அடியே விமர்சனம்

வித்யாசமான கதை. திரைக்கதைஎழுதிஇயக்கிய இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘அடியே’. இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

இந்த படத்தில் கௌரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார்.

வெங்கட் பிரபு முக்கிய கேரக்டரில் இடம் பெற்றுள்ளார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் அடியே படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை என்ன

தமிழ் சினிமாவில் சமீப காலமாக டைம் டிராவல் படங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டின் டைம் டிராவல் பண்ணும் படமாக வந்துள்ளது ’அடியே’. ஆனாலும் வித்தியாசமாக இருக்கிறது கதை சொன்ன பாணியில் செம புதுமையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர்

பொதுவாக நாம் வாழும் இந்த உலகத்துக்கு இணையான ஒரு கற்பனை உலகம் (parallel universe) ஒன்று உள்ளது. அங்கு நிஜ உலகத்தில் நடக்கும் காட்சிகள், அந்த இணை உலகத்தில் alternative reality என்ற நாம் விரும்பும் காட்சிகளாக மாறும்.
நாம் எப்படி வாழ நினைக்கிறோமோ அது போன்ற வாழ்க்கையில் அந்த கற்பனை வாழ்க்கை கொடுக்கும் இது ஆழ்மன சக்தி என்றும் சொல்வார்கள் ஆழ்மன சக்தியின் வெற்றி நிரூபிக்கப்பட்டு வெற்றி ஆகும் ஆழ் மனதில் விதைக்கப்பட்ட ஒரு எண்ணம் அது நிறைவேறி வெற்றியாக மாறிய சான்றுகள் இங்கு ஏராளம்
மேலைநாடுகளில் இந்த முறைப்படி வெற்றியடைந்து சாதனை புரிந்தவர்கள் நிறைய பேர்

இதை அடிப்படையாக வைத்தே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நிஜ உலகத்தில் கௌரி கிஷனிடம் காதலை தெரிவிக்க முடியாமல் தவித்து, கற்பனை உலகத்தில் அவரை மனைவியாக்கி குடும்பம் நடத்துகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
நினைக்கும் போது சுகமாக இருக்கும் இந்த கற்பனை உலகத்தில் எல்லோருமே பயணிக்கலாம் ஆழ் மனதின் சக்தியோடு

இங்கே வேலை இல்லாமல் இருப்பவர் அங்கே ஆஸ்கர் வென்ற மிகப்பெரிய மியூசிக் டைரக்டர்.
கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உலகத்தின் ஜிவி பிரகாஷ் வாழ்கிறார் சென்னையில் பணி மழை பொழிகிறது சென்னை டிராபிக்கில் அதிசயம் நிகழ்கிறது இங்கு வாழும் மனிதர்கள் எல்லாருமும் வேறொரு நிகழ்வில் இருக்கிறார்கள் என்று அற்புதமான கற்பனையை வைத்திருக்கிறார் இயக்குனர்

இப்படி நிஜ உலகம், கற்பனை உலகம் என மாறி மாறி டிராவல் செய்யும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஒரு கட்டத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை புரிகிறது.
இடைவேளை வரை ஜிவி பிரகாஷ் போலவே நாமும் என்ன நடக்கிறது என்று அதை அறிய ஆவலாய் இருக்கிறோம் அதுவே திரைக்கதை க்கு கிடைத்த வெற்றி

படத்தின் டிவிஸட்டாக
நிஜ உலகில் ஜி.வி.பிரகாஷின் நண்பர் கௌரி கிஷனை திருமணம் செய்ய முயல்கிறார். இதனை தடுத்து கௌரி கிஷனிடம் எந்த உலகத்தில் வைத்து, எப்படி ஜி.வி.பிரகாஷ் தன் காதலை சொன்னார்? என்பதே அடியே படத்தின் கதையாகும்.
கதை முழுக்க முழுக்க ஜிவி பிரகாஷ் கௌரி கிஷன் இதுவரை சுற்றி நடப்பதால் வேறு கதாபாத்திரங்களுக்கு அதிக வேலை இல்லை வெங்கட் பிரபு அடிக்கடி உங்க தலையை காட்டுகிறார் நண்பன் மைக்கேல் நல்லவனா கெட்டவனா என்று புரியாத திரைக்கு எது எப்போது நடக்கிறது என்ன நடக்கிறது என்பதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லி இருக்க வேண்டும் இடைவேளை வரை சீராக செல்லும் கதை இடைவேளைக்கு பிறகு மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது இருந்தாலும் சுபம் என்ற வார்த்தையை நோக்கி கதை நகர்வது இதம்

நடிப்பு எப்படி? இருக்கிறது

கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இப்படம் வெளியாகி உள்ளது.

