மிக மிக அவசரம்’, ’மாநாடு’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமைந்திருக்கிறது இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது
நல்ல தரமான படத்தை கொடுத்ததற்கு அவருக்கு வாழ்த்துக்கள்
கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா
இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க
: கதை களம்
பல கோடிகளுக்கு, அதிபதியான முருகப்பா சென்ராயர் காரைக்குடியில் மிகப் பிரபலமான தொழில திபர்
முருகப்பா டிராவல்ஸ் போன்ற பிரபலமான கடைகளை நடத்தி வருகிறார்
இந்தியாவில் பல நகரங்களில் இவரது வணிகம் விரிவடைகிறது.
அவருக்கு பணம் கோடி கணக்கில் இருந்தாலும் அவரது மனைவி(தெய்வானை )தீபா தன்னோடு சந்தோஷமாக பேசவில்லை என்ற ஏக்கம் அவருக்குள் இருக்கிறது
தீபாவுக்கு தன் அப்பா 50 வயதில் ஒரு சின்ன வீடு வைத்திருந்தார் என்பதற்காக தன் கணவரும் அப்படித்தான்
இருப்பார்
என்று தன் கணவர் நடுத்தெருவுக்கு வரவேண்டும் என்றும்
அவர் ஏழையானால் தான் நேர்மையாக இருப்பார் தன்னோடு இருப்பார் என்று சாபம் விடுகிறார்.
முருகப்பா, புதிய துணிக்கடை ஒன்றை உருவாக்கி அதில் 300 பெண்களுக்கு வேலை கொடுக்கிறார் அந்த துணிக்கடையில் வேலை செய்பவர்தான் “வள்ளி மயில் “இவர் மீது தீபா சந்தேகப்பட்டு திட்டி விட அழுது புலம்புகிறார்
தம்பி ராமையா நீ வேலைக்கு வர வேண்டாம் உனக்கு மாதம் 15 ஆயிரம் வீட்டுக்கு வரும் என்று சொல்ல வள்ளி மயில் தம்பி ராமையா மீது ஆசை கொள்கிறார்.
அடுத்து சிந்தாமணி இவர் தம்பி ராமையா பெண் பித்தன் என்று கணக்கு போட்டு அவர் பாதத்தை கழுவிவிடுவது போல கழுவி விட்டு தன் மகளை தம்பி ராமையாவுடன் பழகச் செய்கிறார் அப்படி வந்தவர்தான் விசாகா
தெய்வானை ,வள்ளி மயில், விசாகா,
இந்த மூன்று பெண்களோடு தமிழ்செல்வி ஐஏஎஸ் (ஐஸ்வர்யா)
இவர் தம்பி ராமையா விடம் 20 கோடி கொண்டு வந்து இந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொடுங்கள் இது மேல் இடத்து உத்தரவு என்று சொல்கிறார்
இதை அடுத்து போலீஸ் அதிகாரியாக இருக்கும் அருள்தாஸ்,
தம்பி ராமையா தன் அலுவலகத்தில் வைத்து அவமானப்படுத்திவிட தம்பி ராமையாவை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்று மனதில் வன்மம் வைத்துக்கொண்டு அலைகிறார் அருள்தாஸ் .
செய்யக்கூடாத தவறை செய்து, போகாத வழியில் பயணம் செய்த தம்பி ராமையா
வாழ்க்கை எப்படி மாறியது?
என்பதை மிகவும் உருக்கத்தோடு சொல்லி இருக்கிறது படம் .
அன்னை மடி என்கிற ஆதரவற்றோருக்கான அன்பாலயம் நடத்தி வரும் சமுத்திரக்கனி, (ஆனந்தன்)
தம்பிராமையாவை எங்கே சந்தித்தார் சமுத்திரக்கனியால் தம்பி ராமையா வாழ்க்கையில் நடந்த மாற்றம் என்ன? என்பதையும்படம் சொல்கிறது
: நரேன் தனது கல்லூரியில் மனிதரில் புனிதர் என்ற பட்டம் கொடுப்பதற்காக தம்பி ராமையாவுக்கு அழைப்பு விடுக்கிறார்
அங்குதான் விசாகா என்று இளம் புயல் தம்பி ராமையா வாழ்க்கையில் சூறாவளியாகி அவர் வாழ்க்கையை சின்ன பிண்ணா வாக்கியது
என்பது விதியின் விளையாட்டு
தெய்வானை,
வள்ளி மயில், சிந்தாமணி, விசாகா ,
தாமரைச்செல்வி ஐஏஎஸ், என
ஐந்து பெண்கள்
முருகப்பா சென்ராயர் வாழ்க்கையில்
விதியின் விளையாட்டாக வந்து சேர்கிறார்கள் இதன் பிறகு கம்பீரமாய் வாழ்ந்த
தம்பி ராமையா
வாழ்க்கை என்ன ஆனது ?அவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்ததற்கும் இந்த ஐந்து பெண்களின் பங்களிப்பு என்ன? அவர் செய்த தவறு என்ன? என்பதை மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா வாழ்த்துக்கள் சார்
ஆல்பர்ட்(கிரிஷ்)
வந்த பிறகு கதையின் போக்கே மாறுகிறது கிருஷ் நடிப்பு நன்றாக இருக்கிறது
அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட இதுவும் நன்றாக இருக்கிறது
தம்பி ராமையா
50 வயது தொழிலதிபர் முருகப்பா சென்றாயராக வாழ்ந்து காட்டி இருக்கிறார்
திறமையானவர்கள் சரியான வாய்ப்பு கிடைத்தால் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு தம்பி ராமையா சிறந்த உதாரணம்.
