கதை களம்
இன்று ரியல் எஸ்டேட்டில் மாபியா கும்பல் எப்படி, மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். என்பதை சமூக அக்கறையோடு, கமர்சியல் என்டர்டைன்மென்ட், எமோஷனல் கலந்து சொல்லி இருக்கும் படம் இந்த “போர்த் ஃப்ளோர்”
மும்பையில் இருக்கும் ரணதீரனுக்கு அவரது முன்னாள் காதலி அணு போன் செய்கிறார் .
தான் ஒரு இக்கட்டில் இருக்கிறேன் சென்னை வந்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று, சென்னை வரும் தீரன் தன்னுடைய கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் ஆன ராயல் டவரில் குடியேறுகிறார். அங்கு இன்சார்ஜ் ஆக இருக்கும் கார்த்திக் போர்த் புளோருக்கு மட்டும் யாரையும் அனுப்பாதே!! என்று வாட்ச் மேன் இடம் சொல்லியும், தவறுதலாக சாவி கைமாற, அந்த போர்த் புளோரில் தீரன் தங்குகிறார். அங்கு சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது .
இறந்து போன சில மனிதர்களை சந்திக்கிறார் தீரன். தீபா ,லட்சுமி அம்மாள், காளீஸ்வரன் என்று, ஆனால் அவர்கள் யாரும் உயிரோடு இல்லை. அணு கிருஷ்ணமூர்த்தி என்பவரை பாரு உனக்கு உதவி கிடைக்கும் என்று சொல்கிறார். செங்கல்பட்டு சென்று சந்திக்கும் பொழுது, அங்கு ஒரு விபரீதம் நடக்கிறது. அதன் பிறகு, பல வகையிலும் தீரன் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவர் ஒருவரைசந்திக்கிறார் .அவர் கனவு தான் மனதின் ஆழமான தொகுப்பு என்கிறார்.
அதே குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருக்கும் சுவேதா, தீரனை காதலிக்கிறார். அந்த காதல் நிறைவேறியதா? தீரணின் முன்னாள் மனைவியும் ,மகளும்ஆன, சாராவை தேடி கண்டுபிடித்தாரா? இந்த பின்னணியில் இருப்பது அமானுஷ்யமா? அல்லது மாஃபியா கும்பலின் கை வரிசையா ?மாபியா கும்பல் என்றால் இதை நடத்துபவர் வெளிநாட்டுக்காரரா? இந்தியரா? என்பதை கண்டுபிடிக்கிறார். இறுதியில் தர்மம் அதர்மம் இரண்டுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை களம். காட்சிகள் ஒவ்வொன்றும் துல்லியமாக இருந்தது. கதை விறுவிறுப்பாக சென்றது. எதிர்பாராமல் அடுத்து!! என்ன நடக்கும்? என்பதை இயக்குனர் திரைக்கதையில் சொல்லியிருந்தார். காமெடி காட்சிகள் சதீஷ் மூலம் காட்சிப்படுத்தியிருந்தார். ரசிக்கும் படி இருந்தது .சாராவாக நடித்திருக்கும் குழந்தை நன்றாக நடித்திருந்தது.
நாயகி முடிவு பரிதாபத்தை தந்தது.
🎬 (நடிகர்கள்)
ஆரி அர்ஜுனன் – நாயகனாக நடித்து இருக்கிறார்.
தீரன் என்ற கதாபாத்திரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். தன்னுடைய அணுவை பிரிந்து அவர் உருகுவதும், தன் மகள் சாராவை நினைத்து கலங்குவதும், தன்னை காதலிக்கும் ஸ்வேதாவிடம் இருந்து ஒதுங்கி இருப்பதும் ,அந்த மாபெரும் கும்பல் தலைவன் மார்க் என்பதை கண்டுபிடிப்பதாகட்டும், எல்லாமே ரசிக்க வைக்கிறது.சண்டைக் காட்சிகளில், விறுவிறுப்பான சண்டை காட்சி போட்டு இருக்கிறார்
கட்டுமஸ்தான உடற்கட்டு இவருக்கு இந்த படம் இவருக்கு வெற்றியை தேடி தரும் என்பது உறுதி.
தீப்ஷிகா –பவித்ரா
இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் நாயகனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் இருவரும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்.
சுப்ரமணிய சிவா.
வில்லனாக, ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்
பணம் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டும் என்றாலும் சொல்லும் கதாபாத்திரம். அடியாட்களுடன் மிரட்டல் தோனியில் இவர் நடித்திருப்பது வரவேற்பு குறியது.
