கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வந்துள்ள திரைப்படம் ‘நந்தன்’.
ஹீரோயினாக ஸ்ருதி பெரியசாமி நடித்திருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்
கதை திரைக்கதை என்ன?
புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை களம்தான் இந்த திரைப்படம்
அந்த கிராமத்தில் வெகு காலங்களாக பெரிய சாதியை சேர்ந்த ஒரு நபராக பாலாஜி சக்திவேல் இருந்து வருகிறார். தொடர்ந்து அந்த கிராமத்தில் அவருடைய சாதிக்காரர்களையே ஜெயிக்க வைத்து கொண்டு இருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
இந்த நிலையில் திடீரென்று அந்த கிராம பஞ்சாயத்து ரிசர்வேஷன் கோட்டாவிற்குள் செல்கிறது. அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே அந்த தொகுதியில் போட்டியாளராக நிற்க முடியும் என்கிற நிலை வருகிறது. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவராக இருக்கும் சசிகுமார் தொடர்ந்து பாலாஜி சக்திவேலிடம் அடிமையாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை தேர்தலில் நிற்கவைக்கின்றனர்
ஆனால் விதி சசிகுமாரின் ஆத்தா ரூபத்தில் வந்து விளையாடுகிறது ஆத்தா இறந்து போக அவரை சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் பொழுது மழை பெய்கிறது மழையில் நனையும் இறந்து போன ஆத்தாவை மேல் சமூகத்தை சேர்ந்த பாலாஜி சக்திவேல் அவர்கள் புதைக்கும் இடுகாட்டில் புதைக்கும் எண்ணத்தில் சசிகுமார் பாலாஜி சக்திவேல் வீட்டுக்கு வந்து கேட்கிறார் பாலாஜி சக்திவேல் அதெல்லாம் தர முடியாது போடா என்று விரட்டி விடுகிறார் அதன் பிறகு எரிப்பதற்காக கொண்டு வந்த தன் ஆத்தாவை குளி வெட்டி மலையும் சேருமாக சகதியில் புதைத்து விட்டு வருகிறார்
அதன் பின் அந்த ஊரில் அரசாங்க அதிகாரியாக இருக்கும் சமுத்திரகனிடம் சென்று முறையிடுகிறார் அவர் 10 ஏக்கர் புறம்போக்கு இடத்தை தருகிறார் இதை பாலாஜி சக்திவேல் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார் இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி சக்திவேல் சசிகுமாரை ராஜினாமா செய்ய சொல்லி அடித்து உதைக்கிறார் அவர் மனைவியை அவமானப்படுத்துகிறார் சசிகுமாரை நிர்வாணப்படுத்துகிறார் அவர் வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்குகிறார் இதன் பிறகு என்ன நடந்தது சசிகுமார் வெகுண்டு எழுந்தாரா? அவர்கள எல்லாம் பழி வாங்கினாரா? என்ன நடந்தது? என்பது தான் கதைக்களம்
பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தற்சமயம் சமூக நீதிப் பேசும் படங்களுக்கு இடையே அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன.
