அலங்கு திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

குணாநிதி காதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அம்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்

.அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா செளமியா தயாரித்திருக்கும் இந்தப் படம் அவருக்கு வெற்றியை தேடி தரும்

*படத்தின் கதைக்களம்

தர்மன், கருப்பு, சிலு வை, மூவரும் நண்பர்கள் காடுகளில் கிடைக்கும்வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்

இதில் தர்மன் டிப்ளமா படித்தவன்

நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நாயை கொள்ளச் சொல்லி ஒருவர் கருப்பு விடம்
அந்த நாயை கொடுக்க அது உயிரோடு இருப்பதைக் கண்டு தர்மன்அதை காப்பாற்றி தன் வீட்டில் வளர்க்கிறார்

காளியம்மா என்று பெயர் சூட்டி கேரளாவில் உள்ள அகழி நகரி மன்ற தலைவராக இருப்பவர்
செம்பியன் வினோத்

அவரிடம் வேலை செய்பவர் பிலிப்ஸ் ரவுடி கட்டப்பஞ்சாயத்து செய்பவர்

அகஸ்தியருக்கு,
மலர் ,என்ற மனைவியும் ஏஞ்சல், என்ற குழந்தையும் இருக்கிறது நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த ஏஞ்சலின் மீது உயிரையே வைத்திருக்கிறார் அகழி நகர மன்ற தலைவர் அகஸ்தியன்

ஒருமுறை ஏஞ்சலுக்கு பர்த்டே கொண்டாடும் பொழுது ஏஞ்சலை,நாய் கடித்து விட ஆஸ்பத்திரியில் சேர்த்து தன் குழந்தையின் உயிரை காப்பாற்றுகிறார் இதனால் அந்த ஊரில் நாயே இருக்க கூடாது என்று 2000 ரூபாய் கொடுத்து எல்லா நாயையும் கொல்லச் சொல்கிறார்
அகஸ்தியன்

பிலிப்ஸ்தன்னுடைய ஆற்றலின் மூலம் எல்லா நாய்களையும் அடைத்து வைத்துக் கொல்கிறார் அப்பொழுது நாயகன் தர்மனின், காளியம்மா என்று நாயும் அங்கு சிக்க நாயகன் அதைக் காப்பாற்ற போராடுகிறான் அதில் ஏற்பட்ட பிலிப்ஸ் மோதலில் கை வெட்டப்படுகிறது அதன் காரணம் தர்மா என்று
பழிவாங்க துடிக்கிறான் பிலிப்ஸ்

இப்பொழுது வேலைக்கு சென்று தர்மா சிக்கலில் மாட்டிக் கொண்டு பிலிப்ஸ் இடம் இருந்து தப்பிக்க ஓடுகிறார் அவருடன் காளிவெங்கட்,
கருப்பு ,சிலுவை

நால்வரும் கேரளாவில் இருந்து தமிழகத்தை நோக்கி ஓடி வருகிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பது மீதி கதை

: நாயகன் (குணாநிதி)

: புதுமுகம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார் அம்மாவுக்கு ஆபத்து என்றவுடன் வெகுண்டு எழுந்து எதிரிகளை வெளுத்து எடுப்பது

தான் உயிராய் நேசிக்கும் காளியம்மா என்ற நாயின் உயிரை காப்பாற்ற எதிரிகளின் மோதுவது
அநியாயம் கண்டு பொங்கி எழுவது என்று முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் குணாநிதி

: *தங்கம் (ஸ்ரீ ரேஷ்மா)

: நாயகனின் அம்மாவாக தங்கம் என்றகதாபாத்தில் மிரட்டி இருக்கிறார் ஸ்ரீ ரேஷ்மா இவர் யாணையிடம் இருந்து தப்பிக்கும் போது நாட்டு வெடிகுண்டு வீசுவது என்று மிரட்டி இருக்கிறார்

தமிழ்ச் சினிமா சற்றுத் தொய்வடையும்போதெல்லாம் ஏதேனும் ஒரு புதிய படைப்பு வெளியாகி திரையுலகத்திற்கு கொஞ்சம் நம்பிக்கையூட்டும். அந்த வரிசையில் வந்திருப்பது இந்த அலங்கு

இந்த மண்ணில் இன்னமும் சுரண்டியெடுக்கப்பட வேண்டிய கதைகளும், கதைக்களங்களும் நிறையவே உள்ளன என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது இத்திரைப்படம்.

கதாபாத்திரங்கள் மட்டுமின்றி லொகேஷனே மற்றொரு கதாபாத்திரமாக உலா வந்திருப்பதும் இத்திரைப்படத்தில்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்திருக்கும்
ஆணை கட்டி
அகழி
குமுழி
பகுதிகளில் யானைகள் மிகுந்திருக்கின்றன. இந்தப் பகுதிகளில் பயணிக்கும் ஒருவர் யானையைப் பார்க்காமல் பயணத்தை முடிக்க முடியாது. யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் நடமாடும் இந்தப் வனப்பகுதிகளில் ஓநாய், பாம்பு, உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகம் வசிக்கின்றன.
இவைகளை இடைவேளைக்குப் பிறகு நாயகனும் காளி வெங்கட்டும், மற்ற இருவரும் தப்பிக்கும் போது, காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் இயக்குனர்

விலங்கு-மனித எதிர்கொள்ளல் மனிதர்கள், விலங்குகள் என இரு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
காளியம்மா எனும் நாயும் தர்மனின் பாசமும்.

