மெய்யழகன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/ 5

செம. ஃபீல் குட் மூவியாக மனதை தொடும் நடிகர்களின் நடிப்பு. சிறப்பான திரைக்கதை” என வந்துள்ள மெய்யழகன் திரை விமர்சனம்

இயக்குனர்

:96 என்ற காதல் காவியத்தை கொடுத்த பிரேம்குமார் ஆறு வருடங்களுக்கு பிறகு மெய்யழகன் படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கியிருக்கிறார்.

ஒரு உணர்வுபூர்வமான கதையை எழுதி அதற்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து படமாக்கி இருக்கிறார் தமிழ் சினிமாவை தரமான சினிமாவாக மாற்றுவதில் இவரின் பங்கு 96 படத்திலும் இந்த படத்திலும் நன்றாக தெரிகிறது பெரும் கமர்சியலை நம்பி கதையை கோட்டை விடும் இயக்குனர்கள் மத்தியில் மெய்யழகன் படத்தின் இயக்குனர் உண்மையிலேயே மெய்யழகனாக தெரிகிறார்

தெளிந்த நீரோடை போல திரைக்கதை அமைப்பதில் சிறந்த வல்லவரான இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

அவர் இயக்கம் எழுத்து எப்படி இருக்கிறது? வாங்க பார்க்கலாம்

கதை களம் என்ன?

சொந்த ஊரில் சொந்த பூர்வீக வீட்டை சொத்து பிரிப்பதில் எழுதிக் கொடுத்துவிட்டு ஜெயபிரகாஷ்,

ராஜம், தம்பதியின் மகன் அரவிந்த்சாமியுடன், தஞ்சாவூரை விட்டு அந்த குடும்பம் சென்னைக்கு கிளம்புகிறது இதுதான் ஆரம்பக் காட்சி படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு எதிர்பார்ப்பையும் அடுத்து என்ன நடக்கும் என்ற பேமிலி” டச்சையும் கொடுக்கிறார் இயக்குனர்

22 வருடங்களுக்குப் பிறகு அரவிந்த்சாமி மீண்டும் தஞ்சாவூர் வருகிறார் தன் தங்கை புவனா கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு அழைத்ததால், தங்கை மீது உள்ள பாசத்தால் அதாவது (சித்தப்பா மகள்) ஊருக்கு வருகிறார் முதலில் வேண்டா வெறுப்பாக புறப்படுகிறார் கல்யாண வீட்டில் என்ன செய்வது என்று தயங்கியபடி அமர்ந்து இருக்கிறார். அப்போது ஒரு கதாபாத்திரம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது. அவர் தான் படத்தோட ஹீரோ கார்த்தி. அவர் யார்?

அரவிந்த்சாமிக்கும் அவருக்கும் என்ன உறவு

ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் கார்த்தியிடம் கேட்க முடியாமல் அரவிந்த்சாமி

அவர் சொல்வதற்கெல்லாம் சரி சரி என்று தலை ஆட்டுகிறார் தன் தங்கை புவனாவுக்கு வாங்கி வந்த பரிசை மேடையிலேயே அணிவித்து மகிழ்கிறார்

அதன் பின் சென்னை புறப்படுகிறார் பஸ் புறப்பட்டு விடுகிறது தஞ்சையில் உள்ள இரண்டு தங்கும் விடுதியில் போய் பார்க்கிறார் அது தங்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது இப்பொழுது கார்த்தியின் வீட்டில் மனமே இல்லாமல் தங்குகிறார் அங்கு ஸ்ரீதிவ்யா, கார்த்தியின் மனைவியாக வருகிறார்.

அவரும் கார்த்தியும் உபசரிக்கும் உபசரிப்பில் நெகிழ்ந்து போகிறார் கார்த்தியும், ஸ்ரீ திவ்யாவும், யார் தன் மீது இவ்வளவு பாசம் காட்ட என்ன காரணம் விடிந்ததும்

ஸ்ரீ திவ்யாவையும் கார்த்தியின் பிறக்கப் போகும் குழந்தையையும் கார்த்தி ஏன் ஆசீர்வதிக்க சொல்கிறார் ?

