தமிழ் குடி மகன் திரை விமர்சனம்

ஒத்த வீட்டு சின்ன சாமி ஊரோடு ஒத்துப் போனாரா அல்லது ஊரை வைச்சு செஞ்சாரா

சாதி என்பது அவரவர் செய்யும் தொழிலில் அடிப்படையில் உருவானதா?
அல்லது மேல் தட்டு கீழ்த்தட்டு என்று யார் உருவாக்கினார்கள்

மேல் சாதிக்காக அவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்காக எல்லோரும் தங்களுடைய பிறந்த மண்ணை விட்டு வேறு நகரங்களுக்கு புலம் பெயர்ந்து செல்ல வேண்டுமா
அல்லது சொந்த ஊரிலே சாதித்துகட்ட வேண்டுமா

மேல் சாதி பையனும் கீழ் சாதி பெண்ணும் காதலித்தால் மேல் சாதியினர் கீழ் சாதி பெண்ணை தொட்டு அடிக்கலாமா முடியை பிடித்து இழுக்கலாமா நடுவீதியில் மானம் பங்கம் படுத்தலாமா கீழ் சாதியில் பிறந்து விட்டால் இது எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டுமா

இறந்தவர் வீட்டுக்கு சடங்கு செய்ய இன்னார்தான் என்று கட்டமைத்தது யார் அதை உடைக்க நினைப்பது தவறா?

இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கும் படம் தான் தமிழ் குடிமகன் தலை நிமிர் மகன்

இந்த படத்தை
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி யுள்ள ‘தமிழ்க்குடிமகன்’.இப்படத்தில்
இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி, ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நடிகர்கள் லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார்

சேரன் நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ யாரை அடையாளப்படுத்துகிறான்? இயக்குநர் இசக்கி கார்வண்ணனின் புதிய பாதை என்ன
வாங்க பார்க்கலாம்

இயக்குனர் சேரன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துள்ளளார்
ஒத்த வீட்டு சின்னசாமி ஆக வாழ்ந்துள்ளார் மனுஷன் ஒவ்வொரு காட்சியிலும் தான் அவமானப்படும்போது கூனி குறுகிநிற்காமல் வெகுண்டு எழும் இந்த கதாபாத்திரமாகவே சேரன் வாழ்ந்திருக்கிறார்

கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார்.
கணவனுக்கு அடங்கிய கிராமத்து மனைவியாக அழகான கலையான முகத்தோடு லட்சணமாக நடித்திருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்துப் பாத்திரத்தில் நன்றாக செய்திருக்கிறார்

முக்கிய வேடத்தில் நடிகர்கள் லால்,
ஊரில் ஜாதி வெறி பிடித்த பெரிய மனிதராக தன் மகன் கீழ் ஜாதி பெண்ணை பொறுத்துக் கொள்ள முடியாது ஆணவக் கொலைகள் உச்சமாக தன் அப்பாவின் பிணத்தை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்ய வராத சேரனை அருவாள் எடுத்துக்கொண்டு கொலை செய்யப் போகும் அளவுக்கு வெறி கொண்ட லால் இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்

வேலராமமூர்த்தி இந்த படத்தில் காந்தி பெரியார் ஆக வாழ்ந்திருக்கிறார் பட்டியலின மக்களுக்கு பிரச்சனை என்ற உடன் முன் வந்து ஆலோசனை சொல்லும் பெரிய மனிதராக சின்னசாமியின் உற்ற நண்பராக வருகிறார் இதற்கு ஒரு ஃபிளாஷ் பேக் உண்டு
இவரின் மகள் கீழ் ஜாதி வாலிபனை காதலிப்பதை கண்டு பொறுக்க முடியாமல் தன் மகளையே கொலை செய்யும் ஆணவக் கொலையின் மறுபதிப்பாக வாழ்ந்து மகளின் கொலைக்காக சிறைக்கு சென்று மனைவியை இழந்து பின் திருந்தி வாழ்கிறார் அது சின்னச்சாமி கதாபாத்திரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது இந்த காந்தி பெரியார் கதாபாத்திரம்

படத்தின் கதை என்ன?