முந்தைய படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் நடிப்பில் அவர் தன்னை மெருகேற்றி உள்ளார் என்றே சொல்லலாம். காதலை சொல்ல முடியாத விரக்தியின் உச்சம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என குழம்பும் மனநிலை, காதலிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். இதேபோல் ஹீரோயினாக வரும் கௌரி கிஷன் காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். இனி இவரை ‘96 படத்தின் குட்டி த்ரிஷா’ என சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு படம் முழுக்க வந்து நடிப்பில் மிளிர்கிறார்.

இதனைத் தவிர வெங்கட் பிரபு மட்டும் சொல்லிக் கொள்ளும் படியான கேரக்டரில் நடித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் ஆங்காங்கே தனது ட்ரேட் மார்க் கற்பனையால் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார். ‘ஹூண்டாய் பிரஷ், பகார்டி பேஸ்ட், கோல்டு ஃபிளேக் டெட்டால், கக்காபிக் பாத்ரூம் கிளீனர் என பொருட்களுக்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்.

மேலும் ஃபார்முலா 1 ரேஸர் அஜித்குமார், கால்பந்து வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரொனால்டோ, கிறிஸ்டஃபர் நோலன் மற்றும் ஷங்கர் இணைந்து படம் இயக்குவது தொடர்பான அறிவிப்பு,

தமிழ் திணிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு, விஜய்யின் யோஹன் பட காட்சிகள், விஷால் மற்றும் ராதாரவி ஒன்றாக இருப்பது, தனுஷ் ரசிகனாக கூல் சுரேஷ் வருவது, பிரதமராக கேப்டன், மன்சூர் அலிகானின் 3.0, ட்ரோன் டெலிவரி, மியூசிக் டைரக்டராக பயில்வான் ரங்கநாதன் வருவது

என படம் முழுக்க கற்பனை உலகத்தை கலந்து கட்டி அடித்துள்ளார்.

நிஜ மற்றும் கற்பனை உலகத்தில் பாடல் வரிகள் மாற்றம், ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டை போட்டு ஆஸ்கர் வெல்வது, ஆஸ்கர் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சை கிண்டல் செய்வது என ரசிகர்களை என்ஜாய் பண்ண வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கி விக்னேஷ் கார்த்திக் வெற்றியும் பெற்றுள்ளார். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் – கௌரி கிஷன் இடையேயான காதல் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளது.

படத்தில் பிளஸ் பாயிண்ட்

ஜிவி பிரகாஷ் நடிப்பு கௌரி கிஷன்
அழகு

ஆர்ட் டைரக்டர் கை வண்ணம் அருமை

ஏய் சும்மா இருடா ஜஸ்டின் பிரபாகரன் இசை செந்தாழனி என்ற பாடல் ரசிக்க வைக்கிறது பணம் விட்டு வெளியே வந்த பிறகும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது

வித்தியாசமான கதைகளும் தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து புளித்து போன படமாக இல்லாமல் புதிய ட்ரெண்டிங்கில் புதிய படம் அடியே

ஒளிப்பதிவாளரின் அருமையான ஒளிப்பதிவு எல்லா இடத்திலும் குழுமை காட்சிகள் கண்களில் பதிய வைக்கிறது

இந்திய சினிமாவில் டைம் டிராவல் பற்றி படங்கள் வந்திருந்தாலும் அது மாநாடு போல இன்டெலிஜென் கதைகளை தான் கொடுத்திருக்கிறது ஆனால் காதல் கதையாக வந்து அடியே திரைப்படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது

படத்தின் குறைகள்

படத்திற்கு செந்தாழனி என்று பெயர் வைத்திருக்கலாம்

இடைவேளைக்குப் பிறகு சில குழப்பமான காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்

இதை தவிர்த்து குறை சொல்ல ஒன்றும் இல்லை வித்தியாசமான படம் ரசிக்கலாம் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. ; அடியே ;