சிறகன் திரை விமர்சனம்.

(சஸ்பென்ஸ் & திரில்லர் மூவி). ரேட்டிங் 3:5/5

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் – வெங்கடேஷ்வராஜ். S இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் MF. Tech – மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் பெற்றவர்அந்த அனுபவம் நன்றாக தெரிகிறது

ஹைபர் லிங்க் நான் லினியர் முறையில் கிரைம் திரில்லர் ஜானரில் 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது தான்.

மற்ற கிரைம் திரில்லர் படங்களை விட இதை ஒரே இரவில் நடக்கும் ஒரு ஏதார்த்தமான கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள் மதுரை சார்ந்த 15 இளைஞர்கள் இவர்கள் ஜெயித்தால் தமிழ் சினிமாவில் புதிய ரத்தம் பாய்ச்ச படும்

பஞ்சன் சிறகன் எனும் வகையை சார்ந்த பட்டாம்பூச்சியின் இடது புறம் வெள்ளை மற்றும் கருப்பு நிறமும், வலது புறம் காக்கி நிறமும் இருக்கும் அதற்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருப்பதாலும்,
இந்தவகை பட்டாம்பூச்சியின் வாழ்க்கை எப்படி ஒரே நாளில் துவங்கி ஒரே நாளில் முடிகிறதோ அதே போல் இந்த படத்தின் திரைக்கதையும் ஒரே இரவில் நடந்து முடிவதால்
இந்த படத்திற்கு
“சிறகன்” என்று பெயர் வைத்துள்ளனர் போலும்…..

உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா இந்த படத்தை ஏப்ரல் 20 ம் தேதி உலகமெங்கும்
வெளியிடுகிறது

இப்படத்தின் தொழில்நுட்ப குழு.

ஒளிப்பதிவு : சேட்டை சிக்கந்தர்
இரவு நேர ஒளிப்பதிவு எம் எல் ஏ சுந்தர் கொள்ளப்படும் போது காட்டப்படும் ஒலி பதிவு கல்லூரியில் நடக்கும் ஒளிப்பதிவு எல்லாம் ரிச்சாக இருக்கிறது ரசிக்க வைக்கிறது

இசை : ராம் கணேஷ்.
பாடல்கள் : வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம்.
பின்னணி இசையும் பாடல் வரிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது

கூலாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது வாங்கிய ஹரிபிரசாத் MA இந்த படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார்.மிக நன்றாக இருக்கிறது

மக்கள் தொடர்பு : மணவை புவன:
படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் இவர் பங்கு சூப்பர்

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்….

இன்று நவீன டெக்னாலஜி ஒவ்வொருவரின் அந்தரங்கத்தையும் முழுசாக தெரிந்து கொள்ள துடிக்கிறது அதனால் ஏற்படும் பல குடும்பப் பெண்களின் மானம் மரியாதை இவைகள் காற்றில் பறக்கிறது இது நல்லதா? கெட்டதா ?என்பதை எதிர் காலம் சொல்லும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது தவறான செயலால் அங்கு பணிபுரியும் இரண்டு டீச்சரின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் அதற்கு எதிர்வினை தான் இந்த படத்தின் திரைக்கதை யாராலும் யூகிக்க முடியாத கதை திரைக்கதை

கஜராஜ் நடிப்பு நன்றாக இருக்கிறது ஒரு தந்தையின் வலி அதை உணர்ந்து நடித்திருக்கிறார் அவர் மகளின் நிலை கண்டு துடிப்பது அதற்கு காரணமானவர்களை தேடி எதிர்வினை ஆற்று துடிப்பது என
மனுஷன் வாழ்ந்து இருக்கிறார்

எம்எல்ஏ சுந்தர் ஆக வரும் ஜீவா ரவி
எம் எல் ஏ கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி போகிறார் ஆரம்பகால காட்சியில் கதை இவரை சுற்றிய நகர்கிறது இவர்தான் பிரதானமாக இருப்பார் என்று யூகித்தால் அடுத்த கட்டமே கதை வேறு பாதையில் மாறுகிறது இவரது நடிப்பும் சூப்பராக இருக்கிறது

ரயில் ரவி ஒரு இளைஞனின் அப்பாவாக மகனை இழந்த சோகத்தோடு அற்புதமாக நடித்திருக்கிறார் இரண்டு நாள் கால்ஷீட் என்றாலும் படம் முழுக்க வருவதைப் போல ஒரு காட்சி அமைப்பு ஏற்படுத்துகிறார்

நித்யா வாக வரும் பௌசி ஹிதாயா அற்புதமான நடிப்பு குறும்புத்தனமாக தந்தையுடன் உரையாடும் போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் பொழுது பள்ளியில் நடக்கும் கொடுமை கண்டு பொங்கி எழும்பும் பொழுது நல்ல முக பாவனை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார் சிறப்பான நடிப்பு

