பார்ட்னர் படத்தின் விமர்சனம்

பணத்தேவையில் தனது நண்பரான யோகி பாபுவை தேடி வருகிறார் ஆதி. டி.சி.எஸ் இல் தான் வேலை பார்ப்பதாக கூறும் யோகிபாபு தொழில்நுட்ப பொருட்களை திருடி விற்கும் வேலையை செய்து வருகிறார்.

பணத்திற்காக யோகிபாபுவுடன் சேர்ந்து ஒரு சைண்டிஸ்ட்டிடம் இருக்கும் ஒரு பொருளை திருடசெல்லும்போது அங்கு இருக்கும் ஒரு மிஷினால் பெண்ணாக மாறிவிடுகிறார் யோகி பாபு.

அதுவும் யாராக, ஹன்சிகா மோத்வானியாக மாறிவிடுகிறார். மீண்டும் அந்த சைண்டிஸ்ட்டை கண்டுபிடித்து இந்த நிலையை சரிசெய்வதே மீதிக்கதை

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா கடைசியாக தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபுதேவாவுடன் குலேபகாவலி படத்திலும் மற்றும் 100 என்கிற படத்திலும் நடித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் தோன்ற இருக்கும் ஹன்சிகா மோத்வானி இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

மேலும் எல்லா நடிகர்களையும் போல் காமெடி திரைப்படங்கள் ஹன்சிகாவிற்கு எப்போதும் கைகொடுத்திருக்கின்றன.

ஆதி

ஹன்சிகா மட்டுமில்லை நடிகர் ஆதியும் நீண்ட நாட்கள் கழித்து இந்த படத்தின் மூலமாக கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ஆதி நடித்த மரகதநாணயம் திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதற்கடுத்து க்ளாப் , வாரியர் ஆகியப் படங்களில் நடித்தார்

ஆதி. ஆனால் அந்தப் படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. தற்போது பாட்னர் திரைப்படம் ஹன்சிகா மற்றும் ஆதி ஆகிய இருவ்ருக்கும் ஒரு கம்பேக் திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

யோகிபாபு

ஒரு படத்தில் கதாநாயகன் கதாநாயகி இருக்கிறார்களோ இல்லையோ யோகி பாபு இருந்தாலே போதுமானது. ஹீரோ, ஹீரோயின் , காமெடியன் , வில்லன் என எல்லா கதாபாத்திரங்களையும் அவரே பார்த்துவிடும் அளவிற்கு அவருக்கு டிமாண்ட் இருந்து வருகிறது.

பாட்னர் திரைப்படத்தில் ஹீரோவின் நண்பனாக வரும் யோகிபாபு அவர்தான் ஹன்சிகாவாக மாறிவிடுகிறாரே: ஆதியும், யோகிபாபுவும் திருடச் சென்ற இடத்தில் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. இதில் யோகிபாபு ஹன்சிகாவாக மாற அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பதே ஒன்லைன் ஸ்டோரியாகும்.

உயிரிழந்தவரின் டி.என்.ஏ.,வை நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் உடலில் செலுத்தி, இறந்தவரின் செயல்பாடுகளை கொண்டு வரும் மருந்து கண்டுபிடித்து வெற்றி பெறுகிறார் பாண்டியராஜன். அவரின் கண்டுபிடிப்பை வெளிநாட்டில் இருந்து திருட வருகிறார் ஜான் விஜய் பாண்டியராஜனின் முன்னாள் மாணவர் ஜான் விஜய். இதனிடையே தான் வாங்கிய கடனுக்காக, தங்கையை வட்டிக்காரனுக்கு திருமணம் செய்து வைக்கும் நிலை ஹீரோ ஆதிக்கும்.

