அறிமுக இயக்குனர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில், அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லாக்டவுன்’ ,சமூகப் பொறுப்புடன் கூடிய உணர்வுப்பூர்வமான படமாக வந்துள்ளது.
கதை களம்
கரோனா பெருந்தொற்று காலத்தின் அவலங்கள், மன அழுத்தம் மற்றும் குடும்பச் சூழலை யதார்த்தமாக சித்தரிக்கும் இப்படம், திரைக்கதையைக் கொண்டிருந்தாலும், அனுபமா வலுவான நடிப்பால் கவனிக்க வைக்கிறது
அனுபமாவின் நடிப்பு: விரக்தி மற்றும் மீள்தன்மைக்கு இடையே தவிக்கும் பெண்ணாக, அனுபமா பரமேஸ்வரன் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவிக்கும் அனிதா கதாபாத்திரம் அவருக்கு என்றே எழுதப்பட்டது போலிருக்கிறது.
இரவு வேலையை மறுக்கும் சார்லி அப்பாவுக்கு பயந்து கொண்டு வேலை தேடும் அனுபமா, ஒரு வேலைக்காக செல்லும் இடத்தில் தன்னை இழக்கிறார்.
அதன் பிறகு, தன்னுடைய தோழி சொப்னாவுடன், சேர்ந்து வயிற்றில் இருக்கும் அந்த குழந்தையை கலைக்க போராடும் காட்சிகள் நெகிழ வைக்கிறது .
ஜீவாவாக வரும் ராஜ்குமார் ஒருதலையாக காதலிக்க அந்த காதலை ஏற்க மறுக்கிறார் அனுபமா.
லிவிங்ஸ்டன் மகள் ராஜு, வேறு ஒருவரை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை விட்டுப் போக லிவிங்ஸ்டன் குடும்பம் நிலை குலைந்து போகிறது. அப்படி தன்னுடைய குடும்பத்துக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்று சார்லியும் ,அவர்கள் மனைவியும் அஞ்சுகிறார்கள்.
சார்லி எதார்த்தமாக நடிப்பில் நம்மை கவருகிறார் .
அவரது மனைவியாக நடித்திருக்கும் நிரோஷா, தன் மகள் ஏதோ தன்னிடம் மறைக்கிறார் என்று அஞ்சுவதும், துடைப்பம் கட்டையால் அனுபமாவை அடிக்கும் பொழுதும் மகள் தூக்கு போட போகிறாள் என்று புலம்புவதும் ,அவர் நடிப்பில் மிளிர்கிறார்.
நிரோஷா வரும் காட்சிகள் பிள்ளையைப் பெற்ற அம்மாக்களுக்கு எவ்வளவு வலி வேதனை என்பதை ஞாபகப்படுத்துகிறார்.
அனிதாவிடம் பேரம் பேசும் அந்த டாக்டர் செய்யும் “வக்ரம்” இன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பது உண்மைதான்.
காமெடி நடிகர் மாறன் “அபாயம் என்ற கதாபாத்திரத்தில் ஓரிரு காட்சிகள் வந்தாலும் கூட கலகலப்பை ஏற்படுத்தி விட்டுப் போகிறார்.
ஜீவா வாக வரும் ராஜ்குமார், மெடிக்கல் ரெப்பாக வந்து, சிறப்பாக நடித்திருக்கிறார்.
தலை முடி வாங்கும் அந்த கதாபாத்திரம் அனுபமா ,தலை சீவும்போதெல்லாம் வந்து சிக்கு சிக்கு என்று பேசி கலகலப்பு ஏற்படுத்துகிறார்.
மெடிக்கல் காரரிடம் பேரிடம் சென்று அனிதாவும், சொப்பனாவும், மாத்திரை கேட்க அவர் இல்லை என்று சொல்ல காலில் விழுந்து கெஞ்சும் போதும், டாக்டரிடம் தன் குழந்தையை கலைத்து விடுங்கள் என்று அனுபமா காலில் விழுந்து கெஞ்சும் பொழுதும், பெண்களின் வலி எப்படிப்பட்டது குடும்பத்திற்காக என்னென்ன தியாகங்களை செய்ய தோன்றுகிறது, என்று பாராட்ட சொல்லும் நடிப்பு.
சமூகத்தில் நிலவும் களங்கம் (stigma), பாலினப் பாகுபாடு மற்றும் மனநலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது
மற்றும்
Priya Venkat, Indhumathi, Shamji, Vinayaga Raj, Vidhu, Sanjivie, Priya Ganesh, Asha என்று
படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் கதை: ஏ.ஆர். ஜீவா நிதானமான திரைக்கதை மூலம் கதையை நகர்த்தியுள்ளார் பிரதீப் ,என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
இன்று சமூகத்தில் நடக்கும் அவலங்களை தைரியமாக சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம். அம்சமான ஒளிப்பதிவு சக்தி வேலுக்கு பாராட்டுக்கள்
பின்னணி இசை, படத்தின் சூழலுக்குப் பொருந்தி, பதற்றத்தை அதிகரிப்பதாக அமைந்துள்ளது
என் ஆர் ரகுநந்தன் இசையில் உருக வைக்கிறார் .
Producer: Subaskaran
Head of Lyca Production: G.K.M. Tamil Kumaran.
சாபு ஜோசப் படத்தொகுப்பு பாளராகவும்,
ஆர்ட் டைரக்டராக ஜெயக்குமாரும் பணி புரிந்திருக்கிறார்கள் கொரோனா காலத்தை கண்முன் நிறுத்துகிறார் ஆர்ட் டைரக்டர்.
நடனப் பயிற்சி ஷெரீப் & ஸ்ரீ கிரிஸ்
Stunts: Om Sivaprakash
Costume Designer: Meenakshi Shreedharan
Costumes: M. Ramakrishnan
Makeup: P.S. Chandru
SFX: Arun M
Sound Mix: T. Udaya Kumar
DI: Pixel Light Studio
Colourist: Ranga
VFX: Lorven Studio
Stills: Chandru
Publicity Designs: Vijay VXM & Shyam V
Trailer Editor – Kalaiarasan M
PRO: Sathish Kumar
Co-Directors: S. Sagayam & C. Subramaniyan
Production Executive: Boopathi
Production Manager:
என இந்த படத்துக்கு நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள் .அனைவருக்கும் இந்த படம் ஒரு வெற்றி படமாக அமைய கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்.
ஒரு தவறு நடந்துவிட்டால், வெளியே செல்லும் பெண் குழந்தைகள் தன் அப்பா, அம்மாவிடம் மனம் விட்டு பேச வேண்டும். எதுவாக இருந்தாலும் அப்பா, அம்மா நமக்கு நன்மைதான் செய்வார்கள் என்பதை உணர வேண்டும் .என்பதை இந்த படம் ஒரு பாடமாக சொல்லி இருக்கிறது .பெண் குழந்தைகளை பெற்ற, அப்பாவுக்கு, அம்மாவுக்கும் தான் தெரியும் அந்த “வலி” என்பதை இயக்குனர் சிறப்பாக சொல்லியிருக்கிறார் வாழ்த்துக்கள்.
