மேட் இன் கொரியா(Made In Korea) திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்.

இயக்குநர்: ரா. கார்த்திக் (நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கியவர் வெளியீடு: மார்ச் 12, முதல் 2026 (நெட்பிளிக்ஸ்). காணலாம்

மேட் இன் கொரியா’ . 13 மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்தும் 36 மொழிகளில் சப்டைட்டில் உடனும் நெட்ஃபிலிக்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது. இதுவே இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி!!

பிரியங்கா மோகன் நடிப்பில், தென் கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது

இந்த படத்தில் பிரியங்கா மோகன் (Shenba), பார்க் ஹை-ஜின், நோ ஹோ-ஜின். ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் மற்றும் ரிஷி காந்த் , ஜாங் ஜெஹேயன் நடித்திருக்கிறார்கள்.

கதை களம்

சின்ன கிராமத்துல பெரிய கனவோடு, ஒரு தடவையாவது கொரியாவுக்கு போக வேண்டும் என்ற நினைத்து, அப்துல் கலாம் ஐயா அவர்கள் சொன்னதைப் போல கனவு காணுகிறார் நாம் படத்தின் கதாநாயகி செண்பகம்.

கொரியா சென்றாரா? அவர் கனவு நிறைவேறியதா? என்பதுதான் ஒன் லைன்….
பள்ளி பருவத்தில் கன்னியாகுமரியிலிருந்து, தென்கொரியா சென்ற செம்பவழமாக, ராணி வேடத்தில் நடித்த சென்பகத்திற்கு கொரியா, செல்ல வேண்டும் என்ற ஆசை கனவு .

பள்ளிப் பருவத்தில் தன்னோடு படித்த மணி என்பவனை இளமைக்காலத்தில் காதலிக்க, மணி தன்னுடைய அப்பாவின் கடனை அடைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்க, இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போகிறார்கள்.

ஆனால் நம்பி வந்த காதலியை ஏமாற்றிவிட்டு மணி மும்பைக்கு போய்விட செண்பகத்தை தனியாக கொரியா அனுப்பி வைக்கிறான் காதலன் மணி.பல சவால்களைக் கடந்த சென்பகம் தன் ஊரை, வாழ்க்கையை தாண்டி, ஒருநாள் தென் கொரியாவுக்கு பயணம் செய்ய கொரியாவில் சென்பகம்,சந்தித்த சவால்கள் . ஆனால், அதையும் தாண்டி சென்பகம் எப்படி ஜெயித்தார்? என்பதே கதை களம்

சில நேரங்களில் யாருன்னு தெரியாத அன்பு, நம்மை நெகிழ வைக்கும் அப்படி ஒரு அன்பின் பணியில் செண்பகம் சிக்கிக் கொள்கிறார். தெரியாத ஊரில், என்னை வேலை செய்கிறோம். என்பது முக்கியம் இல்ல நமது பாதுகாப்பு தான் முக்கியம் .அந்த பாதுகாப்பை செண்பகம் உணருகிறார். மொழி தெரியாத ஊரில் அன்பினால் பிறரை கட்டி போட முடியும் என்றால் அது செண்பகத்தால் முடியும். ஒரு இசை குழு. ஒரு பாட்டி. அங்கு ஒரு ரெஸ்டாரன்ட் .அங்கு ஒரு சுண்ட கஞ்சி என்று பெண்களுக்கு தன்னம்பிக்கை மட்டும் தைரியம் ஊட்டும் படமாக வந்திருக்கிறது. தலை நிமிர்ந்து நிற்கிறாள். இந்த சென்பா.

கொண்டாடலாம். பார்த்து மகிழலாம். பரவசப்படலாம். அன்பினால் நம்மை வியப்பில் ஆழ்த்துவாள் செண்பகம்.

பிரியங்கா மோகன்

டான், டாக்டர், எதற்க்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை ரசிக்க வைக்கிறது அவரின், நடிப்பு இயல்பாகவும் எதார்த்தமாகவும் இருந்தது.

செம்பாவின், உணர்வுப்பூர்வமான பயணத்தை தனது திறமையான நடிப்பில் பிரியங்கா மோகன் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் தென் கொரிய நடிகர்களான பார்க் ஹை-ஜின் மற்றும் நோ ஹோ-ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் “”.

