டீமன் திரை விமர்சனம்

டீமன் திரை விமர்சனம் பார்க்கலாம் வாங்க_____________. . அறிமுகஇயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில், இயக்குநர் வசந்த பாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரித்திருக்கும் படம் ‘டீமன்’ இதில் நாயகனாக சச்சின் நடிக்க, நாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார்கள் இவர்களுடன் ’கும்கி’ அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கேபிஒய்’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஹீரோ சச்சின் என்றால் இரண்டாவது ஹீரோ ரோனி ரெபல் தான் இசையமைப்பாளர் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் மனுஷன்
சச்சின் பிளாட்டுக்கு ள் சிக்கி தவிக்கும் போது இந்த படத்தை தூக்கி நிறுத்துவது இசையமைப்பாளரும் பின்னணி இசையும் தான் இவர் ஏற்கனவே மோகன் லால் நடித்த

’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார் வாழ்த்துக்கள் .

ஆர்.எஸ்.அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஆரம்பக் கட்சி திகிலாக இருக்கிறது தனி வீடு ஒரு பெண் அங்கு மிரட்டும் கோஸ்ட் என ஆரம்பகாட்சியில் இருந்து இறுதிவரை கேமரா புகுந்து விளையாடுகிறது அதுவும் ஒரு வீடு அந்த வீட்டுக்குள் கதையை கொண்டு செல்வது கேமரா மேனுக்குசவாலாக இருந்திருக்கும் அந்த வகையில் இந்த படத்தின் கேமரா நிறைய உழைப்பு இருந்திருக்கிறது அவருக்கு நமது பாராட்டுக்கள்

ரவிகுமார்.எம் படத்தொகுப்பு செய்ய, விஜய் ராஜன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்
ஆர்ட் டைரக்டரின் அற்புதமான உழைப்பு இந்த படம் முழுக்க தெரிகிறது அந்த பிளாட்டுக்குள் நாயகன் சென்று அந்த வீட்டையே மாற்றி அமைக்கும் போது ஆர்ட் டைரக்ஷன் உழைப்பு கடினமாக தான் இருந்திருக்கும் நிச்சயமாக ஆர்ட் டைரக்டரின் பங்கு பாராட்டுக்குரியது

. கார்த்திக் நேதா பாடல்கள் எழுத, ராக் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ‘அஸ்வின்ஸ்’ படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்ய ஹரிஷ் மற்றும் ராஜு ஆல்பெர்ட் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர்.
அனைவரின் பங்கும் இந்த படத்தின் வெற்றிக்கு உதவி உள்ளது என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை
‘டீமன்’ படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிளாக்பஸ்டர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.யுவராஜ் வெளியிடுகிறார். இவர் ஏற்கனவே ’எறும்பு’, ‘கருங்காப்பியம்’ போன்ற படங்களை வெளியிட்டுள்ளார
அந்த வரிசையில் இந்த படமும் யுவராஜ் அவர்களுக்கு வெற்றி படமாக அமைந்திருக்கிறது “இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தங்களது வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களது மரணம் தற்கொலை என்று வழக்கு முடிக்கப்பட்டாலும், அவர்கள் எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார்கள்
என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதே சமயம், அவர்களுடைய மரணத்திற்கு காரணமாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் இந்த கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர்
ஆனால், அந்த சம்பவத்தை மட்டுமே படம் சார்ந்திருக்காமல் தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் இது ஒரு உளவியல் திகில் படமாக இருக்கிறது.

பெரும்பாலான திகில் படங்கள், ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு வீடு, அதற்குள் சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் அமானுஷ்ய அனுபவங்கள், பிறகு அதற்கான பின்னணியை விவரிப்பது போன்ற பாணியில் தான் இருக்கும். ஆனால், இந்த படத்தை பொருத்தவரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும் அதனால் பாதிக்கபப்டும் நாயகனின் உளவியல் தொடர்பான பிரச்சனைகளையும் திகிலாக சொல்லியிருக்கிறார்
பாராட்டுக்குரியது. எந்த இடத்திலும் எதார்த்தம் பிசகாமல் கதையை கொண்டு செல்வதில் கவனமாக கையாண்டு உள்ளார் இயக்குனர் பொதுவாக பேய் படத்தில் பிளாஷ்பேக் காட்சி அழுத்தமாக அமைந்துவிட்டால் அந்த படம் ரசிகர்கள் நெஞ்சில் நின்றுவிடும் அப்படி இந்த படத்தின் உண்மையான சம்பவத்தை தன்மை கெடாமல் மிரட்டலாக சொல்லியதில் இயக்குனர் கவனம் பெற்று இருக்கிறார்

