. மேக்ஸ் ஒரு அதிரடி-த்ரில்லர் திரை ப்படம்
. மிகப்பெரிய வெற்றி படமாக வந்துள்ளது
கிச்சா சுதீப்
நான் ஈ’, ‘புலி’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் கிச்சா சுதீப், தற்போது ஆக்சன் திரில்லர் படமான ‘மேக்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். கிச்சா சுதீப் இதில் போலீஸ் அதிகாரியாக ஆக்சன் காட்சிகள் அதிரடியாக தெறிக்க விட்டிருக்கிறார்
அவர் பேசும் பஞ்ச் டயலாக்கும் அதிரடி சண்டை காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் கைதட்டி விசில் அடித்துக் கொண்டாடுகிறார்கள்
இயக்குனர்
இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கி இருக்கிறார்
இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
சேலத்தை சேர்ந்தவர் முதல் படத்திலேயே மாபெரும் ஆக்ஷன் அதிரடி படமாக எடுத்து சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லி ரசிகர்களிடம் நன் மதிப்பை வாங்கி இருக்கிறார்
.தயாரிப்பாளர்
வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ளார்.
பல வெற்றி படங்களை கொடுத்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு
அவருக்கு
இந்த படமும் வெற்றி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது
இந்தப் படத்தில் நடித்தவர்கள்
சுதீபா,
மீனாகுமாரி என்று போலீஸ் அதிகாரி
யாக நடித்திருக்கிறார்
வரலட்சுமி
சரத்குமார்,
ரூபா என்ற வேடத்தில் கிரைம் போலீசார் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார்
மற்றும் சுனில், நரேன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் இளவரசு, போலீஸ் அதிகாரியாக ரிட்டையர் ஆகும் தருணத்தில் அவர் எடுக்கும் முடிவு படத்தின் ஒட்டுமொத்த கதையை திசை திருப்புகிறது அவர்நடிப்பு மிக நன்றாக இருக்கிறது.
வம்சி, மிரட்டல் மற்றும் கிங்ஸ் லீ,நடிப்பு நன்றாக இருக்கிறது
படத்தின் கதை களம்
:: இன்ஸ்பெக்டர் அர்ஜுன் (கிச்சா சுதீப்) தனது வேலையை நன்றாகச் செய்ததற்காக இடமாற்றம் செய்ய பட்டு மீண்டும் பணியில் சேருவதற்கு
வருகிறார்
முந்தைய இரவில்,
அமைச்சர்கள்.
மகன்கள் வீரா, மைக்கேல், இருவரும் குடித்துவிட்டு ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் மீது கை வைக்க சுதீப் , அவர்களை அடித்து துவைத்து ஸ்டேஷனுக்கு கொண்டு போகிறார்
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் இருவரையும் பூட்டி வைக்கிறார்
இளவரசு
ஆனால் காவலில் இருந்த அமைச்சர் மகன்கள் இருவரும் மர்மமான முறையில் எழுந்து கிடக்க பரபரப்பான திரைக்கதை விரிகிறது
அவர்கள் எப்படி இறந்தார்கள்?? அவர்களை கொலை செய்தது யார்?
. ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும்,
மந்திரியின் அடியாட்கள்உடன் வரலட்சுமி அவர்களை மீட்பதற்காக காவல் நிலையத்தை முற்றுகையிடு கின்றனர்
அர்ஜுன், மாக்ஸ் என அழைக்கப்படும் அர்ஜுன், தனது காவல் நிலைய அதிகாரிகளை தனது பாதுகாக்க யுத்தம் செய்கிறார்
அந்த யுத்தத்தில் அமைச்சர்களின் கூலி ஆட்கள் சுனில், வம்சி, இவர்களுடன் எப்படி மோதி ஜெயிக்கிறார்.
என்பதை ஒரு இரவுக்குள் சொல்லும் கதைதான்
“மேக்ஸ் ‘”
படகுழு ஒரு அனல் சூடான உணவை சமைத்துள்ளனர், அது ரசிகர்களை திருப்திபடுத்தும்.
இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை நடக்கும் ஒரு இரவில் நடக்கும் கதை. கதையில் எத்தனை சதிப் புள்ளிகள் சிக்கியுள்ளன,
எப்படி அந்த சதி வலையை மேக்ஸ் முறியடிக்கிறார் என்பது சுவாரசியமான பகுதி
இடைவேளைக்கு முன்பு அந்த பத்து நிமிடம் எதிரிகளை வெல்ல சுதி போடும் திட்டம் செம பரபரப்பு
.
மேக்ஸில் கிச்சா சுதீப்பிற்கு, காதல் இல்லை, அதற்கான காரணம்
ஆக்சன் காட்சிகள் பரபரப்பாக இருப்பதால் காதல் இந்த படத்திற்கு தேவையில்லை என்ற முடிவு சரிதான்
இசை
அஜனீஷ் லோக்நாத் படத்திற்கான
பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்
தீம் மியூசிக் நன்றாக இருக்கிறது
திரை கதை
அதிகாரம் மிக்க ஒரு போலீஸ் மேக்ஸ் தனது ஸ்டேஷனில் இரண்டு இறந்த உடல்களைக்
மறைக்க தனது குழுவை பாதுகாக்க முடிவு செய்கிறார் என்பதையும், அவர்களைக் காப்பாற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வதையும் பற்றிய திரை க்கதை இது.
ஆக்சன் படங்களுக்கு உண்டான கதையில்
திரைக்கதை மேஜிக் செய்திருக்கிறது எந்த இடத்திலும் படம் ஸ்லோவாக இல்லாமல் பரபரவென விறுவிறுப்பாக கொண்டு சென்றது திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி
இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும்,
படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது தெரிகிறது
அட்டகாசமான வில்லன்கள் மற்றும்
சண்டைக் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
படத்தொகுப்பாளர் படத்தை கச்சிதமாக செதுக்கியிருக்கிறார்
ஆர்ட் டைரக்டர் பணி போலீஸ் ஸ்டேஷனை வடிவமைத்த விதம் மற்றும் காளி நடனத்தின் போது.
அமைக்கப்பட்ட செட் ஒர்க் எல்லாமே அருமையாக இருக்கிறது
படத்தில் சில நல்ல நடிகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர், ,
அவர்கள் நடிப்பு பாராட்ட வைக்கிறது
மற்றும்
இதில் , சம்யுக்தா ஹார்னாட், சுனில், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுக்ருதா வாக்லே வம்சி என எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
: மக்கள் தொடர்பாளர்
ரியாஸ் கே. அகமது அவர்கள்
: சேகர் சந்த்ராவின் ஒளிப்பதிவு,
கணேஷ் பாபுவின் படத்தொகுப்பும்,
பெருமாள் செல்வனின் ஆடை வடிவமைப்பும்,
: நெல்லை சண்முகத்தின் ஒப்பனையும், படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது
மொத்தத்தில் இந்த மேக்ஸ் “சொல்லி அடித்த கில்லி”
பல வெற்றி படங்களை கொடுத்த தாணு அவர்கள் திட்டமிட்டு சரியான ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் வசூல்மழை பொழியும் 2024 ல் வெளிவந்த படங்களில் அதிரடி ஆக்சன் வெற்றி படமாக இந்த படம் அமையும்
