ஹிட்லர் திரை விமர்சனம்

ரேட்டிங்3-5/ 5

பணம், பவர் அரசியல்

ஒரு ஆயுதம் உருவாகும்போதே அதன் இலக்கு தீர்மானிக்கப்படுகிறது பணம், பவர், கூட்டம், தலைவன்
என அரசியல் பேசும் படமாக வந்துள்ளது ஹிட் லர் “

கதை திரைக்கதை

பாவப்பட்ட ஏழை மக்கள், தேனி மாவட்டத்தில் தேயிலை பறிக்க சென்றவர்கள் வீடு திரும்பும் பொழுது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகிறது கயிற்றை கட்டி ஆற்றைக் கடக்கும் பொழுது கர்ப்பிணி பெண் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் நீரில் மூழ்கி இறந்து விடுகிறார்கள்
அந்த மாவட்டத்துக்கு ஆற்றில் மக்கள் சென்று வர பாலம் கட்டாமல் விட்ட அரசின் தவறா? அல்லது அதை வரைமுறைப்படுத்தாத அதிகாரிகள் தவறா? மக்களிடம் ஓட்டு வாங்கி தங்கள் பணியை சரிவர செய்யாத அமைச்சர்கள் தவறா? அந்த அமைச்சர்களை விரட்டி மக்களுக்கு நல்லது செய்ய சொல்லி கண்டிக்காத முதல்வரின் தவறா? என்பதை சொல்கிறது இந்த ஹிட்லர்”

கதை சென்னையில் தொடங்குகிறது அரசியல் கட்சியின் அமைச்சராக இருக்கும் சரண்ராஜ், ஊழல் பேர்வழியான அவரை முதலமைச்சர் கண்டிக்கிறார்

உன் மீது ஏகப்பட்ட அதிருப்தி இருக்கிறது உன்னால் ஜெயிக்க முடியுமா?
என்று கேட்கிறார் அதற்கு சரண்ராஜ் நான் எப்படியும் பணத்தை செலவு செய்து மக்களிடம் ஓட்டு வாங்கி காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார் இவருக்கு போட்டியாளராக ஆடுகளம் நரேன் இருக்கிறார், அவருக்கும் சரண்ராஜுக்கும் யார் அடுத்த முதல்வர் ஆவது என்று போட்டி

சரண்ராஜ் இந்த தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் எப்படியாவது மக்களுக்கு பணத்தை கொடுத்து வென்றுவிட தன் தம்பி தமிழ் இடம் பணத்தை கொடுத்து மக்களுக்கு கொடுக்க சொல்கிறார்

இதனிடையே மக்களுக்கு கொண்டு செல்ல போகும் பணம் லோக்கல் எலக்ட்ரிக் ட்ரெயினில் கொண்டு செல்லப்படும் பொழுது 300 கோடி ரூபாய் கொள்ளை அடிக்க படுகிறது
மூன்று பேர் இறப்புக்கு காரணம் ஒரு துப்பாக்கி

அது கள்ளச் சந்தையில் புழங்கும் துப்பாக்கி இப்பொழுது அந்த மூன்று பேரை கொன்றது யார்? அந்த துப்பாக்கி எப்படி இங்கு வந்தது? என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பை டெபுடி கமிஷனர் கௌதம் வாசுதேவ மேனன் இடம் ஒப்படைக்கப்படுகிறது
அதற்கான பணியை துவங்குகிறார்.

மதுரையில் இருந்து வேலை தேடி வரும் விஜய் ஆண்டனி கிங்ஸ்லி ரூமில் தங்குகிறார் அப்போது ரயில்வே நிலையத்தில் ரியா, உடன் ஏற்பட்ட மோதலில் காதல் ஏற்படுகிறது
ரியா, விஜய் ஆண்டனி ,காதல் ஒருபுறம் போய்க்கொண்டிருக்க கௌதம மேனன், பரபரவென அந்த மூன்று பேரை கொன்றது யார் ?இந்த துப்பாக்கி எங்கிருந்து வந்தது? என்று கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுகிறார்.

கௌதம வாசுதேவ மேனன் கொலையாளிகளை கண்டுபிடித்தாரா?

