Banner – 888 Production & Celluloid Creaations.
Written & Directed by Madhav Ramadasan
Produced by Sajit Krishnan
Line Producer – Ponnu & Kannan
Distribution – Uthraa Productions (S.Hari
Uthraa)
கதை களம்
போட் மெக்கானிகாக இருப்பவர் மூர்த்தி(சரத்), இவர் போதை மருந்து சப்ளை செய்து ,பல இளைஞர்களின் வாழ்க்கை குட்டிச் சுவராக இருக்க காரணமாக இருக்கிறார். தவறான பாதையில் பணம் சம்பாதித்து வருகிறார்.
இவரைப் பற்றி யூடியூபில் வீடியோ எடுத்து போட்டதற்காக ரிப்போர்ட்டர் நிகில் முருகன் அவர்களை அடித்து ,துவைத்து காரில் இருந்து தள்ளி விடுகிறார் .
நாயகன் இந்திரஜித்,(அருள் )நாயகி தேவிகா,(முகிலா) இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். தேவிகா, மூர்த்தியின் மகள். செல்வந்தரான, மூர்த்தியின் மகளை ஏழை நாயகன் அருள் காதலிக்க, அது மூர்த்திக்கு தெரிய வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, நாயகன் அருளை நடுக்கடலில் போட்டில் கடத்திச் சென்று, அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்கிறார், ஒரு கட்டத்தில் நேவியைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து விசாரணை நடத்த அவர்களையும் சமாளித்து அனுப்பி விடுகிறார் மூர்த்தி. அவர் பிடியிலிருந்து அருள் தப்பிப்பதற்கு பல வகை முயற்சி செய்கிறார். இந்த கட்டத்தில் தான் இறைவன் அருளுக்கு ஒரு உதவியை கொடுக்கிறார்.
சரத்குமார் ,தவறி விழுந்து கால் சிக்கிக் கொண்டு எழ முடியாமல் அவதிப்படுகிறார். கால் வலியோடு போட்டில் இருக்கும் லக்கி, காப்பாற்ற துடிக்கிறது .தப்பி தவறி மேலே வரும் நாயகன் அருளை சரத்குமாரை காப்பாற்றினாரா? இருவருக்கும் நடந்த யுத்தத்தில் யார் ஜெயித்தார்கள்? அல்லது தன்னை சித்திரவதை செய்தவரை பழி வாங்கினாரா? தன் காதலியை கரம் பிடித்தாரா அருள்?என்பதை விறுவிறுப்பும், பரபரப்போடும், சொல்லி இருக்கிறது இந்த ஆழி”
கடலின் மொத்த அழகையும், உள்வாங்கி காட்சி படுத்தி இருக்கிறது இந்த ஆழி” அன்பின் வேதத்தை உரக்க சொல்லி இருக்கிறது இந்த ஆழி” எவ்வளவுதான் பணம் இருந்தாலும் மனித நேயம் தான் மனிதனை காப்பாற்றும் என்று சொல்லி இருக்கிறது இந்த ஆழி” ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்குள் இருப்பது போல ஒளிப்பதிவு படமாக்கப்பட்டு இருக்கிறது. தெளிவான திரைக்கதையில், படம் வேகமாக விறுவிறுப்பாக செல்கிறது.
சரத் குமார்
மூர்த்தி ,என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க கம்பீரமாக வருகிறார். படம் முழுசாக தாங்கி பிடிப்பதும் அவரே, போதை மருந்து கடத்தும் பொழுதும், தன் மகள் மீது பாசத்தை பொழியும் பொழுதும், போட்டுக்குள் ,தன் மகளை காதலித்தவனை அடித்து உதைத்து சித்திரவதை, செய்யும் பொழுதும், சரத்குமார் ஒரு பாசமுள்ள தந்தையாகவே தெரிகிறார். தன்னை காப்பாற்றிய அருளுக்கு நன்றி கடனாக அவர் செய்யும் கிளைமாக்ஸ் காட்சி உருக வைத்து விடுகிறது. சரத்குமார் நடிப்பு கம்பீரம்.
