மதுரை சேர்ந்த இப்படத்தின்
இயக்குனர் குறும்படம் எடுத்து இப்போது வெள்ளித்திரையில் கால் பதித்திருக்கிறார் அவர் சிந்தனையில் உதித்த இந்த வட்டார வழக்கு…
1980 களின் தென் மாவட்டங்களில்
ஒரு கிராமத்தில் இருக்கும்
இரு குடும்பத்துக்குள் நடக்கும் ஏற்றத்தாழ்வின் விளைவாக விழைந்த பகை , எப்படி அவர்களின் வாழ்வை
வன்மம், குரோதம்,அன்பை வளர விடாமல் செய்தது என்பதை
இயக்குனர் கண்ணுச்சாமி ராமசந்திரன் வெகு யதார்த்தமாக உண்மைக்கு நெருக்கமாய் படமாக்கி இருக்கிறார்… இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த மாவட்ட மக்களிடம் வெட்டு குத்து அரிவாள் பகை இவர்களை நிறைய படங்களில் பார்த்து விட்டோம் இன்னும் பார்ப்பதற்கு இருக்கிறது என்று உணர்த்துகிறது இந்த படைப்பு
டூலெட் படத்தின் நாயகன்
சந்தோஷ் நம்பிராஜன் இதில் சண்டித்தனம் பண்ணும் நாயகனாக நடித்திருக்கிறார்…. நல்ல நடிப்பு பாராட்டகுரியது…
மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் K.கந்தசாமி மற்றும் K.கணேசன் இணைந்து தயாரித்துள்ளது. வட்டார வழக்கு’.இப் படத்தில் ‘டூ லெட்’ சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, வெங்கடேசன் விஜய் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பின்னணி இசையும் : இளையராஜா வும் இசையில் காதல், கிராமம் என இப்படி ஒரு படம் வந்து பல வருடங்களாகி விட்டது என்று உணர்த்தும் விதமாகவும் உணர்வுகளை சொல்லும் படமாக வந்துள்ளது.
படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்
கிராமத்துபடத்துக்குராஜா என்றும் இளையராஜா ..அவரின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இரு பங்காளி குடும்பங்களிடயே பல தலைமுறைகளாக காழ்ப் புணர்ச்சி நிலவி வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த நம்ம ஹீரோ சேந்தன் இன்னொரு குடும்பத்தில் உள்ள சிலரை கொன்று விடுகிறார். இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர். இந்த கதையை வட்டார மனிதர்களின் எமோஷனலாக தந்துள்ளார் இயக்குநர்.
எதார்த்தமாக இயல்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்
படத்தில் சில குறிப்பிட்ட நடிகர்களை தவிர பெரும்பான்மையான நடிகர்கள் கதை நடக்கும் இடத்தில் உள்ள மக்களையே நடிக்க வைத்துள்ளார் டைரக்டர். இதுவே இப்படத்திற்கு பெரிய பலம் என்று சொல்லலாம். இவர்களின் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் நம்மை உண்மை யான கிராமத்திற்கு அழைத்து சென்று விடுகிறது.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா ரவி இதற்கு முன்பு லவ் டுடே, மாமன்னன் உட் பட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இந்த வட்டார வழக்கு படத்தில் மண்ணின் பெண்ணாக, கிராமத்து டீச்சராக, தொட்டிச்சி கதா பாத்திரத்தில் ஒரு சிறந்த நடிப்பை தந்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் பேசப்படுவார் ஒரு கிராமத்து டீச்சர் எப்படி இருப்பாரோ அப்படி அச்சுஅசலாக பொருந்தி இருக்கிறார். அவர் பேசும் வசனமும் அவர் நடிப்பும் மிக அருமை
இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் ஏற்கனவே டுலெட் படத்தில் நடித்தவர்.மென்மையானவராகபார்த்து விட்டு முரட்டு மனிதனாக,
படம் முழுக்க நடிப்பில் மிரட்டுகிறார் அவர்
நடித்திருக்கிறார் என்றுசொல்வதை விட வாழ்ந்து இருக்கிறார் வாழ்த்துக்கள் .
1987 கால கட்டத்தில் நடக்கிறது. கதை அதற்கு ஏற்ப காட்சிகள் விரிகிறது சூப்பர் சுரேஷின் ஒளிப்பதிவில் கரிசல் காட்டின் வெப்பம் தெரிகிறது.ஒளிப்பதிவு பலம். “
“வட்டார வழக்கு”
திரை படம்
மிகைப்படுத்தாத
காட்சிகள்…!
இதுவரை,
திரையில் காணாத
எளிய மனிதர்களின்
முகங்கள்..!
நண்பன் சந்தாேஷின்
எதார்த்த நடிப்பு…!
இதற்கெல்லாம்
ஒரு படி மேலே,
நீண்ட நாட்களுக்குப்
பிறகு நல்ல படத்தை பார்த்து அதோடு
வாழும்,
கிராமத்து மனிதர்களோடு
நாமும் ஒன்று சேர்ந்த உணர்வு டன்
வாழ்ந்து வந்ததாக,
ஓர் உணர்வு…!
தமிழ் சினிமா
கொண்டாடப்பட வேண்டிய
படங்களில்
வட்டார வழக்கும்
ஒன்று…