விஜய் ஆண்டனி க்கும் இந்த 300 கோடி ரூபாய் காணாமல் போனதற்கு என்ன தொடர்பு?

அமைச்சர் சரண்ராஜ் தேர்தலில் வெற்றி பெற்றாரா?

இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ஹிட்லர்”

மக்கள் நாயகன் செல்வா ,வாக விஜய் ஆண்டனி

*
விஜய் ஆண்டனி ஏற்கனவே, கோடியில் ஒருவன் திரைப்படத்தில் தேர்தல், அரசியல் தொடர்பான கதைக்களத்தை தேர்ந்தெடுத்தார். இந்நிலையில், அவர் மீண்டும் தேர்தல் அரசியல் தொடர்பான திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் அவர் இடைவேளை வரை கலகலப்பாக காதல், கமர்சியல், என்று நடித்திருக்கிறார்

காதலியிடம், காதலை சொல்லும் போதும் அவர் ஏன் துரத்தி துரத்தி ரியவை காதலிக்கிறார்
என்று படம் பார்ப்பவர்களுக்கு புரியும் .
ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலாக சண்டை செய்கிறார் கிளைமாக்ஸ் கட்சியில் வாசுதேவ மேகனிடம் பேசும் போது கைதட்டல் வாங்குகிறார்
கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன் ஆடிப்பாடி மகிழ்விப்பதும்’,
எதிரிகளை விலாசுவது, காதலியிடம் ரொமான்ஸ் செய்வது, என்று கலகலப்பாக நடித்திருக்கிறார் .

இயக்குனர் சாதித்தாரா?

வானம் கொட்டட்டும் போன்ற திரைப்படங்களை இயக்கிய தனா இந்த படத்தை இயக்கியுள்ளார் சமுதாயம் மேம்பட வேண்டும்
என்று கதை எழுதி இருக்கிறார் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் பணம் மீண்டும் மக்களுக்கு சேர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு இப்படத்தை எடுத்திருக்கிறார் கதை சொன்ன விதம் இயக்கியதும் பாராட்டுக்குரியது.
காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்பு படுத்தி தெளிந்த நீரோடை போல திரைக்கதை எழுதி இருக்கிறார் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையாமல் காட்சிக்கு காட்சி பரபரப்பாக கொண்டு செல்வதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

தயாரிப்பாளர்
. செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த நிறுவனம் சமூக நோக்குள்ள நல்ல நல்ல படங்களை தயாரித்து வருகிறது அந்த வகையில் இந்த படமும் சமுதாயத்திற்கு நல்லது செய்ய தூண்டும் வகையில் படத்தை தயாரித்து இருப்பது பாராட்டுக்குரியது**

மற்ற கலைஞர்கள்* கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார்
அரசியல்வாதியால், அப்பாவை இழந்து வேலைக்கு செல்லும் இடத்தில் மேலதிகாரியின் காமப் பார்வையிலிருந்து விலகி வேலை தேடும் பெண்ணாக ஒயின் குடிக்கும் நவநாகரீக பெண்ணாக விஜய் ஆண்டனியை போடா புண்ணாக்கு என்று திட்டும் பெண்ணிய வாதியாக நன்றாகவே நடித்திருக்கிறார்.
அழகு! அழகு!

. மேலும், கௌதம் வாசுதேவ் மேனன்,
கொலையாளிகளை தேடும் போலீஸ் அதிகாரியாக துடிப்புடன் நடித்திருக்கிறார் கொலையாளி யார் என்று கண்டுபிடித்த பிறகு அதற்குண்டான காரணங்களை கண்டறிந்து நல்லது எது தீமை எது என்று ஆராய்ந்து முடிவெடுக்கிறார் இந்த வேடத்துக்கு சிறப்பாக பொருந்தி இருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா,
இருவரும் ஊறுகாய் போல சில காட்சிகள் மட்டும் வந்து போனாலும் விவேக் பிரசன்னா, அழுத்தமாக பதிக்கிறார்

மற்றும் இயக்குனர் தமிழ் ,சரண்ராஜின் தம்பியாக வந்து பணத்தை இழந்து அண்ணனிடம் வாங்கி கட்டிக் கொள்கிறார்

ஆடுகளம் நரேன், இவர் அடுத்த முதல்வர் போட்டிக்கு தயாராக செக் வைத்து சரண்ராஜ் வீழ்த்துவது, சுவாரஸ்யமான பகுதி….

