட் மாஸ்டர் மெட்ரோ மகேஷ், இவர்கள் பங்கு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது
Movie Credits:-
Director : Michael K Raja
Producer : Siva Killari
Music Director: Nr.Raghunandan
Cinematographer: Demel Xavier Edwards
Editor : M. Thiyagarajan
Art Director : Surendaran
Stunt Director : Metro Mahesh
Dance Master : Richie Richardson
Production Controller : Rakesh Raghavan
Executive Producer : Venki Magi
Di: Varna Digital Studios
Colorist: R.Nandakumar
2nd Unit Dop: T. Madhan Kumar / Magesh Thirunavukarasu
என கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் மைக்கேல் கே ராஜா மனிதம் கலந்த ஒரு கதையை வித்தியாசமான முறையில் எழுதி இயக்கி ,கிராமத்து மனிதர்கள் வீம்பும் வீராப்பும் ,இன்னும் அப்படியே இருக்கிறது என்பதை சொல்லி இருக்கிறார் பட்டணத்தில் வாழ மனிதர்களுக்கு பணம் ஒரு பிரச்சினை ,சுகாதாரம் ஒரு பிரச்சனை, என்று அவர்களின் வாழ்க்கையின் பேசியிருக்கிறார்
கருணாஸ் போன்ற யாரும் இல்லாத மனிதர்களின் விரகத்தியை சொல்லி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத வண்ணம் யோசித்து படமாக்கி இருக்கிறார். யாருமில்லாத ஒரு மனிதனுக்கு ஊரே வந்து அழுவது வித்தியாசமான சிந்தனை நல்ல ஒரு படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்
போகும் இடம் வெகு தூரமில்லை நம் மனதுக்கு நெருக்கமாக அமைந்தப்படம் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தீர்வு என்று ஒன்று உள்ளது கிளைமாக்ஸ் காட்சியில் விமல் பவன் குமாரிடம் அந்த பெரிய மனிதரின் பிணத்தை ஒப்படைக்கும் பொழுது பவன் கல்யாண் இன்னும் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து கொடு என்று சொல்ல விமல் கருணாஸிற்காகவும் அந்த பெரிய மனிதருக்காகவும் ஆடும் ஆட்டம் ஒரு மனிதனின் உச்சகட்ட களியாட்டம் இப்படி படம் முழுக்க வசதியான காட்சிகளை வைத்து படத்தை எவரெஸ்ட் சிகரத்தின் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார் இயக்குனர் இந்த படம் எல்லோருக்கும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
