*35 சின்ன விஷயமில்லை திரை விமர்சனம்

ரேட்டிங் 4/ 5

கதை களம்

நடிகை நிவேதா தாமஸ் (சரஸ்வதி)
அவரது கணவர் பிரசாத் இருவரும் அன்பான கணவன் மனைவி அவர்களுக்கு வருண அருண் என்று இரண்டு குழந்தைகள்

மூத்தவரான அருணுக்கு மேக்ஸ் என்பது பாகற்காய் போல கசப்பான விஷயம்

அருண் படிக்கும் பள்ளியில் 100 மார்க் எடுக்கும் பவன் நண்பராக பவன் கிடைக்க இருவரும் நட்பாக இருக்கிறார்கள்

அந்தப் பள்ளிக்கு மேட்ச் டீச்சராக இருக்கும் வர்மா என்னும் சாணக்கியர் அருணை கண்டாலே ஜீரோ மார்க் என்று கிண்டலும் கேளியும் செய்து அவமானப்படுத்துகிறார்

அருணுடன் பழக கூடாது என்று பவனை பிரிக்கிறார்
இதனால் மனம் நொந்த அருண் மன உளைச்சலுக்கு ஆளாகிறான்

மேக்ஸ் டீச்சர் வர்மாவுக்கு பல தொந்தரவு கொடுக்கிறார் கண்ணாடியை எடுத்து ஒளித்து வைத்து அவருக்கு கைமுறிவு ஏற்படுகிறது

இதை வர்மாஅருண் அப்பாவிடம் கூற அருண் அப்பா பிரசாத் அருணை டீமோட் செய்ய சொல்கிறார்

இதனால் ஆறாவது படிக்கும் அருண் ஐந்தாவது வகுப்புக்கு தள்ளப்படுகிறார்

இப்படி பல வகைகளும் அருண் அவமானப்படுத்த ஒரு கட்டத்தில் பள்ளியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்

அந்தப் பள்ளியின் பிரின்சிபல் பாக்யராஜ், அவரின் பேத்தி கிரண் மையும் அருணும் நண்பர்களாக பழகுகிறார்கள் கிரன்மை தன் தாத்தா பாக்யராஜ் இடம் சொல்லி அருணை மீண்டும் பள்ளியில் சேர்க்க சொல்கிறார் அப்பொழுது பாக்யராஜ் ஒரு நிபந்தனை விதிக்கிறார் அருண் மீண்டும் மேட்சில் சாதிக்க வேண்டும் என்று

அதற்கு வர்மா அவர் மேட்சில் மேக்சிமம் 35 மார்க் எடுத்து விட்டால் அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கண்டிஷன் போடுகிறார்

இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நிவேதா தாமஸ் கௌதமிஇடம் ஆங்கிலம் பயின்று தன் மகனை படிக்க வைத்தாரா? இல்லையா? என்பதா இந்த படத்தின் கதை

நடிகை நிவேதா தாமஸ்

நடிகை நிவேதா தாமஸ். .
முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்
. ’35 சின்ன விஷயம் இல்ல’ என்ற இப்படத்தினை
தேர்வு செய்து நடித்து இருக்கிறார் அவருடைய நடிப்பு அவருடைய முகபாவனை குழந்தைகள் மீது காட்டும் அன்பு கணவர் மீது காட்டும் அன்பு தன் மகனை எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று முனைப்போடு கௌதமியிடம் சென்று மீண்டும் ஆங்கிலம் கற்றுக் கொண்டு போராடுவது என
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

படம் முழுக்க ராஜாங்கம் செய்திருக்கிறார் நிவேதா தாமஸ்

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் உடன் மற்ற 2 நிறுவனங்களும் இணைந்து தயாரித்து உள்ளனர்

நந்த கிஷோர் ஏமானி இயக்கியுள்ளார்.
அருமையான ஒரு கதையை தேர்வு செய்து எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர்

விஷ்வதேவ்,

நாயகனாக மனைவியிடம் அன்பு குழந்தைகளிடம் கண்டிப்பு என அற்புதமாக நடித்திருக்கிறார்

பிரியதர்ஷி

இவர் வர்மா என்ற கதாபாத்திரத்தில் அருணை வறுத்தெடுக்கும் கதாபாத்திரத்தில் பாஸ் மார்க் வாங்குகிறார்
மற்றும்

புலிகொண்டா

பத்திரிகையாளராக
கௌதமி
பிரின்சிபலாக
பாக்கியராஜ்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நடிகர் ராணா டகுபதி இந்தப் படத்தினை வெளியிட்டுள்ளார்

இப்படத்தில் 6 பாடல்கள் உள்ளன. திறமையான இசையமைப்பாளரான விவேக் சாகர் இசையமைத்துள்ளா
பாடல்கள் அவ்வளவு ரசிக்க வைக்கிறது

: குழந்தைகளை அவர்களின் குடும்பமும் சரி, குறிப்பாக இந்தச் சமூகமும் சரி,
ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர
எவ்வித மனத்தடையும் சங்கடமும் இல்லாமல் இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற செய்தியை இந்தத் திரைப்படம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது.

