எண் 6 வாத்தியார் கால் பந்தாட்டு குழு விமர்சனம்
தெருநாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா மற்றும் வில்வித்தை உள்ளிட்ட படங்களை தயாரித்து DC இயக்கியவர் செ.ஹரி உத்ரா. இவர் சின்ன பட்ஜெட் படத்துக்கு கியாரண்டி ஆனவர்
இவர் தற்போது “எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு” என்ற படத்தினை தயாரித்து இயக்கியிருக்கிறார்.
படம் எப்படி இருக்கு ரசிகர்களை உற்சாகம் அடை யவைத்ததா இல்லையா என்பதை பார்க்கலாம் வாங்க
கிராமப்புற இளைஞர்களுக்கு எப்போதும் விளையாட்டு தான் பொழுதுபோக்கு
அதுபோல இந்த படத்திலும் கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் விளையாடும் கால்பந்தாட்ட குழு இதுதான் கதைக்களம் இதில் அரசியலும் ஆதிக்க வர்க்கம் எப்படி உள்ளே புகுந்தது
இந்த அரசியலில் யார் பலிகள் ஆனார்கள் யார் மோதினார்கள் விளையாட்டு ஜெயித்ததா சூது ஜெயித்ததா என்பதை இயக்குனர் பரபரப்பாக சொல்லி இருக்கிறார்
இதில் இருக்கும் அரசியல் என்ன.? அதிகாரவர்க்கம், ஒடுக்கப்பட்டவர்களின் வலி என பல விதமான விஷயங்களை இப்படத்தில் மையக்கருத்தாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஹரி உத்ரா.
இப்படத்தை , எஸ்.பிரீத்தி சங்கருடன் இணைந்து தயாரித்துள்ளார். கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் துடிக்கும் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பிறகு எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயற்சிக்கின்றனர் என்பதை மையப்படுத்தி, இதில் மறைந்துள்ள அரசியலைப் பற்றியும் படம் பேசுகிறது.
ஒடுக்கப்பட்டவர்களை அதிகார வர்க்கம் எவ்வாறு அவர்களின் திறமைகளை ஒடுக்கி, முன்னுக்கு வரவிடாமல் தடுக்கிறது என்பது குறித்து பேசும் இப்படத்தில் சரத், அயிரா, கஞ்சா கருப்பு, அருவி மதன், சோனா, நரேன், இளையா, எஸ்.எம்.டி.கருணாநிதி நடித்துள்ளனர். வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஜே.அலிமிர்ஸா இசை அமைத்துள்ளார். குவைத் வித்யாசாகர், பா.இனியவன், செ.ஹரி உத்ரா பாடல்கள் எழுதியுள்ளனர். பரமக்குடி, மதுரை, ராம்நாடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முந்நூறுக்கும் மேற்பட்ட நிஜ கால்பந்து விளையாட்டு வீரர்கள் நடித்துள்ளனர
,மேலும் இத்திரைப்படத்தில் சரத் அறிமுக கதாநாயகனாகவும் அயிரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர் இருவரும் வரும் காட்சிகளில் அவ்வளவு மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கிறது
இத்திரைப்படத்தில் இரவு நேர காட்சிகள் சுமார் ஒரு 30 நாட்களுக்கும் மேலாக பரமக்குடியை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் நடத்தியுள்ளனர் படத்தின் சண்டைக் காட்சிகளும் ,பாடல் காட்சிகளும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது அந்த காட்சிகள் பரபரப்பு
படத்தில் ஆரம்பக் கட்சியிலிருந்து இடைவேளை வரை கொலை வெறி தாக்குதலாக இருக்கிறது கர்ணன் வில்லன் தம்பி இலையாவை கொலை செய்த பிறகு படம் சூடு பிடிக்கிறது அதன் பிறகு கரணாவின் கால்பந்தாட்ட குழுவை வில்லன் கும்பல் தேடி வர அந்த இரவு நேர காட்சி பரபரப்பாக இருக்கிறது வில்லன் கர்ணன் கும்பலை அட்டாக் செய்வதும் கர்ணன் கும்பல் வில்லன் கும்பலான ஆதேஷ்பாலா கும்பலை அட்டேக் செய்வதும் என விறுவிறுப்பான காட்சிகள்
