நீல நிற சூரியன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/ 5

திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’

இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது தான்

. ஒரு பள்ளியில் பிசிக்ஸ் ஆசிரியருக்கு சிறுவயது முதலே தான் ஆண் இல்லை பெண் என உணர்ந்து ஒரு கட்டத்தில் சிகிச்சை மூலம் பெண்ணாக மாற முடிவு எடுக்கிறார். இந்த சமூகம் அவரை எப்படி பார்க்கிறது? அவரது முடிவுக்கு பின் அவர் எதிர்கொண்ட பிரச்சனை என்ன? என்பதை மிக ஆழமாக கூறுகிறது படம். இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

அரவிந்த் பானுவாக மாறும் தருணம் சம்யுக்தா நடிப்பு எப்படி

ஒரு ஆண் பெண்ணாக மாறுவது
குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது?எப்படி அதை கடந்து இவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்தவிதமான நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுத்து உள்ளார் இயக்குனர்

சம்யுக்தா வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக இருக்கிறார் அவர் அமெரிக்காவில் இருக்கும் பொழுது திருநங்கையாக மாறிய தருணத்தை இந்தியாவில் கதைக்களமாக கொண்டு இப்படத்தை எடுத்திருக்கிறார்

பொள்ளாச்சியில் ஒரு பள்ளியில் நடக்கும் கதை தான் இந்த படம் .

அரவிந்த் (சம்யுக்தா) பிசிக்ஸ் ஆசிரியராக அந்த பள்ளியில் பணிபுரிகிறார் சிறு வயது முதலே அவர் ஒரு பெண்ணாகவே தன்னை உணர்கிறார் சரியான தருணம்வரும் போது நான் ஆண் அல்ல பெண் என்று அந்த பள்ளியில் தனக்கு தோழியாக வரும்

ஹரிதாவிடம் கூறுகிறார் ஹரிதாவும் அவர் மனநிலை அறிந்து அவருக்கு உதவி செய்கிறார் ஒரு கட்டத்தில் மருத்துவர்களிடம் சென்று ஒரு வருடமாக தொடர் சிகிச்சை மேற்கொண்டு பானுவாக மாறுகிறார் அப்படி அவர் பானுவாக மாறியது அந்த பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டதா? பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்களா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஏற்றுக் கொண்டார்களா?

என்ன நடந்தது என்பதை அற்புதமாக தன்னுடைய அனுபவத்தின் மூலம் அருமையாக எடுத்து இருக்கிறார்

திருநங்கைகள் என்றாலே ஆசிர்வாதம் செய்வது, கைதட்டி காசு கேட்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது, மோசமான செயல்களை செய்பவர்கள்? என்ற எண்ணத்தை அடித்து உடைத்து புதிய இலக்கணம் வகுத்திருக்கிறார் சம்யுக்தா அதற்காகவே அவரை பாராட்டலாம்.

எத்தனை திருநங்கைகள் இன்று வக்கீலாக, டாக்டராக, போலீஸ் அதிகாரியாக, டாப் 10 அதிகாரிகளாக இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் பாசிட்டிவாக காட்டாமல் சினிமாக்களில் அவர்களை மோசமாக சித்தரித்து படம் பார்ப்பவர்கள் எண்ணத்தில் மோசமான எண்ணத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் அதை மாற்றுவதற்காக இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார் சம்யுக்தா.

முதலில் தான் ஒரு பெண்ணாக மாறிவிட்டேன் என்று சொன்னதும் அதை கண்டிக்கும் அப்பா கஜபதி ,அம்மாகீதா கைலாசம் ,சித்தப்பா நக்கலைட்ஸ் பிரசன்னா, இவர்களிடம் அவமானப்படுவது, பள்ளியில் போய் தான் பானு என்பதை உரக்க சொல்லும் பொழுது பள்ளியில் இருப்பவர்கள் செய்யும் கிண்டல் செய்வது பிரின்சிபலும் வி பியும் கொடுக்கும் கண்டிஷன்களை தாங்கி உறுதியாக வெற்றி நடை போடுவது என வீர நடை போட்டு இருக்கிறார்.

கெஜட்டில் பெயரை மாற்றினால்தான் பள்ளியில் பெயரை மாற்ற முடியும் என்று சொல்ல கெஜட் ஆபீஸிரடம் சென்று வாதாடும் போது ஆகட்டும்,

தனக்கென்று தனியாக ஒரு பாத்ரூம் இல்லை என்று அந்த பாத்ரூமுக்குள் சென்று குலுங்கி குலுங்கி அழும்போது ஆகட்டும்,

தன்னை விரும்புவதாக சொல்லி மலையாளி ஒருவர் அவரை ஏமாற்றும் போது களங்கும் காட்சி ஆகட்டும், அம்மாவிடம் வாதாடும் போதும், நன்றாக நடித்திருக்கிறார் இந்த ஆண்டின் விருதுகள் நிச்சயம் இவர் கதவை தட்டும்

ஹரிதாவிடன் அற்புதமான நடிப்பு

பானுவின் தோழியாக வரும் ஹரிதா ,ஆரம்பம் முதல் படத்தின் இறுதி வரை துணை நின்று பானுவுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் ஹரிதா அற்புதமாக நடித்திருக்கிறார்
நம் மனதிலும் இடம் பிடித்துக் கொள்கிறார் கேலி செய்பவரை விரட்டி, அடித்து பானுவுக்கு பக்க துணையாக இருந்து படத்தையும் இமயமலை அளவுக்கு உயர்த்தி இருக்கிறார் ஹரிதா அவருக்கு வாழ்த்துக்கள்