ஐஸ்வர்யா தத்தா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக வந்து ஆடி விட்டு போகிறார்.படத்தில்நடித்த அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

பாசிசத்திற்கு எதிராக போராடும் நாயகன்

முடிவில் ஜெயித்தாரா? இல்லையா? என்பது திரை க்கதை

ஒளிப்பதிவு,இசை, சண்டை பயிற்சியாளர், காஸ்ட்யூம்

நவீன் குமாரின் ஒளிப்பதிவு ஆரம்பத்தில் தேனியில் ஆற்றில் மழை கொட்டிக் கொண்டிருக்க பெண்கள் ஆற்றைக் கடக்கும் அந்த காட்சி அற்புதமான காட்சி
கண்ணில் நீரை வரவழைக்கும் கனத்த காட்சி

அதே போல சென்னையில் நடக்கும் கதையில் எலக்ட்ரிக் ட்ரெயினில் சண்டை காட்சிகளும், படமாக்கப்பட்ட விதமும் மிகவும் வியக்க வைக்கிறது பாடல் காட்சிகள் லொகேஷன் தேர்வு செய்து படமாக்கப்பட்ட விதத்தில் ஒளிப்பதிவாளருக்கு கைகுலுக்கி வாழ்த்து சொல்லலாம்
இசை மிரட்டல்

விவேக் மெர்லின் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது பாடல் காட்சிகள் உயிரோட்டமாக இருக்கிறது

படத்தொகுப்பாளர் சங்கத்தமிழன படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் கொலையாளிகள் யார்? என்ற விதத்தில் ஒரு துப்பறியும் நாவலை போல படத்தை செதுக்கி இருக்கிறார்

கலைஇயக்குனர் உதயகுமார் பல இடங்களில் வியப்பான அரங்கமைப்பை கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா ஆடும் அந்த நடன காட்சிக்கு அமைத்து செட் ,மற்றும் விஜய் ஆண்டனியின், தேனி மக்கள் வாழும் வீடாகட்டும் , அரசியல்வாதிகளின் வீடு, சரண்ராஜ் அமைச்சரின் வீடு, என ஆர்ட் டைரக்டர் அருமையாக உழைத்திருக்கிறார்

கிருத்திகா நெல்சன், கு கார்த்திக், பிரகாஷ் பிரான்சிஸ் , இவர்களின் பாடல் வரிகள் படத்திற்கு மேலும் பலம்

பிருந்தா, லீலாவதி, நடனம் சிறப்பாக இருக்கிறது. சண்டை பயிற்சியாளர் முரளி ஆக்சன் காட்சிக்காக மெனக்கட்டு இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது கிளைமாக்ஸ் காட்சி அந்த சண்டையில் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் தமிழ் ,விஜய் ஆண்டனி, மற்றும் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி பரபரப்பாக இருக்கிறது.

காஸ்டியூம் டிசைனர் அனுஷா. நாயகி ரியாவுக்கு மெனக்கெட்டு காஸ்ட்யூம் கொடுத்து அழகா காட்டி இருக்கிறார்

விஜய் ஆண்டனி வரும் காட்சிகளும் கலக்குகிறார்

பாடல் காட்சிகள், மற்றும் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், கிளைமாக்கில் வரும் மத்திய ரிசர்வ் படை, என காஸ்டியூம் பல வகையில் கவனம் பெறுகிறது.

*மக்கள் தொடர்பாளர் சதீஷ் அவர்கள் டீம் மக்களிடம் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த ஹிட்லர் கொடுங்கோல் வாதியல்ல, ஏழை மக்களின் நண்பன். அரசியல்வாதிகளின் எதிரி ,நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்த ஹிட்லருக்கு மக்களின் வரவேற்பு அமோகம் தான்