“இந்த சமூகத்தில் சாதிய கட்டமைப்பை உடைப்பதற்காக தனி மனிதனாக போராடும் ஒருவனை பற்றிய கதைதான் இது. குலத்தொழில் முறையை இன்று ஒழித்து விட்டோம். ஆனால் அதை மையப்படுத்தி உருவான சாதியை இதுவரை ஏன் ஒழிக்க முடியவில்லை?
என்று கேள்வி கேட்கிறார் சேரன் நாதியற்றவர்களை சாதியற்றவர்களாக மாற்றி விடுங்கள் என்று கோர்ட்டில் நின்று உருகுகிறார் சேரர் இதுதான் படத்தில் கதையின் முக்கிய தாக்கம்

ஒவ்வொருவரும் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையிலேயே தான் சாதி உருவானது. தொழில் ‘சார்ந்து’ உருவானதால் தான் அதற்கு சாதி என்ற பெயரே வந்தது. அதுகுறித்த புரிதல் இங்கே பலருக்கும் இல்லை. இப்போது பலரும் தாங்கள் செய்து வந்த தொழிலில் இருந்து வேறுவேறு தொழிலுக்கு மாறி விட்டனர். அதனால் அவர்களை இதற்குமுன் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்த சாதியை வைத்து
அதற்கு பதிலாக சாதி என்கிற இடத்தில் தமிழ்க்குடிமகன் என குறிப்பிட வேண்டும். இப்படி செய்யும்போது குறிப்பிடத்தக்க இடைவெளியில் சாதியை முழுமையாக அழித்து விடலாம். சாதி என்கிற வார்த்தை நம்மை அழுத்துகிறது, அதனால் சமூகத்துடன் ஒன்றி வாழ முடியவில்லை என்று பலரும் குமுறுகிறார்கள். அதற்கு ஒரு விடிவு தரும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.
அந்த கிராமத்தில் துணி துவைத்து
ஊருக்கு வெள்ளாவி வைத்து தொழில் நடத்தும் சேரனும் அவரது அம்மாவும் அவரது மனைவியும் டாக்டருக்கு படிக்கும் தங்கையும் நாலாவது படிக்கும் மகனும் இந்த அருமையான குடும்பம் மேல் சாதியினரால் எப்படி எல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பது மையக்கருத்து

நடிகர் அருள்தாஸ் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார் தன் மாப்பிள்ளை கீழ் சாதி பெண்ணை காதலித்தார் என்பதற்காக நடுவீதியில் அந்த பெண்ணின் முடியை பிடித்து இழுத்து அசிங்கம் பங்கப்படுத்துகிறார் கட்டையால் அடித்து கொலை செய்யும் அளவுக்கு போகிறார் இதெல்லாம் சாதி வெறி பிடித்த கோரத்தாண்டவம் என்பதை இந்த படம் சொல்கிறது

குறிப்பாக உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது.
இன்னமும் கிராமங்களில் மேல் சாதி கீழ் சாதி என்ற பாகுபாடு உள்ளது இதற்கு உதாரணம் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் நுழைந்தார்கள் என்பதற்காக குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்த மனித மிருகங்கள் வாழும் நாடு இது

பள்ளியில் தன்னைவிட நன்றாக படிக்கிறான் என்ற பொறாமையும் ஜாதி வெறியின் உச்சமாக வீடு புகுந்து பட்டியல் இன மாணவனை படிக்கும் மாணவர்கள் வெட்டி கொண்ற சம்பவங்களும் கண் முன்னே கண்டோம் இப்படி எத்தனை உதாரணங்கள் இங்கே பட்டியல் இன மக்களுக்கு தீங்கு இழக்கிறார்கள். எந்த அரசியல்வாதியும்
வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவில்லை அதையும் சொல்கிறது இந்த படம் சேரன் என் தங்கை மேல் சாதியினரால் அடித்து உதைத்து துவைக்கும் போது இந்த அரசியல் வாதியோ எந்த அமைப்புகளோ வந்து கேட்கவில்லை என்று சேரன் குமுறுகிறார்

இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி, ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.
அற்புதமான படத்தை தரமான படுத்தி கொடுத்திருக்கிறார் இயக்குனர் யார் மனதையும் புண்படுத்தாமல் படத்தை கொடுத்திருப்பது நன்று

படத்தின் திரைக்கதை மைய புள்ளியை விட்டு வேற எங்கேயும் செல்லாமல் ஒரே நேர்கோட்டில் சென்று படத்தை முடித்து இருப்பது இயக்குனரின் திறமை

