ஆர் யூ ஓகே பேபி” திரைப்படத்தின் திரை விமர்சனம்

சமுத்திரக்கனி அபிராமி இருவரும் கணவன் மனைவி இருவருமே அருமையாக நடித்திருக்கிறார்கள்

இருவரும் கணவன் மனைவி உறவு மட்டுமல்ல நண்பர்கள் போல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்
ஆனால் ஒரு குறை குழந்தை இல்லை

இன்னொரு பக்கம்

அசோக்குடன் லிவ் இன் உறவில் பல வருடங்கள் வாழும் முல்லையரசி பல முறை கருக் கலைப்பு செய்து விடுகிறார். ஒரு முறை கரு வளர்ச்சி முதிர்ந்து விட்டதால் கலைப்பது தாயின் உயிருக்கு ஆபத்து எனும் மருத்துவ எச்சரிக்கையால் குழந்தை பெற்றுக் கொள்கிறார். ஆனால் வேலைவெட்டி இல்லாத கணவன், கூலி வேலை செய்யும் தான் என வறுமையில் போராடும் முல்லை, ஒரு நர்ஸின் தூண்டுதலின் பேரில் குழந்தையை விலைக்கு விற்கிறார்.

கல்யாணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் வாடும் சமுத்திரகனி – அபிராமி தம்பதியிடம் இடைத்தரகர் மூலம் குழந்தை போய்ச் சேருகிறது. அவர்கள் அந்த குழந்தையின் மீது பாசத்தைப் பொழிகிறார்கள். சிறிது காலம் கழித்து தனது தாய்மையின் தவிப்பு மேலோங்க, தன் குழந்தையைத் தனக்குத் திரும்பப் பெற்றுத் தர கேட்டு சொல்லாததும் உண்மை என்ற டிவி ரியாலிட்டி ஷோ வுக்குப் போகிறார் முல்லை. அந்த ஷோவின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் டிஆர்பி க்காக அறம் அல்லாத விதத்தில் ஷோ நடத்த, அதில் பலிகடாவாக மாட்டிக் கொள்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

அனைவரின் நடிப்பும் – குறிப்பாக முல்லையரசி நடிப்பு – இயல்பாக, உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது. காதலியை செக்ஸுக்காகவும், பணத்துக்காகவும் exploit செய்யும் நெகடிவ் ரோலில் முருகா அசோக் கைக் காண நெருடலாக இருக்கிறது. அவர் என் நண்பர் என்பதால் மட்டுமல்ல. வெள்ளை உள்ளத்தை வெளிப்படுத்தும் பால் போன்ற முகம் அசோக் முகம். அவர் பாசிட்டிவ் ரோல்களில் மட்டுமே நடிக்க வேண்டிய hero material.

உதவாக்கரைக் காதலனின் அழிச்சாட்டியங்களை ஒரு காதலி (மனைவி கூட அல்ல) எப்படி ஆறு ஆண்டுகள் பொறுத்துக் கொள்வாள் என்கிற லாஜிக் இடித்தாலும், பெருமளவு எதார்த்தத்துடன் நெருக்கமான கதை.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போன்று கதையை நம்பும் இயக்குநர்களின் வெற்றி தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்!

– அந்த குழந்தை யாருக்கு சமுத்திரக்கனி தம்பதியருக்கா

முல்லை யரசிக்கா

இதுதான் கதைகளம்

படத்துல யாருமே நடிக்கல எல்லோருமே இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள் சமுத்திரக்கனி அபிராமி லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் அசோக் என எல்லோரும் பொறுப்பாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள் ஆர்ட் டைரக்டரின் டிவி செட் சொலலாதெல்லாம் உண்மை அந்த செட் நன்றாக இருக்கிறது ஒளிப்பதிவாளரின் கேமரா கோனாம்
ரிச் ஆகஇருக்கிறது
சமுத்திரக்கனி தொழிலதிபர் என்பதற்காக அவரது வீட்டை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார்கள் இந்த சிபி ஐ அதிகாரியாக வருபவர் உண்மையில் வழக்கறிஞர் என்பதால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை உணர்ந்து இந்த குழந்தையை காப்பாற்ற கிளைமாக்ஸ் காட்சியில் அவர் எடுக்கும் முடிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது எல்லோரின் பங்கும் நன்றாக இருப்பதால் இந்த படம் சூப்பர் பேபி என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது வெற்றிக்கு வாழ்த்துக்கள் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே இந்த படத்தை வாங்கி வெளியிடும் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நல்ல தரமான படத்தை கொண்டாடும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல தரமான படைப்பு