2017-ம் ஆண்டு வெளியான ‘பிரம்மா.காம்’ படத்தை இயக்கிய விஜயகுமாரன் இயக்கி உள்ள படம் ‘க்ராணி’
இப்படம் ஹாரர், திரில்லர் பாணியில் மிரட்டி இருக்கிறது. இப்படத்தில் நடிப்புக்கு அரசிவடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒச்சாயி கிழவியாக மிரட்டி இருக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் படம் பார்ப்பவர்களை உறையச்செய்யும் என்பது உறுதி.
மேலும் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் குழந்தைகள் Master Ghanshyam, Baby Sandrea ஆகியோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு சீ.டா. பாண்டியன் இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது குழந்தையை தூங்க வைக்க பாடும் அந்த பெண் ஒச்சாயி கிழவி வருவா, நெஞ்சு கரி கேட்பா என்ற பாடல் அதிர வைக்கிறது
ஹாரர் திரில்லராக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை விஜயா மேரி யுனிவர்சல் மீடியா’ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா மேரி தயாரித்து உள்ளார்.
கதை களம்
தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் பார்டரில் உள்ள கிராமம் வேட்டை குறிச்சி கிராமம் .
200 வருடங்களுக்கு முன்பு பழமையான அந்த கிராமத்திற்கு தன் மூதாதையர்கள் வீடாக நினைத்து தங்க வருகிறார்கள் ரேவதியும் ,அவரது கணவர் விஷ்ணுவும், மற்றும் அவரது இரண்டு ட்வின்ஸ் குழந்தைகளும்.
அந்த ஊரில் 120 வருடங்களுக்கு முன்பு ஒச்சாயி, பிரதாபன் என்ற அழகான தம்பதியர் வாழ்ந்து வருகிறார்கள்.
பிரதாபன் என்றும் இளமையாக இருக்க வெளி மாநிலங்களில் சென்று அகோரிகளுடன் சேர்ந்து, கபாலிகா, இன்று அபூர்வ மூலிகையை சாப்பிட்டு,தன் இளமையை புதுப்பித்து வருகிறார் ,அந்த மச்சி வீடு கிராமத்துக்கு வரும் பிரதாபன் தன் மனைவி வடிவுக்கரசி முதுமை அடைந்திருப்பதை கண்டு ,அவரை இளமையாக மாற்ற மூன்று குழந்தைகளின் நெஞ்சுக்கறி எடுத்து சாப்பிட்டால் இளமையாக மாறிவிடலாம் இன்று சொல்லி, தன் மகன் மருமகள் எல்லோரையும் சாகடித்து விட்டு, தனது பேரன்கள் மூன்று பேர் நெஞ்சுகறியை சாப்பிட திட்ட மிட ஊர் மக்கள் அவர்களை காப்பாற்றுகிறார்கள்
அதன் பிறகு வடிவக்கரசி இளமையாக மாறினாரா? அவருடைய கணவர் பிரதாபனின் நிலைமை என்னவானது?
திலீபனும் ,சிங்கம் புலியும் ,ஒச்சாயி கிழவியிடம் இருந்து அந்த வாய் பேச முடியாத குழந்தைகளை காப்பாற்றினார்களா லண்டனில் இருந்து வந்த ரேவதியும், விஷ்ணுவும், ஒச்சாயி கிழவியிடம்இருந்து தப்பித்தார்களா?
ஒச்சாயி கிழவி தன்னுடைய இளமையை அனுபவிக்க குழந்தைகளை பலி கொடுத்தாரா? இல்லையா என்பது போன்ற விறுவிறுப்பான கிரைம் திரில்லர் கதையாக,சொல்லி இருக்கிறார் இயக்குனர்
தமிழ் சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் கிரைம் த்ரில்லர் படங்களை தேட ஆரம்பித்து விட்டார்கள். இங்கே அப்படிப்பட்ட சினிமாக்கள் எடுப்பது பெரிய சவால். அது பார்வையாளனுக்கும் பிடித்திருக்க வேண்டும்,
தயாரிப்பாளருக்கும் லாபம் கிடைக்க வேண்டும். ஆனால் ‘கமர்ஷியல்’ என்ற வட்டத்தில் சுற்றும் இந்த சினிமாக்காரர்களுக்கு இது ரொம்பவே கஷ்டமான விஷயம். ஆனால் அதையும் மீறி சிலர் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்அப்படிப் பட்ட ஒருவர் தான இப்படத்தின் இயக்குநர் விஜய குமரன்.
படத்தின் சிறப்பு அம்சங்கள்
வேட்டை குறிச்சி வில்லேஜ் என்ற இடத்தில் காட்டில்மர்மமான முறையில் ஒரு குழந்தை இறந்து போகிறது. ஆரம்பக் காட்சியை அள்ளு விடுகிறது.