ஒரு வெகுசன திரைப்படத்தின் அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களைக் கொண்டிருந்தாலும், சொல்ல வந்த செய்தி ஆத்மார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது
இந்தப் படத்தில்
வருண் ,அருண், கிரண்மை, பவன் ,
போன்ற வேடத்தில்
நடித்திருந்த
குழந்தைகள் நடிப்பு அற்புதம்
இந்தப் படத்தின் மையம். “
தோல்வியிலிருந்து வெற்றிக்காக போகும் வழியில் எல்லோரும் ஜீரோவில் இருந்து தான் வருவார்கள்

” என்று அம்மா சொல்லும் உபதேசம்தான் அருண் மனதைத் தலைகீழாக மாற்றும். அருணை மனதார வெறுத்த ஆசிரியர் இறுதிக்காட்சியில் ‘..’ அடிவயிற்றிலிருந்து
அருண் பேரை சொல்லி கூப்பிடுவது

ஆசிரியர் இடம் ஏற்பட்ட இந்த மனமாற்றத்தைப் பார்வையாளர்களுக்கும் கடத்தியதுதான் ‘இந்த’ படத்தின்
சிறப்பம்சம்

அடுக்கடுக்கான காட்சிகளால் பள்ளி பருவத்துக்கு மீண்டும் ஒருமுறை நம்மையும் அழைத்துச் செல்கிறார் இயக்குனர்

நிவேதிதா தாமஸ் காட்டும் பாசிட்டிவிட்டி படம் முழுக்க விரிந்து கிடக்கிறது. அருணின் தாய் ஆகவும் நல்ல மனைவியாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்

நேர்மறை சிந்தனைகளால், படம் பார்ப்பவர்களிடம் அத்தனை நெருக்கமாகச் சென்றடைகிறார்கள்

புருவத்தை வைத்தே பல கதைகள் சொல்லும் நிவேதா..
மற்றும் நாயகன் இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகள் ஹைக்கூ கவிதை. படத்தில் எல்லோருடைய பாத்திரப் படைப்புமே அருமையாக இருந்தாலும், சாரதா வாக வரும் கௌதமி
சாணக்யா
என்ற வாத்தியாரின் பாத்திரப் படைப்பு மிக அருமை. சண்டை போட்டவரிடமே திரும்பச் சென்று பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்வது, அருணை சமயம் கிடைக்கும் போதெல்லாம் இழிவாக நடத்துவது… என இவரது பாத்திரப் படைப்பு மனதை அள்ளும். ‘ஜீரோ என அவர் திட்டும்போது, நமக்குப் பாடம் எடுத்த வாத்தியாராகவே கண்முன் நிற்கிறார் அவர்.

வீடு முழுவதும்
‘சாம்பிராணி போடுவது’, ” என வட்டார வார்த்தைகளால் வசனம் அமைத்துப் படத்துடன் ஒன்றச் செய்திருப்பார்,
இயக்குனர்
வார்த்தைகளிலும்
கவனம் தேவை என்பதை
அத்தனை ஆழமாக பெற்றோர்கள், ஆசிரியர்களின் செயல்கள் எந்தளவுக்குக் குழந்தைகளைப் பாதிக்கும் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.

இசையில் ‘குட்டி செல்லம் ,கார் மேகம் இரண்டு பாடலும் காதுகளுக்குள் நுழைந்து, நெஞ்சுக்கு விருந்து படைக்கும். இந்தப் படம்

இதில் நடித்த குழந்தை கள் கைகளிலும் தேசிய விருது தவழும் மக்கள் மனதில் அவர்கள் நிஜப் பெயரைவிட அருண், கிரண் மை, பவன், வருண் எனப் பாத்திரப் பெயர்களால் மக்கள் அவர்களை நினைவார்கள்அதுதான், இயக்குநருக்கு வெற்றி .
: படத்தின் வசனங்கள் சிறப்பாக இருக்கிறது

: ஜெயிக்க னும்னா முன்னாள் இருக்கும் சான்ஸ் மட்டும் யூஸ்
பண்ண கூடாது

பின்னால் இருக்கும் ஆபத்தையும் பார்க்கணும்

எல்லா குழந்தைகளுக்கும் அம்மாதான் முதல் ஆசிரியர்

என நிவேதா தாமஸ் பேசும் ஒவ்வொரு வசனங்களும் சூப்பராக இருக்கிறது

மொத்தத்தில் 2024 ஆம் ஆண்டில் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் குழந்தைகளுடன் குடும்பத்துடன் காண வேண்டிய படமாக வந்திருக்கிறது இந்த 35 சின்ன விஷயம் இல்லை