இப்படி பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகு பதில் சொல்கிறது இந்த மெய்யழகன் இந்த படம் நமது வசந்தகால நினைவுகளை அசைப்போட வைக்கிறது

ஈழத் தமிழர்களின் துயரங்களை சொல்கிறது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை சொல்கிறது. கரிகால சோழனுக்கும் சேர சோழ பாண்டியனுக்கும் நடந்த போரை பற்றி சொல்கிறது. மனிதன் மறந்து போன இன்றைய நாளில் நல்ல மனிதராக வாழும் கார்த்தியின் கதாபாத்திரம் நிச்சயம் நீண்ட நாள் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் அற்புதமான கதாபாத்திரத்தை படைத்திருக்கிறார் இயக்குனர்

நடிப்பின் நாயகன் கார்த்தி

கார்த்தியின், கதாப்பாத்திரம் கள்ளம் கபடமற்ற அன்பை காட்டுவது போல எழுதப்பட்டிருக்கிறது. நன்கு அறிந்தவர்களே, ஆதாயத்திற்காக பிறருடன் பாசமாக பேசும் இந்த காலத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, பல வருடங்களுக்கு முன்பு தெரிந்தவர் மீது எல்லையற்ற அன்பு காட்டும் கார்த்தியின் கேரக்டர் படிக்காத மேதை படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் ரங்கா கதாபாத்திரத்தில் எப்படி நம் மனதில் இடம் பிடித்தாரோ அதேபோல கார்த்தி இந்த படத்தில் எல்லோரும் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்

அவர் நடிப்பு வெள்ளந்தியாக இருக்கிறது

பேசும் பேச்சுக்கள் கிராமத்து மனிதர்களின் அன்பான பேச்சாக இருக்கிறது

அணைக்கட்டில் அமர்ந்து கொண்டு நான்கு பீர் அடித்துக் கொண்டு ஈழத் தமிழர்கள் பற்றியும் ,துப்பாக்கி சூட்டில் பலியான அந்த உயிர்களைப் பற்றியும் ,கரிகால சேர சோழ போர் பற்றியும் கூறும் பொழுது அரவிந்த்சாமி மட்டுமல்ல நாமும் வியந்து போகிறோம்

ஸ்ரீ திவ்யாவிடம் அன்பு காட்டும் பொழுதும் கல்யாண வீட்டில் இளவரசு, ராஜ்கிரன், இவர்களுடன் கிளுகிளுப்பூட்டி விளையாடும் பொழுதும் அரவிந்த்சாமிடம், என்னை தெரியவில்லையா? நான்தான் உருளைக்கிழங்கு என்று தன்னைத்தானே பணிவாக சொல்லும் இடத்திலும் என் பெயர் சொல்லுங்கள் என்று கிளைமாக்ஸில் அவர் அன்பான கட்டளை இடும் பொழுதும் “அத்தான் அத்தான்” என்று அரவிந்த் சாமியை அன்புக்கு மேல் அன்பு சேர்த்து எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் பொழுது

காளை மாடு, வீட்டில் வளரும் பாம்பு, அரவிந்த் சாமிக்கு பணம் தேவை வந்தவுடன் தன் கையில் இருக்கும் பணத்தை கொடுக்கும் அந்த பாங்கு ,என ஒவ்வொரு காட்சியிலும் மெய்யழகன் மெய்யாகவே சிலிர்க்க வைக்கிறார் நிச்சயம் கார்த்திக்கு இந்த படம் விருந்து வாங்கிக் கொடுக்கும் அற்புதமான கதாபாத்திரம்

அரவிந்த் சாமியின் உச்சம் தொட்ட நடிப்பு

ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறி அற்புதமாக நடித்திருக்கிறார் அரவிந்த்சாமி,

