விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் பாயும் ஒளி நீ எனக்கு எனும் திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து விக்ரம் பிரபு ‘இறுகப்பற்று’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் விதார்த், ஸ்ரீ, ஷ்ரதா ஸ்ரீநாத், அபர்னதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் எழுதி, இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜஸ்டின் பிரபாகரன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கோகுல் பினாய் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்
: படத்தின் மிகப்பெரிய பலம் ஸ்ரத்தா ஸ்ரீநாத் சைக்காலஜிஸ்டாக அவர் வரும் காட்சிகள் அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது முகம் மலர்ந்து ஒவ்வொரு ஜோடி இடம் பேசும் போதும் ஒவ்வொருவருக்கும் கவுன்சிலிங் செய்யும் போதும் ஆஹா என்று சொல்ல வைக்கிறது தன் கணவர் விக்ரம் பிரபுவிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவதாகட்டும் விக்ரம் பிரபு விலகிப் போகும்போது ஆற்றாமையை வெளிப்படுத்தி அவர் அழும் காட்சிகள் ஆகட்டும் அவ்வளவு அற்புதமான நடிப்பு இந்த ஆண்டில் சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு கொடுக்கலாம் சைக்காலஜிஸ்டராக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
இவர் கவுன்சிலிங் செய்யும் அழகு அது ஒரு தனி ரசனை ஒவ்வொருவருக்கும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லும் முறை அவ்வளவு ரசிக்க வைக்கிறது படத்தின் முக்கியமாக பல காட்சிகளில் இவர் நடிப்பு கைதட்ட வைக்கிறது கூட இவரை சொல்லலாம்
அடுத்து இவருக்கு கணவர் மனோகர் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு சாந்தமான பாந்தமான மனைவியை புரிந்து கொண்டு ஒத்தாசை செய்து கொண்டு விக்ரம் பிரபு நடிப்பு இந்த படத்தில் புதிய பரிமாணம் சோசியல் மீடியாவில் உள்ள ஒரு ஆப்புக்கு இருக்கும் மரியாதை உயிரோடு இருக்கும் இந்த ஜீவனுக்கு இல்லையா என்று சிதறும் இடம் அருமை விக்ரம் பிரபு சபாஷ் போடலாம்
அடுத்து இந்த படத்தில் கொடிகட்டி பறப்பவர் விதார்த் மனைவி குண்டாக இருக்கிறார் என்று டைவர்ஸ் பண்ண நினைக்கும் போதும் சரி அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் டென்ஷனில் மோதும் போதும் போதும் சரி மித்ரா கவுன்சிலிங் செய்யும்போது அவரிடம் அழுது புலம்பும் காட்சிகள் ஆகட்டும் இஎம்ஐ கட்டி நொந்து போய் விட்டேன் எனக்கு பிசினஸ் செய்யத்தான் ஆசை சின்ன வயதில் இருந்து யாரும் கேட்கவில்லை என்று அவர் புலம்பும் காட்சி கைதட்டில் பெருகிறார் மனைவியிடம் மூஞ்சி காட்டிக் கொண்டு அவரை ஜிம்முக்கு போகச் சொல்வது அவரைக் கண்டாலே வெறுப்பது என வித்தியாசமான பலவித நடிப்பை காட்டியிருக்கிறார்
அபர்நிதி விதார்த் மனைவியாக வந்து படம் முழுக்க நல்ல நடிப்பை வழங்கி ஒரு எதார்த்தமான பெண்மணியாக குடும்பத் தலைவியாக குண்டாக இருக்கிறோம் என்று விதாத்திடம் வாங்கி கட்டிக்கொண்டு அப்பாவியாக நான் என்ன செய்தால் பிடிக்கும் என்று கேட்கும் அந்த தோரணை ரசிக்க வைக்கிறது
அடுத்த ஜோடியான ஸ்ரீநாத் சானியா ஐயப்பன் இருவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது எல்லாம் மனைவியை குறை சொல்லி திட்டிக்கொண்டே இருக்கும் ஸ்ரீநாத் மனைவியின் அன்பை புரியாமல் அவர் மீது ஈகோ கொண்டு நீ தான் தட்டி என்று வசை பாடுவது அலுவலகத்தில் மனோபாலாவிடம் சண்டை போடுவது இப்படி ஒரு நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் ஸ்ரீதர் சானியா ஐயப்பன் அழுது புலம்பும் போதும் கணவன் பாராட்ட மாட்டானா என்று ஏங்கும் போதும் அப்பாவின் தலைமடையில் வைத்து அழுது புலம்பும் போதும் மித்ராவிடம் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளும் போதும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.

மனோபாலா சில காட்சிகளை வந்தாலும் கலகலப்பு ஏற்படுத்துகிற சிந்திக்க வைக்கிறார் மனைவியை அறிவு கெட்ட முண்டம் என்று திட்டி கைத்தட்டில் வாங்குகிறார்
இசை ஜஸ்டின் பிரபாகரன் நான்கு பாடல்கள் நன்றாக இருக்கிறது பின்னணி இசை நன்றாக இருக்கிறது ஒளிப்பதிவு அருமை படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது
படத்தின் கதை என்ன இன்றைய தினம் தலைமுறையினர் கணவன் மனைவியாக வாழ்வது எவ்வளவு கடினம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பில் செலுத்தாமல் ஒருவரை ஒருவர் குறை சொல்லி திட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு அன்பை போதிக்கும் படம் கணவன் மனைவியை பாராட்டு வேண்டும் மனைவி கணவனை பாராட்ட வேண்டும் இந்த பாராட்டு இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என்று உணர்த்தும் படம்
அலுவலகத்தில் இருக்கும் டென்ஷனை அலுவலகத்தில் விட்டு விட்டு வீட்டுக்கு வரும்போது மனைவியிடம் மகிழ்ச்சியை தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லும் படம்
குடும்பம் என் இருந்தால் சண்டை சேர்த்து வர வேண்டும் ஊடல் கூடல் இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படம்
எடுப்பதற்கெல்லாம் இன்று டைவர்ஸ் செய்கிறேன் என்று கோட்டுக்கு செல்லும் கணவன் மனைவி உறவு பற்றி சிந்திக்கச் சொல்லும் படம்
இயக்குனர் யுவராஜ் தயாளன் அருமையான கதை புரிய வைக்கும் திரைக்கதை அதை படம் ஆக்கி எதுவும் சரி படத்தை சீராக கொண்டு சென்றாலும் சரி ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்து மக்கள் மனதில் ஜெம் என்று இடம் பிடித்துக் கொள்கிறார் இயக்குனர் நிச்சியம் இயக்குனரை பாராட்டலாம் இப்படி ஒரு படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் பாராட்டலாம் மொத்தத்தில் இந்த இறுதி பற்று ரசிகர்களை இறுக்கப்பற்றி மனதில் இடம் பிடிக்கிறது மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள். படத்தின் குறை நீளம் அதிகம் சில் காட்சிகள் டாகுமெண்ட் படம் போல பேசிக்கொண்டு இருப்பதை தவிர்த்து விஷிவலாக காட்டி இருக்கலாம்
