திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் ல் த கா சை ஆ
சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கலந்த வினோதமான திரைக்கதை அம்சம் கொண்ட படமாக தந்திருக்கிறார்கள்.
கப்பில் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் மூலம் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.படத்திற்கு ஒளிப்பதிவு எம் எஸ் மனோகுமார்.
இசை ஈ ஜே. ஜான்சன்,படத்தொகுப்பு பரணி செல்வம். பாடலாசிரியராக க .சுதந்திரன், பேக்ரவுண்ட் மியூசிக் சுரேஷ் ஷர்மா இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைவருமே புது முகங்கள் ஆவர். இது தமிழ் சினிமாவின் ஒரு புது முயற்சி ‘ல் தகா சைஆ வந்துள்ளது
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
தவறு செய்பவர்கள் நிம்மதியாக வாழ முடியாது அதுவும் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு கனவில் கூட நிம்மதியாக வாழ முடியாது என்ற தத்துவத்தை சொல்லி இருக்கும் படம் தான் இந்த படம்.
(ராம்) சதா நாடார் (ரம்யா) மோனிகாவும் இணை பிரியாத கணவன் மனைவியாக வருகிறார்கள் ஆரம்பக் காட்சிகளில் இவரை அந்நியோன்யம் அழகாக இருக்கிறது அன்பை பொழிகிறார்கள் இருவரும் இணை பிரியாத தம்பதியாக காட்டும் பொழுது ஆகா ஏதோ நடக்கப் போகிறது என்ற கூற்று படி கதை போகிறது.
ராம் தூங்கும் பொழுது கனவு வருகிறது. அந்த கனவில் இவர் எதைப் பார்க்கிறாரோ அது நிஜத்திலும் நடக்கிறது அதுதான் இவருக்கு பிரச்சினையே ஆரம்பக் காட்சியில் மனைவியை இவர் கொலை செய்வது போலவும் காவல்துறை அதிகாரிகள் இவரை இழுத்துக் கொண்டு போவது போலவும் கனவு வருகிறது காலையில் விழித்து பார்த்தால் மனைவி ரம்யா யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்கிறார். மனைவியை கணவன் கொலை செய்துவிட்டார் என்று அப்போதே ராம் ஷாக் ஆகிறார்
அதன் பிறகு ரம்யா தாய்மை அடைகிறார் இந்த சந்தோசத்தை தன் மாமாவிடம் சொல்லி கம்பேனி வைத்து கொண்டாடுகிறார் ராம் “
அப்பொழுது கனவில் ஒரு கால் கேர்ள் பெண்ணுடன் ராம் தொடர்பு வைத்திருப்பது போலவும் இரவில் இருவரும் தனிமையாக இருக்கும் பொழுது அந்த கால் கேர்ள் பெண் இறந்து விடுவதுபோலவும் பயந்து கொண்டு காரை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணை காருக்குள் போட்டுக் கொண்டு ரோட்டில் வருகிறார் அங்கு சில ரௌடிகள் இவருடைய காரை எடுத்துக் கொண்டு போகிறார்கள் ரம்யா தாய்மையாக இருப்பதால் கணவருக்கு போன் செய்கிறார் அந்த ஃபோனை கேட்டு ரவுடிகள் மீண்டும் இவரிடமே காரை கொண்டு கொடுத்து மனைவியை சீக்கிரம் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போ என்று சொல்கிறார்கள்
இப்படி தொடர்ந்து கெட்ட கனவாக வந்து கொண்டிருக்கிறது இது எதனால் வருகிறது! ரம்யாவுக்கும், ராம் இருவருக்கும், என்ன பிரச்சனை “கால் கேள் “பெண்ணை இவர் ஏன் தேடி போகிறார் என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது இந்த கதைக்களம்
படத்தின் கிளைமாக்ஸ்
யாரும் எதிர்பாராதது சரியான திருப்பு முனையாக அமைந்தது.
நாயகன் சதா நாடார்
அலுவலகத்தில் கண்ணியமாக நடந்து கொள்கிறார் மனைவியிடம் அன்பைப் பொழிகிறார். தன் மாமாவிடம் காமெடி செய்கிறார் காவல் அதிகாரியை கண்டு அஞ்சி நடுங்குகிறார். சில சமயம் சைக்கோவாக கத்திகூச்சல் இடுகிறார். கால் கேர்ள் பெண்ணுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் விழிப்பிதுங்குகிறார். இப்படி அவர் வரும் காட்சிகள் எல்லாம் நவரசங்களை நடிப்பாக கொண்டு வந்து கொட்டி தள்ளுகிறார். எதிர்காலத்தில் இவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அழைப்புகள் வரும் ஒவ்வொரு காட்சியிலும் இவரின் நடிப்பு பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறது.
மனைவிக்கு தவறு செய்துவிட்டு இனிமேல் கனவிலும் கூட இது போன்ற தவறு செய்ய மாட்டேன் என்று புலம்பும் போதும், கிளைமாக்ஸ் காட்சியில் ,கனவில் கூட பணக்காரனாக வாழ கூடாது என்று புலம்பும் காட்சியிலும்,என பல்வேறு முக்கிய காட்சிகள் நன்றாக நடித்திருக்கிறார் தனக்கு எந்த கதை ஒத்துப் போகுமோ அந்த கதையை தேர்வு செய்து கச்சிதமாக நடித்திருக்கிறார் சைக்கோவாக “வரும் காட்சிகளிலும் முக பாவனை நன்றாக இருக்கிறது. சதா நாடாருக்கு திரையுலக பயணம் வெளிச்சமாக இருக்கிறது.