படத்தில் பல காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளது நாயகன் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுவது கண்களை மூடினால் பேய் வந்து FC தொல்லை கொடுப்பதும் மிகவும் திகில் ஊட்டுகிறது
சமீபத்தில் வந்த பேய் படங்களில் அஸ்வின் படத்துக்கு பிறகு இந்த படம் மாறுபட்ட வித்தியாசமான திகில் படமாக வந்துள்ளது

நிச்சயம், ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைப்பது உண்மை
வித்தியாசமான படத்தை பார்த்த அனுபவத்தை ரசிகர்களை சென்று அடையும்
‘டீமன்’ என்ற தலைப்பு வைத்ததற்கு கதை ஒரு காரணமாக இருந்தாலும், தலைப்பு ஈர்ப்பாக இருப்பது தான் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்

இயக்குநர் வசந்த பாலனிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு முதல் படமாக திகில் ஜானரை தேர்வு செய்தது ஏன்? என்று கேட்டதற்கு பதில் அளித்த இயக்குநர் ரமேஷ் பழனிவேல், “நான் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன், முதலில் நான் சந்தித்த மக்கள் மற்றும் நான் வளர்ந்த மண் சார்ந்த கதையை தான் முதல் படமாக எடுக்க நினைத்தேன், அதற்கான கதையை தான் எழுதி வைத்திருந்தேன். ஆனால், அப்படத்திற்கான பட்ஜெட் எனக்கு அமையவில்லை, அப்போது தான் இப்படி ஒரு ஜானர் படம் எடுப்பதற்கான வாய்ப்பும், அதற்கான பட்ஜெட்டும் கிடைத்தது, அதனால் தான் இப்படி ஒரு ஜானர் படத்தை எடுத்தேன். அதுமட்டும் அல்ல பேய் படம் என்றால் ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது, அதுவும் ஒரு காரணம். பேய் படமாக இருந்தாலும், வசந்த பாலன் பேய் படம் இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி தான் இந்த படத்தை நான் இயக்கியிருக்கிறேன். உணர்ச்சிகரமான பாணியிலான ஒரு பேய் படமாக தான் ‘டீமன்’ இருக்கும். நிச்சயம் வழக்கமான பாணியிலான திகில் படம் போல் இந்த படம் இருக்காது.
என்கிறார் நம்பிக்கை யோடு அந்த நம்பிக்கை வீண் போகாது
இயக்குநரே

பிளாக்பஸ்டர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படத்தை வெளியிடும் பி.யுவராஜ், “’டீமன்’ படம் இதுவரை வெளியான திகில் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். அதற்கு காரணம், பேயால் ஒரு மனிதன் உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறான், பேய் மனிதனை உளவியல் ரீதியாக எப்படி ஆட்கொள்கிறது, என்பதை இந்த படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். இது நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அதேபோல், இன்றைய காலக்கடத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை, சில நாட்கள் கழித்து ஒடிடி-யில் பார்த்துக் கொள்ளலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால் திரையரங்கிற்கு மக்கள் வருவதும் சற்று குறைந்துவிட்டது. குறிப்பாக சிறிய முதலீட்டு படங்களுக்கு திரையரங்கிற்கு வருவது குறைந்து விட்டது. ஆனால், திகில் படம் என்றால் அதை திரையரங்கில் தான் பார்க்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் இருக்கிறது. காரணம், பெரிய திரையில், ஒலி உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்களுக்காக திகில் படங்களை திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள், அதனால் திகில் படங்கள் மக்களை திரையரங்கிற்கு அழைத்து வருவதாலும், இதுபோன்ற படங்கள் அதிகமாக வெளியாகிறது.” என்றார்.