அந்த வகையில் இந்த படமும் சமூக நீதி பேசும் ஒரு நல்ல படமாக வந்திருக்கிறது
சசிகுமார் நந்தனாக ஜெயித்தாரா
*ஒரு கதாநாயகன் இப்படித்தான் நடிக்க வேண்டும் 10 பேரை உதைக்க வேண்டும் பில்டப் செய்ய வேண்டும் காதலியை கட்டி அணைக்க வேண்டும் முத்தம் கொடுக்க வேண்டும் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற சித்தாந்தங்களை உடைத்து இயல்பான தலித் இன நாயகனாக சசிகுமார் வெற்றி பெற்று இருக்கிறார் வெத்தலையை புதுப்பிக்கொண்டு பாலாஜி சக்திவேல் இடம் கையை கட்டிக்கொண்டு தாழ்வாக பேசும் போதும் மனைவியிடம் பணிந்து பேசும் போதும் குழந்தையிடம் அன்பை காட்டும் போதும் ஊர் மக்கள் முன்னால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் கையை பிசையும் போதும் சசிகுமார் வெல்டன் பாலாஜி சக்திவேல் கும்பல் இடம் அடி வாங்கும் அந்த காட்சி மனதை உறைய வைக்கிறது இன்னும் தலித் மக்கள் இப்படி துன்பப்படுகிறார்கள் என்பதை சசிகுமார் கதாபாத்திரத்தின் மூலம் அருமையாக எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் அருமையான நடிப்பு அற்புதமான நடிப்பு விருது நிச்சயம் சசிகுமாருக்கு
பாலாஜி சக்திவேல் நடிப்பு எப்படி
கோப்பு லிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் அச்சு அசலாக தனது குள்ளத்தன மான நடிப்பின் மூலம் கைதட்டில் வாங்குகிறார் கள்ளத்தனமான பார்வையும் ஏழைகளிடம் எப்படி காரியம் சாதிப்பது என்ற விவேக மூலையும் அவர் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்துகிறது
காதல் படத்தில் இயக்குனராக மறக்க முடியாத நினைவில் இருந்த இயக்குனர் இந்த படத்தில் வில்லத்தனத்தில் மறக்க முடியாத இடத்தை நம் மனதில் பிடித்து விட்டார் பதவியும் பதவி ஆசையும் ஒரு மனிதனை எப்படி மிருகம் ஆக்குகிறது ஏழை மக்களை அதுவும் தலித்து மக்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்த சொல்கிறது என்பதை அருமையான நடிப்பின் மூலம் எடுத்துக்காட்டுகிறார் பாலாஜி சக்திவேல் வாழ்த்துக்கள் சார்
சமுத்திரகனி சாதித்தாரா
ஏழை மக்களுக்கு உதவும் அரசாங்க அதிகாரியாக நான்கே காட்சிகளில் வந்தாலும் நச்சென்று மனதில் பதிகிறார் சமுத்திரக்கனி அப்படி இருந்தும் அந்த ஊர் மக்களை காப்பாற்ற சில சமயங்களில் தவறி விடுகிறார் கிளைமாக்ஸ் காட்சியில் நீதியை நிலை நிறுத்தும் போது கைதட்டளை வாங்கிக் கொள்கிறார் சமுத்திரக்கனி இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார்
ஸ்ருதி பெரியசாமி கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார் எப்படி
தலித் பெண்ணாக சசிகுமாரின் மனைவியாக சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார் பிக் பாஸ் மூலம் அறிமுகமாகி மாடலிங் உலகில் கொடி கட்டி நவீன மங்கையாக வளம் வந்த சுருதி இதில் தஞ்சாவூரில் வாழும் ஒரு கிராமத்தில் தலித் இன பெண்ணாக நடித்திருக்கிறார் தன் கணவர் சசிகுமார் பாலாஜி சக்திவேலை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார் என்பதை கண்களாலும் வெறுப்பாலும் சொன்னாலும் தன் கணவன் நிர்வாணமாக அடிபடும் போது துவண்டு எழுந்து துவம்சம் செய்வது சிறப்பு நிர்வானமாக கிடைக்கும் கணவனின் உடலை முந்தானை சேலையை போட்டு மறைக்கும்போது பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார் அற்புதமான நடிப்பு சுருதி பெரியசாமிக்கு விருதுநிச்சயம்
இயக்குனர் திரை க்கதை மாயாஜாலமா படத்தில் என்ன மேஜிக்
