ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைச்சாமி ஏஎம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’.
சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்
போலீஸ் ஃபேமிலி
ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். என்பதை
சஸ்பென்ஸ் ,கிரைம், திரில்லராக தந்துள்ளார். இயக்குநர் பாலு .
நடிகர் &நடிகைகள்
பருத்திவீரன் சரவணன், தனா, என்ற கதாபாத்திரத்தில், தன் மகன் வினோத்தை இழந்து கதறி அழும் போதும் , பழிவாங்க துடிக்கும் பொழுது,டான் தனா வாக, படம் முழுக்க நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .
காதல் சுகுமார், சுரேஷ் எஸ் .ஐ என்கிற கதாபாத்திரத்தில், நடித்துள்ளார் . நடிப்பு நன்றாக இருக்கிறது. முக்கியமான திருப்பத்தில் கதை அவர் மீது திரும்புவது சுவாரசியம் எல்லா பிரச்சினைகளுக்கும் ஆரம்பமாக இருக்கும் அவர் யார் என்று தெரியும் பொழுது அதிர்ச்சி!!
படத்தை தயாரித்து முதன்மை நாயகன் படத்தில் நடித்திருக்கும்,
ராஜா மலைச்சாமி
இரண்டு பெண் குழந்தைகளான அனிதா ,விஜி இவர்கள் மீது அன்பை பொழிந்து ,
அவர்கள் உயிரை காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு இடமாக ஓடி ஒளியும் பொழுது
தவறு செய்து விட்டேன். என்று புலம்பும் இடத்திலும் முதல் மகளை இழந்த பிறகு, இரண்டாவது மகள் அனிதாவை காப்பாற்ற துடிக்கும் போதும் ,மனதில் நிற்கிறார்.
சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்
தன்மகள் தவறான ஒரு இளைஞனை காதலித்து விட்டால் என்று மகளை கண்டிப்பதும் ,அந்த காதலனை சிறையில் வைத்து அடிப்பதும், காதலுக்கு எதிரியாக வழக்கமான அப்பாவாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
வட இந்தியாவை சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இருவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது இடைவேளைக்கு பிறகு அனிதா, என்ற கதாபாத்திரத்தின் மூலம் மிக அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்.
மற்றும் காவல் துறை அதிகாரி களாக சங்கர்,
ஏ.சி கஜேந்திரன் பெருமாள். கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்த “செல்வா”
கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர்கள் எல்லோரும் நல்ல முறையில் நடித்திருக்கிறார்கள்
கதை களம்
மதுரை காவல் நிலையத்தில், சென்னையில் உள்ள ஒரு தாதாவின் மகன் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்படுகிறார். இதனால் கோபமடைந்த தாதா, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது பழிவாங்குகிறார், இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதையாகும்.
இடைவேளை வரை படம் ரெக்கை கட்டி பறக்கிறது தாதாவால் ,போலீஸ் குடும்பம் என்ன ஆகும் ?என்ற பரபரப்பும் ,படம் பார்ப்பவர்களை தொற்றிக் கொள்கிறது. காட்சிக்கு காட்சி செம விறுவிறுப்பு
இடைவேளைக்குப் பிறகு அனிதா என்ற கதாபாத்திரத்தில் மூலம் எமோஷனல் பெண்கள் பாதுகாப்பு, மன்னிக்க வேண்டும் என்ற நல்ல செயல்கள் இதன் மூலம், படம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
அதிகாரவர்க்கம் எனும் ஆக்டோபஸின் ஒவ்வொரு கரத்திலும் சொட்டும் ரத்தத் துளிகளை உண்மைக்கு நெருக்கமாக அல்ல… உண்மையாகவே காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
படம் முடியும்போது திரையரங்கில் பெரும் அமைதி எழுகிறது. `போலீஸ்கிட்ட சிக்கினா அவ்வளவுதான்’ என்ற அச்சம் நம் மனதைக் கவ்வுகிறது. இயக்குனர் நோக்கம், காவல் துறையின் இரக்கமற்ற முகத்தை வெளிக்கொண்டு வருவதே. ஆனால் அதன் விளைவு, போலீஸ் குறித்து பொது மனதில் உறைந்திருக்கும் அச்சத்தை மேலும் உயர்த்துகிறது . உளவியல் விளைவை குறித்து இந்த படம் பேசுகிறது.
