பரிவர்த்தனை விமர்சனம்

காதலின் அழகிய தருணங்களை பேசும் ” பரிவர்த்தனை ” என்ன சொல்ல வந்தது வாங்க பார்க்கலாம்….,

M.S.V. Productions சார்பில் பொறி. செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் பரிவர்த்தனை

இப்படத்தினை வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்:

வரும் செப்டம்பர் 15 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை பற்றி பார்ப்போம்

“காதல் எப்போது வரும் எவர்மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை அந்த மாயவலையில் சிக்கிக்கொண்டவர்களின் மனப்பிரவாகம்தான் ” இப்பரிவர்த்தனை படம் காதல் செய்தவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க முடியாது அந்த நினைவுகளை சுமந்து கொண்டு தான் வாழ்வார்கள் என்று சொல்கிறது படம்.
நம் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்கள் எதுவென்றால் அது காதல் காலங்கள்தான். அந்த அழகிய தருணங்களை அதன் இயல்புகளோடவே படமாக்கியிருக்கிறார் இயக்குனர்..

இப்படத்தில் நாயகன் நாயகியாக சின்னத்திரை நட்சத்திரங்களான சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரியும், இவர்களுக்கு துணையாக தேவிப்ரியா, பாரதிமோகன் திவ்யாஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர்

மேலும் மூன்று காலகட்டங்களாக வரும் இப்படத்தில் பருவ வயதினராக மோகித், ஸ்மேகா ஆகியோரும், சிறு வயதினராக விதுன், ஹாசினி நடித்துள்ளனர். எல்லோரும் நடிப்பில் இயல்பாகவும் ரசிக்கும் வண்ணம் நன்றாக இருக்கிறது
படப்பிடிப்பு முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் தென்பகுதியான புளியஞ்சோலையில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளர் கோகுல்,
காட்சிகளை அழகாக படமாக்கி இருக்கிறார் கண்களுக்கு முழுமையாக இருக்கிறது ஒளிப்பதிவாளருக்குவாழ்த்துக்கள்

இசையமைப்பாளர் ரஷாந்த்அர்வின்,
பாடல்கள் நன்றாக இருக்கிறது

எடிட்டர் ரோலக்ஸ், நடனம் தீனா, பாடல் VJP.ரகுபதி, மக்கள் தொடர்பு மணவை புவன் இளமாறன்வேணு இணைஇயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பொறி.செந்தில் கதை வசனம் எழுதி தயாரித்து உள்ளார் இன்றைய காலத்துக்கு ஏற்ப கதை எழுதியுள்ளார் பிடிக்காத இரண்டு பேர் சேர்ந்து வாழ்ந்து கனத்த சுமையோடு வாழ்வதைவிட தாலி என்னும் வேலியை கழற்றிவிட்டு வாழ்வது சிறந்த தர்மம் என தீர்வு சொல்லியுள்ளார் புதுமையான தீர்வு புதுமையான படைப்பு

, இயக்குனர் மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் காட்சிகளை உணர்ந்து அழகாக படம் இயக்கியுள்ளார் நாயகன் சின்ன வயதில் ஊரை விட்டு போவதற்கும் பெரியவன் ஆன பின்
காதலியை ஒன்று சேர்வதற்கும் சரியாக முடிச்சு போட்டு இருக்கிறார்

சரி கதை என்ன வாங்க பார்க்கலாம்

கல்லூரித் தோழிகள் இருவர் (சுவாதி, ராஜேஸ்வரி) சந்திக்கிறார்கள் . அதில் ஒருத்தி திருமணம் ஆகியும் வாழாமல் கணவனுடன் கடமைக்கு வாழ்கிறாள். இன்னொருத்தி பிரிந்த காதலனை எண்ணி திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டு
வாழ்கிறாள் இருவர் வாழ்விலும் சோகங்கள் இந்த சோக கீதத்திலும் இருவரும் சுகமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

திருமணம் செய்யாமல் வாழும் தோழி பள்ளி வயதில் காதலித்து, (மோஹித், சினேகா) ஏற்ற தாழ்வு காரணமாக அந்தப் பெண்ணின் தாயால் திருட்டுப் பட்டம சுமத்தப்பட்டு ஊரை விட்டு வெளியேறுகிறான்
அதற்குப்பின் என்ன ஆனார் நாயகன் என்பதை சஸ்பென்ஸ் ஆக கொண்டு போய் உள்ளார் இயக்குனர்

டாக்டர் தான் தனது கணவன் (சுர்ஜித்,) என்று , ஒரு நிலையில் மனைவிக்குத் தெரிகிறது .கணவன் நம்மோடு சந்தோஷமாக வாழாமல் இருப்பதற்கும் , தோழி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் இருப்பதுதான் என்பது புரிந்த நிலையில் மனைவி என்ன செய்கிறாள் என்பதே கதை .
அதை சொல்லி இருக்கும் இடம் தான் புதுமை

கிராமியச் சூழல் சிறப்பாக வெளிப்படுகிறது

மனைவியாக நடித்துள்ள சுவாதி மிகச் சிறப்பாக நடித்துள்ளார் தோழியிடம் காதலனின் பெயர் போட்டோ என்று எதுவும் சொல்லி இருக்க மாட்டாளா ?
என்ற கேள்வி எல்லாம் இல்லை இன்று பேஸ்புக் வாட்ஸ் அப் என்று ஏகப்பட்ட டெக்னாலஜி இருக்கும்பொழுது தோழியின் திருமண போட்டோவை பார்க்காமல் இருப்பது லாஜிக் மீரல்தான்

காதலில் தோல்வியுற்ற பையன் வேறு ஊருக்குப் போய் படித்து டாக்டர் ஆகிறான் . அவனுக்கும் அவனது காதலின் தோழிக்கும் திருமணம் ஆகிறது . அந்தத் திருமணம் பற்றி, மாப்பிள்ளை பற்றி தோழி சொல்லவே இல்லையா?

படித்து டாக்டர் ஆனவன் தன் காதலியைப் பார்க்க என்ன முயற்சி எடுத்தான்? ஏன் முயலவில்லை . என்ற கேள்விக்கு பதில் ?

இப்படி கேள்விகள் கேள்விளாக வந்து கொண்டு இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு ரசிப்பதற்கு நிறைய இருக்கிறது அந்த சின்ன வயது காதல் அந்த வெள்ளந்தியான இரண்டு உள்ளங்களை சேர்த்து வைக்கும் அந்த தருணம் அழகான அழகில் ஓய்வதில்லை

அந்த காதல் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தாலே ரம்மியமாக இருக்கிறது திருட்டு பட்டம் ஊரை விட்டு ஓடுவது இதெல்லாம் இல்லாமல் அந்த ஊருக்குள்ளே இருந்து நாயகன் காதலில் கைப்பிடிப்பதாக இருந்தாலும் நன்றாக தான் இருந்திருக்கும் இருந்தாலும் இயக்குனரின் இந்த எண்ணம் இந்த கலை வண்ணம் ரசிக்க வைக்கிறது பரிவர்த்தனை மாற்றிக்கொள்ள இதயங்களை மாற்றிக் கொள்ள ஏதுவாக தான் இருக்கிறது நிச்சயம் ஒரு முறை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்