இயல்பான ஒரு கதைக்களம் இன்று நாட்டில் ரிசர்வேஷன் தொகுதியில் போட்டி போட்டு தலித் மக்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு உண்டான மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை என்பதை படத்தின் முடிவில் அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் வாயிலாக சொல்ல வைத்திருப்பது படத்தின் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துகிறது எந்த இடத்திலும் கதை நேர்கோட்டில் இருந்து விலகாமல் படத்தின் மையப் பகுதியிலேயே கதை செல்வது படத்தின் இயக்குனரின் திறமை இயல்பான வசனம் இயல்பான மனிதர்கள் எளிய கதை ஜோடனை இல்லாத வசனங்கள் என எழுத்து இயக்கம் என்று இரா. சரவணன் வெழுத்து வாங்கி இருக்கிறார் அவர் இதற்கு முன்பு இயக்கிய கற்றுக் குட்டி திரைப்படம் விவசாயிகளின் வலியை சொன்னது அடுத்து அவர் உருவாக்கிய உடன்பிறப்பு மீண்டும் ஒரு பாசமலர் படத்தை ஞாபகப்படுத்தியது ஆனால் இந்த படம் இந்தியா முழுவதும் பேசக்கூடிய படமாக அமைந்திருக்கிறது அண்ணல் அம்பேத்கர் கண்ட கனவை இந்த படம் நனவாக்கி இருக்கிறது
அரசாங்கம் நினைத்தால் ஒரே ஒரு கையெழுத்தாள் இந்த நிலைமையை சரி செய்து விட முடியும் ஆனால் எந்த ஆட்சி வந்தாலும் இந்த அவலம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது என்று இயக்குனரின் தன் கோபத்தை இந்த படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இந்த படம் பார்த்தாவது அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் திருந்துவார்கள் என்று நம்புவோம் அப்படி திருந்தினால் இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக நாம் கைதட்டிக் கொள்ளலாம்
படத்தின் டெக்னிக்கல் குழு
ஒளிப்பதிவு சூப்பர் தஞ்சாவூரில் படமாக்கப்பட்டு இருக்கிறது பசுமையான இடங்களும் இருக்கிறது ஏழை குடிசைகளும் இருக்கிறது இரண்டையும் பேலன்ஸ் செய்து ஒளிப்பதிவில் தன்னுடைய தரத்தை உயர்த்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது விறுவிறுப்பாக படம் செல்வதற்கு படத்தொகுப்பாளர் முக்கிய காரணமாக இருக்கிறார்
உடைஅலங்காரம் தலித் மக்களின் காஸ்டியூம் அப்படியே கண்முன் நிறுத்துகிறார் பாலாஜி சக்திவேல் அவரை சார்ந்த ஆதிக்க சாதியினர் ஒயிட் அண்ட் ஒயிட்டில் கலக்குவது நிஜமான நம்பக தன்மையை ஏற்படுத்துகிறது உடைய அலங்கார நிபுணர் பாராட்டுக்குரியவர் ஆகிறார்
படத்தின் ஒப்பனையாளர் சசிகுமாரையும் அவர் இனத்தைச் சார்ந்த மக்களையும் அவர் மனைவி சுருதி பெரியசாமியும் அவர் குழந்தையின் மேக்கப் ஒப்பனையின் மூலம் கொண்டு வந்து கண்முன் நிறுத்தி இருக்கிறார் வெல்டன் மேக்கப் மேன்
படத்தின் டி .ஐ. மற்றும் கலர் கரெக்ஷன், கச்சிதமாக இருக்கிறது
இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசையில் மிரட்டுகிறாரா
படத்தின் உயிர்நாடி இசைதான் அற்புதமான இசை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு பாவப்பட்ட மக்களின் வலிகளை இசையின் மூலம் உணர வைத்திருக்கிறார் ஆதிக்க சாதியினர் வரும்பொழுது அவர்களுக்கு தெனாவட்டாக பின்னணி இசையில் போட்டு மிரட்டிய இசையமைப்பாளர் தலித் மக்கள் வரும்போது பரிதாபமான இசையை கொடுத்து உருக வைக்கிறார் இசையும் பாடல்களும் அற்புதம்
மொத்தத்தில் இந்த நந்தன்” தமிழ் சினிமாவில் காலம் காலமாக தலித் மக்கள் அடைந்து கொண்டிருக்கும் வலியை சொல்கிறது. வேதனையை சொல்கிறது. ரிசர்வேஷன் என்றால் என்ன, அதற்காக அண்ணல் அம்பேத்கர் எப்படி போராடினார் தலித் மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக போராடி வாங்கி தந்த அந்த ரிசர்வேஷன் கோட்டா அந்த மக்களுக்கு கிடைத்ததா? இதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறினார்களா? முன்னேறி விட்டார்களா? என்பதை இதைவிட வேறொரு படம் இவ்வளவு சிறப்பாக சொல்லி விட முடியாது! அந்த அளவுக்கு இந்த படத்துக்காக, இயக்குனரும், சசிகுமாரும், உழைத்திருக்கிறார்கள் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் வெற்றியை நோக்கி நந்தன்