இடைவேளைக்கு பிறகு கால்பந்தாட்ட காட்சிகள் ரம்யமாக இருக்கிறது நாயகன் நாயகி காதல் காட்சிகள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது அருவிமதன் வாத்தியார் கால்பந்தாட்ட குழுவுக்கு லீடராக வந்த பிறகு கதையில் சூடு பிடிக்கிறது அதிகாரம் ஆளும் வர்க்கம் முன்னேற துடிக்கும் இளைஞர்களை எப்படி ஒடுக்குகிறது எப்படி செயல்படுகிறது என்பதை துல்லியமாக சொல்லியுள்ளார் இயக்குனர்
மாவட்ட அளவில் கால்பந்தாட்ட குழுவில் வெற்றி பெற்ற வாத்தியார் கால்பந்தாட்ட குழு தங்களை சர்வதேச குழவுக்கு தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க வில்லன் கும்பல் அரசியல்வாதிகளின் மூலம் செலக்ட் செய்பவர்களை மிரட்டி வாத்தியார் கால்பந்து குழுவை டெலிட் செய்வது இன்றைய எதார்த்தம் கஞ்சா கருப்பு அருவி மதன்உணர்ந்து நடித்திருக்கிறார்கள்
இதில் வரும் பந்தாட்ட குழு இளைஞர்கள் அனைவரும் பொறுப்போடு நடித்தி இருக்கிறார்கள் நிஜமான கால்பந்தாட்டத்தை பார்ப்பது போல இருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு கோல் அவர்கள் போட முடிவு என்ன ஆகும் என்று ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இன்று இளைய சமுதாயம் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறது அதற்கு அடுத்து கபடி போட்டியை விரும்புகிறது கால்பந்தாட்ட போட்டியும் இன்று கிராமங்களில் விளையாடுகிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துக்காட்டுகிறது அப்படி கால்பந்தாட்டத்தின் மூலம் வெற்றி பெற்று அடுத்த லெவலுக்கு போக நினைக்கும் இளைஞர்களை தங்கள் சொந்த ஊரிலேயே கூலி வேலைக்கு அமர்த்தி கொண்டு அடிமை போல் அவர்களை வைத்து வேலை வாங்க நினைக்கும் அவலம் கிராமங்களில் இன்னும் இருக்கிறது என்பதை இயக்குனர் சுட்டிக்காட்டி உள்ளார் நாயகி அயிரா வேலை செய்யும் இடத்தில் வில்லனின் தம்பி அடாவடி செய்வது அட்டூழியம்
கர்ணனின் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வில்லன் அட்டூழியத்தை அடக்க சபதம் எடுப்பது அத்தியாயம் ஒன்றில் ஆரம்பமாகிறது இடைவேளைக்கு பிறகு வீரமே வெல்லும் என்று எல்லோரும் வீரத்தோடு களத்தில் குதிக்கிறார்கள் முடிவு என்ன ஆனது என்பதே கதை
இயக்குனர் ஹரி உத்தரா இயக்கும் படங்களில் நிச்சயம் ஒரு மெசேஜ் இருக்கும் அதுபோல இந்த படத்திலும் நல்ல மெசேஜ் சொல்லி இருக்கிறார்
நாயகி அயிராவுக்கு அதிக வேலை இல்லை ஓரிரு காட்சிகளே வந்து போகிறார் இலையா முதல் காட்சியில் பலியாகிறார்
அதற்கு அடுத்து கஞ்சா கருப்பு அருவி மதன் இவர்கள் வந்த பிறகு கதை ஒரு இலக்கை நோக்கி பயணிக்கிறது
ஒரு சின்ன பட்ஜெட்டில் தரமான படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் அவருக்கு பாராட்டுக்கள்.
இந்தப் படத்தில் மைனஸ் பாயிண்ட் இல்லையா என்று கேட்பதற்கு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்
வில்லன் கும்பல் கர்ணன் கால்பந்தாட்ட குழுவை பழி வாங்குவதற்கு சரியான அழுத்தமாக இயக்குனர் காட்சி அமைக்கப்படவில்லை அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம் மற்றபடி படம் விறு விறுப்பாகவும் பரபரப்பாகவும் செல்கிறது. இரவு நேர ஒளி பதிவு திகிலை ஊட்டுகிறது அந்த கிரவுண்டில் கால்பந்து விளையாடும் போது யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆவலை தூண்டுகிறது வில்லன் கும்பலை எப்படி வாத்தியார் பந்தாட்ட குழு ஒழிக்கப்பட போகிறார்கள் என்று ஆர்வமும் ஏற்படுகிறது மொத்தத்தில் இந்த வாத்தியார் பந்தாட்ட குழு ஒரு தரமான படம் இயக்குனர் ஹரி உத்ராவுக்கு பாராட்டுக்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் இதுபோல தரமான படங்களை கொடுக்கும் இந்த பட குழுவுக்கு வாழ்த்துக்கள் நிச்சயம் நம்பி போகலாம் உங்களை ஏமாற்றது இளைஞர்கள் வெற்றி பெறுவார்கள்