சட்டத்தின் இருட்டு மூலைகளில், அரசியல் கட்சிகளும் அதிகாரவர்க்கமும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, என அரசியலின் அத்தனை அழுக்குகளையும் சொல்லி இருக்கிறது இந்த படம்
“சாத்தான்குளம் மற்றும் சமீபத்தில் சிவகங்கை போன்ற இடங்களில் நடந்த லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இது ஒருபக்கம் காவல்துறை மற்றும் அவர்களின் குடும்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் இன்னொரு பக்கம் இந்த லாக்கப் மரணங்கள் எத்தனை குடும்பங்களை பழி வாங்குகிறது என்பதையும், மன்னிக்கும் மனம் கொண்ட ஒருவரால் அதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும் உணர்வுப்பூர்வமான கதை அம்சத்துடன் சொல்லி இருக்கிறது ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இப்படத்தின் படப்பிடிப்பை நான்கு விதமான இடங்களில் வெவ்வேறு விதமான தட்பவெப்ப நிலையில் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர். கொடைக்கானல் போன்ற மலைப்பகுதியிலும் மதுரை போன்ற சமநிலை பரப்பிலும் என வெவ்வேறு விதமான பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி கண்களுக்கு குளிர்ச்சியும் அனிதா தப்பிப்பாரா என்ற ஒரு பதட்டத்தையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஜெயகுமார்.
இயக்குனர் பாலு
பழிவாங்குதல் எப்போதும் தீர்வு ஆகாது என்று; லாக்கப் மரணங்கள் குறித்து மிக விரிவாக பேசி இருக்கிறார் இயக்குனர். அதோடு போலீஸ் குடும்பம் அவர்கள் பின்னணி, அவர்கள் பாசம், இவைகளைப் பற்றியும் அற்புதமாக சொல்லி இருக்கிறார். ஒரு தாதாவாக இருந்தால் அவருக்கு எத்தனை எதிரிகள் இருப்பார்கள் கண்ணுக்கு தெரியாத எதிரிகளால் அவர்கள் வாழ்க்கை என்றாவது ஒருநாள் அழிவை நோக்கி போகும் .என்ற ஆபத்தான விஷயத்தையும் அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் .
காட்சிப்படுத்திய விதம், நடிகர்கள் தேர்வு ,எடுக்கப்பட்ட லொகேஷன் எல்லாமே அருமையாக இருக்கிறது. கிளைமாக்ஸ் முடித்த விதம் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது வாழ்த்துக்கள்.
ஜெயா கே.தாஸின்
இசை, பாடல்கள் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது காட்சிகளுக்கு உயிர் தந்திருக்கிறார் இசை அமைப்பாளர்.
எம்.எஸ் செல்வா வின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. இந்த படத்தின் வெற்றி. இயக்குனர், மற்றும் படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையில் ,கூட்டு முயற்சியில் சிறப்பாக வந்துள்ளது.
சண்டைக்காட்சிகள் ;அமைத்த, டிராகன் ஜிரோஷ் வின் சன்டை மிகவும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் இருந்தது,
பாடல்கள் ; கே.மகாமுனி, சோ.பா மணி, வசந்த் பாடல்கள் ரசிக்கும் வகையில் இருந்தது.
வினோத் தின் ஒப்பனை கச்சிதமாக இருந்தது
தயாரிப்பு நிர்வாகி மதுரை வாசகன்
மற்றும் இந்த படத்தின் வெற்றிக்கு உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்
Di : Cuviyam Studios
Colorist : Prakash
Mixing : G.sivakumar Sonic Siva
Digital Sound Design : Santhosh Narbhavi Isaiyagam
இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்
மக்கள் தொடர்பாளர் A..ஜான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த போலீஸ் ஃபேமிலி அனைத்து பேமிலியையும் கவரும் என்பது உறுதி . படம் வெற்றி அடைய கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது 🌷