இதனால் பணம் சம்பாதிக்க யோகிபாபுவுடன் சேர்ந்து திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். இப்படியான நிலையில், ஜான் விஜய் அசைன்மெண்ட் இவர்களிடம் வருகிறது. இதற்காக வாங்கிய ரூ.50 லட்சம் பணத்தை அரசியல்வாதி ரவிமரியாவிடம், தான் வந்து கேட்டால் மட்டுமே தர வேண்டும் என யோகிபாபு கொடுத்து வைக்கிறார். ஆராய்ச்சி மருத்தை எடுக்க பாண்டியராஜன் லேப்-க்கு வரும் இடத்தில் தவறுதலாக மருந்து யோகிபாபுவுக்கு செலுத்தபட அவர் பெண்ணாக (ஹன்சிகா) மாறுகிறார். இதன் பின்னர் நடக்கும் கலவரங்கள் தான் இந்த படத்தின் கதையாகும்.

நடிப்பு எப்படி?

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆதி தமிழில் படம் நடித்துள்ளார். ஆனால் இது அவருக்கான கம்பேக் படமாக அமைந்தது என்பதே உண்மை. இதேபோல் இடைவேளைக்குப் பின் வரும் ஹன்சிகா, ஹீரோயினாக வரும் பாலக் லால்வாணி, யோகிபாபு, ரோபோ ஷங்கர், ரவிமரியா, முனீஷ்காந்த், தங்கத்துரை என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் எல்லோருமே நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்.

பொதுவாக மிரட்டலான வில்லன்களுக்கு படத்தில் அதிகம் காட்சி வைக்கப்பட்டிருக்கும்

என பார்த்தால் இதில் ஜான் விஜய் வரும் சீன்களை எண்ணி விடலாம். 1

படம் எப்படி?

தங்கச்சி சென்டிமென்ட், திருட்டு, அறிவியல் ஆராய்ச்சி என ஆரம்பத்தில் சொல்லப்ப ட்டபடம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள். திருடப்போகும்போது கூட ஒரு சீரியஸ் இல்லை. ரோபோ ஷங்கர் ஒன்லைன் வசனங்களும், யோகிபாபு ஹன்சிகாவாக மாறி பெண்கள் குறித்து பேசுவதும் ரசிக்க வைக்கிறது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது.

மற்றபடி ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் படக்குழு செய்த மெனக்கெடலை கதையில் செய்திருந்தால் படம் நிஜமாகவே ரசிக்க வைத்திருக்கும் என்பதே உண்மை.

யோகி பாபு ஹன்சிகாவாக மாறியது கதையில் ஒரு எதிர்பார்ப்பு. ஆதி தன் தங்கையின் திருமணத்தை நிறுத்த ஐம்பது லட்சம் ரூபாய்க்கு என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பாண்டியராஜன் ஒரு சின்ன எலிகளுக்கு பயந்து வீட்டை மாற்றி செல்வது லாஜிக் மீறல். ரவி மரியாவின் காமம் கண்ணை மறைக்கிறது அவர் ஹன்சிகா வை அடடையதுடிக்கும் அந்த துடிப்பு கண்களில் ஏக்கம் ரசிக்க வைக்கிறது.

மகாநதிசங்கர் தமிழ் சினிமா போலீசாக கடைசியில் வந்து கலகலப்பு ஏற்படுத்துகிறார்.

யோகி பாபு வரும் இடங்களில் சிரிப்பு கலை கட்டுகிறது

ஆர்ட் டைரக்டரின் அற்புதமான உழைப்பு படத்தில் தெரிகிறது

ஹன்சிகா போடும் குத்தாட்டமும் அந்த பப் பாடலும் ரசிக்க வைக்கிறது.

ஆதி உயரத்திற்கேறறநடிப்பிலும் உயரம் தொடுகிறார்.

ரோபோசங்கர் கயிற்றின் மேல் நடப்பது
பின் பழைய ஜோக் தங்கதுரை மீது சறிவது என கலகலப்பு ஏற்றுகிறார்

மொத்தத்தில் இந்த பார்ட்னர் லாஜிக் இல்லாத மேஜிக்

காமெடி படம் தான் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயமாக ரசிக்கலாம்