எஸ் ஏ சந்திரசேகர்,
சில காட்சிகளை வந்தாலும் நியாயத்தை நிலை நிறுத்தும் நல்ல கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார்

தீபிக்ஷா,
சேரனின் தந்தையாக மருத்துவ படிக்கும் மாணவியாக நடித்திருக்கிறார்
துருவா தன்னை விரும்புகிறார் என்று தெரிந்தவர் உன்னையும் என்னையும் இந்த சமூகம் வாழ விடாதே நீ விலகிப் போ என்று விரட்டும் அந்த கதாபாத்திரம் கிராமத்து எதார்த்தம்
பஸ் ரிப்பேர் ஆகிவிட லால் செல்லும் அந்த காரில் ஏற விடாமல் நீ கீழ் சாதிப்பெண் உன்னை எல்லாம் காரில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற அண்ணன் சேரனிடம் நான் அவமானப்பட்டதை கூறும்போது அந்த வலியை உணர்ந்து நடித்திருக்கிறார்.

அருள்தாஸ்,
கொடூர சாதி வெறியனாக கிராமத்து மனிதராக நடித்திருக்கிறார் அருள்தாஸ் வீண் வம்புக்கும் அழைப்பவராக வெறியராக கொடுத்த கதாபாத்திரத்தை அற்புதமாக செய்து கொடுத்திருக்கிறார் அருள்தாஸ்

ரவிமரியா வழக்கறிஞராக நடித்திருக்கிறார்.
அவரின் நையாண்டி ரசிக்க வைக்கிறது ஒவ்வொரு கேள்விக்கும் கிடுக்குப் பிடி போட்டு பாணியில் ரலி மரியா மனதில் இடம் பிடிக்கிறார்

இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்
மொத்தம் ஆறு பாடல்கள் அதில் அந்த சடங்கு வீட்டில் தாயாரம்மா தாயார் அந்த பாடல் எல்லோரும் ஆட்டம் போட வைக்கிறது காதலர்களின் மெலோடி சோகம் என பாடல்கள் தனி சுகம் மிரட்டி இருக்கிறார் சாம் சி எஸ்

ர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை
கண்களுக்கு குளிர்ச்சியாக தந்துள்ளார் மொத்த கிராமத்து அழகையும் தனது கேமரா வெளியால் படமாகி ரசிக்க வைத்திருக்கிறார் சேரன் செல்லும் பாதை எல்லாம் கிராமத்து அழகு அடுத்து என்ன நடக்கும் என்று திகில் முதியவர் இறந்த பின்னால் பிணத்தை வைத்துக்கொண்டு அரசியல் இது எல்லாமே கேமரா கோணம் நன்றாக வந்துள்ளது

படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.
படத்தை இரண்டு மணி நேரத்தில் கச்சிதமாக தொகுத்து இருக்கிறார் எந்த இடத்திலும் படம் லேக்காகவில்லை

தமிழ் குடிமகன் சொல்ல வந்த செய்தி அவரவர் செய்யும் தொழிலை வைத்து சாதியை பார்க்காதீர்கள் மனிதனாக பாருங்கள் முன்னோர்கள் செய்த சடங்குகள் சம்பிரதாயங்கள் தொடர்ந்து வருங்கால இளைஞர்களும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை விருப்பம் இல்லாதவர்களை அடிபணிய வைத்து அவர்களை சித்திரவதை செய்து ஜாதிய பாகுபாடின் பேரில் சடங்குகள் செய்தது இறந்தவர் ஆன்மா கூட நிம்மதியாக போகாது எனவே மனிதநேயத்தோடு எல்லோரும் ஒரே சமம் எல்லோரும் ஒரே நிலை எல்லோருக்கும் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் கிராமங்கள் இன்னும் திருந்த வேண்டும் மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டும் பெரியார் கண்ட கனவு நிறைவேற வேண்டும் என்பதை சொல்லும் படம் இந்த தமிழ் குடிமகன்

இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஒரு அருமையான படத்தை தேவையான நேரத்தில் கொடுத்திருக்கிறார் எல்லோரும் மனிதர்கள் தான் மனித மட்டுமே இங்கு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் நாதியற்றவர்களை சாதியற்றவர்களாக ஆக்கினால்அவர்கள் தமிழ் குடிமகனாக நிமிர்ந்து எழுவார்கள் என்பதை அற்புதமான தத்துவத்தோடு சொல்லி இருக்கிறார்