டோபமைன் என்பது உயிரணுக்களில் பல முக்கியப் பாத்திரங்களை வகிக்கும் ஒரு நரம்பியல் மூலக்கூறாகும் . இது கேடகோலமைன், மற்றும் பினெதிலமைன், குடும்பங்களின் கரிம இரசாயனமாகும் . மூளையில் உள்ள கேடகோலமைன் உள்ளடக்கத்தில் 80% டோபமைன் ஆகும். இது ஒரு கார்பாக்சைல் குழுவை அதன் முன்னோடி இரசாயனமான எல்-டோபாவின் மூலக்கூறிலிருந்து அகற்றுவதன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமீன் ஆகும் , இது மூளை மற்றும் சிறுநீரகங்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது . டோபமைன் தாவரங்கள் மற்றும் பெரும்பாலான விலங்குகளிலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. மூளையில், டோபமைன் ஒரு நரம்பியக்கடத்தியாக செயல்படுகிறது – மற்ற நரம்பு செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்ப நியூரான்கள் (நரம்பு செல்கள்) வெளியிடும் ஒரு இரசாயனம் . நரம்பியக்கடத்திகள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒருங்கிணைக்கப்படுகின்றன
இதன் திரை விமர்சனம் பார்க்கலாம் வாங்க!
கதை களம் என்ன?
ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் இன்ஸ்டாகிராமில் வீல் போட துடிக்கும் மகேஷ் & மகேஷ், தம்பதிகள் அடுத்து மதுசூதனன், இவர் ஒரு சூதாட்ட பிரியர் வேலைக்கு செல்லாமல் தன் மனைவி மகளை பிரிந்து நண்பர்களிடம் கடன் வாங்கி ஜாலியாக வாழும் கதாபாத்திரம்
அடுத்து கத்தாரில் வேலை செய்யும் கணவர் ஊர் வம்பு பேசும் உஷா ,
இவரது மகன் ராகுல், உஷா என் நேரமும் கிச்சனில் சமையல் வீடியோ போட்டு சந்தோஷப்படுபவர் இவரது மகன் ராகுல் எந்நேரமும் செல்போனில் ஆன்லைன் விளையாடிக் கொண்டிருப்பவர்
அடுத்து தங்கம்மாள் இவர் ஒரு பெண்ணியவாதி காதலனுடன் பிரேக் அப் சொல்லிவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார் இவரை காதலன் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்
அடுத்து காணாமல் போன பிரியங்காவை தேடி அலையும் இன்ஸ்பெக்டர்
அடுத்து இன்ஸ்டாகிராம் பைத்தியமான டி .டி. கே இவர்களை சுற்றி நிகழும் கதை இரண்டு.22 மணி நேரத்தில் அந்த அப்பார்ட்மெண்டில் ஒரு கொலை விழும் என்று ஆரம்பிக்கும் கதையில் யார் கொலை செய்யப்படுவார்கள்
யார் அந்த கொலையாளி
அதை இன்ஸ்பெக்டர் எப்படி கண்டு பிடிப்பார் என்ன நடக்கும் என்பது தான் மைய புள்ளி
இடைவேளை வரை இவர்கள் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதில் இயக்குனர் தீரவ்
தீவிரமாக இருக்கிறார்
மதுசூதனனாக நடித்து அதகலப்படுத்துகிறார்
யார் அந்த கொலைகாரன் கொலை செய்யப்படுவது யார் என்ற கோணத்தில் படம் ஆரம்பித்து எதிர்பாராத திருப்புமணையில் படம் முடிகிறது
நடிகர் & நடிகைகள் பற்றி
இயக்குனர் தீரவ் மதுசூதனன் என்ற கதாபாத்திரத்தில் லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டு நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாடும் கதாபாத்திரம் செம்மையாக செய்திருக்கிறார் அசால்டாக செய்திருக்கிறார்
அடுத்து ஊர் வம்பு பேசும் சத்யா இவர் குற்றம் கடிதல் படத்தில் நடித்திருந்தார் இந்த படத்திலும் அதே போல வேடம் வெளுத்து வாங்கி இருக்கிறார் தன் மகன் எந்நேரமும் ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டிக்கிறார
அடுத்து மகேஷ் &மகேஷ் தம்பதிகள் இருவரும் எந்நேரமும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதில் குறியாக இருக்கிறார்கள் டி.டி.கே விடம் இவர்கள் மாட்டிக்கொண்டு விழிப்பது, சுவராஸ்யமான பகுதி கொலைகளுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்
