நூடூல்ஸ் படத்தின் விமர்சனம்

அருவி’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ‘அருவி’ மதன்.
அவர் நூடுல்ஸ் படத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் நூடுல்ஸ் ரசிக்க வைத்ததா ருசிக்க வைத்ததா நூடுல்ஸ் போல சிக்கல்களை ஏற்படுத்தி அதற்கு தீர்வு கண்டாரா வாங்க பார்க்கலாம்

இயக்குனர் மதன் நடிப்பில் நல்ல ஒரு தேர்ச்சியை நல்ல அனுபவத்தை தந்தவர்
‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ எனத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் அந்த அனுபவம் இந்த படத்திற்கு எந்த அளவுக்கு கை கொடுத்தது
இவருக்கு கை கொடுத்து தோளோடு தோள் நின்று படத்தை தயாரித்தது

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) நிறுவனத்தின் தயாரிப்பாளரான அருண் பிரகாஷ்
இவர்தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார் முதல் படத்திலேயே வெற்றி முத்திரை பதித்திருக்கிறார்

‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் ‘அருவி’ மதன். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான தரமான படம் எடுப்பது எப்படி என்று இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் போல இருக்கு அதுவும் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையாமல் ஒரு குடும்ப பின்னணியில் கொடுத்து ருசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துவரும் பிரபல நடிகர் ஹரீஷ் உத்தமன் இப்படத்தில் கதைநாயகனாக நடித்திருக்கிறார்.
அவரின் நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் முதல் காட்சியில் போலீஸோடு மோதும் போதும் சரி பிறகு வீட்டுக்குள் அந்த சம்பவத்தை பார்த்து மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு வழக்கறிஞரை நோக்கி தேடிப் போகும் போது ஆகட்டும் இன்ஸ்பெக்டர் அருவி மதன் மிரட்டும் போதும் காட்சிகளில் பணிந்து குனிந்து அவரிடம் பேசுவதாகட்டும் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்போடு ஹரிஸ் உத்தமன் இந்த படத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார்

‘டூ லெட்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக அடடா என்ன ஒரு குடும்பப்பாங்கான ஆரம்பக் கட்சியில் மொட்டை மாடியில் காட்டும் அமர்க்களம் அந்த வாலுத்தனம் எல்லாம் வீட்டுக்குள் நடந்த அந்த சம்பவத்தை பார்த்ததும் அஞ்சி நடுங்கி பயந்து ஒடுங்கி கணவனிடம் சொல்ல கூட தெரியாமல் நடுங்கி மிரண்டு சொல்லும்
அந்த முகபாவம்ரசிக்க வைக்கிறது.

தமிழ் சினிமாவுக்கு தமிழ் பேசத் தெரிந்த அழகான கதாநாயகி இயக்குனர்கள் அவரை பயன்படுத்திக் கொள்ளலாமே வெகுளியான முகம் துள்ளலான முகபாவம் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகள் கூட கொஞ்சம் கிளுகிளுப்பு ஷீலா ராஜ்குமார் இந்த படத்தில் நம் மனதில் ஜம் என்று இடம் பிடித்துக் கொள்கிறார்.

இவர்களது மகளாக ரவுடி பேபி புகழ் ஆழியா நடித்திருக்கிறார்
சுட்டித்தனமும் பயந்த சுபாவும் ஒன்றாய் இருந்த பேபி ஓகே

திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்
எல்லோரும் தங்கள் பங்குக்கு நல்ல நடிப்பு வழங்கி இருக்கிறார்கள்

‘அருவி’ மதனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த ஏரியா இன்ஸ்பெக்டராக என்ன ஒரு வில்லத்தனம் பொதுமக்களிடம் போலீசுக்கு ஒரு பயம் இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ டிரைவரை மிரட்டி கம்பளைண்ட் வாங்கி வந்து ஹரிஸ்உத்தமன் வீட்டுக்குள் புகுந்து என்ன ஒரு ரவுடித்தனம் பார்வையாலே மிரட்டுகிறார் அருவி மதன்
இவரின் அப்பா ஒரு போலீஸ் என்பதால் அருவி மதனுக்கு கச்சிதமா பொருந்தி போகிறது நடிகராகவும் மிரட்டி இருக்கிறார் அருவி மதன்

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வினோத்
ஒரே வீடு அதற்குள் படப்பிடிப்பு திறமையான ஒளிப்பதிவாளர் கச்சிதமாக கையாண்டுள்ளார் அவருடைய லைட்டிங்ஸ் நன்றாகவே இருக்கிறது வேல்ராஜ் மாணவன் என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்

படத் தொகுப்பாளர் சரத்குமார்
சரியான படத்தொகுப்பு இந்த மாதிரியான படங்களுக்கு படத்தொகுப்பாளர் எவ்வளவு கட்சிதமாக தேவையில்லாத காட்சிகளை நீக்கி சுவாரசியமாக கொடுக்க முடிந்தால் மட்டுமே ரசிக்க முடியும் அதுபோல இந்த படத்தில் எந்த இடத்திலுமே தேவையில்லாத காட்சிகள் இல்லை அதே சமயம் கதைக்கு தேவையான காட்சிகளை நன்றாக செதுக்கி உள்ளார் தொகுப்பாளர்

ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார்.
பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் பிண்ணனி இசையில் மிரட்டி இருக்கிறார்

கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையில் ஆர்ட்டைரக்டர் முக்கிய பங்கு இந்த படத்தில் பளிச்சிடுகிறது

நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘நூடுல்ஸ்’ படத்தை வாங்கி வெளியிடுகிறார். அவரின் தேர்வு வீண் போகாது நிச்சயம் அவருக்கு வெற்றியை தேடித்தரும்

படத்தைப் பார்த்துவிட்டு
படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக தனது ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

சரி
இப்படத்தின்கதை என்ன வாங்க பார்க்கலாம்

“இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு ‘நூடுல்ஸ்’. இப்படி இரண்டே நிமிடங்களில் நமது தேவையை தீர்க்கக் கூடிய, நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால், நாயகி செய்த செயலால் அந்தக் குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.

அதேபோல் கதை நெடுக தொடரும் இன்னும் சில இரண்டு நிமிட நிகழ்வுகளால் என்னென்ன திருப்பங்கள், எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன, இவர்கள் அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படித் தப்பிப்பார்கள் என்பதை மையப்படுத்தி இந்த ‘நூடுல்ஸ்’ படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் அவர்கள் குழந்தையும் எதிர்பாராத ஓர் சிக்கலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு படும் பாடும், அந்த நேரத்தில் அவர்களது பிரச்சனையை சரி செய்ய அவர்கள் வீட்டிற்குள் வரும் ஒருவர் செய்யும் உச்சபட்சக் காமெடியும், இதற்கிடையில் அந்தக் குடியிருப்பில் வசிப்போரின் பரிதவிப்பும் என படம் பார்க்கும் அனைவரையும் ஒன்றே முக்கால் மணி நேரமும் மிகுந்த எதிர்பார்ப்பினூடே சிரிப்பும், சுவாரசியமும், உற்சாகமுமாக உட்காரச் செய்யும்விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது…”

ஆரம்பக் கட்சி சிரிப்பும் சந்தோஷமும் கும்மாளமாக பாட்டு போட்டியோடு மொட்டை மாடியில் ஆரம்பமாகும் அந்த காட்சிகள் ரசிக்க வைத்தாலும் அருவி மதன்காரில் போலீசாக அந்த திருப்பத்துக்குள் நுழையும் போது ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற விபரீதமும் சேர்ந்து எழுகிறது
அதற்குப் பிறகு மொட்டை மாடிக்கு செல்லும் போலீஸ் கால் சுளுக்கி சிரமப்படுகிறார் அதன் பிறகு அருவி மதன் அங்கு வருகிறார் ஹரிஸ் உத்தமனுக்கும்அருவி மதனுக்கும் ஒவ்வொரு பேச்சாக போட்டியாக வந்து கைகலப்பில் முடிகிறது இந்த இடத்தில் இயக்குனர்
திறமை வெளிப்படுகிறது

கதைக்குள் நேராக சென்று இதைத்தான் சொல்லப்போகிறோம் இதைத்தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று கோடிட்டு காட்டுகிறார்.

அதன்பின் தொடர்ச்சியாக ஒவ்வொரு சம்பவம் நடந்தேற அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பாணியில் படம் நகர்வதில் திரைக் கதைக்கு கிடைத்த வெற்றி

வழக்கறிஞர் வந்த பிறகு காமெடியில் படம் களை கட்டுகிறது அவர் கை நடுங்க ஒவ்வொரு காட்சியும் பயந்து நடுங்கியபடியே ஹரிஸ் உத்தமனிடம் பேசும்போது தியேட்டரில் செமகலகலப்பு

அந்த அளவுக்கு அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் அந்த டூபாக்கூர் வக்கீல்

படம் இப்படித்தான் முடியும் என்று யாராலும் கணிக்க முடியாது ஒரு அருமையான கிளைமாக்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

எல்லோரும் ரசிக்கும் படியான ஒரு அற்புதமான நல்ல படத்தை தரமான படத்தை குறைந்த பட்ஜெட்டில் கொடுத்திருக்கிறார் ஆடம்பர செட்டுகள் தேவையில்லாத பில்டப் காட்சிகள் தேவையில்லாத பாடல் காட்சிகள் என்று தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் சரியான வடிவில் திட்டமிட்டு ஒரு ரசிக்கும் படியான விஷயம்

பாபநாசம் போன்ற பாணியில் நூடுல்ஸ் கொடுத்திருக்கிறார் நிச்சயம் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சென்று பார்க்க கூடிய படமாக இருக்கும்

எந்த பிரச்சனைகளையும் யாரிடமும் யாகாவாராயினும் நாகாக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் விதியின்படி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது

அது வும்போலீஸிடம் பேசும் போது மிகவும் கவனமாக பேச வேண்டும் கவனமாக செயல்பட வேண்டும் வார்த்தைகளை சிந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆழமான கருத்தையும் வைத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் அருவி மதன்
முத்திரை பதித்த இயக்குனர்கள் வரிசையில் நிச்சயம் பிரகாசிப்பார் அவருக்கு இந்த படம் வெற்றி படமாக அமைந்திருக்கிறது அவருக்கு நமது கிளாசிக் சினிமா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .