தேவாரா (பார்ட் 1) திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/ 5

கதை களம்

கிரிக்கெட் போட்டியில் குண்டு வைக்க இருப்பதாக மும்பை காவல் துறைக்கு தகவல் வருகிறது.
இந்த குண்டுவெடிப்பில் பின்னணியில் யார்?

இந்த தீவிரவாத கும்பலைத் தேடி ஆந்திரா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் ரத்தினகிரிக்கு ஒரு போலீஸ் தனிப்படை ஒன்று கடத்தல்கார கும்பல் போல நடித்து விசாரணை செய்கிறது.
அங்கு சென்றவுடன் அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அவர்கள் “பைரா என்ற அந்த ஊரைச் சேர்ந்தவர் இடம் எத்தி என்பவரை பிடித்துக் கொடுத்தால் நிறைய பணம் கொடுக்கிறேன் என்கிறார் பைரா ரத்தினகிரிக்கு போகச் சொல்கிறார்

(சிங்கப்பா) என்கிற பிரகாஷ் ராஜி பார்க்க சொல்கிறார் பிரகாஷ்ராஜை பார்த்ததும் பிரகாஷ்ராஜ் அங்கு என்ன நடந்தது

கடல் எப்படி செங்கடல் ஆக மாறியது தேவரா என்ற ஒரு தனி மனிதன் எப்படி அந்த ஊருக்கு தலைவராக இருந்தார் என்பதை சொல்ல ஆரம்பிக்கிறார்

சீறிப்பாயும் கடல் அலைகள் செங்குருதியாக வந்து போகிறது அதோடு பிளாஸ்பேக்

நடுக்கடலில் இருந்து சரக்கு கப்பலில் வரும் கடத்தல் பொருட்களை கைமாற்றுவதில் தேர்ந்தவனான பைராவிடம் ( சைஃப் அலிகான்) உதவி கேட்கிறது போலீஸ். ஆனால் பைரா உட்பட அனைவரும் கடலுக்குள் செல்ல பயப்படுகிறார்கள். இந்த பயத்திற்கு காரணம் தேவரா ( ஜூனியர் என்.டி.ஆர்). கதை பல வருடங்கள் பின்னுக்குச் செல்கிறது. அங்கு தான் ஜீனியர் என் டி ஆர் கதை ஆரம்பிக்கிறது

ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்து விலை மதிப்பற்ற செல்வங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இந்த செல்வங்களை எல்லாம் கப்பலில் இருந்து கடத்தி மறுபடியும் நாட்டிற்கே கொண்டு வருவதைதே லட்சியமாக கொண்டவர்கள் ரத்தினகிரி மலையில் வாழும் நான்கு கிராம மக்கள். சுதந்திரத்திற்கு பிறகு கவனிப்பார் அற்றுபோன பிழைப்பிற்காக கடத்தலில் ஈடுபடுகிறார்கள் தேவரா , பைரா,குஞ்சரா, ராயப்பன் மற்றும் அந்த ஊர் மக்கள்

தேவரா தன் நண்பனின் மகனை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஆயுத பூஜை அன்று பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்பவும் ஊருக்கு செல்லும் போது வெடிகுண்டு வைத்து பஸ்ஸில் நண்பரின் மகன் கொல்லப்படுகிறார் அதேசமயம் கடலுக்கு ஆயுதம் கடத்த தேவாராவும், பைராவும் செல்லும் பொழுது அங்கு வரும் கப்பற்படை அதிகாரி தேவராவையும், பைரவையும், சிறை பிடித்து நீங்கள் செய்வது நாட்டுக்கே பேர் ஆபத்தாக முடியும் அந்த பள்ளிக்கூட மாணவன் இரந்தது கூட நீங்கள் கடத்திச் சென்ற ஆயுதத்தால் தான் என்று சொல்கிறார் இதனால் மனம் வருந்தி தேவரா ஒரு முடிவு எடுக்கிறார்

கடத்தப்பட்ட ஆயுதங்கள் தீவிரவாத செயலுக்கு பயண்படுவது தெரிந்து இனிமேல் கடலுக்கு யாரும் செல்லக்கூடாது என முடிவு செய்கிறார் தேவரா. இது பிடிக்காத பைரா, உள்ளிட்ட அவனது சகாக்கள் தேவராவை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இதனால் தேவரா கடலுக்குள் சென்று பதுங்குகிறான். கடலுக்குள் கடத்தலுக்காக செல்லுபவர்கள் பினமாக திரும்பி வருகிறார்கள். ஒரு நாள் தேவரா திரும்பி வருவான் அப்போது அவனை கொலை செய்ய காத்திருக்கிறான் பைரா. தேவராவை வெளியே வரவழைக்க அவன் மகனான வராவை தனது கும்பலுடன் கடலுக்கு அனுப்புகிறான். தேவரா திரும்பி வந்தாரா?. அவனை கொல்ல நினைக்கும் பைராவின் ஆசை நிறைவேறியதா? இதுதான் இண்டர் வெல் பிளாக்

தேவரா நடிப்பு எப்படி

வழக்கம் போல ஜூனியர் என்டிஆர் இந்த படத்தில் டபுள் ஆக்‌ஷனில் தனது சிறப்பான நடிப்பால் மிரட்டி எடுத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் அவருடைய வைப் வேறெலெவலில் திரையை தீப்பிடிக்க வைக்கிறது. நடனக் காட்சியில் பட்டையை கிளப்புகிறார் தேவராவாக வரும் காட்சிகள் எல்லாம் விசில் சத்தம் காதை பிளக்கிறது

கம்பீரமான உடல் மொழி , மகனாக வரும் வரா, அஞ்சி நடுங்குது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறது ஜான் வியுடன் ரொமான்ஸ், காட்சி அந்த ஆயுத பூஜை சண்டை காட்சி கிளைமாக்ஸில் கடலுக்குள் எதிரிகளை வீழ்த்தும் இந்த காட்சிகள் ஜூனியர் என்டிஆர் அருமையாக தன் ரசிகர்களுக்கு தீனி போட்டு இருக்கிறார்

பைரா” நடிப்பு எப்படி

பைரா என்ற கதாபாத்திரத்தில் சைப் அலிகான் மிரட்டி இருக்கிறார் தேவராவை கொள்வதுதான் இலக்கு என்று இவர் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார் கடலுக்குள் சென்று ஆயுதங்கள் கடத்த வரும் பொழுது தேவராவுக்கு எதிராக சூது செய்யும் பொழுது வில்லனாக செம மிரட்டல்
இரண்டாவது இன்னிங்ஸில் இவரது ஆட்டம் அதிகமாக இருக்கும் என்று நம்பலாம்

குஞ்சரா கலையரசன்

குஞ்சரா என்ற கதாபாத்திரத்தில் கலையரசன் ஜூனியர் என்டிஆர் உடன் மோதும் காட்சிகளில் அனல் தெரிக்கிறது ஜூனியர் என்டிஆர் கலையரசன் முதுகில் மார்க் போடும் காட்சி பைராவுடன் மோதி படுக்கையில் விழும் காட்சி என சிறப்பாக நடித்தி ருக்கிறார் கலையரசன்
ஆக்சன் காட்சியில் மிரட்டி இருக்கிறார்

தங்கா வாக ஜான்வி கபூர்

தேவராவின் மகனாக வரும் வரா, இவரின் ஜோடியாக தங்கா, என்ற ஜான் வி கதாபாத்திரம் துறு துறு என நடித்திருக்கிறார் கவர்ச்சி காட்சியிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் ஜூனியர் என்டிஆர் உடன் அந்த கடற்கரை காட்சி ரொமான்ஸ் பாடல் ரசிக்க வைக்கிறது ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாக்களில் இனி நிறைய எதிர்பார்க்கலாம்
அவரின் நடிப்பு அப்படியே அம்மாவைப் போல் உள்ளது குறும்பு பேச்சும் அரும்பு மொழியும் ரசிக்க வைக்கிறது.

சிங்கப்பா” வாக பிரகாஷ் ராஜ்

தேவாராவின் வீரம், அவரின் தலைமை பண்பு ,நாலு ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தேவரா துடிப்பது எல்லாம் பிரகாஷ்ராஜ் போலீஸ அதிகாரியிடம் பிளாஸ்பேக் கட்சியில் சொல்கிறார்

படம் முழுக்க வந்து நிறைவான நடிப்பை தந்திருக்கிறார் கே ஜி எஃப் படத்தில் எப்படி கதை சொன்னாரோ அதேபோல இந்த படத்திலும் கதை சொல்வதற்கு பிரகாஷ் ராஜ் உத்தரவாதம்
படம் முழுக்க பிரகாஷ்ராஜ் வந்தாலும் அவருக்கென்று இந்த கேரக்டரும் இல்லை விரித்து பார்வை தேவாராவை புகழ்வது இது தான் அவருக்கு வேலை. .