அடுத்து தங்கம்மா ஆக வரும் நிகிலா, அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் சக்தி ராகவன், இவர்கள் இருவரும் கதையின் திருப்புமுனையாக வருகிறார்கள் தங்கமா நடிப்பு நன்றாக இருக்கிறது கடைசி காட்சியில் கண்டுபிடிப்பில் இவரின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது காதலன் காதலி இருவரும் மனம் விட்டுப் பேசினால் எல்லா பிரச்சினையும் தீரும் தங்கம்மா முடிவில் இயற்கையின் ஆர்வலராக காட்டப்பட்டிருப்பது சிறப்பு
அடுத்து ஊர் வம்பு பேசும் உஷாவின் மகனாக சக்தி இவர் ராகுல் என்ற சிறுவனாக நடித்திருக்கிறார் செல்போன் பார்க்காதே என்று கண்டிக்கும் அம்மாவிடம் காட்டும் கோபம் இன்று எல்லா குழந்தைகளும் எல்லா வீட்டிலும் நடக்கும் நிஜத்தை பிரதிபலிக்கிறார் இவர் நடிப்பு நன்றாக இருக்கிறது
மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கதாபாத்திரத்தில் வரும் அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது கொலை நடந்தது? தனக்கு மேலதிகாரி விடும் கட்டளைக்கு பயந்து அந்த அப்பார்ட்மெண்டுக்குஎதற்காக வருகிறார் என்பதை படத்தின் திருப்புமுனையாக அமைகிறது செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்க்கும் காதலர்கள் அதற்கு ஆசைப்பட்டு தனியாக ஒதுங்கினால் என்ன நடக்கும் என்பதை பிரியங்கா கதாபாத்திரம் மூலம் இயக்குனர் நறுக்கென்று சொல்லி இருக்கிறார் தப்பி தவறி கூட செல்போனில் விபரீதமான விளையாட்டு விபரீதமான வீடியோக்கள் பார்த்து விடாதீர்கள் உங்கள் டோபபமைன் ஹேர் மேனியம் முதலில் ஹாப்பியாக இருக்கும் பின்னால் அது உங்களை அடிமையாக்கி விடும் அதிலிருந்து உங்களால் மீள முடியாது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தீரவ்
இப்படத்தில் நடித்த இயக்குனர் தீரவ், விஜய், விபிதா, விஜயலட்சுமி, ரவி ஏழுமலை, நடிப்பும் நன்றாக இருக்கிறது நிகிலா, ராகவ், சத்யா, சாம்சங், சக்தி செல்வராஜ்,
என எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கள்
இசையமைப்பாளர் ஆலன் சோஜி பின்னணி இசை நன்றாக இருக்கிறது இயற்கை சூழ்ந்த பாடல் நன்றாக இருக்கிறது அன்பைப் பற்றிய அந்த பாடல் தீம் மியூசிக் எல்லாம் ரசிக்க வைக்கிறது பாடல்களை அனைத்தும் எழுதி இருக்கிறார்
பிரித்திவிராஜேந்திரன்
ஒளிப்பதிவு அப்பார்ட் மெண்டிலே நடப்பதால் இருள் சூழ்ந்த லைட்டிங் ஆக இருக்கிறது கிளைமாக்ஸ் இயற்கை சூழ்ந்த அந்த பாடலுக்கு தகுந்த நன்றாக இருக்கிறது
படத்தை தொகுத்தவர் இயக்குனர் தீரவும் படத்திற்கு தேவையான விறுவிறுப்பு தேவையான கதைகளும் சிதறிவிடாமல் இருக்க எடிட்டிங் முக்கியம் அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குனர்
மற்றும் படத்தின் டெக்னீஷியன்கள்
Produced by – Hashtag FDFS productions
Written & Directed by – Dhirav
Cinematographer – Prithivi rajendiran
Editor : Dhirav
Sound mixing – Anand ramachandran
SFX – Kishore Kamaraj
DI and Colorist – Srikkanth raghu (Firefox studios)
Vfx and lyrics video – Vetri imatte media
Music director – Alan Shoji
Lyricist : Dhirav
Produced by : Dhirav
Direction team: Naveen arul murugan, Satish Selvaraj,
மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ் சந்திரா அவர்கள் மற்றும் அப்துல் நாசர் ஆகியோர்க்கும் வாழ்த்துக்கள்
ஒரு விறுவிறுப்பான படத்தை சுவை குறையாமல்
சமுதாய நோக்கோடு இன்றைய குழந்தைகளின் மனநிலை செல்போன் பார்க்கும் பெரியோர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் படிப்பினை ஊட்டும் படி நல்ல படத்தை கொடுக்க இயக்குனர் தீரவ்
முன் வந்து உள்ளார்
இதற்கு முன் வெப்பம் குளிர் மழை என்ற நல்ல படத்தை கொடுத்திருந்தார் அதைப்போலவே இந்த டொபமைன்@2:22 திரைப்படமும் ஒரு விழிப்புணர்வு ஊட்டக்கூடிய கதையை தேர்வு செய்து படமாக்கி கொடுத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் இது நேரடியாக டிஜிட்டலில் ஒளி ஒளிபரப்பாகிறது அமோசன்பிரைம், ஆஹா, மற்றும் சவுத் சிம்ளி
போன்ற “OOTதளத்தில் நீங்கள் இதை காணலாம்
