ஸ்ட்ரைக்கர் பட விமர்சனம்

Asw— கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’.

ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

தயாரிப்பு – ஹென்றி டேவிட், ஜஸ்டின் விஜய்.R, இயக்கம் – S.A.பிரபு, ஒளிப்பதிவு – மனீஷ் மூர்த்தி, இசை(பாடல்கள்) – விஜய் சித்தார்த், இசை(பின்னணி) – வி.டி.பாரதி மற்றும் வி.டி.மோனிஷ், படத் தொகுப்பு – நாகூரான் ராமச்சந்திரன், பாடல்கள் ; ஹரிசங்கர் ரவீந்திரன், ஆடை வடிவமைப்பு – அகிலன் ராம், கலை இயக்கம் – ஆனந்த் மணி, நிர்வாக தயாரிப்பாளர் – ராஜேஷ் கிருஷ்ணா, பத்திரிகை தொடர்பு – ரியாஸ் K.அஹமது.

ஒரு வித்தியாசமான ஹாரர் மூவி ராகவா லாரன்ஸ் சுந்தர் சி போன்றவர்களிடம் பிரமாண்டமான பேய் இருக்கும் ஆனால் இந்த படத்தில் தான் எதார்த்தமாக நாம் சந்திக்கக்கூடிய பேயை பார்த்திருக்கிறோம்
ஒவ்வொரு காட்சியும் பேயைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதில் சம்பந்தப்பட்ட ஒரு இடம் விளக்கம் கேட்டு இயக்குனர் இயக்கி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது

“இந்த படம் பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை பிடித்து போனதால் படத்தின் கதாநாயகனான ஜஸ்டின்தான் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை ஆர்வமுடன் தேடியுள்ளார்

‘அஸ்வின்’ என்கிற குறும் படத்திற்கு இசையமைத்திருந்த விஜய் சித்தார்த்தின் இசை அவரை இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வு செய்து உள்ளனர்
ஹரிசங்கர் ரவீந்திரன் இந்த படத்தின் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார். ஹரிசங்கர் எழுதிய முதல் பாடலை பார்த்துவிட்டு அனைத்து பாடல்களையும் அவரே எழுதும்படி கூறிவிட்டார்.இயக்குனர்.

எல்லாம்ரசிக்க வைக்கிறது பாராட்டுக்கள் பல. இந்தப் படத்திற்கு பொருத்தமான டைட்டில் என்பதால், ‘டோரா’ பட இயக்குநர் தாஸ், அவரிடம் இருந்த இந்த ஸ்ட்ரைக்கர் டைட்டிலைவாங்கி
பயன்படுத்தியிருக்கிறார்கள் இந்த படக்குழு

பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள ‘ஸ்ட்ரைக்கர்’ படத்தின நாயகன் ஜஸ்டின் விஜய் “இவருடைய பயணத்தை ஒரு விஜே ஆகத்தான் ஆரம்பித்ததார். காஞ்சனா, மெட்ராஸ் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். இவரது நடிப்பிற்கு லாரன்ஸ் மாஸ்டர் தான் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர்களில் விடி மோனிஷ் இப்போது இல்லை. சரி படத்தின் கதை என்ன நாயகன் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்துவிட்டு ஒரு கார் ரிப்பேர் செய்யும் இடத்தில் வேலை செய்து வருகிறார் அப்போது பிரேக் சரி செய்யாமல் காரை டெலிவரி செய்து விடுகிறது கம்பெனி நாயகன் இது தவறு என்று இந்த கார் இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வந்து பார்த்தால். அங்கு நடக்கும் விபரீதம்………………….இதற்குப் பிறகு நாயகன் பேய் ஆராய்ச்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு அதில் ஆர்வம் காட்டி வருகிறார் ப்ரொபஷராக இருக்கும் கஸ்தூரியிடம் பேய் பற்றி ஆறு மாதம் பயிற்சி எடுக்க செல்கிறார் அப்பொழுது youtube சேனல் நடத்தும் வித்யா பிரதீப் நாயகனை அழைத்து பேட்டி எடுக்கிறார். பேயுடன் பேசுவது எப்படி என்று எங்கள் நேயர்களுக்கு தெரிவியுங்கள் என்கிறார். நாயகன் பேட்டி கொடுத்தவுடன் அடுத்த நாள் ஈசி ஆரில் ஒரு பங்களாவில் பேய் நடமாடுகிறது அதை நீங்கள் சரி செயது தர வேண்டும் என்று நாயகனுக்கு ஒரு மெயில் வருகிறது கஸ்தூரியிடம் சென்று ஆலோசனை நடத்துகிறார் நாயகன் புரபசர் கஸ்தூரி யோ. ஆறு மாத பயிற்சிகள் மூன்று மாதம்தான் கடந்து இருக்கிறாய் அதற்குள் இது தேவையில்லை என்கிறார் இருந்தாலும் நாயகன் இது எனக்கு ஒரு சவால் என்று அந்த பணியை மேற்கொள்கிறான் அங்கு போய் அந்த அழகான வீட்டுக்குள் நுழைகிறான் எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருக்கும் பொழுது அங்கு நாயகி வித்தியா பிரதீப் வருகிறார் அங்கு அவர் ஏன் வந்தார் நாயகன் பிரபு ராஜேந்திரன் என்கிற பேயைசந்தித்தாரா என்ன நடந்தது இதுதான் படத்தின் மீதி கதை படம் இயல்பாக போய்க்கொண்டிருக்கிறது பேய் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்யாமல் பேயுடன் பேசும் காட்சியாக இருக்கட்டும் அங்கு நடக்கும் அமானுஷ்யமாகட்டும் எல்லாமே திகிலாக இருக்கிறது நாயகன் ராஜேந்திரன் பேயை சந்திக்கும் போது படம் பார்ப்பவர்களுக்கு திகில் வித்யா பிரதீப் சிகரெட் குடித்துவிட்டு இங்கிருந்து போய்விடுஎன்று எச்சரிக்கும் போது திகில் நாயகன் காசிக்கு சென்று ராஜேந்தனை பற்றி விசாரிப்பது அவ்வளவு செலவு தேவையா என்று கேட்க வைக்கிறது படத்தில் கஸ்தூரி வரும் போர்ஷன் நல்ல விளக்கமாக இருக்கிறது. பட ம முழுக்க ஜஸ்டின் பிரபு தான் நிறைந்து இருக்கிறார் அவர் இல்லாத காட்சி இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரும் கதையை உணர்ந்து சிறப்பாக நடத்தி இருக்கிறார் ஓஜா போர்டு பற்றி சரியான விளக்கம் தந்துள்ளார் இயக்குனர்.

இயக்குநரை பற்றி சில வரிகள் இயக்குனர் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் இதற்கு முன் சாலையோரம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டுடியோ கிரீன் கம்பெனியில் வேலை செய்திருக்கிறார் இது உண்மையில் நடந்த கதையா என்று கேட்டபோது இல்லை இது கேள்விப்பட்ட கதை தான் எனக்கு இப்படிப்பட்ட சம்பவங்களை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் பிடிக்கும் அதுதான் படமாக எடுத்தேன் என்றார் குறைந்த செலவில் ரசிகர்கள் ரசிக்க வைக்கும் வண்ணம் இயக்குனர் இந்த படத்தை எடுத்திருப்பது சிறப்பு.

ஹாரர் படங்களில் இது வித்தியாசமான படம் ராபர்ட் மாஸ்டரும் வித்யா பிரதீப் நெருக்கமாக முதலிரவு காட்சியில் நடித்திருக்கிறார்கள் படம் முடியும்போது ராபர்ட் மாஸ்டரின் தூள் கிளப்பு பாடல் ஒன்று காட்டப்படுகிறது மக்கள் அப்படி அமர்ந்து ரசிக்கிறார்கள் ஜஸ்டின் விஜய் க்குமுதல் படம் என்றாலும் நன்றாக நடித்திருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள். வித்தியாசமான பேய் படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும் ஆளில்லாத வீடு இரவு நேர காட்சிகள் பங்களா பேயுடன் பேசும் நாயகன் தப்பே செய்யாத நாயகனை தண்டிக்கும் பேய் அதற்குள் நடத்தும் சூட்சமம் ராபர்ட் மாஸ்டர் யார் போன்ற கேள்விகளுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குனர்