இந்திரஜித் ,அருள் என்ற கல்லூரி மாணவராக துள்ளலாக நடித்திருக்கிறார். அப்பா சார்லி, அம்மா தாமரை, மற்றும் தங்கை இவர்களுடன் பாசமாக வாழும் இவர், காதலியிடம் விலகி விலகிப் போவதும் ,பிறகு காதலிப்பதும், சரத் குமார் இடம் மாட்டிக்கொண்டு சிக்கித் திணறுவதும்,என இவர் நடிப்பு நன்றாக இருக்கிறது. கிளைமாக்சில் இமயமலை அளவுக்கு உயர்ந்து விடுகிறது இவர் கதாபாத்திரம்.
தேவிகா சதீஷ், முகிலா, என்ற கதாபாத்திரத்தில், அப்பாவுக்கு பயந்து காதல் செய்வது, காதலனுடன் உல்லாசமாக சுற்றி திரிவது, ஆரம்பத்தில் ரேப் பாடலில் அசத்துவது, என தேவிகா சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இளமையும் கவர்ச்சியும் இவரிடம் கொட்டி கிடக்கிறது நல்ல நடிப்பு.
வையாபுரி, தாமரைச்செல்வி, இருவரும் நாயகனின் அப்பா, அம்மாவாக, வருகிறார்கள் ஏழ்மையில் வாடும் இவர்கள் கதாபாத்திரம், மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்வதைகண்டு இது தேவையா? என்று கேட்கும் தாமரையிடம் அருள் நான், சம்பாதித்தால் என் செலவை பார்த்துக் கொள்வேன் என்று அம்மாவிடம் சொல்லும் மகன், இப்படி இவர்கள் வரும் காட்சிகள் பாச நெகிழ்ச்சியாக இருக்கிறது.
மற்றும் பிர்லா போஸ் ,ஸ்ரீஜித் ரவி, மைதிலி சத்யராஜ், சர்ஜின் ,ஆகியோர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஓரிரு காட்சிகள் வந்தாலும் அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். லக்கி” ஆக வரும் நாய் நடிப்பு நன்றாக இருக்கிறது.
மாதவ் ராமதாசின் இயக்கம் நன்றாக இருக்கிறது. நடுக்கடலில் இருக்கும் போட்டுக்குள் நடக்கும் யுத்தம். தந்தைக்கு மகளுக்குமான பாசம். அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கிய நாயகன், இவரெல்லாம் இணைத்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் சீரான இயக்கம். தெளிவான திரைக்கதை.
பாடல்கள் நவீன் கண்ணன் மெலடி பாடல்கள் காதுகளுக்கு கேட்பதற்கு பரவசமாக இருக்கிறது. பின்னணி இசை பிரமாதம்.
ஆர்ட் டைரக்டர் பிரதீப் , பணி சிறப்பாக இருக்கிறது.
பின்னணி இசை வில்லியம் பிரான்ஸ் , மிரட்டுகிறது பின்னணி இசை.
அருண், காஸ்ட்மராக பணிபுரிந்து இருக்கிறார் சரத்குமாருக்கு கச்சிதமாக இருக்கிறது நாயகிக்கு மிகவும் இளமையான தோற்றத்தில் கிறிஸ்டின் அமைந்திருக்கிறது. மேக் அப் மனோகர் பணி புரிந்திருக்கிறார்.
பீனிக்ஸ் பிரபு வின் சண்டை பயிற்சி அனல் தெரிக்கிறது. சரத்குமார், நாயகனும் மோதும் காட்சிகள், விறுவிறுப்பான சண்டையாக இருக்கிறது.
தயாரிப்பு நிர்வாகி சபரீஷ் கிருஷ்ணன்
மக்கள் தொடர்பாளர்
நிகில் முருகன் அவர்கள் .படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Distribution – Uthraa Productions (S.Hari
Uthraa)
மொத்தத்தில் இந்த ஆழி”காதலின் ஆழமான அன்பையும் மகள் மீது தந்தை வைத்திருக்கும் பாசத்தையும் சொல்கிறது
இரண்டுக்கும் இடையே மனிதம் தான் ஜெயிக்கிறது என்பதை சொல்கிறது இந்த ஆழி”
வெற்றி பட்டியலில் “🌷ஆழி”
