தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
(03.01.2025) நேற்று,
தென்சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,
சுதந்திரப் போராட்ட மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் திரு என்.ஆனந்த் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!
நிகழ்ச்சியில் தென் சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி திரு.K.V.தாமு அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகி திரு.ECR.P.சரவணன், தென்சென்னை தெற்கு மாவட்ட அணி நிர்வாகிகள் திரு.D.திருமலை, திரு.R.உதயா, திரு.M.பிரசாந்த் மற்றும் கழகத் தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.