முழுப்படத்தின் காமெடி பொறுப்பையும் தானே ஏற்று (உடன் குணச்சித்திர நடிகராகவும்) அசத்தி இருக்கிறார். நிஜமாகவே கலக்கி இருக்கிறார்.
முருகப்பா சென்ட்ராயராக வரும்பொழுது நடக்கும் நடை, ஸ்டைல் ,பேசும் உச்சரிப்பு பார்க்கும் பார்வை என்ன தெனாவெட்டு, அதே தம்பி ராமையா எல்லாவற்றையும் இழந்து தட்டு தடுமாறி ஒரு ஊன்று கோளுடன் நடக்கும் போது என்ன நடை, தளர்வான கண்கள், குளறி பேசும் வார்த்தை என இரண்டு வேடங்களிலும் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்
வசனம் அவரே எழுதியிருக்கிறார்”
“மாற்றான் தோட்டத்து மல்லி மணக்கும்
“போன் நம்பர மாத்த மாட்டேன் நண்பரையும் மாற்ற மாட்டேன்
“புள்ளைங்க தப்பு பண்ணிட்டா பெத்தவங்க மன்னிக்கிறது பாசம் பெத்தவங்க தப்பு பண்ணிட்டா புள்ளைங்க மன்னிக்கிறது தியாகம்
போன்ற வசனங்கள் சிறப்பாக இருக்கிறது
இசையும் அவரே அமைத்திருக்கிறார்
ஆண்டவனே என்ற பாடலும்
ஜாதி இல்லை என்ற பாடலும்
இளைஞர்களுக்காக போட்டு இருக்கும் சின்ன முள் பாடலும் ரசிக்க வைக்கிறது
விசாகாவிடம் சபல பட்டு டபுள் மீனிங்கில், பேசும் காட்சிகள்
தீபாவிடம் படுக்கை அறையில் என்னோடு சந்தோசமாக பேசு எனக்கு கெஞ்சுவது,
வள்ளி மயிலுக்கு
பங்களா வாங்கி தந்து குடித்தனம் நடத்துவது
பிறகு எல்லாம் இழந்த பிறகு, சமுத்திரக்கனியின் அன்பாலயத்தில் திரு திருவெனப் பார்த்துக் கொண்டு மனநல குன்றியவராக நடித்திருக்கும் காட்சிகள் ,என சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் தம்பி ராமையா
இப்படி படம் முழுக்க ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது
சமுத்திரக்கனி
: கதையின் முக்கிய
திருப்புமுனையாக வருகிறார் அன்பாலயம் என்ற ஆதரவற்றவர்களுக்கு இல்லம் நடத்தி வரும் சமுத்திரக்கனி இந்த படத்தில் இமயமலை அளவுக்கு உயர்ந்து தன் கதாபாத்திரத்திற்கு சிறப்பு தேடித் தருகிறார் கிளைமாக்ஸ் கட்சியில் தீபா தன் கணவனை மடியில் போட்டுக் கொண்டு அழும் பொழுது சமுத்திரக்கனி நடிப்பு உருக வைத்து விடுகிறது
இயக்குனர்
உமாபதி ராமையா இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஒரு நல்ல படத்தை மக்களுக்கு தேவையான கருத்தை இந்த காலகட்டத்தில் ஆக்சன் அதிரடி டாஸ்மார்க் கடையில் காமெடி என்று போகாமல் குடும்பத்தோடு பார்க்கும் வண்ணம் ஒரு மனிதன் எப்படி வாழ கூடாது என்ற ரத்தக்கண்ணீர் பாணியில் இந்த ராஜா கிளியை கொடுத்திருக்கிறார் சிறப்பு அவருக்கு வாழ்த்துக்கள்
இப்படத்தில் தீபா பிரவீன் குமார்
டேனியல் அன்னி போப் பழகருப்பையா
வெற்றி குமரன் அருள்தாஸ்
ஸ்வேதா
ரேஷ்மா
சுபா ஐஸ்வர்யா
என எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
: தம்பி ராமையா: மகனாக வரும் பிரிவின் குமார்(பழனியப்பன் )நன்றாக நடித்திருக்கிறார்
அவர் இப்படி மாறுவார் என்று யாரும் நம்ப முடியாத அளவுக்கு கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறார்
ஐஸ்வர்யாவுக்கு சவால் விடும் அந்த ஒரு காட்சி போதும் அதன் நடிப்பு அஸத்தி இருக்கிறார்
தம்பி ராமையாவின் மனைவியாக தீபா கடைசி காட்சிகளில் கண்களில் நீரை வர வைக்கிறார்