இந்த படம் பார்த்துவிட்டு ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை படுவார்கள் அந்த அளவுக்கு காட்சி அமைப்புகள் ரசிக்க வைத்தது. அப்பாவின் பிரிவு, காதலனின் துரோகம், கொரியாவில் கிடைக்கும் நட்பு, அங்கு அவர்களுக்கு செண்பகம் தரும் தன்னம்பிக்கை, என தனி ஒரு பெண்ணாக உலகத்தில் எந்த மூலையில் சென்றாலும் வாழ முடியும் என்று பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தின் மூலம் துணிச்சலாக பெண்ணாக வாழ்ந்து காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குனர்

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் ரா. கார்த்தி, செண்பா என்கிற கதாபாத்திரத்தில் மூலம் செண்பகத்தின் கதையை சொல்கிறார் இயக்குனர் .

கொரிய கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா ,அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். சியோலில் எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவள் கற்பனை செய்ததை விட யதார்த்தம் பல சவால்களை அவள் முன் நிறுத்துகிறது. அதைத்தாண்டி, அவளின் சுயத்தை கண்டுபிடிக்கும் நெகிழ்ச்சியான இந்தப் பயணத்தை அழகாக நட்புடன் எமோஷனல் கலந்து படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். கொரியாவையும், அங்குள்ள ஒரு பாட்டி யைகாட்டிய விதம்.

அங்குள்ள மனிதர்களின் அன்பையும்காட்டிய விதம் பரவசம், திரைக்கதை ,வசனம் அருமை வசனங்கள் சிறப்பாக இருக்கிறது. அதை காட்சிப்படுத்திய விதம் நன்றாக இருக்கிறது எந்த ஒரு மனிதரையும் நெகட்டிவாக காட்டாமல், சூழ்நிலையால் மனிதன் தவறு செய்கிறான் என்பதை இயக்குனர் திரைக்கதை வடிவமைப்பு கொண்டு தந்திருக்கிறார்.

அப்பாவுக்கு மகளுக்குமான, பாசம். கிராமத்தில் யானை குட்டி மீது ஏறி நின்று போஸ் கொடுக்கும் நாயகி. வெள்ளந்தியான கிராமத்து மனிதர்கள். அன்பு மாறாத கொரிய மக்கள். அங்கும் பாசம் காட்டும் இளைஞர்கள் என, உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் ,அன்பு தான் நம்மை ஆளும் என்று இயக்குனர் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் அற்புதமான திரைக்கதை ,அடுத்து என்ன நடக்கும்? என்று ஒரு ட்ராமா கொரியாவில் தனியாக ஒரு பெண் சிக்கிக்கொண்டால் என்ன ஆவாளோ? என்ற பதட்டம், கிரைம் ,திரில்லர், ஆக்சன் என்று போகாமல் அன்பான, மென்மையான,

மெல்லிய உணர்வில் கட்டி போடுகிறார் இயக்குனர். வாழ்த்துக்கள் கார்த்தி சார் 🌷

Music Composer: Hesham Abdul Wahab பாடல்களும், பின்னணி, இசையும் ரசிக்க வைத்தது பரவசப்படுத்தியது.

Cinematography: Prasanna Kumar
இந்தியாவில் உள்ள கடை கிராமத்தையும், செண்பகாவின் ஊரையும், வீட்டையும் காட்டிய விதம், கொரியாவில் வானுயர்ந்த கட்டிடம், மெல்லிய நீரோடை, அங்குள்ள வீதிகளை அங்குள்ள மனிதர்களை, காட்டிய ஒளிப்பதிவாளருக்கு கைகுலுக்கி சபாஷ் போடலாம்.

Editor: Anthony
கச்சிதமாக படத்தை செதுக்கியிருக்கிறார் .படம் அடுத்து என்ன நடக்கும்? செண்பகா கொரியாவில் எப்படி வாழ்க்கை நடத்துவார் ?என்ற விறுவிறுப்பான கதை ,கட்டத்தில் படத் தொகுப்பாளரின் பங்கு கச்சிதமாக இருக்கிறது.

Production Company: Rise East Entertainment
இவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில்
“கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகளை இந்த படம் சொல்கிறது.
மனதுக்கு நெருக்கமான நம்பிக்கையூட்டும் காட்சிகள் .பரவசம் தருகிறது. மொழிகளைத் தாண்டி, உலக கலாச்சாரங்களை இணைக்கும் என்பதை இப்படம் சொல்கிறது. .
கொரிய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவு உலகத்தை ‘மேட் இன் கொரியா’ காட்டும்.
கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது.
பல மொழிகளில் செண்பகம் வெற்றி கொடியை பறக்க விடுவாள் என்பது உறுதி,
அன்பு தான் ஆகச் சிறந்த ஆயுதம் என்பதை சொன்ன இந்த” மேட் இன் கொரியா”வெற்றி பெற வாழ்த்துக்கள்.🌷🌷🌷

மக்கள் தொடர்பாளர்கள்

திரு. சுரேஷ் சந்திரா
திரு. அப்துல் நாசர் அவர்கள்
இந்த படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.