அதை விசாரிக்க வரும் திலீபன், சிங்கம் புலி அங்கு நிகழும் மர்மத்தை பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்க ஆலைக் கடிக்கும் மூலிகை செடி, ஒச்சாயி பற்றிய அதிர்ச்சி செய்திகள் திடுக்கிட வைக்கிறது.
‘கஜராஜ் அந்த வில்லேஜில் என்ன தான் நடக்கிறது?
இன்று நாயகனிடம் சொல்லும் பொழுது நாயகன் காட்டும் வளர்ச்சியும் கஜராஜா ஒரு ஜாதி வெறியன் என்று அவரை ஒதுக்கும் காட்சி திரைக்கதைக்கு கிடைத்தவெற்றி.
அங்கு காணாமல் போகும் குழந்தைகள் என்னவாகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு, மிக நேர்த்தியான திரைக்கதையினால் பதில் சொல்லியிருப்பது ‘க்ராணிக் படத்தின் சிறப்பு.
படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு பெண் குழந்தை இறந்து போகும் காட்சியிலிருந்து வேகமெடுக்கிறது திரைக்கதை. ஒவ்வொரு காட்சியிலும் ஹாலிவுட் தரத்தில் எடுத்திருப்பது மிகவும் அருமை.
அடுத்து என்ன நடக்கும் என்பதை திரில்லர் ஊட்டும் வகையில் எடுத்திருப்பது சிறப்பு.
படத்தில் எந்த ஒரு காட்சியுமே கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் எடுத்திருப்பது Simply Super.
ஒரு சில வன்முறை காட்சிகளில் சத்தமே இல்லாமல் பார்வையாளனிடம் பயத்தை கொண்டு வந்திருப்பது அபாரம். உதாரணம்: ‘ஒச்சாயி விஷ்ணுவையும், ரேவதியையும் அடித்து கொலை செய்யும் காட்சி.
திகில் ஊட்டும்.
அதே போல இறக்கும் கணவனுக்கு ஆபத்து என்பதை
ஒச்சாயி புலம்புவதும் வாய் பேச முடியாத இரண்டு குழந்தைகளை பிடிக்க காய் நகர்த்தும் உணர்த்தும் அந்த ஒரு காட்சியே, டைரக்டரை பாராட்ட
வேண்டும்.
கணவன் பிரதாபனை மரத்தில் கட்டி வைத்து உயிரோடு எடுக்கும் பொழுது பம்பை மேல சத்தம் கேட்டு ஒச்சாயி நடுங்குவது .
குழந்தைகளை கொலை செய்ய வரும் காட்சியில், கேமராவையே வெறித்துபார்த்து ஒச்சாயிதுரத்தும் காட்சி,
திலீபனும் சிங்கம் புலியும் தப்பிக்கும் தப்பிக்கும் காட்சி,
ஒச்சாயி வழி மறுத்துத் தாக்கும் காட்சி.
இப்படி வடிவுக்கரசி தனது பண்பட்ட நடிப்பால் படம் முழுக்க மிரட்டி இருக்கிறார் அவருக்கு ஒப்பனை போட்டவர் பாராட்டத்தக்கவர்
🎥 Crew
Production Company: Vijay Mary Universal Media
Producer: T. Vijayamary
Distribution Company: Hari Uthara Productions
Music Audio Company: Kalaippuli International Audio
. மணிகண்டன் கேமரா பலமாக உழைத்திருக்கிறது. படத்திற்கு பின்னணி இசை, பாடல்கள் என்று கலக்கியிருக்கிறார்
செல்லையா பாண்டியன்
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்,
விஜயகுமரன்
எம் எஸ் கோபியின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
படத்திற்கு பாடல்களும் வசனமும் எழுதி இருக்கிறார் கு. கார்த்தி.
மக்கள் தொடர்பாளர் சதீஷ் & சிவா
மொத்தத்தில் திகில் பட ரசிகர்களுக்கு செம்மையான விருந்து” க்ரானிக்” இது ஒரு ஒரு ஹாரர் பயணம் அழிவில்லாத ஆபத்து’ . ஹாரர் ஃபேண்டஸி திரைப்படம்
க்ராணி. படத்தில்… ஒரு மூத்த பாட்டியாக இரண்டு குழந்தைகளைச் சுற்றி நடக்கும் ஃபேண்டஸி கூறுகளுடன் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
ஒச்சாயி கிழவியாக குழந்தைகளை தேடி அவர்கள் நெஞ்சுக்கறியை சாப்பிட்டால் இளமையாக மாறலாம் என்ற பேராசையின் உருவமாக அந்த வீட்டுக்குள் வந்து இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட துடிக்கும் பேராபத்துமிக்க அதிர்ச்சி தரும் நடிப்பை வெளிப்படுத்தி இந்த ஆண்டின் சிறந்த நடிகை என்ற பெயரை தட்டிச் சென்றுள்ளார் வடிவுக்கரசி
வாழ்த்துக்கள் மேம் 🙏