நரேன் தம்பி ராமையாவின் நண்பராக வந்து அவர் எல்லாவற்றையும் இழந்த பிறகு அவரைக் கண்டு உருகும் காட்சிகள் உருக்கமாக நடித்திருக்கிறார்
அருள்தாஸ் தன்னை அவமதித்த தம்பி ராமையாவை வன்மம் கொண்டு கொலை குற்றவாளியாக சிக்க வைக்கும் காட்சியில் அருள்தாஸ் மிரட்டி இருக்கிறார்
மனைவியை விட்டுக் கொடுத்து நான் என் மனைவிக்கு முன்னாள் கணவராக இருக்கேன் சொல்லும் கொட்டாச்சி
வரும் காட்சிகள் கலகலப்பு
“ஒளிப்பதிவு
கேதர்நாத், கோபிநாத், இருவர் ஒளிப்பதிவு அருமை ரிச் ஆக காட்ட வேண்டிய இடத்தில் செம ரிச் ஆகவும் அதே சமயம் தம்பி ராமையா வாழ்வை இழந்த சமயத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தும் காட்சிகளில் கேமராவின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது
பி. ஜி .எம். சாய் தினேஷ்
சுதர்சன் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
வைரபாலன்,மற்றும் வீரசமர், இருவரும் ஆர்ட் டைரக்டராக எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்திருக்கிறார் செல்வந்தராக இருக்கும் தம்பி ராமையாவின் வீடு, சமுத்திரக்கனியின் அன்பாலயம் ,போன்ற அருமையான செட்டுகளை கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்.
நடனம் பிருந்தா, அண்ட் சாண்டி ,சின்ன முள் என்ற பாடலுக்கு தம்பி ராமையா நடனம ஆடுவது நன்றாக இருக்கிறது அதே சமயம் பிச்சைக்காரராக இருக்கும் பொழுது பசிக்காக நான்கு இளைஞர்கள் நடனமாட சொல்லும் பொழுது நடனத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் தம்பி ராமையா நடன பயிற்சியாளர்கள் பங்கு அங்கு தெரிகிறது
சண்டை பயிற்சியாளர்
சிவா மாஸ்டர்
காஸ்ட்யூம் டிசைனராக
நவ தேவி ராஜ்குமார் பணிபுரிந்து இருக்கிறார் முருகப்பா சென்ட்ராயராக தம்பி ராமையா வரும் காட்சிகளில் ஆடை வடிவமைப்பும் ஒரு பிச்சைக்காரரான பின் ஆடை வடிவமைப்பும் கவனம் பெறுகிறது அதேபோல கதாநாயகிகள் அழகான வடிவமைப்புடன் கூடிய காஸ்டியூம் ,
மற்றும் விசாகா
வரும் காட்சிகளில் இளைஞர்களை கவரும் வண்ண காஸ்டியூம் கொடுத்து இருக்கிறார்கள் சிறப்பாக இருக்கிறது
மக்கள் தொடர்பாக ஜான் அவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மொத்தத்தில் ஒரு
மனிதன் எப்படி வாழ வேண்டும்
எப்படி வாழக்கூடாது என்ற தத்துவத்தை இந்த படத்தின் மூலம் அருமையாக கொடுத்திருக்கிறார்கள்
தம்பி ராமையாவும் உமாபதியும்
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற சொல்லுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதன் அனுபவிக்கும் துன்பத்திற்கு இன்பத்திற்கும் அவன் நடந்து கொள்ளும் விதமும் செயலும் தான் பொறுப்பு என்பதை இந்த படம் உணர்த்துகிறது.
மனிதர்கள் அழிவது மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை,யால் அதிலும் இந்த பெண்ணாசை இருக்கிறதே மனிதர்களை எவ்வளவு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்பதை இந்த ராஜா கிளி படம் உணர்த்துகிறது
ராஜா கிளி மீண்டும் ஒரு ரத்தக்கண்ணீர்
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
படத்தின் வெற்றிக்கு உழைத்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், அனைவருக்கும் வாழ்த்துக்கள்