முடிவில் என்ன ஆகப்போகிறது என்பதை ஊகிக்க முடிந்தாலும் ஊகிக்க முடியாத இன்னொரு விசயமும் இதில் உள்ளது.

கதாநாயகன் குனா நிதி பொருத்தமான தேர்வு. நாய் காளியம்மா
இருவருக்குமே இந்தக் கதாப்பாத்திரங்கள் கச்சிதமாகப் பொருந்துகிறது.

!

முதலில் கொஞ்ச நேரம் படத்தில் எந்த வித சுவாராசியமும் திருப்பமும் இல்லாமல் அமைதியாகச் செல்கிறது.

கேரளாவில் பிலிப்சிடமிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பரபரப்பாக இருக்கிறது. தப்பியோடியவர்களை பிடித்துசெல்ல வில்லன் சாக்கோ துரத்தும் போது விறுவிறுப்ப
.

காளி வெங்கட்

ஒரு திறமையான நடிகர் திறமையானவர்கள் சரியான வாய்ப்பு கிடைத்தால் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு
காளி வெங்கட் சிறந்த உதாரணம்.

முழுப்படத்தின் காமெடி பொறுப்பையும் தானே ஏற்று (உடன் குணச்சித்திர நடிகராகவும்) அசத்தி இருக்கிறார்கள். நிஜமாகவே கலக்கி இருக்கிறார்கள் கருப்பு, சிலுவையும்

தர்மன் பொறுமை இழந்து கோபப்படும் பொழுது அவருக்கு, அனுபவசாலியாக அறிவுரை கூறி அமைதிப்படுத்துவதில் ஒரு பொறுப்பான அனுபவமான அம்மா வாகக ஸ்ரீ ரேகா மிளிர்கிறார்

மலையாள நடிகர் செம்பியனை முதலில் எப்படியோ நினைத்துப் பின் எப்படியோ வந்து பின் வேறு மாதிரி காட்டி இயக்குனர் கலக்கி இருக்கிறார்.

டெர்ரர் நடிப்பு பிலிப்ஸ் ,அண்ட் சாக்கோ, கதாபாத்திரம் யப்பா! நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள

குறிப்பிடத்தக்க இன்னொரு கதாப்பாத்திரம் காவல் துறை அதிகாரிகள் கொஞ்ச காட்சிகளே வந்தாலும் மிரட்டி இருக்கிறார்கள்.

பல காட்சிகள் வரும் முன்பே ஊகிக்க முடிகிறதாக இருக்கிறது என்றாலும் அதை நாம் எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலைமைக்குப் படத்தின் திரைக்கதை அமைந்து இருப்பதே இதன் வெற்றிக்குச் சாட்சி

இந்தப்படத்தில் அருமையாக மென்மையாகப் பாடல்களைத் தந்துள்ளார்.
இசையமைப்பாளர்

ஒளிப்பதிவு பாண்டி குமார்

கேமராவை என்னவென்று சொல்வது! அவ்வளவு அருமை மொத்த இயற்கையையும் கெடுக்காமல் அழகாகக் காண்பித்துள்ளார்.

வெயிலில் படம் பார்த்தால் கூடக் குளிரும் போல! அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக உள்ளது.

நம்ம ஊரில் இப்படியொரு இயற்கையான இடமா! என்று நம்மை வியக்க வைக்கிறது. நிஜமாகவே ஒரு நேஷனல் ஜியாகரபிக் சேனலைப் பார்த்தது போல இருந்தது.

எந்த இடத்திலும் தற்போதைய நாகரீகத்தை காட்டி விடாமல் எளிமையினூடே நம்மைப் பயணிக்க வைத்து இருக்கிறார்.

படம் முழுவதும் குளிர்ச்சி, இயற்கை தான். இந்த மாதிரி லோகேசனில் படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.

கேமரா இயக்குனருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

படம் முழுவதும் சீரியஸ் மற்றும் நகைச்சுவை இணைந்தே வருகிறது.

ரொம்ப சீரியஸ் ஆன காட்சிகளின் முடிவில் கூட அதை அப்படியே கொண்டு செல்லாமல் நகைச்சுவையைக் கொண்டு வந்து பேலன்ஸ் செய்துள்ளார்கள்.

இயல்பான படங்களை ரசிப்பவர்கள் தவிர்க்கக் கூடாத படம் “அலங்கு”. இயக்குநர் சக்திவேல் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தயாரிப்பாளர்கள் சபரீஷ் அண்ட் சங்கமித்ரா
சௌமியா

ஒளிப்பதிவு பாண்டிய குமார்

இசை அஜேஷ்

படத்தொகுப்பு சான் லோகேஷ்

சண்டை பயிற்சி தினேஷ் காசி

,
: மக்கள் தொடர்பாளர் குமரேசன்

உறுமீன், பயணிகள் கவனிக்கவும் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ள
அலங்கு
பார்க்க வேண்டிய படம் நிச்சயமாக வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்

.குணாநிதிக்கு வாழ்த்துக்கள்