ஜீனியர் என் டி ஆர்

சுறாவின் மேல் சவாரி , ஒரே ஆளாய் ஒரு டன் வெயிட்டை தள்ளுவது போன்ற காட்சிகள் தெலுங்கு பட விரும்பிகளுக்காக எடுக்க பட்டுள்ளது

அம்மாவைப் பார்க்க வரும் பொழுது அங்கு நடக்கும் சண்டை காட்சி கல்யாண வீட்டில் குடித்துவிட்டு கடலுக்குள் கடத்தலுக்கு செல்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கு சென்றதும் ஐம்பதுக்கு மேற்பட்ட எதிரிகள் தேவார கொல்ல வரும்பொழுது துவம்சம் செய்யும் அந்த சண்டை காட்சி கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சி

ஆயுதங்களை ராயப்பனுக்கு எடுத்துக் கொடுக்க பைராவுடன் மோதும் அந்த சண்டை காட்சி
என என்டிஆர் அதகலம் செய்து இருக்கிறார்

மிரட்டல் இசை, சூப்பர் ஒளிப்பதிவு

ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு, தேவரா படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம் . எதார்த்தத்தை மீறிய மிகையான காட்சிகளை திரையில் சாகசமாக மாற்றுகிறார் ரத்தினவேலு. கடலுக்கு அடியில் சண்டை காட்சிகள் அழகான லொகேஷன் மற்றும் மீனவ குடியிருப்புகள் என அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்

படம் மூன்று மணி நேரம் என்றாலும் சலிக்காமல் நாம் திரையில் அந்த செங்கடலையும் மீனவ மக்களையும் தேவாராவின் சாகசத்தையும் ஜான்வியின் அழகையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது கேமரா கடினமான உழைப்பு வாழ்த்துக்கள்

இன்னொரு பக்கம் அனிருத்தின் பின்னணி இசை இந்த காட்சிகளை ரசிக்கவைக்கின்றன.
சண்டைக் காட்சிகளில் பின்னணி இசை வேகமான அருமையான முன்னெடுப்பை நடத்துகிறது இனி அனிருத் தெலுங்கு சினிமாவில் அதிகம் ராஜா ங்கம் நடத்த லாம்
ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது

இயக்குனர் மாயாஜாலம்

கே.ஜி.எஃப் ஸ்டைலில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த தேவாரா பஸ்ட் பார்ட் எப்படி இருக்கு படம் முழுக்க ரத்தம் தெரிக்க விட் ருக்கிறார் இயக்குனர்

ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை திருப்திப்படுத்த பாட்டு, ஃபைட், டான்ஸ் ,என பட்டையை கிளப்பி இருக்கிறார் இயக்குனர்

முதல் பாதி மிகவும் டெம்போ எகிற வைத்து

இரண்டாம் பாதியில் காதல் ,காமெடி, அம்மா சென்டிமென்ட்,

நாலு ஊருக்கு நல்ல செய்ய வேண்டும் என்ற தத்துவம் தன்னைத்தானே தியாகம் செய்து கொள்ளும் ஹீரோயிசம் போன்ற வற்றில் கவனம் செலுத்தி இருக்கிறார்

முதல் பாதி போலவே இரண்டாம் பாதியில் இருந்திருந்தால் படம் வேற லெவல்!

மொத்தத்தில் இந்த பிரம்மாண்டமான படம் பல பிரமாண்டங்களை தாங்கி நிற்கிறது

வி எப் எக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது

கலர் கரெக்ஷன் பிரமாதம்

ஒப்பனை அருமையாக இருக்கிறது

ஆர்ட் டைரக்டர் அசத்தி இருக்கிறார்

சன்டை பயிற்சியாளர் சும்மா வேற லெவல் மிரட்டி இருக்கிறார் மனுஷன்

படத்தொகுப்பு விருவிருப்பாக செதுக்கி இருக்கிறார்

காஸ்ட்யூமர் ஜான்விக்கு அழகான முறையில் டிசைனிங் செய்திருக்கிறார் தேவராக வரும் ஜூனியர் என்டிஆர் க்கு அந்த கருப்பு சட்டையும் கருப்பு வேஷ்டி கச்சிதமாக பொருந்தியிருக்கிறது

ஜூனியர் என்டிஆர் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ஆறு வருடங்களுக்கு பிறகு ஒரு பிரமாண்டமான படத்தில் நடித்திருக்கிறார் இந்த இயக்குனருடன் ஜனதா கேரேஜ் என்று பெரிய வெற்றி படத்தில் நடித்திருந்தார் அதனால் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள் எனவே இயக்குனரும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை ஏமாற்றவில்லை தெறிக்க விட்டிருக்கிறார்கள்