தில்லு இருந்தா போராடு விமர்சனம்.

முரளீதரன் இயக்கத்தில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடிக்கும் “தில்லு இருந்தா போராடு”

பட்டப்படிப்பு படித்துள்ள கிராமத்தை சேர்ந்த பாண்டிக்கு எங்கு கேட்டும் வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு பிரியா என்ற காதலி கிடைக்கிறாள். அதனால் பல அவமானங்களை சுமக்கும் பாண்டி குடிக்கு அடிமையாகிறான். இதை பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள்.அதன்பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது. பஞ்சாயத்து பரமேஸ்வரியின் உதவி கிடைக்கிறது அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகும் படம்தான் ” தில்லு இருந்தா போராடு.”

கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா ஜோடியுடன் யோகிபாபு, மனோபாலா, வனிதா விஜயகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர், இவர்களுடன் ராஜசிம்மா, ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர்.பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோபி ஆகியோரும் நடித்துள்ளனர்.

விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், ஜி.சாய்தர்ஷன் இசையையும், எஸ்.கே.முரளீதரன், ஸ்ரீவிஜய், சதீஸ்காந்த் மூவரும் பாடல்களையும், வெங்கட் தயாரிப்பு மேற்பார்வையையும், மின்னல் முருகன் சண்டை பயிற்சியையும், எடிசன், ஜாய் மதி, சாய் கேசவ் மூவரும் நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.

எம்.குப்பன், ஜி.ஹரிபாபு, என்.சாய்பாபா மூவரும் இணை தயாரிப்பையும், ஆர்.பி.பாலா, எஸ்.கே.முரளிதரன், எம்.மணிவண்ணன் மூவரும் நிர்வாக தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.

கே.பி. புரொடக்சன் சார்பில் கே.பி.பிரசாத் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கே. பி. சுமன் ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல முன்னனி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள எஸ்.கே. முரளீதரன் “தில்லு இருந்தா போராடு” படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். நாயகன் கார்த்திக்தாஸ் நன்றாக நடனம் ஆடுகிறார் நன்றாக சண்டை போடுகிறார் டயலாக் டெலிவரி நன்றாக இருக்கிறது காதலியுடன் நன்றாக ரொமான்ஸ் செய்கிறார் துடிப்பாக இருக்கிறது நாயகி அனுகிருஷ்ணா அழகான கேரளத்து வரவு சின்ன பட்ஜெட் படங்களுக்கு இவர் தான் சரியான தீர்வு முதலில் காதலிக்க மறுத்தாலும் பிறகு நாயகனின் அன்பைக் கண்டு காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் நாயகி அப்பாவாக கை தென்னவன் அவரின் மிரட்டல் நடிப்பு நன்றாக இருக்கிறது நாயகனின் அம்மாவாக மீரா கிருஷ்ணன் ஏழை தாயாக அவர் தெரியவில்லை பெரிய ரிச்சாகவே இருக்கிறார் நாயகனின் அப்பாவாக சுவாமிநாதன் பஞ்சாயத்து பரமேஸ்வரி ஆக வனிதா அவர் வரும் காட்சிகள் எல்லாம் தத்துவமழையாக பொழிகிறார். நாயகன் குடித்துவிட்டு வரும்பொழுது அவரது அம்மா மீரா கிருஷ்ணன் நீ உருப்பட மாட்டே என்று திட்டுகிறார் அதே போல காதலியை கூட்டிக் கொண்டு வரும் பொழுது அப்பொழுதும் திட்டுகிறார் இது எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அனு கிருஷ்ணா நாயகனைஎப்படி உயர்த்துகிறார் அனாதை குழந்தைகளை எடுத்து வளர்த்து அந்த ஊரை மாற்றும் படி நாயகன் வாழ்ந்து காட்டுகிறார் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான படம் இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று சொல்லும் படம் தில்லோடு போராடினால் எந்த வெற்றியை யும் அடையலாம் காதலியையும் கை பிடிக்கலாம் சமுதாயத்தில் சாதிக்கலாம் என்று அற்புதமாக சொல்லி இருக்கிறது இந்த படம் படம் விறுவிறுப்பாக போகிறது கலகலப்பாக போகிறது காமெடி காட்சிகளுக்கு மனோபாலா சாம்ஸ் யோகி பாபு என கலந்துகட்டி ரவுசு செய்கிறார்கள் மதுமிதாவை அடைய மனோபாலாவும் சாம்ஸ்ம்செய்யும் காமெடி கலகலப்பு அனுகிருஷ்ணா கவர்ச்சியாக வந்து கலகலப்பு ஊட்டுகிறார் மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே வந்திருக்கிறது தில்லோடு நீங்கள் போய் பார்க்கலாம்