தலைவாசல் விஜய், கிருஷ்ணமூர்த்தி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் ,படத்தில் இவர் பங்கு நிறைவாகவே இருக்கிறது.
மற்றும் கார்த்திக், குழந்தை நட்சத்திரம், காளீஸ்வரன், என்று நடித்தவர் ,லட்சுமி அம்மாளாக நடித்தவர் ,தீபாவாக நடித்தவர். வாட்ச்மேன் நடிப்பு. நாயகனின் நண்பராக நடித்த அஜய்ஆகவருபவர் இப்படி எல்லோருடைய நடிப்பும் நன்றாக இருக்கிறது.
🎥 (தொழில்நுட்ப குழு)
இயக்குநர்: L R சுந்தரபாண்டி,
சமுதாயத்துக்கு தேவையான ஒரு கதையை கையில் எடுத்து, இன்று ரியல் எஸ்டேட் தொழிலில் நடந்து வரும் மோசடிகளை தோலுரித்து, கமர்சியலாக, காமெடியாக, இரண்டு மணி நேரம் விறுவிறுப்பு குறையாமல் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அமானுஷ்யமா! அல்லது கனவின் பிரதிபலிப்பா? என்று ஒரு புதுமையான கோணத்தில் கதையை சிந்திருப்பது பாராட்டுக்குரியது. இடைவேளை வரை ஆரியை, குழப்பத்திலேயே தள்ளினாலும், இடைவேளைக்கு பிறகு, திரைக்கதையின் வேகம் விஸ்வரூபம் எடுக்கிறது .குழந்தை சாரா, கிடைத்த பிறகு அடுத்து என்ன? நடக்கும் என்ற பதட்டம் ஏற்படுகிறது. இயக்குனர் தனது திறமையான தொழில்நுட்பத்தின் மூலம் காட்சிகளை சிறப்பாக செதுக்கியிருக்கிறார் .ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கிறார்.
தயாரிப்பாளர்: A. ராஜா, நல்ல கதையாக தேர்வு செய்து படம் எடுத்திருக்கிறார். வெற்றி நிச்சயம். ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு தருவார்கள் என்பது உறுதி.
நிர்வாகத் தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் .
லக்ஷ்மனின் ஒளிப்பதிவு
மிகவும் அருமையாக இருக்கிறது.
ராயல் டவர்ஸ் பகுதியை சுற்றியே படமாக்கப்பட்டு இருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சியாகவும், அமானுஷ்யம், கலந்தும் ஆக்சன் காட்சிகளில் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது. வீட்டுக்குள் ஒவ்வொரு இடத்திலும், கேமராவின் கைவண்ணம் தெரிகிறது. ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.
தரண் குமார்
இசையில், மெலோடி பாடல்களும்,பின்னணி இசையும் மிகவும் படத்திற்கு பலமாக இருக்கிறது. அமானுஷ்யமான இடங்களில் காற்றில் மிதந்து வரும் அந்த ஹம்மிங் ராகத்தோடு ,ஒரு பீதியை கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
பாடலாசிரியர்:
கு கார்த்திக் எழுதிய பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.
ராம் சுதர்ஷன்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி
இவர் , தற்போது மறைந்து விட்டாலும், அரங்க அமைப்புகளை சரியாக செய்திருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றிற்கும் மெனக்கெட்டு அரங்கம் அமைத்திருக்கிறார். வீடு, கல்லறை தோட்டம் ,மற்றும் அலுவலகம், எல்லா இடங்களையும் ஆர்டடைரக்டர் ,பணி அற்புதமாக இருக்கிறது.
நடனம்: அபு சால்ஸ்
டேஞ்சர் மணி
அமைத்துள்ள சண்டை காட்சிகள் விறுவிறுப்பை தருகிறது. இன்டர்வெல் பிளாக்கில் வரும், அந்த சண்டை காட்சி செம ஸ்பீடு. அதேபோல கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தி ,பாம் வெடிப்பதற்குள் தப்பித்து விடுவார்களா? நாயகனும், நாயகியும், குழந்தையும், என்ற பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. சண்டை காட்சி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
மக்கள் தொடர்பு: A ராஜா அவர்கள்.
இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள் 🌷
மொத்தத்தில் இந்த படத்தின் வெற்றி சமூக அக்கறையோடு பாடுபடும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி🌷