நாயகி மோனிகா செலேனா
அழகான நாயகி அம்சமாக( ரம்யா) என்ற கதாபாத்திரத்திற்கு பொருந்தி போகிறார். கணவனிடம் அன்பு பொழியும் போதும் கணவனிடம் கண்டிக்கும் பொழுதும் தாய்மை அடைந்து வலி தாங்காமல் கதறும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு நல்ல ஒரு புதுமுகம் இனி இவருக்கு நிறைய அழைப்புகள் வரும் நிறைய படங்களில் பார்க்கலாம். முதல் படம் போல் இல்லாமல் நன்றாகவே நடித்திருக்கிறார் .
அழகாக இருக்கிறார் கவனம் பெறுகிறார்.வாழ்த்துக்கள் மோனிகா. கணவர்தான் நாயகன் என்பதால் நிறைய காட்சிகளில் நெருக்கமாக நடித்திருக்கிறார்.
டெக்னீசியன் குழு
ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது மனோகர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அந்த நீச்சல் குளம் நாயகனின் வீடு நாயகனின் அலுவலகம் என எல்லா இடங்களிலும் பளிச்சென்று இருக்கிறது
இசை பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது மெலோடியான பாடல்கள் ரசிக்க வைக்கிறது ஜான்சன் மிரட்டி இருக்கிறார்
ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் நன்றாக இருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும் அவர் உழைத்திருப்பது நன்றாக தெரிகிறது
படத்தொகுப்பாளர் கச்சிதமாக படத்தை தொகுத்து இருக்கிறார் நாயகனின் அலறல் சத்தம் நாயகியின் தவிப்பு என்று மாறி மாறி காட்சிகள் வரும்போது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது அதை கொஞ்சம் தெளிவுபடுத்தி இருக்கலாம்
என்.காளிதாஸ், எஸ் கே தனபால், நம்பியூர் வடிவேல் என மூன்று பேர் படத்தை தொகுத்து இருப்பதால் அந்த குழப்பம் வந்திருக்குமோ
காஸ்டியூம் டிசைனர் கணேஷ் மோனிகாவுக்கு அழகான ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
மற்றும் இப்படத்தின் பணி புரிந்த டெக்னிஷுயன்கள்
Stills: Ginku
Publicity Designer: Siva 3D
Sound Mixer: C Jerom
VFX: Siva-Red fox
DI: MS Manokumar, Karthi
Equipment of filmography: SVK Studios-Salem
Production Controller: Sivakumar
Associate Director: Monica Selena, Ilaya Saravanan
Making Video Edit : MS Mano Kumar
Casting: Murugan Dheena
Composed by EJ Johnson
Vocals – Monica Selena, EJ Johnson
தயாரிப்பு இயக்கம்
இந்த படத்தை தயாரித்து இயக்கி இருப்பது சதா நாடார்& மோனிகா செலேனா. இருவரும் தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான படப்பை தந்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
நல்ல கதையை தேர்வு செய்து அதற்காக இருவரும் உழைத்து கடுமையான முயற்சி செய்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் இவர்களது ஆரம்பம் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தாலும் பின்னால் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது கணவனுக்கு துணையாக மனைவியும் மனைவிக்கு துணையாக கணவரும் சேர்ந்து ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்கி நடித்திருப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு. இவர்கள் இன்னும் நிறைய படங்களை தயாரித்து இயக்க நடிக்க வேண்டும் என்பது நமது ஆசை.
மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்
இவர் சிறிய படம் பெரிய படம் எதுவாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் திறமையானவர் இந்த படத்தையும் மக்களிடம் வெகுவாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு நமது வாழ்த்துக்கள்
படத்தை வெளியிட உள்ள ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ்
சிறிய படங்களில் இன்றைய காலகட்டத்தில் தியேட்டர் கொண்டு போய் சேர்ப்பதில் மிகத் திறமையான இனிமையான சுபாவம் கொண்ட ஜெனிஷ் அவர்கள் இந்த படத்தையும் வெற்றி படமாக வெளியிடுவார் என்பது உறுதி அவருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த ல் த கா சை ஆ தளபதி விஜய் அவர்கள் வசனத்தில் வந்த தலைப்பு ஆகும் இளைஞர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் சதா நாடார் வரும் காலத்தில் தளபதி விஜய் போல வெற்றி பெற வாழ்த்துகிறோம்
குறிப்பு
தமிழ் சினிமா சாதிய வன்மங்களால் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது சினிமாவில் சாதி வேண்டாம் என்பது நமது கருத்து பா. ரஞ்சித் எடுத்த தங்கலான் சாதி பெருமை பேசி என்ன ஆனது? கவுண்டம்பாளையம் படத்தை எடுத்த ரஞ்சித் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார்!
தன்னுடைய சாதி பெருமையை பேசிய இயக்குனர் மோகன் ஜி இப்பொழுது அந்த சாதி பேச்சே வேண்டாம் என்று ஓடி ஒதுங்குகிறார்
எனவே சதா நாடார் வரும் காலத்தில் சாதியை தவிர்த்து நல்ல ஒரு படத்தைக் கொடுத்து அனைத்து தரப்பினரும் போற்ற தக்க படத்தை கொடுத்து மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது🙏