ஜீவன் உள்ள கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் கிளிகளுடன் பேசுவது, அதன்பின் தஞ்சை வந்த பிறகு கருணாகரனிடம் அறிமுகப்படுத்திக் கொள்வது

என்று இயல்பாக ஆரம்பித்து மெல்ல மெல்ல நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார்

நகர வாழ்க்கைக்காக தன்னை மாற்றிக்கொண்ட நடுத்தர வயது மனிதராக இவர் கார்த்தி யுடன் சேர்ந்து “கோடை கால காற்றே “மற்றும் கரகாட்டக்காரன் படத்தில் “என்னத்தான் உன்னை எண்ணித்தான்” என்று, பாடல் பாடியும் மைக்கேல் ஜாக்சனின் ‘மூன் வாக்’ நடனமாடியும் அசத்துகிறார். தன் மீது இவ்வளவு அன்பு காட்டும் ஒருவனை பார்த்து, ஆடிப்போய் “இவனை யார்னே நினைவுபடுத்த முடியலையே..” என்று உடைந்து அழும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார். அற்புதமான நடிப்பு

மற்ற கலைஞர்கள்

தஞ்சை மண்ணில் வாழும் உறவாக ராஜ்கிரண், இரண்டு ஒரு காட்சியில் வந்தாலும் தன் சிரிப்பாலே கவனம் பெறுகிறார் அடுத்து கார்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யா,
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஹோம்லியான லுக்கில் நிறைவான நடிப்பை தருகிறார். கணவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நல்ல மனைவியாக தாய்மை சுமந்த கதாபாத்திரத்தில்
ஸ்ரீ திவ்யா அசத்தல்

அரவிந்த்சாமியின் மனைவியாக வரும் தேவதர்ஷினி ,நல்ல ஆலோசனை பார்ட்டி நல்ல ஆலோசனைகள் தருகிறார் மற்றும் ஜெயபிரகாஷ், கருணாகரன் , என அனைவரும் நடிப்பு நிறைவாக இருக்கிறது

அசத்தலான ஒளிப்பதிவு

இயக்குனரின் உதவியாளரான மகேந்திரன் ஜெயராஜ், ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் அருமையாக இருக்கிறது

தஞ்சை மண்ணை காட்டும் பொழுதும் சென்னையில் நகரவாசிகளை காட்டும் பொழுதும் வித்தியாசப்படுத்தி அந்த கல்யாண வீட்டில் காட்சிகளை கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார்

இனிய இசை

கோவிந்த் வசந்தாவின் வயலின் இசை, பாடல்களும் தாலாட்டுகிறது பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக இருக்கிறது

மற்ற டெக்னீசியன் கள்

படத்தொகுப்பு கோவிந்தராஜ், சிறப்பாக செய்திருக்கிறார்

ஆர்ட் டைரக்டர் ஐயப்பன் , கார்த்தியின் வீடு கல்யாண மண்டபம் அசத்தலாக இருக்கிறது

சுபஸ்ரீ கார்த்திக் விஜய், காஸ்ட்யூமர் அரவிந்த்சாமிக்கு அம்சமாக இருக்கிறது ஸ்ரீதிவ்யாவுக்கு பொருத்தமாக இருக்கிறது. கார்த்தியின் காஸ்ட் கச்சிதமாக இருக்கிறது

இந்த படத்திற்காக உழைத்த அத்தனை டெக்னிஷன்களும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள்

இப்படத்தை 2d சார்பில் ஜோதிகா, சூர்யா, தயாரித்து இருக்கிறார்கள் சிறந்த படத்தை கொடுத்ததற்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர் ஜான்சன் அவர்கள் சிறந்த முறையில் இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்காக அவரையும் பாராட்டலாம் இப்படத்தில் பணிபுரிந்த நடிகர் நடிகைகள் டெக்னீசியன்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மெய்யழகன் இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்