கார்த்தி யாக வரும் மாஷா

அதே பள்ளியில் இன்னொரு திருநங்கையாக நடித்திருக்கும் கார்த்தி(மாஷா )அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது இவர் ஆணா பெண்ணா என்று இவர் பேண்ட்டை கழட்டி நண்பர்கள் பார்க்கும் இடத்தில் உட்கார்ந்து கத்தி கதறும் அந்த காட்சிகளில் மனதை தொடுகிறார்

நான் ஆணா பெண்ணா என்று புரியாத குழப்பத்தில் இருப்பதாக சம்யுக்தாவிடம் கூறும் அந்த காட்சியிலும் அனுதாபத்தை பெறுகிறார் மாசா நடிப்பு மாஸ் ஆக இருக்கிறது

மற்ற கலைஞர்கள்

மருத்துவராக வரும் கிட்டி ஒரு காட்சி வந்தாலும் சிறப்பாக வந்து போகிறார்

சம்யுக்தாவின் அப்பாவாக வரும் கஜபதி மகனின் நிலையை கண்டு வருந்தும் காட்சிகளும் மீண்டும் ஓட்டல் தொடங்க இருபது லட்சம் பணம் கேட்டு அவர்கள் திருமணம் செய்ய கேட்பதும் என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

படத்தில் முக்கியமான கவனம் பெறுவது வைஸ் பிரசிடென்ட் ஆக வரும் மலர்விழி இவர் பல படங்களில் நடித்திருக்கிறார் அந்த அனுபவம் இவருக்கு கச்சிதமாக வந்து போகிறது பள்ளியில் கண்டிஷன் மிக்க விபியாக கவனம் பெறுகிறார் அரவிந்த் பானுவாக மாறிய பின் அவரை பள்ளியை விட்டு நீக்க சொல்வதிலேயே குறியாக இருக்கிறார் பானு மீது எப்படியாவது குற்றத்தை சுமத்தி வெளியே துரத்தி விட வேண்டும் என்று துடிக்கிறார் அந்த நடிப்பில் அவர் பாஸ் மார்க் வாங்குகிறார்

சம்யுக்தாவின் சித்தப்பாவாக வரும் நக்கலைட்ஸ் பிரசன்னா தன் அண்ணனுக்கு உதவி செய்ய வந்து மகன் எப்படி மகளாக மாறிப் போனது கோபப்பட்டு கத்தும் இடம் கவனம் பெறுகிறார் அவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது

சம்யுக்தாவின் அம்மாவாக வரும் கீதா கைலாசம் நடிப்பு நன்றாக இருக்கிறது மகன் மகளாகிவிட்டது எண்ணி அழும் காட்சிகளில் அவர் நடிப்பு ரசிக்க வைக்கிறது டெக்னீசியன் குழு
படத்தின் ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர்
ஸ்டீவ் பெஞ்சமின் இவர் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது படம் முழுக்க பள்ளியின் பள்ளி வகுப்பு மைதானம், மற்றும், அரவிந்த் வீடு ,என காட்சிப்படுத்தல் மற்றும் லைட்டிங் கச்சதமாக இருக்கிறது .

இசையிலும் நீல நிற சூரியன் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை உருக வைக்கிறது .

படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் சோர்வு இல்லாமல் செல்வதற்கு படத்தொகுப்பு உதவுகிறது வாழ்த்துக்கள் .

ஆர்ட் டைரக்டர் அரங்கம் அமைத்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

தயாரிப்பு :மாலா மணியன்:

சமுதாயத்துக்கு இன்று தேவைப்படும் ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறார் பாராட்டலாம் திருநங்கைகள் என்றாலே மோசமான செயல் செய்பவர்கள், என்ற எண்ணத்தை மாற்றி அவர்களும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக மாலா மணியன் அவர்களை பாராட்ட லாம்

இயக்குனர் பங்களிப்பு

இயக்குனர் சம்யுக்தா விஜயன் அமெரிக்காவில் வாழும் இவர் தமிழ் சினிமாவுக்காக திருநங்கைகளின் வாழ்க்கையை பாசிட்டிவ் வாக உயர்ந்த நிலையில் இருக்கிறது யாரும் அனுதாபம் கொள்ள வேண்டாம்

ஆசி வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தோடு நல்ல ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் பொள்ளாச்சியில் படித்து பிஎச்டி முடித்தவர் தன் வீட்டில் அப்பா அம்மா தனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் என்று கூறுகிறார் ஆனால் சினிமாவில் அப்படி எல்லோருக்குமே சுதந்திரம் கிடைப்பதில்லை எனவேதான் இந்த படம் எடுத்திருக்கிறேன் என்கிறார் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய படம் சமுதாயத்தில் திருநங்கைகளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தெய்வத்தின் குழந்தைகள் அவர்களை நாம் உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாட வேண்டும் யாரும் அவர்களைமலிவாக நினைக்க கூடாது இந்த தத்துவத்தை சித்தாந்தத்தை உணர்த்தி இந்த படம் கொடுத்திருக்கிறார் நிச்சயம் பல ஆண்டுகள் பேசப்படும் இந்த படம் வாழ்த்துக்கள் சமித்தா விஜயன்

மக்கள் தொடர்பாளர் கே எஸ் கே செல்வா

இந்த படத்தை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கு நமது வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த படம்

ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது பற்றி பேசுவது மட்டுமில்லாமல் நமது சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கின்றது என்று ஒரு திருநங்கையின் பார்வையில் இருந்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளது இதுபோன்ற பல படங்கள் வர வேண்டும் திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் உயர்ந்த மதிப்புகள் தரப்பட வேண்டும் என்பது நமது விருப்பம் வாழ்த்துக்கள் சம்யுக்தா விஜயன் 🙏🙏🙏🙏🙏🙏🙏