: கயல் கதாபாத்திரத்தில் வரும் ஹரிதா ராம் அழகான கலையான முகம் அற்புதமான நடிப்பு குடும்பமானத்திற்காஎடுக்கும் துணிச்சலான முடிவு ஆனால் அது கோழைத்தனம்

எம்எல்ஏ மகனாக வரும் பாலாஜி நடிப்பு சரியான வில்லத்தனம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது நல்ல துறுதுறு என்று நடிப்பு

மற்றும் அனந் நாக், மாலிக், பூ வேந்தன், சானு, என்று ஒரு இளைஞர் பட்டாளம் நடித்திருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், நேரடியாக படம் இயக்கும் இயக்குநர்கள் வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறார் வெங்கடேஷ்வர ராஜ்.
அவரிடம்…
அது என்ன ‘சிறகன்’? அப்படின்னா என்ன?

ஒரு நாள் மட்டுமே வாழும்பட்டாம்பூச்சி வகை. முதல்ல, ‘பட்டாம்பூச்சி’ன்னு தலைப்பு வைக்க நினைச்சோம். அதே தலைப்புல வேற படம் வந்துட்டதால ‘சிறகன்’ங்கற தலைப்பை தேர்வு பண்ணினோம். இந்த, ‘பஞ்சன் சிறகன்’ வகை பட்டாம்பூச்சிகளோட ஒரு பக்க சிறகு, கருப்பு வெள்ளையாகவும் இன்னொரு பக்கம் காக்கி நிறத்துலயும் இருக்கும். கதைக்கும் அது அப்படியே பொருந்தியதால அதையே தலைப்பா வச்சுட்டோம்.

இந்தப் பட்டாம்பூச்சி வகை, கதைக்கு எப்படி தொடர்பாச்சு?

வழக்கறிஞருக்கும் போலீஸுக்கும் இடையிலான பிரச்சினைதான் இந்தப் படத்தோட கதை. வழக்கறிஞருக்கு கருப்பு, வெள்ளை, போலீஸுக்கு காக்கி. இரண்டு வண்ணங்களையும் கொண்ட தலைப்பு அது. எனக்கு தெரிஞ்சஉண்மை நிகழ்வுகள் அடிப்படையில நிறைய கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கேன். 11 கேரக்டர்களை சுற்றிதான் கதை நடக்கும். ஹைபர் லிங்க் முறையிலான கதை. அதோட நான் லீனியராகவும் அதாவது முன்னும் பின்னும் போயிட்டு வர்ற மாதிரி திரைக்கதை இருக்கும்.

ஹைபர் லிங்க், நான் லீனியர் பார்வையாளர்களைக் குழப்பாதா?

குழப்பாது. அடிப்படையில நான் எடிட்டர் அப்படிங்கறதால, எனக்கு சவாலான இடம், படத்துல வேணும்னு நினைச்சேன். இந்தக் கதை அப்படி அமைஞ்சது. 11 கோணங்கள்ல திரைக்கதை அமைச்சு எடுத்திருக்கோம். பார்வையாளர்களுக்கு இது புதுசா,சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். எந்த குழப்பமும் இல்லாம, சுவாரஸ்யமா படம் இருக்கும.

நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் பற்றி..?

கஜராஜ், ஜீவாரவி, பவுசி ஹிதாயா, வினோத், ஆனந்த் நாக், ஹர்ஷிதா ராம், பாலாஜின்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ‘சேட்டை’ சிக்கந்தர் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ராம் கணேஷ் இசை அமைச்சிருக்கார். கூழாங்கல் படத்துக்கு சிறந்த சவுண்ட்எபெக்டுக்காக விருது வாங்கியஹரி பிரசாத், இந்தப் படத்துக்கும்சவுண்ட் மிக்ஸ் பண்ணியிருக்கார். இன்னொரு எதிர்பாராத ஒற்றுமை என்னன்னா, இதுல வேலைபார்த்த எல்லா
இளைஞர்கள் 27வயது தான்
தமிழ் சினிமாவில் இந்த வகை படம்
மற்ற கிரைம் திரில்லர் படங்களை விட இதை ஒரே இரவில் நடக்கும் ஒரு ஏதார்த்தமான கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறோம்.
என்றார்….

நல்ல படம் நல்ல கதை திரைக்கதை தேவையான மெசேஜ் தமிழ் சினிமாவின் புதிய காலம் கிரைம் திரில்லர் பட விரும்பி களுக்கு ஏற்றப்படம்

சிறகன் என்றால் படித்தவர்களுக்கு புரியவில்லை பாமரர்களுக்கு எப்படி புரியும்?

நான் லீனியர் கதைகள் சென்னை போன்ற படித்தவர்கள் மத்தியில் புதிய கதைகளாக தெரியும் செங்கல்பட்டு தாண்டி ராமராஜன் ரசிகர்களுக்கு எப்படி புரியும்?

இது போன்ற கேள்விகள் இருந்தாலும் பட படம் சிறப்பாக இருக்கிறது பணிபுரிந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் சின்ன பட்ஜெட்டில் தரமான படம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படம்
.